- நீங்க என்ன ஆளுக ?
நீங்க என்ன ஆளுங்க என
ஒருவனை
கேட்ட நொடியில்
ஒரு சயரோகி ரத்தத்துடன் கோழையைப் புழுதியில் துப்பிவிட்டுச் செல்கிறான்
ஒரு வேசை காசு தராத வாடிக்கையாளின் பரம்பரை பெண்களை
அவளின் தொழிலுக்குப் போகச் சொல்லி சபிக்கிறாள்
குப்பைத்தொட்டியின் அருகில் கிடந்த
சாக்கு மூட்டை அசைந்து அசைந்து
மனித உடலம் தலை நீட்டுகிறது
முழுப் போதையில் போகும் டாஸ்மாக் குடிமகன்
தெருவை ஆபாச வசவுகளால் நெய்தபடி போகிறான்
தெரு நாய்களுக்குள் எலும்பு யாருக்கு என்ற சண்டை மறுபடி ஆரம்பமாகிறது
அன்பான கடவுள் மீது அநாவசியமாகக் கோபம் வருகிறது
வாலில்லாத குரங்குக்கு
மறுபடியும் வால் முளைத்ததும்
கிளைக்குக் கிளை தாவுகிறது
2
மௌனத்தை விட மெதுவாக
உதிர்கிறது மஞ்சள் அரளிப்பூ
கடப்பாரையையும் மண்வெட்டியையும்
தாங்கும் பூமியால் கூட
மெளனத்தின் மென்மையைத்
தாங்க முடியவில்லை
இவ்வளவுக்கும் சருகு கூட இல்லை
வாளிப்பான மஞ்சள் வாகு
சொல்லொண்ணா துயரத்தில்
குலுங்குவது போல் இருக்கிறது மரம்
இரண்டாவது முறை பார்த்த போது
காற்றில் கிளைகள்
ஆனந்தமாக ஆடிக்கொண்டிருந்தன
கூடவே பூத்திருந்த பூக்களும்
இலைகளையே பார்த்துக்கொண்டிருந்தவள்
“எதுவுமே சொல்லமாட்டியா”
என்றாள்
“எதுவுமே சொல்லத் தோன்றவில்லை”
என்றேன் நான்
3. சந்தை
தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.