|
கவிதை 1
நடுநிசியில் முன் தோன்றிய கடவுள்
என் விரல்களைப் பிரியமாகப் பிடித்த படி
வெறும் விரல்கள் அல்ல இவை
பிரபஞ்சத்தின் திறவுகோல்கள் என்று
சொல்லி விட்டு மறைந்தார்
அந்நேரம்
வாசல் செம்பருத்தியில் வண்டுகளின் பிதற்றல்கள்
சிலிர்ப்படங்காமல்செம்பருத்தியி
கூம்பிப் போன மொட்டான்றை
விரல்களால் தொட்டேன்
எதேச்சையாக
உள்ளே சாவி போட்டது போல்
சட்டென்றுதிறந்து கொண்டது அது
இப்போது
மொட்டுக்களைச் சுற்றி
பிதற்றிக் கொண்டிருந்த கருவண்டுகளெல்லாம்
என் விரல்களைச் சுற்றி
ரீங்காரமிட ஆரம்பித்திருந்தன
கவிதை 2.
ஏதுமற்றவனாய்
ஏதுமற்றவனாய்ப் போனேன் ஒரு வெற்றிரவில்
நிலவு சட்டென்று இறங்கிவந்து
கண்ணீரைத் துடைத்துப்போனது
வடமேற்கில் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த
கிழட்டு நட்சத்திரம் ஒன்று
காற்றில் பிடியை உதிர்த்தது ஆற்றாமையில்
இரண்டு மேகங்களுக்கு இடையிலிருந்து
இறங்கிவந்த முதியவர்
குருதிவழியும் என் இதயத்தை
தன்கைகளில் எடுத்து முத்தமிட்டு
‘’ இது ஒரு கணம் அன்பிற்குரிய வசிப்பிடமாய் இருந்தது ‘’
என்று சொல்லிவிட்டு மறைந்தார்
தங்கேஸ்
|
|

Posted inPoetry

நன்றிகள்