இயக்குநர் தங்கர் பச்சான் மகன் நடித்த "பேரன்பும் பெருங்கோபமும்" திரைவிமர்சனம் (Peranbum Perungobamum Movie Review) - இரா.தெ.முத்து

திரைவிமர்சனம்:- பேரன்பும் பெருங்கோபமும் – இரா.தெ.முத்து

பேரன்பும் பெருங்கோபமும் நாயகனான விஜித்பச்சான் திரையில் தோன்றும் முதல்காட்சியே படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி விடுகிறது.

25 வயதான விஜித் திரையில் 45 வயது தோற்றத்துடன் அடர்தாடி,புட்டிக் கண்ணாடி உடன் தோன்றுவது ஏன்?எதற்காக? என்பதே படம் சஸ்பென்ஸ் கொண்டதாக இருக்குமோ என எண்ண வைத்து விடுகிறது. படமும் சஸ்பென்ஸ் சார்ந்த படமாகவும் இருக்கிறது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெருந்தலைவன் ஜீவாவின் பெயரை நாயகனின் கதாபாத்திர பெயராக வைத்திருப்பதும் கூட படம் குறித்த பல்ஸை துடிப்பை எகிற வைத்து விடுகிறது.

தான் வாசித்த முதல்நூல் காரல்மார்க்சினுடையது என கேட்கும் பவாசெல்லத்துரை குரலின் வழியாக காரல்மார்க்ஸ் சிலை காட்சிப்படுத்தப்படுவதும் , மாஹே நகரத்தின் சுவர்களில் வரையப்பட்டுள்ள பாப்மார்லி ஒவியமும் டிஒய்எஃப்ஐ கொடிகளும் படம் குறித்த எதிர்பார்ப்பை மட்டுமல்ல, திரையில் காட்சிப்படுத்தப்படுகிற படத்தின் பிரச்சினை மீதான களங்களை எதிர் கொள்பவர்கள் இடதுசாரிகள் என படத்தின் குறியீட்டுக் காட்சிகள் உணர்த்துகின்றன.

சாதியத்தை எதிர் கொள்ளும் ஜனநாயகம் குறித்த அக்கறை கொண்டவர்கள் அரசாங்கத்தின் நிர்வாகத்தில் காவல் அதிகாரிகளாக நீதிமன்ற நீதிபதிகளாகவும் இருப்பார்கள் என்ற புரிதலின் வழியாக படம் பேசுகிற பொருளுக்கான அடர்த்தியைக் கூட்டுகிறது.

பெரியகுளம், ஆண்டிப்பட்டி , வராகநதி, மாஹே என படத்தின் கதைக்களம் அமைந்திருக்கிறது. இவை சார்ந்த ஒளிப்பதிவு மனதை ஜில்லிட வைக்கின்றன. கிறிஸ்துமஸ் காலத்தில் நாயகி ஷாலிநிவேகாசின் வீடும் மாஹேவின் ஆறும் ஈர்க்கின்ற காட்சிகளாக இருக்கின்றன.

படத்தின் கதைதான் என்ன? கதை என்பது திரைப்படத்தின் விவாதப் பொருளென்பது சாதியமும் சாதியப் பெருமிதங்களை பலவீனப்படுத்துவது கட்டுடைப்பது என்பதுமாகும்.

இயக்குநர் தங்கர் பச்சான் மகன் நடித்த "பேரன்பும் பெருங்கோபமும்" திரைவிமர்சனம் (Peranbum Perungobamum Movie Review) - இரா.தெ.முத்து

இதற்கான ஒர் உத்தியை இயக்குநர் சிவப்பிரகாஷ், நாயகன் விஜித் ,தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் படத்தில் சொல்லி இருக்கிறார்கள். இந்த உத்தியை சுற்றித்தான் திரைக்கதை முன்னும் பின்னுமாக ப்ளாஷ்பேக் வழியாக பயணப்படுகிறது.

பெரியகுளத்து அமைச்சராக மைம்கோபி இவரின் எடுபிடியாக அருள்தாஸ், ஆணவக்கொலைக்கு உதவும் குரூரக் குணம் கொண்ட பெண்ணாக சுபத்ரா ராபர்ட் என முக்கியமான பாத்திரங்களில் நடித்து படத்திற்கு உயிரூட்டி இருக்கின்றனர்.

மொத்த படத்தை நாயகன் விஜித், நாயகி ஷாலிநிவேகாஸ்,ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ் நிலை நிறுத்தி இருக்கின்றனர்.

தனது முதல் படத்தை ஆணவக்கொலை சாதியப் பெருமிதங்களை கட்டுடைத்தல் என்பது வழியாக கவனிக்க வைக்கிறார் சிவப்பிரகாஷ். இவர் பாலுமகேந்திராவின் சினிமாப்பட்டறை மாணவர் என்பது மகிழ்ச்சி தருகின்றது.

படம் விறுவிறுப்பான திரைக்கதையோடு இருந்திருந்தால் இயக்குநர் விரும்பிய சஸ்பென்ஸ், திரில்லர் கதையாகவும் அதகளம் ஆகி இருக்கும்.
இளையராஜா படத்தில் இருக்கிறாரா? என கேட்கத் தூண்டுவதை தவிர்க்க இயலவில்லை.

விஜித்பச்சான் இயக்குநர் தங்கர் பச்சானின் இரண்டாவது மகனாவார்.

எழுதியவர் : 

– இரா.தெ.முத்து

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *