தன்னம்பிக்கை தந்த பரிசு – சிறார் புத்தகம். சிறார் புத்தகம் என்றவுடன் அது
சிறுவர்களுக்கானது என பெரியவர்கள் அதை வாசிக்க மறுகலித்துவிடுகிறார்கள்.
சிறார் புத்தகங்களை நாம் வாசிக்க இரண்டு காரணங்கள் எனது புரிதலில் இருந்து
ஒன்று நாம் சிறுவராக இருந்து தான் பெரியவர்கள் ஆக வளர்ந்துள்ளோம்.
இரண்டு நாம் சிறார்கள் மனநிலையை அவர்களுக்கான புத்தகத்தை வாசிப்பதினால்
அவர்கள் மனநிலையை அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்ததை பிள்ளைகளுக்கு
கதைகளாக கடத்தலாம்.
ஆசிரியர்: திரு. மா கமலவேலன் சிறார்களுக்கான பல புத்தகங்களை படைத்துள்ளார்.விருதுகள் வாங்கி உள்ளார்.
10 சிறுகதைகள்:
இப்புத்தகம் மாதுளை முத்துக்களை மாதுளை பழம் எப்படி தன்னுள் புதைத்து வைத்துக் கொண்டு உள்ளதோ அதே போல 10 சிறுகதைகளை தன்னுள் புதைத்து வைத்து உள்ளது.
வாசிப்பு என்ற கலப்பை பிடித்து உழுது அதன் விளைச்சலை நமதாக உரிதாக்கி கொள்ள வேண்டியது அவசியம். கதைகளின் தலைப்புகள்:
1. ஞானக்கண்
2. தன்னம்பிக்கை தந்த பரிசு
3. இடப் பக்கம் திரும்பவும்
4. ஆசிர்வாதம்
5. பாதையில் ஒரு பாடம்
6. வாடா மலர்
7. தயவுசெய்து நம்புங்கள்
8. கட்டு விரல்
9. அரிஸ்டாட்டில் போட்ட அஸ்திவாரம்
10. அரசும் நாணலும்
செய்தி தாள் வாசிப்பு நம்மிடம் ஈறுகி வருகிறது. 50 வருடங்களுக்கு முன் ஒரு
நாளிதழக்காக இருந்த காத்திருப்பு இன்று நம்மிடத்தில் இல்லை. ஒரு ஆரோக்கியமான சமூகம் செய்திதாள் வாசிப்பில் தான் உருவானது. விரல் நுனியில் தகவல்கள் வர துவங்கியவுடன் தேடல்கள் குறைந்து விட்டன.
அதிலும் முக்கியமாக மாணவர்கள் செய்திதாள் வாசிப்பதன் ஊடே அவர்களின் ஞான
கண் திறக்கும் என்பதை அழகாக எதார்த்தமான முறையில் ஓசிப் பேப்பர் ராமலிங்கம் ஊடே ‘ஞான கண்’ சிறுகதை உணர்த்துகிறது.
வாசிப்பு ஆர்வமும் தன்னம்பிக்கையும் இருந்து விட்டால் வாழ்வில் உயர தடை ஏதும்
இல்லை என்பதை தன்னம்பிக்கை தந்த பரிசு நமக்கு உணர்த்துகிறது.
மாணவர்களுக்கு ஆர்வம் என்ற விதையை விதைத்து விட்டால அவர்கள் தேடல்
துவங்கிவிடும். திருக்குறள் புத்தகம் தொலைந்து விட்டதால் போட்டியில் கலந்துக்
கொள்ள முடியாத தாயப்பன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி வந்ததால்
என்ன பயன் பெற்றான்? போட்டியில் கலந்துக் கொண்டானா? வெற்றி
பெற்றானா?அவனின் திருக்குறள் புத்தகம் தொலைந்து போனதா இல்லை
திருடப்பட்டதா என பல கேள்விகளுக்கு பதில் இந்த கதை வாசித்தால் தெரிந்துக்
கொள்ளலாம்.
சிறுவயதிலிருந்தே சிலரிடம் சில பழக்கம் இருக்கும். விளையாட்டாக துவங்கி பின்னர்
அதுவே தொடர் பழக்கமாகிவிடும். அப்படி ஒரு பழக்கத்தால் தில்லை நாயகம் சந்திக்கும் சங்கடங்கள் என்ன என்ன? அதன் விளைவு அவன் கற்றுக் கொண்ட பாடம் என்ன?
என்பதை இடப் பக்கம் திரும்பவும் சிறுகதை சொல்கிறது. கௌரவம் என்பது காசு பணத்தில் தான் இருக்கிறது என்ற மனநிலை கொண்ட அங்குசாமி எப்படி கல்வி பயில்வதில் தான் கௌரவம் இருக்கிறது என்பதை எந்த நிகழ்வின் வாயிலாக உணர்கிறான். அதனால் அவன் மகன் முத்தையாவின் மேல்படிப்பு ஏன் தொடர்ந்தது என்பதை பாதையில் ஒரு பாடம் கதை நமக்கு படம் பிடித்துக்
காட்டுகிறது.
பரிசு பொருட்கள் எல்லாம் அந்த நொடி இன்பங்கள் தரக்கூடியவை. அவ்வாறு
இல்லாமல் காலத்திற்கும் நமக்கு நல்லவற்றை பதிவு செய்து உற்ற தோழனாக
பயணிக்கும் புத்தகங்களை பரிசாக அளிப்பதும் பெறுவதும் வாடாமலர் போல் வாசம்
வீசிக் கொண்டே இருக்கும் என்பதனை வாடா மலர் சிறுகதை நமக்கு உணர்த்துகிறது.
சுந்தரமூர்த்தியின் மகன் ஐயப்பன் ப்ளஸ் டூ படிக்கிறான். அவன் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க நன்றாக படிக்கிறானா? அவனது தந்தை அவனுக்கு நல்வழி
காட்டுகிறாரா ? இல்லை தவறான பாதையை தேர்ந்து எடுக்கிறாரா? அப்படி அவர் நடந்து கொள்ளும் விதத்தால் ஐயப்பனுக்கு என்ன நிகழ்கின்றது என்பதை சுட்டு விரல்
கதை பேசுகின்றது.
பலரின் வாழ்க்கையைக் செம்மையாகிய பெருமை ஆசிரியர்களை சாரும். கிரேக்க நாடு பெற்றெடுத்த மாவீரன் அலெக்ஸாண்டர் வாழ்க்கையில் அரிஸ்டாட்டிலும் அவ்வாறே.
அலெக்சாண்டரைத் தட்டி தட்டி தங்கமாக மகளிர் செய்த பெருமை யெல்லாம்
அரிஸ்டாடிலையே சாரும்.. ஒரு அன்னிய நாட்டுப் பொருள் மீது ஒரு அரசனுக்கு மோகம் இருப்பது ஏற்புடையதா? அப்படி அலெக்சாண்டர் என்ன அந்நிய பொருள் மீது மோகம் கொண்டான்? அந்த எண்ணத்தை எப்படி அரிஸ்டாட்டிலின் அறிவுரை தகர்த்தியது என்பதை அரிஸ்டாட்டில் போட்ட அஸ்திவாரம் கதை நமக்கு சொல்கிறது
அரசும் நாணலும் என்ற கதையில் அரச மரத்தையும் நாவலையும் ஒப்பீட்டு நிறைவின்
தன்மை என்பது என்ன? கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் என்பதை பறவைகள்
வழியாக நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர்.
அனைத்து கதைகளும் ஒரு வழிகாட்டியாக நம்மை நகர்த்தி செல்லுகிறது. ஆசிரியர் மா.கமலவேலன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி
திருமதி சாந்தி சரவணன்
சென்னை 40
நூல்: தன்னம்பிக்கை தந்த பரிசு
ஆசிரியர்: திரு. மா. கமலவேலன்
பக்கங்கள்:80
பதிப்பகம்:அறிவுப் பதிப்பகம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.