“The Children’s Train (2024)” திரை விமர்சனம்
1994 ஆம் ஆண்டு இத்தாலியின் நகரத்தில் “அமெரிகா” என்ற ஒரு வயலின் இசைக்கலைஞனின் நிகழ்ச்சிக்கு பலரும் கூட்டமாய் செல்கின்றனர் அந்த இசைக்கலைஞனும் நடந்த படி தன் அறைக்குள் நுழைகிறார். அந்நேரத்தில் தொலைபேசியில் ஒரு அழைப்பு தனது தாயின் மரணச்செய்தியை தெரிவிக்கிறார்கள், ஆனாலும் நிகழ்வை ரத்து செய்யாமல் இசைக் கச்சேரியை நடத்த முயல்கிறார் தனது தாயின் தாலாட்டு இடையே நினவுக்கு வர அப்படியே தனது சிறுவயது சம்பவங்கள் காட்சிகளாக விரிவடைகிறது. உலகப்போரின் போது வெடிகுண்டுகளால் சிதறி ஒடும் மக்கள் கூட்டத்தில் தனது மகனை தேடும் தாய் அறிமுகமாகிறாள் மகன் கிடைத்தவுடன் இருக அணைத்தப்படி அவனை பாதுகாத்த நிம்மதியோடு செல்கிறாள்.
இத்தாலியை ஆட்சி செய்த பாசிஸ்ட் முசோலினி மக்களுக்கு போரையும் வறுமையையும் கொடுத்து அவர்களை கொடுமைபடுத்திய காலக்கட்டம். இதிலிருந்து மீள்வதற்கு ஓரளவு மக்கள் செல்வாக்கு பெற்ற இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி இத்தாலியின் தெற்கு பகுதியில் வாழும் மக்களை வடக்கு பக்கம் போர் பாதிக்கப்படாத சூழல் நிலவியதாலும் அங்கு வாழும் மக்கள் ஓரளவு செல்வந்தர்களாக இருந்ததாலும் வறுமையில் பாதிக்கப்படும் குழந்தைகளை ரயில் மூலமாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கான குழந்தைகளை அனுப்பி வைக்கிறது. இந்தச் சூழலில் கணவனைத் தொலைத்துவிட்டு ஒரு குழந்தையையும் இழந்துவிட்டு வாழும் அமெரிகாவின்(பெயர்) தாய் தன் மற்றொரு 7 வயது மகனை காப்பாற்ற முடியாமல் வறுமையில் வாழ்கின்றாள்.

இந்த ஒரு மகனையாவது காப்பாற்ற இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருக்கும் முடிவை ஏற்றுக்கொண்டு இத்தாலியின் வடக்கு பகுதிக்கு தன் மகனை ரயிலில் அனுப்ப வைக்க முடிவெடுக்கிறார். இப்படி பல பெற்றோர்களும் அனுப்பி வைக்கிறார்கள் குழந்தைகளை கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதல் படி அனுப்புவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் திட்டமிட்டு பரப்பப்பட்டது பொய் பிரச்சாரங்கள் பரவியது கம்யூனிஸ்டுகள் குழந்தைகளை கொன்றுவிடுவார்கள் என்றெல்லாம் கூறிவந்தார்கள். ஆனாலும் பெற்றோர்கள் சிறு நம்பிக்கையோடு குழந்தைகளை அனுப்பி வைத்தார்கள். அச்சத்தோடு குழந்தைகள் மட்டும் இரயில் ஏறி செல்கின்றனர். அவர்களுக்கிடையேயான சுவாரசியமான உரையாடல்கள் படத்தை தொய்வின்றி கொண்டு செல்கிறது.
இரயில் ஏறி சென்ற அனைத்து குழந்தைகளும் பாதுகாக்கப்பட்டனரா..? போர் பதற்றம் முடிந்து மீண்டும் குழந்தைகள் தங்களின் கிராமங்களுக்கு திரும்பி வந்தனரா…? இதில் தனது ஒரே மகனை அனுப்பி வைத்த அமெரிகாவின் தாய் தனது மகனை மீண்டும் சந்தித்தாளா..? அவளுக்கு என்ன ஆனது என்பது தான் மீதிக் கதை..? போர் அதனால் ஏற்படும் வறுமை தாயுக்கும் தனது ஒரே மகனுக்குமான உறவில் போர் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதையும் நெகிழ்ச்சியோடு இறுதிக்காட்சியை பதிவு செய்து முடித்திருக்கிறார்.

இயக்குநர் கிறிஸ்டீனா கமென்சி. அவருக்கு நிச்சயம் பாராட்டுகள். வயலின் என்ற இசைக்கருவி தாயுக்கும் மகனுக்குமான அன்பில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளது படத்தை முழுமையாக பார்க்குமதை நிச்சயம் உணர்வீர்கள் படத்தின் பெயர் The Children’s train 1940களின் மையப்பகுதியில் இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் இத்தாலியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே பெயரில் வையலோ ஆர்டோன் என்பவரால் நாவலாக எழுதப்பட்டு வெளிவந்துள்ளது தற்போது நல்ல திரைமொழியோடு சினிமாவாக வெளியாகியுள்ளது. படம் Netflixல் உள்ளது.. பார்க்கவும்…
https://dubbing.fandom.com/wiki/The_Children%27s_Train
எழுதியவர் :
✍🏻 மோசஸ் பிரபு
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
