கைகளைத் தட்டித்தட்டி
காய்த்துப் போய்விட்டன;
பெருமைகளைப் பேசி பேசி
வாய் புளித்துப் போய்விட்டது;
அன்னாந்துப் பார்த்துப் பார்த்து
கண்கள் பூத்துப் போய் விட்டன;
யாரோ பெற்றப்பிள்ளையின்
பின்னால் சென்று
பதுங்கி ஒதுங்கி நின்று
இருட்டாகி விட்டேன்;
எனக்கே என்னைத்
தெரியாமல் போய்விட்டேன்;
என் பெற்றோர் தந்தக் குருதியும்,
ஆறாம் அறிவும்
இன்னும் என்னிடம்
ஏதோ சொல்லிக்கொண்டே
இருக்கின்றன….
செவிடாகிவிட்ட என் காதுகளில்
கேட்கும் திறனை
மீட்டுக்கொண்டு வருகின்றன….
முரசொலியாக
என் பெற்றோர்த் தந்தக்
குருதியும், ஆறாம் அறிவும்;
அதற்குத் ;தன்மானம்
நான் எனது என்னுடைய
என்ற
பொருளை பொருத்திப் பார்க்கத்
தொடங்குகிறேன்,
ஒரு மானுடக் குழந்தையாக!
தத்தித் தவழ்ந்து
வளர்வேன் நான் சுயமாக;
சொந்த புத்தியென்று
அதற்கு நான்
பெயர் வைத்துக்கொள்கிறேன்;
புத்தியென்பது
ஏதோ ஒரு மாதிரியாகத்தான்
இருக்கிறது!
திருத்திப் பார்க்கிறேன்
அதனுள்
தன்மானம் என்ற
விதை தெரிகிறது!
எழுதியவர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.