புதுதில்லி:

பாஜக தலைவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து வன்முறையைத் தூண்டியதற்காக முதல் தகவல் அறிக்கைகள் பதியமுடியாது என்று தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது, அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.

தில்லியில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் மன்றம், பாஜக தலைவர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்ற அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோர் தில்லியில், ஷாஹீன்பாக்கில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத் நடந்துகொண்டிருந்த சமயத்தில், போராட்டக்காரர்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் விதத்தில் பேசியது தொடர்பாக, முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி பிருந்தா காரத் மனு அளித்திருந்தார். அதன்மீது விசாரணை மேற்கொண்ட நீதித்துறை நடுவர் புதன் கிழமையன்று, மேற்படி இரு நபர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால், முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வதற்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 196ஆவது பிரிவின்கீழ் அரசாங்கத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறி, பிருந்தாகாரத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தார். முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திட முன் அனுமதி தேவையில்லை என்றும், குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படும்போதுதான் அவ்வாறு முன்அனுமதி பெற வேண்டும் என்றும்  பிருந்தா காரத்தின் வழக்குரைஞர் முன்வைத்த வாதத்தை, நீதிமன்றம் ஏற்கவில்லை.

Delhi Police: பாஜக தலைவர்கள் மீது FIR பதிவு செய்ய டெல்லி போலிஸ் மறுப்பு -  cannot file an fir for hate speech at this stage says delhi police to high  court | Samayam Tamil

இது தொடர்பாக பிருந்தா காரத் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாஜக தலைவர்களான அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோர் தில்லியில் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து பேசியிருந்தார்கள். இந்தப் பேச்சுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு தில்லிக் காவல்துறையினருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்திருந்த மனுவை பெருநகர நீதித்துறை நடுவர் (மாஜிஸ்ட்ரேட்) தள்ளுபடி செய்துவிட்டார்.

பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. நாங்கள் ஜனவரி மாதத்தில் பாஜக தலைவர்கள் அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோரின் வெறுப்பை உமிழ்ந்த பேச்சுக்களுக்கு எதிராக தில்லிக் காவல்துறையினர் முன்பு புகார் தாக்கல் செய்திருந்தோம். அதன்மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 153ஆவது பிரிவு உட்பட சம்பந்தப்பட்ட பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யக் கோரினோம். காவல்துறையினர் மறுத்ததால், நீதித்துறை நடுவர் முன்பு மனு தாக்கல் செய்தோம்.

நீதித்துறை நடுவர் மன்றத்தில் இது தொடர்பாக முழு வாதங்கள் நடைபெற்றன. இந்த சமயத்தில் ஒரு தரப்பினர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்குச் சென்றதால், அதன்மீது தீர்ப்பு பிறப்பிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது, உயர்நீதிமன்றம் அந்த மனுவை முடித்திடுமாறு பெருநகர நீதித்துறை நடுவரைக் கேட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து பெருநகர நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, முதல் தகவல் அறிக்கை பதிவுதற்காக, கட்டளை பிறப்பிப்பதற்குக்கூட, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 196ஆவது பிரிவின்கீழ்  முன் அனுமதி தேவை என்று கூறப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. காவல்துறையினர் இந்த ஆட்சேபணையை எழுப்பிடவில்லை. அப்படியென்றால் இவ்வளவு நாட்களாக இதன்மீது வாதங்கள் ஏன் கேட்டீர்கள்?  இவ்வாறான நிலைப்பாட்டை பிப்ரவரியிலேயே ஏன் மேற்கொள்ளவில்லை?

இது ஒரு நியாயமற்ற நீதித்துறை நடைமுறையாகும். இது வெறுப்பை உமிழ்ந்தவர்கள் மீது முதல்நோக்கிலேயே சாட்சியம் இருந்தபோதும்கூட அவர்களை மன்னிப்பதற்கே இட்டுச்செல்லும்.

..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *