மனச்சிதைவு நோயின் உலக வித்தகர் தாரா ரங்கசாமி (Thara Rangaswamy is a world expert on schizophrenia) - மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி - https://bookday.in/

மனச்சிதைவு நோயின் உலக வித்தகர் தாரா ரங்கசாமி (Thara Rangaswamy)

இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

மனச்சிதைவு நோயின் உலக வித்தகர் தாரா ரங்கசாமி (Thara Rangaswamy)

இந்தியாவில் மனச்சிதைவு SCHIZOPHRENIA நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது. உலக அளவில் மனம் சம்பந்தப்பட்ட நோய்களில் மனச்சிதைவு நோய் (Schizophrenia) பாதிப்பு முதலிடம் வகிக்கிறது. இந்த நோய் குறித்த சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்தியாவின் விஞ்ஞானி தாரா ரங்கசாமி ஆவார். சென்னையில் ஸ்கிசோஃப்ரினியா ஆராய்ச்சி நிறுவனம் என முக்கிய அமைப்பை ஏற்படுத்தி இந்த நோய் குறித்த தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டு வருபவர். உலகிலேயே இந்த நோய் குறித்த உச்ச அமைப்பான இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் உள்ள SIRS அமைப்பின் சமூக ஆராய்ச்சி விருதை தாரா ரங்கசாமி சமீபத்தில் பெற்றார்.

தாரா ரங்கசாமி (Thara Rangaswamy) சென்னையில் பிறந்தவர். கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் இளம் களை மருத்துவ படிப்பையும் சென்னை மருத்துவக்கல்லூரியில் மனநல மருத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அவரது முனைவர் பட்ட ஆய்வே மனச்சிதைவு நோய் பற்றியது ஆகும். 1985 ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து இங்கிலாந்திலுள்ள உளவியல் மருந்து ஆய்வுக்கான ராயல் கல்லூரியில் தொடர் ஆய்வுக்காக பல ஆண்டுகள் கழித்தார். பிறகு இந்தியா திரும்பியவர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மனச்சிதைவு நோய் (Schizophrenia) துறையில் ஸ்கிசோஃப்ரினியாவின் கல்வி மற்றும் விளைவுகளை பாதிக்கும் காரணிகள் எனும் ஆய்வில் மூத்த ஆராய்ச்சி அதிகாரியாக தன்னை இணைத்துக் கொண்டார்.

மனச்சிதைவு நோய் என்பது பிரமைகள், ஒழுங்கற்ற சிந்தனை மற்றும் மாயத்தோற்றம் சம்பந்தமான முக்கிய நோயாகும் ..இதன் அறிகுறிகள் படிப்படியாக வளரும் நம்முடைய மூளைக்குள்ளேயே அமர்ந்து கொண்டு யாரோ நம்மை வழி நடத்துவது போலவும் நம்மிடம் பேசிக் கொண்டிருப்பதும் போன்ற மாய தோற்றம் இதன் முதல் படி என்று அறியப்படுகிறது பொதுவாக இளமை பருவத்திலேயே அறிகுறிகள் தொடங்கிவிடும் அவை தவிர்க்கப்படுகின்றன உதாசீனப்படுத்தப்படுகின்றன அதனுடைய அடிப்படைகளை கண்டறியாமல் கடந்து செல்லப்படுகின்றன இந்த நோயை தொடக்கத்திலேயே கண்டறிவது குறித்த மிக முக்கியமான நோய்க்காரணிகள் எனும் தொகுதியை தாரா ரங்கசாமி உலக அளவில் வெளியிட்டு இருக்கிறார்

மனச்சோர்வு கோளாறு பதற்ற கோளாறு மற்றும் வெறித்தனமான கட்டாய கோளாறு.. ஸ்கிசோஃப்ரினியாவின் பொதுவான தொடக்கங்களாக உள்ளன. தாரா ரங்கசாமி (Thara Rangaswamy) கண்டுபிடிப்பின் படி இந்த நோய் 6 – 30 வயது வரை உள்ளவர்கள் இடையே ஒரு தொடக்கமாக தோன்றுகிறது. இது ஒரு பரம்பரை நோய் என்று ஆரம்பத்தில் அறியப்பட்டு வந்தது. டாக்டர் ரங்கசாமியின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்ன? குழந்தைப்பருவத்தில் மருந்துகளை மாற்றி கொடுப்பது கஞ்சா பயன்பாடு ஹவுஸ்நோகள் என்றழைக்கப்படும் போதைப் பொருட்களை பயன்படுத்துதல் குழந்தை பருவத்து துயரம் இப்படி புதிய காரணிகளை தாரா ரங்கசாமிரங்கசாமி கண்டுபிடித்தார்.
உலக அளவில் இருபத்தி நாலு மில்லியன் மக்களுக்கு மனச்சிதைவு நோய் (Schizophrenia) உள்ளது. இந்தியாவில் இது போன்ற நோய்வாய்ப்பட்டவர்கள் வீட்டிலிருந்து விரட்டப்பட்டு சாலைகளில் வாழ்கிறார்கள். இவர்கள் நெடுந்தூரம் நடந்து கொண்டோ அல்லது சாலை ஓரங்களில் உறங்கிக் கொண்டோ அல்லது சிரித்தபடி ஊர் எங்கும் திரிந்து கொண்டோ இருப்பதை நாம் பார்க்கலாம். இத்தகையவர்களை தேடி வர்களை பத்திரமாக மீட்டு தன்னுடைய ஸ்கிசோஃப்ரினியா ஆய்வு மையத்தில் சென்னையில் இவர்களில் பலரை தாரா ரங்கசாமி பராமரித்து வருகிறார்.

டாக்டர் ரங்கசாமி அம்மையாரின் முக்கிய ஆய்வு இந்த நோய்க்கான மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் பற்றியது ஆகும் மரபணு காரணிகள்ல் பொதுவான மற்றும் அரிதான மரபணு மாறுபாடுகள் அடங்கும். பெண்களுக்கு இந்த நோய் வருவதற்கான காரணிகளில் ஒன்று கர்ப்ப காலத்தில் மோசமான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்வதில் உள்ளது என்று தாரா ரங்கசாமியின் ஒரு கண்டுபிடிப்பு கூறுகிறது. 2015 ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் ஸ்கிசோஃப்ரினியா நோய்வாய்ப்பட்டவர்களில் 17,000 பேர் மரணம் அடைந்தனர். 20 ஆண்டுகளுக்கு இந்த நோய் ஒருவரை விடாமல் துரத்துகிறது. மனச்சிதைவு நோய் என்பது தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கின்ற நோயாகும் இந்த நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆன்டிசைகோடிக் மருந்துகள் தேவை இவை மிகவும் விலை உயர்ந்தவை எனவே நோயாளிகளுக்கு அரசே முன்வந்து ஆன்டிசைகோடிக் மருந்துகளை கொடுக்க வேண்டும் என்பது டாக்டர் தாரா ரங்கசாமியின் தீவிர போராட்டமாகும்.

நாரி சக்தி புரஸ்கார் விருது (Nari Shakti Puraskar to Thara Rangaswamy)

இந்த நோயை கண்டறிவதற்கு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள நோய்கள் மற்றும் அதன் தொடர்புடைய உடல்நல பிரச்சினைகளின் சர்வதேச புள்ளிவிவர கையேடு டாக்டர் தாரா ரங்கசாமி (Thara Rangaswamy) தலைமையில் அவரது குழுவால் உருவாக்கப்பட்டது. எட்டு நிலை பரிசோதனைகளை கொண்டு ஒருவருக்கு மனச்சிதைவு நோய் இருக்கிறதா என்பதை எளிதில் கண்டுபிடிக்கும் விதமாக நேர்மறை மற்றும் எதிர்மறை அறிகுறிகளின் தீவிரத்தை மதிப்பிடுகின்ற மனநல மருத்துவ கருவி ஒன்றை இந்த குழு அறிமுகம்செய்தது.  PANSS அளவு நோய் அறிகுறி அளவுகோலை வைத்து ஒருவருக்கு மனச்சிதைவு நோய் இருக்கிறதா என்பதை தீர்மானிக்கிறார்கள். இதைத் தவிர DSM-5 ஒரு புதிய அளவுகோலை டாக்டர் தாரா ரங்கசாமி இந்தியாவுக்கு என்றே அதில் இணைத்திருக்கிறார். அது முழுக்க முழுக்க இரண்டாவது வகை அறிகுறியைக் குறிக்கும். பிரமைகள் ஒழுங்கற்ற பேச்சு கேடசோனிக் நடத்தை என்று இரண்டாம் அறிகுறி அழைக்கப்படுகிறது. நோய் அறிதல்க்கு தேவையான ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த நோயின் ஆரம்ப நோய் அறிகுறிகளை கண்டறிய DSM-5 பயன்படுகிறது.

மனச்சிதைவு நோய் கொண்ட பலருக்கு கவலைக் கோளாறுகளை வெறித்தனமான கட்டாயக் கோளாறு அல்லது பொருள் பயன்பாட்டுக் கோளாறு போன்ற இவற்றில் ஏதோ ஒன்று முதலில் ஏற்படுகிறது இந்தியாவில் சமூக விரோத ஆளுமைக் கோளாறு என்கிற ஒன்றையும் இதில் டாக்டர் தாரா ரங்கசாமி இணைத்து இருக்கிறார் வெறித்தனமான கட்டாயக் கோளாறு என்பது சிறுவயதிலேயே புகையிலை மற்றும் போதை பொருட்களுக்கு ஆளாகும் நபர்களுக்கு மிக எளிதில் தொற்றிக் கொள்கிறது. தூக்கக் கோளாறு பெரும்பாலும் மனச்சிதைவுடன் இணைந்த ஒன்றாகும்.

ஒருங்கற்ற சிந்தனை போன்ற நேரடி அறிகுறிகளுடன் தொடர்புடைய கார்டியோபிளாஸ்டிசிட்டி  மனோநிலை அதிகம் வெளியே தெரியாத வகையில் ஏற்படும் பொழுது நினைவுகளின் ஒருங்கிணைப்பு சீர்குலைக்கிறது. தூக்க கோளாறு அறிவாற்றலை மிக மோசமாக பாதிக்கிறது. இந்திய சமூகத்தில் பெரும்பாலான மத்திய தர மக்கள் தொலைக்காட்சியினாலும் கைபேசிகளினாலும் இதர பிரச்சனைகளில் ஆளும் தூக்கத்தை கைவிடுவதை ஒரு வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இன்றைய வேலை சூழலில் கணினித்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை போட்டி காரணமாக உறக்கமற்ற கொடிய சூழலில் வாழ்கிறார்கள் என்பது டாக்டர் தாரா ரங்கசாமியின் மிக முக்கியமான குற்றச்சாட்டு ஆகும்.

1996-2018 வரையில் சென்னையின் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் தாரா ரங்கசாமி இயக்குனராக பணிபுரிந்தார். அவர் இப்போது அதே நிறுவனத்தில் துணைத்தலைவராகவும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் திமென்ஷ்யா தொடர்பான நடவடிக்கைகளின் தலைவராகவும் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்.
2022 இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான நாரி சக்தி புரஸ்கார் விருது டாக்டர் தாரா ரங்கசாமிக்கு வழங்கப்பட்டது. இத்தாலியில் ஃப்ளோரன்ஸ் நகரிலுள்ள மனச்சிதைவு நோய் தொடர்பான உச்ச அமைப்பான ஸ்கிசோஃப்ரினியா இன்டர்நேஷனல் ரிசர்ச் சொசைட்டி -னுடைய சிறந்த மருத்துவ மற்றும் சமூக சேவைக்கான விருதை சமீபத்தில் பெற்று நம்முடைய இந்தியாவிற்கு அவர் பெருமை சேர்த்தார்..

கட்டுரையாளர் :
இந்தியாவின் ஒப்பற்ற புவி இயற்பியலாளர் அபிஜித் முகர்ஜி | India's peerless Geophysicist Abhijit Mukherjee (earth scientist) -https://bookday.in/
ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

 

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்தியாவின் ஒப்பற்ற புவி இயற்பியலாளர் அபிஜித் முகர்ஜி [Abhijit Mukherje]

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. Ravi G

    வணக்கம். குடும்ப, பொருளாதார அழுத்தம் காரணமாக ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என நினைக்கிறேன். டாக்டர். ராதா ரங்கசாமி அவர்கள் இத்துறையில் மேலும் பல மனநுண்கூறுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

  2. Dr.P.Sasikumar

    பல்வேறு காரணங்களால் மனச்சிதைவு நோய்க்கு பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இருக்கும் இவர் வெளிநாட்டில் தங்கி விடாமல் இந்தியாவிற்கு வந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற நோய்களைப் போல் கண்டறிந்து இதனால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவது முக்கியம். நோயின் அறிகுறிகளை கண்டறிய வழிவகைகளை இவருடைய ஆராய்ச்சியில் கூறியிருப்பது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *