திருவிழாவில் தேட வேண்டிய புத்தகம் | தத்துவத்தின் தொடக்கங்கள்

நூல் பெயர் : தத்துவத்தின் தொடக்கங்கள்
ஆசிரியர் : தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
( தமிழில் இரா சிசுபாலன் )

தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்களே உன்னத இடம் பிடிக்கின்றன..

கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்ற இரு தத்துவங்கள் பிரதானமானவை..

இந்த இரு தத்துவ கோட்பாடுகள் இந்திய மண்ணில் எப்படி இருந்திருக்கின்றன என நிறுவுவதே இந்த புத்தகத்தின் சாரம்..

தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்கள் அறிமுகமாவதற்கு முன்பே இந்திய தத்துவங்கள் எப்படி கோலோச்சி இருக்கின்றன என்பதை யக்ஞவல்கியர், உத்தாலகர், புத்தர் போன்ற பொருள் முதல்வாதிகளின் தத்துவங்களை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்..

இந்தியா பொருள் முதல்வாத தத்துவங்களின் நாடு என இந்த நூல் சொல்கிறது..

இந்திய தத்துவ மரபிற்கு ஒரு கொடையாகவே இந்த நூல் பார்க்கபடுகிறது..

பக்கங்கள் : 182
விலை : 165
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

புத்தக திருவிழாவில் தேடுங்கள் … வாசியுங்கள்..

ஸ்ரீதர்
திண்டுக்கல் 🌹