"ஞாலம்" - தமிழ்மகன் (ThamizhMagan - Gnalam)

இந்த நாவல் ஒரு உண்மை கதையைத் தழுவிய நாவல் இது பல நிகழ்வுகளை நமக்கு சொல்கிறது இந்த நாவல் நிலம் பற்றி பேசுகிறது இதை பேசிய மனிதர் அ.வேங்கடாசல நாயக்கர்..

இவர் வாழ்ந்த 18ம் நூற்றாண்டை பற்றியும் அப்போது நிகழ்ந்த நிகழ்வுகளை ஒரு ஆய்வு நூலாக கூட இதை நாம் சொல்லலாம் பல நிகழ்வுகளை சொல்கிறார் ஆசிரியர் அவர் வாழ்ந்த காலத்தில் நிலங்களை யார் யாரிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது அவர்களுக்கு உதவிய மனிதர்கள் யார் யார் என்று உண்மையை நாவலின் வாயிலாக சொல்கிறார் ஆசிரியர்..

சொந்த நிலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பட்டினியும் பஞ்சத்தாலும் அடிபட்டு தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து ஒரு அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்தங்கள் நிலங்களிலே கூலிகளாகவும் வேலை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதற்கு காரணம் யார் யார் செய்தது தவறு என்று அவர்கள் வாழ்க்கையில் போய் நாம் காண்பது போல் இருக்கும் இந்த நூல்..

நம்முடைய தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்பு பகுத்தறிவு கொள்கைகளை பரப்பி இருக்கிறார்கள் அதில் இவரும் ஒருவர் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும் பெரியார் அவர்கள் இவர் மறைந்து 40 வருடம் கழித்து இவரை பற்றி குடியரசு நாளிதழில் இந்த அளவு பகுத்தறிவை சொல்லி இருக்கிறார் அதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும் என்றும் இவரை பற்றியும் இவர் கட்டுரைகளை பற்றியும் எழுதியுள்ளார் பெரியார் நிலத்திற்காக பல போராட்டங்கள்
சட்ட போராட்டங்களையும் செய்து உள்ளார்..

சென்னையில் உள்ள ஏழுகிணறு பகுதியில் வாழ்ந்து வருகிறார் இவர் தனது மாமன் மகளை திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் எதுவும் இல்லாமல் தனது சுண்ணாம்பு சூளையில் வேலை பார்த்தவன் கொடுத்த குழந்தையை வளர்த்து வருகிறார்கள்..
ரத்தினம் என்ற பெண் தான் அந்த பெண் குழந்தை..
சுண்ணாம்பு கற்கள் மற்றும் கிளிஞ்சல்கள் மொத்தமாக விற்றுக் கொண்டிருப்பவர் நாயக்கர்..

சென்னையைச் சுற்றி கட்டிய மிகப்பெரிய கட்டிடங்களை பிரஞ்சு படைக்கு பயந்து பிரிட்டிஷ் அரசால் சென்னை நகரில் சுற்றி கட்டப்பட்ட சுவர்களில் இவருடைய சுண்ணாம்பு இல்லாமல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அப்படி கட்டிய அந்த சுவருக்கு வரி கட்ட சொல்லி போட்ட வரி தான் வால் டாக்ஸ்..
இப்போது இந்த பெயர் சென்னை நகரில் ஒரு முக்கிய இடத்துக்கான பெயராக உள்ளது..

வேறு எப்போதும் தனது மாட்டு வண்டியில் தான் எங்கும் செல்வார் மாட்டு வண்டிக்காரர் மாணிக்கம் மாட்டின் பெயர் மயிலான் ஒற்றை மாட்டுவண்டியில் பல ஊர்கள் சென்று பல ஆய்வுகளுக்கு அவருக்கு மிக பலமாக இருந்தவர்கள் மாணிக்கமும் மயிலான் தான்..

அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் நிலத்தின் கதையையும் அங்கு வாழும் மக்களிடம் கேட்டு அறிகிறார் நாயக்கர் இந்த நிகழ்வுகளை ஒரு தொகுப்பாக எழுதுகிறார் இந்த தொகுப்பு நூலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கிறார் அங்குள்ள மனிதர்களின் நிலம் எப்படி பிடுங்கப்பட்டது அவர்களை அடிமையாக பட்டினியாக ஆக்கிய மனிதர்களைப் பற்றி விளக்கமாக சொல்கிறார் நாயக்கர் இதைப்பற்றி ஆங்கிலத்தில் பத்திரிக்கையில் எழுதுகிறார் இங்கிலாந்து ராணிக்கும் கடிதங்கள் எழுதுகிறார் அவருடைய தொகுப்பையும் அனுப்பி வைக்கிறார்..

இந்த நாவலில் அன்றைய சென்னை எப்படி இருந்தது அப்போது துவங்கப்பட்ட பணிகளைப் பற்றியும் சொல்கிறார் ஆசிரியர் அடையாறில் இப்போது இருக்கும் கூவம் அப்போதுதான் உருவாக்கப்பட்டது பக்கிங்ஹாம் கால்வாய் ஜார்ஜ் கோட்டை தேவாலயங்கள் என்று பல இடங்களை குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்..

மிகப்பெரிய வரலாற்று செய்திகளை இந்த நாவலில் புகுத்தி நாவலாக நம் கண் முன்
தெரிந்தாலும் இது ஒரு ஆய்வு இதில் இருக்கும் நிகழ்வுகளின் உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம். மிகவும் வித்தியாசமாக அதேசமயம் உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று மிக கவனமாக அதேசமயம் மிக தைரியமாக வெளிக்கொண்டு வந்துள்ளார் ஆசிரியர்..

ஆரம்பத்தில் நாத்திக சங்கங்களை ஆரம்பித்தவர் என்றும் அறியப்பட முடிகிறது வள்ளலாரைப் பற்றி ஒரு சில இடங்களில் வருகிறது அவர் வாழ்ந்த பகுதியில் பக்கத்தில் தான் வள்ளலார் வசித்து வந்துள்ளார் வள்ளலருக்கும் மற்றொருவருக்கும் சண்டை ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்று வழக்குகளை சந்தித்து அதற்கான காரணம் அதன் பின்புலத்திலிருந்து இருந்தவர்கள் யார் யார் என்று மிக நாசுக்காக அதேசமயம் உண்மையையும் எடுத்து சொல்லி உள்ளார் நாயக்கர்..

நாவலின் கதையை விட இந்த வரலாற்றுக்காக தான் அந்த நாவலில் சிறு சிறு பாத்திரங்கள் என்று தெரிகிறது தன்னுடைய வளர்ப்பு மகள் ஒருவருடன் ஓடிப் போய் விடுகிறாள் அதற்காக காரணம் என்ன என்று தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளார் தன் மனைவி இறந்த பின்பும் கொஞ்ச நாட்கள் நடை பிணமாக தான் இருக்கிறார் பல இடங்களில் உணர்வுபூர்வமாகவும் அதேசமயம் இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் நம் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய பணிகள்
ஒன்றும் தெரியாமல் இருந்து விட்டோம் என்ற வருத்தமும் வருகிறது கண்டிப்பாக அவர்களை அறிந்து கொள்ள வேண்டிய நூல் நான் மிகவும் விரும்பி அதே சமயம் மிகப் பொறுமையாக வாசித்த நாவல் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது..

அவர் எழுதிய 2 புத்தகங்கள்..

பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிரக்கிற விவாதம்..
இந்து மத ஆசார ஆபாச தரிசனி

வெங்கடாசல நாயக்கரை பற்றி ஒரு சில அறிஞர்கள் சொல்லியதையும் இங்கு குறிப்பிடுவதற்கு ஆசைப்படுகிறேன்..

பெரியார் ஈவேரா, 14.9.46

நான் பெரிதும் தொண்டாற்றி வரும் பகுத்தறிவை ஆதாரமாகக் கொண்ட சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் இன்றைக்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிக துணிவோடும் தெளிவோடு செய்யுள் உருவாய் சொல்லப்பட்டிருக்கிறது.

பாவேந்தர் பாரதிதாசன், 29.3.47

மதம், ஜாதி, அளவுக்கு மீறிய கடவுள் நம்பிக்கை. சடங்கு. தீய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு அப்பால்தான் மக்களின் உரிமை விடுதலை என்று கருதும் அனைவர்க்கும் இந்நூல் ஏற்ற கருவியாயிருக்கும்.

.தோழியர் குஞ்சிதம் குருசாமி, 30.9.46

65 ஆண்டுகளுக்கு முன்பு இப்பாடல்களைப் பாடியுள்ள இவர், சுயமரியாதைக்காரர் என்ற புதிய கூட்டத்தில் சேர்ந்தவர் அல்லர். ஆயினும் அவர் கூறியிருப்பவைகளில் எதையாவது மறுத்துக் கூற முடியுமா. சுயமரியாதை இயக்கத்தின் மீது பாயும் எவராலும்?

சென்னை கிறிஸ்தவ கல்லூரி தமிழ் பேராசிரியர் ச.த. சற்குணர், 22.8.1946

இவ்வரிய ஆராய்ச்சி நூலின் பிரதி ஒன்று ஒரு சைவத் துறவியிடம் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் எனக்கு கிடைத்தது. அதனை என் கண்ணே போல் இதுவரைப் போற்றி வந்தேன். நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக தம் உடல்,உயிர், பொருள் மூன்றையும் அளித்துவரும் தொண்டராகிய திரு குரு ராமலிங்கம் அவர்கள் இந் நூலில் அருமை பெருமையை உணர்ந்து என்னிடம் வந்து அதனை கேட்டார். கொடுத்தேன்.

விஞ்ஞான கலை வளரும் இந்த நாளில் வீணான புராணங்கள் படித்து நம்பும் அஞ்ஞான நண்பர்களுக்கு ஒன்று சொல்வேன் அறிவு வர வேண்டும் என்றால் ஐயா நீங்கள் விஞ்ஞானம் வந்துள்ள இந்த நூலை எழுத்தெண்ணி படிப்பீரில் உணர்வீர் உண்மை.

பன்மொழிப் புலவர் 9.8. υπ πωπή. 30.9.46

திராவிடத்தில் பார்ப்பனர் வேரூன்றியதைக் கூறுகையில், “உரம் தரும் பொருளுக்கெல்லாம் உறுதி என்று அதனைப் பார்த்து நிரந்தரமாக பார்ப்பார் நினைத்தனர் எதுவும் கொள்ள” என்று கூறி கோவில் சிலையே பார்ப்பார் இங்கு நிலைக்க வைத்தது என்ற அடிப்படை ரகசியத்தை விளக்கி விட்டார்.

விடுதலை ஆசிரியர் தோழர் मा.लाी, 1.10.46

தமிழன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை சுயநல கூட்டத்தார்களான புரோகிதர்களாலும் பூசாரிகளாலும் மாந்திரீகர்களாலும் எவ்விதமாக எல்லாம் ஏமாற்றப்படுகிறான் என்பதை நூலாசிரியர் ஒளிவு மறைவு இன்றி எடுத்து சொல்லி அறிவுறுத்தி இருப்பது போற்றுக்குரியது.

எழுத்தாளர் நாரண துரைகண்ணன் 8.10.46

இதன் கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள அரிய விஷயங்களைத் தமிழர் நன்கு கவனித்துப் பயன்பெற வேண்டும் என்று விழைகிறேன்.

அறிஞர் அண்ணா, 12.11.4

 

நூலின் தகவல்கள்:- 

நூல் : “ஞாலம்” 

நூலாசிரியர் : தமிழ்மகன்

வெளியீடு : மின்னங்காடி பதிப்பகம்

விலை : ரூ.335/-

பக்கங்கள் : 302

நூலறிமுகம் எழுதியவர்:- 

நடராஜன் செல்லம் 

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

2 thoughts on “தமிழ்மகன் எழுதிய “ஞாலம்” – நூலறிமுகம்”
  1. என்னுடைய நூலுக்கு நல்லதொரு அறிமுகம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி

    1. மிக அருமையான புத்தகம் சாா் இது பல செய்திகளை எனக்கு தெரிய வைத்த புத்தகம்.. என் பதிவை பாராட்டியதற்க்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *