உதிரம் கொடுத் ‘தாய்’
உன்னுள் உதித்தேன்!
உயிரை கொடுத் ‘தாய்’
உலகில் பிறந்தேன்!
உடலை கொடுத் ‘தாய்’
ஊர்ந்து மகிழ்ந்தேன்!
தாய்ப்பால் கொடுத் ‘தாய்’
தளிரென வளர்ந்தேன்!
சுமந்து திரிந் தாய்
சுகமாய் அலைந்தேன்!
முத்தம் கொடுத் தாய்
மொத்தமாய் மகிழ்ந்தேன்!
சமைத்துக் கொடுத் தாய்
சுவைபல சுகித்தேன்!
காசுகள் கொடுத் தாய்
கண்டதை ருசித்தேன்!
அன்பினைக் கொடுத் தாய்
மனிதனாய் வாழ்ந்தேன்!
அறிவினைக் கொடுத் தாய்
அண்டத்தை அறிந்தேன்!
உழைப்பினைக் கொடுத்தாய்
உறிஞ்சித் திரிந்தேன்!
மனைவியைக் கொடுத்தாய்
மகன்நான் மறந்தேன்!
ஏன் எனக் கதைத் தாய்
சண்டையில் பிரிந்தேன்!!
– மரு உடலியங்கியல் பாலா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

