புத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு| க.அம்சப்ரியாவின் “தனிமையில் அலையும் தனிமை”க.அம்சப்ரியாவின் “தனிமையில் அலையும் தனிமை”
***************
தனிமையில் அலையும் தனிமை
(ஊரடங்கு காலக் கவிதைகள்)
உலகெங்கும் மக்களை அச்சுறுத்திய கொரனோ பெரும் நோய் அது தன் கோரபற்களால் மக்களை கரும்புச்சக்கையென சவக்குழியில் தள்ளியது.
ஆளும் அரசாங்கத்தின் நெறியற்ற நடவடிக்கைகள் மக்களை மன அழுத்தில் இறக்கி சாகடித்து பல்லிளித்து நின்றது.
~~~~
நாள்தோறும் பல நூறு மனிதர்களைச் சந்திக்கும் மனிதனை தனிஅறையில் இருவென்று சொன்னால் பெருங்கடலை ஒரு கோப்பையில் இருப்பது போன்று அம்மனிதனை உயிரோடு கொல்வதற்கு சமம் இந்த நெருக்கடியில் தன்னை பாதுகப்பதற்கு கவிதையை ஆயுதமென சுழற்றத் தொடங்கி இருக்கிறார் கவிஞர்
க.அம்மசப்ரியா அவர்கள்.
— கவிஞர் சோலை மாயவன்


தொகுப்பிலிருந்து ஒரு கவிதை
~~~~
1 அன்ன பூரணிகள்
~~~~~~~~~~~~~~~~~~
அவர்கள் எங்கிருக்கிறார்களென
சாதாரண நாட்களில்
கண்ணுக்குத் தெரிவிதில்லை
யாரும் காண முடியாமல் பரவியிருக்கிறார்கள்
குழாயடிகளில் ஒரு குடம்
தண்ணீருக்கெனப் பிடிவாதத்தில்
தங்களை நிரூப்பிப்பார்கள்
ஒரு முழம் மல்லிக்கைப் பூவுக்கென
காலச் சொற்களையெல்லாம்
கண்டெடுத்துச் செலவழிப்பார்கள்
புயல் காலம், பெரும் மழைக்காலம்,
பேரிடர் காலமென
ஊழித் துயரைக் கண்டால்
இவர்கள. கைகள் பெருகிவிடுகின்றன
அண்ணன்கள் தம்பிகள் அப்பாக்கள்
யாரோ சில நண்பர்கள்
வேண்டிக்கொள்கிற போது
சமைத்துச் சமைத்துக் குவிக்கிறார்கள்
எங்கோ யாரோ பசியாறும் காட்சியொன்றில்
அன்னபூரணிகள் அவதாரமெடுக்கிறார்கள்
அமுதசுரபிகளின் அடையாளமாகிறார்கள்
~~~~~
வெளியீடு
புன்னகை பதிப்பகம்
முன் அட்டை ஓவியம்
ஆ.பாலாஜி -தேவகோட்டை
விலை ரூ.100/-