களிமண் பொம்மையர்கள்
பச்சைக் களி மண்ணைப் பிசைவது போல மனதைப் பிசைந்து உருவங்கள் செய்கிறாள்
செய்த உருவங்கள் உயிர்பெற்று நடந்துவிட வேண்டி
அவைகளின் காதில் ஓயாமல் மந்திரங்களை
உருவேற்றிக் கொண்டிருக்கிறாள்
மந்திரங்களின் தகிப்பில் பச்சைகளிமண்ணுக்குள்
இருதயம்
துடிக்கத் தொடங்குகிறது
குருதியோட்டம் பாய்கிறது
சிறுவிரல் தீண்டலின் வெம்மையில்
உருவங்கள் இலேசாக அசைகின்றன
இதழோரத்தில் சுண்டிவிட்டு
புன்னகைக்க மறக்காதே என்றபடி
உனக்கொரு பெயர் வைக்க வேண்டுமே
என்ன பெயர் வைப்பது
என்றவள் கேட்கின்றாள்
களிமண் கடவுளர்கள் என்றவைகள்
கூச்சலிட்டன
நான் களிமண் பொம்மையர்களென்று அழைப்பேன்
என்றாள் அவள்.