இலைத் தட்டில் ஊரும்
நத்தைச் சொல்லைக் கண்டுகொள்ளாதீர்கள்
அது என்னுடையதன்று
டின்னில் அடைக்கப்பட்ட
வினிகருக்கு
சுத்தமின்மையின் முகம்
ஏரெடுத்துப் பார்க்காதீர்
சூரியக் கல் பதித்த தங்க மோதிரமென்பது?
பொய் புழுகு பித்தலாட்டம்
ஒன்பது கரிய ஆல்ப்ஸ் மலைகள்
ஒவ்வொன்றின் உச்சியிலும்
உரையாடி விளையாடும்
இலைமீதமர் உறைபனிக்கு
பவித்ரத்தின் பாத்திரம்
இப்பிம்பங்களை நொறுக்கிய
கண்ணாடிக் கடலின்
சாம்பல் பிரதிபலிப்பில்
எனதிந்தப் பருவகாலத்தைக்
காதலால் காதலிக்கிறேன்
எழுதியவர்
சில்வியா பிளாத்
தமிழில்: தென்றல்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.