நினைவின் வெளியில்
அலையும் பறவை
நிறுத்தமில்லாததொரு
விண்வெளிப் பேருந்து
ஒளியாண்டுகள் ஆகும்
ஓர் ஞாபகம்
மக்கிப் போவதற்கு
நட்சத்திரங்களின் ஆயுளில்
பாதியைக் கொடு
உன்னை மறப்பதற்கு
வெண்ணிறப் புரவிகள்
பொங்கிப் பிரவகிக்கும் போது
நான் நிலவிற்குள்
ஒடுங்கியிருப்பேன்
ஒரு ஆலிலையைப் போல
என் ஆன்மா
உன்னை நோக்கி நீண்டு வரும்
ஒரு காட்டுக்கொடியைப் போல
தங்கேஸ்