குழுந்தைகளே இச்சமூகத்தின் மிகப்பெரிய ஆளுமை. அவர்களை எப்படி உருவாக்குவது அவர்களுடைய கேள்விகளையும் தயக்கத்தையும் நாம் எப்படி புரிந்துகொண்டு அவர்களோடு பயணம் செய்வது என்பதை தங்கமே கேள்! என்ற இப்புத்தகத்தில் நாம் காணலாம்.

நம்மில் பலர் குழந்தைகளின் கேள்விக்கு பதில் கூறுவதையும் உரையாடுவதையும் தவிர்த்துவிடுகிறோம்… சில முறை தவறான விடைகளையும் தந்துவிடுகிறோம்… எப்போது ஒரு குழந்தை கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்களோ அப்போதே அவர்கள் இந்த சமூகத்தோடு வளர ஆரம்பித்து விட்டார்கள் என்று அர்த்தம். அவர்களுக்கு நாம் சரியான வழிகாட்டியாக திகழ வேண்டும்….

குழந்தைகள் நம்மை பார்த்தே வளர்வார்கள். பேசும் வார்த்தைகள், நட்பு , அன்பு, பொறுப்பு, யார் காரணம் என அனைத்து கேள்விகளுக்கும் இந்த புத்தகத்தில் பதில் உள்ளது. நண்பர்கள் என்பவர் யார்? எத்தனை நண்பர்கள் இருக்கலாம்? என்பதற்கான பதிலும் இதில் உள்ளது. நாம் செய்கிற அனைத்து செயல்களுக்கும் நாம் ஒருவரே காரணம்…

பொறுப்பு என்பது பெற்றோர்களுக்கு மட்டும் இல்லை குழந்தைகளுக்கும் தான், சில பெற்றோர்கள் தான் பட்ட கஷ்டங்களை தன் பிள்ளைகள் படக்கூடாது என்று நினைப்பார்கள் அதில் தவறொன்றுமில்லை ஆனால் யாருக்காக கஷ்டப்படுகிறோம் என்பதையும் பட்ட கஷ்டங்களை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி புரியவைப்பதிலும் தவறில்லையே…

இந்த புத்தகம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்குமானது…. குழந்தைகள் பெரிய தேடல்களை கொண்டவர்கள் அவர்களுடைய கேள்விகளுக்கும் குறும்புத்தனத்திற்கும் தீனி போட வேண்டியது நம்முடைய கடமையாகும்….

நூலை வாசித்து பாருங்கள் குழந்தைகளின் மனோபாவத்தையும் நீங்கள் நடந்துகொள்ளும் செயல்களும் இந்த சமூகத்தின் ஆளுமையை எப்படி உருவாக்குகிறது என்பதை பாருங்கள்…

நன்றி!

நூலின் தகவல் 

நூல்                     : தங்கமே கேள்

ஆசிரியர்        : கமலா கணேசமூர்த்தி

வெளீயீடு        : புக்ஸ் ஃபார் சில்ரன்

விலை            : ரூ. 40

 

எழுதியவர் 

சங்கீதா கந்தன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *