தங்கேஸ் கவிதைகள்

 தங்கேஸ் கவிதைகள்



கவிதை 1
உனக்கோ முதுகு சொறிந்து கொள்ள
உன்னைச் சுற்றிலும்
நூறு கைகள்
மரம்கொத்திக்கோஅதன்கூரீயஅலகுமட்டுமே…..


கவிதை 2
திறந்துகிடக்கும்சிதறுண்ட
இதயமென
சேறும் நீரும் சரிபாதியாய் கலந்து
தோற்றம்கொள்ளும்
இந்தசெங்குட்டைக்குள்
அமிழ்ந்துகிடக்கின்றன
உயிர்பயத்தில்
கெண்டைகளும்கெழுத்திகளும்
சுற்றிலும்
மொய்த்துக்கிடக்கின்றன
களிமண் வீச்சத்தோடு
மீன் கொத்திகளின் அலகுகள்
நாரைகளின்     குச்சிக்கால்கள்
கொக்குகளின் வெள்ளைச் சிறகுகள்
காக்கைகளின்  தந்திரங்கள்
மீன்ருசியில் எச்சில்
ஊறித்திளைக்கும் நாவுகள்
மற்றும்  என்கவிதைகள்!


கவிதை 3
குழைந்து குழைந்து வாலாட்டி
என்னையே  சுற்றி சுற்றி வருகிறது
இன்றைய  நிலவு
மடுவிலிருந்து பீய்ச்சியடிக்கும் நுரைப்பாலாய் பரவுகிறது
சன்னல்  வழி ஒளி
அறையெங்கும்  அலைந்து கொண்டிருக்கும்
ஒளிக்கற்றையில் நடனமிட்டுக்கொண்டிருக்கின்றன
இரவினை விழுங்க காத்திருக்கும்  நினைவின் துகள்கள்
என் இரத்தத்தில் மிதந்து கொண்டிருக்கும்
ஒரு அடர்த்தியான முகத்தின் பிம்பம்
திடுமென உன் சாயலில் தோற்றம் கொள்கிறது
முன்னறிவிப்பின்றி
நினைவுகளை கருப்பிடிக்கும்
ஏ பசுங் கருமை இரவே
உனக்கும் எனக்குமான தொப்புள் கொடி உறவில்
இன்று  பூத்து குலுங்குகிறது  உறங்காத காற்றில்
இந்த காட்டுப்பூ
 தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *