தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம், பாபசி சார்பில் நடைபெற்று வரும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நூல் அறிமுகப் போட்டி ஜீலை 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேலும் தெரிவித்திருப்பது:
இந்தப் போட்டியில் அப்துல்கலாமின் அக்னிச் சிறகுகள், பொன்னியின் செல்வன் முதல் பாகம், சு.வெங்கடேசனின் வீரயுக நாயகன் வேள்பாரி, சாண்டில்யனின் கடல் புறா, அண்ணாவின் செவ்வாழை, கலைஞர் மு, கருணாநிதியின் ஒரே ரத்தம், ச.கந்தசாமியின் சாயாவனம், கி,ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள், பாலகுமாரனின் உடையார், சுகி சிவத்தின் நீ நான் நிஜம், எனிட் ப்ளைட்டனின்
(ஆங்கில நாவல்களில் ஒன்று), ஹாரி பட்டரின் (ஆங்கில நாவல்களில் ஒன்று) ஆகிய நூல்களில் ஏதேனும் ஒரு நூல் குறித்து 3 முதல் 5 நிமிடத்துக்குள் அறிமுகம் செய்ய வேண்டும்.
இந்தப் போட்டி தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா மேடையில் ஜீலை 24ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இதில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் நூல்களை அறிமுகம் செய்யலாம்.
இந்தப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக நூல்களை அறிமுகம் செய்யும் சிறந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், தலா ரூ. 500 மதிப்பிலான புத்தகப் பரிசு கூப்பன் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9842455765, 9443267422 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.