“தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள்” – நூல் அறிமுகம்
“மறைக்கப்பட்ட பெண் விடுதலைப் போராளிகளின் வரலாறு”
தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க பெண் விடுதலைப் போராளிகளில் அஞ்சலை அம்மாள், அம்புஜத்தம்மாள், ராணி வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை போன்றோர் அடங்குவர். இந்த பெண்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடி தங்கள் உயிர்த் தியாகம் செய்தவர்கள். அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாகப் பங்கேற்றனர், ஆனால் அவர்களின் பங்களிப்பு போதுமான அளவுக்கு வெளி உலகிற்குத் தெரியவில்லை.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டுச் சேர்ந்த பெண்கள்
சுதேசி, ஒத்துழையாமை, சட்டமறுப்பு போன்ற போராட்டங்களில் முக்கியப் பங்காற்றினர்.
சமூகப் பிரச்சனைகளை எதிர்த்து போராடிய பெண்கள், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
அரசியல், சமூக மற்றும் கலைத்துறைகளில் பெண்கள் தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
தந்தை பெரியாரை நம் மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் அவருடைய முதல் மனைவி நாகம்மையாரையும் அவரது தங்கை கண்ணம்மாவையும் எத்தனை பேர் அறிவார்கள்.
ஒத்துழையாமை போராட்டத்தை கைவிட வேண்டும் கள்ளுக் கடை மறியல் நிறுத்தபடவேண்டும் என்று காந்திகளிடம் காந்தியடிகளிடம் சிலர் கேட்டபோது போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் உள்ளது என்று கூறினாராம். அந்த ஈரோட்டில் இருந்த பெண்கள் நாகம்மையும் கண்ணம்மாவும் தான்.
மருத்துவப் படிப்பு உதறிவிட்டு சுதந்திரப் போர்க்களத்தில் குறித்த சிவகாமி அம்மா
கதர் விற்பனையை அதிகப்படுத்த வேண்டுமென அதையே ஒரு ஆயுதமாய் மாற்றிட “சகோதரிகள் சங்கத்தை” துவக்கியவரும் சுராஜியத்தை உருவாக்குவோம் வெள்ளையர் அரசாங்கத்தை அழிப்போம் என கோஷமிட்ட பத்மாசனி அம்மாள்.
தற்கொலை படை போராளி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண், 18 வயதிலேயே வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர் மற்றும் படைத் தளபதி குயிலி .
அந்நிய துணிகளை மிதித்து, கடைகளின் முன்பு மறியல் செய்ததற்காக கைது செய்யப்பட்ட மதுரை சொர்ணத்தம்மாள்.
விடுதலைப் போராட்டத்திற்கான நாடக மேடைகளில் விடுதலை கீதங்களை தனது கம்பீரமான குரலில் இசைத்து பாடியவரும் வந்தே மாதரம் பாரத சமுதாயம் வாழ்கவே விடுதலை விடுதலை போன்ற பாடல்களை எழுச்சியுடன் பாடி போராட்ட வீரர்களை உற்சாகப்படுத்திய கே பி ஜானகி அம்மாள்.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை சாதி தீண்டாமை எதிர்ப்பாளர் பெண்ணியலாளர் வர்க்க போராட்டக்காரர் என பன்முகம் கொண்டவரும் விதவை என்ற காரணத்துக்காக என்னை அடக்கி ஒடுக்க முடியாது என் விருப்பப்படி நடந்து கொள்ள எனக்கு முழு உரிமையும் உண்டு எனக்காக பிறர் முடிவெடுப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது என்று உரத்த குரலில் முரசு கொட்டிய வீராங்கனை மணலூர் மணியம்மாள்.
இது போன்ற விடுதலைப் போராட்ட வீராங்கனைகளின் வரலாறுகளை மிக விரிவாக ஆழமாக நமக்கு வழங்கி உள்ளார் நூலாசிரியரும் பேராசிரியருமான சோ.மோகனா
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாதவர்கள் நாட்டுப்பற்றை பேசுவதும் போராடிய வீரர்களுடைய தியாகத்தை புகழை தமதாக்கிக் கொண்டு போலிகளாக நடமாடும் இன்றைய சூழலில் இதுபோன்ற வரலாறுகளை இளைஞர்கள் மத்தியில் குழந்தைகள் மத்தியில் நாம் கொண்டு செல்வது மிகவும் அவசியமானதாகும்.
பெண்கள் பேசா மடந்தைகளாய் அடிமைகளாய் ஆடவர்களுக்கு ஏவல் செய்யவே பிறந்தவர்களா சனாதனத்தின் கொடுமைக்கு இறையாகி கல்வியும் உரிமையும் இன்றும் மறுக்கப்பட்டு வரும் சூழலில் இதுபோன்ற வரலாறுகளை அனைவரும் வாசிப்பதன் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டு ஆண்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
நம் வீரப் பெண்மணிகளின் வீரத்தையும் நாட்டுப் பற்றையும் எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
நாம் அனைவரும் குடும்பத்தோடு வாசிப்போம். வளரும் இளம் தலைமுறைகளை சரியான வழியில் வழி நடத்துவோம்.
நூலின் விவரங்கள்:
நூல்: தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள்
ஆசிரியர்: பேரா. சோ.மோகனா
வெளியீடு: பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
முதல் பதிப்பு ஏப்ரல் 2023
பக்கம்: 134
விலை: ரூ.140
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர் :
✍🏻 MJ. பிரபாகர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

