பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பிரிட்டீஷ் ஆட்சியை மனதில் கொண்டு பாரதி எழுதினான். இன்றும் அந்த பேய்பிடித்த அரசு நிர்வாகம் தொடர்வதால் காவல் நிலையங்கள் சித்தரவதைக் கூடங்களாகவே கட்சியளிக்கின்றன..
கொரானா காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கடையை மூடவில்லை என்பதற்காக ஒரு வியாபாரியை தூத்துக்குடி மாவட்ட சாத்தான்குளத்து காவல் அதிகாரிகள் சித்தரவதை செய்யதனர். அதனை ஏன் என்று கேட்ட மகனையும் சித்தரவதைக்குள்ளாக்கி சிறையில் அடைத்தனர். சித்திரவதையைத் தாளமுடியாமல் நிலைமை மோசமானதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருவரும் பிணமாகினர். இதன் மூலம் ,காவல் அதிகாரிகள் சித்தரவதை செய்ய பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல தடையங்களை மறைப்பதற்கும் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரிய வருகிறது. இல்லையெனில் வியாபாரியின் மகனுக்கு உள்காயமுருவாக்க இரும்புப் பூண் கொண்ட லத்தியை மலத்துவாரம் வழியாக சொறுகி துன்புறுத்தியிருப்பார்களா?
சில்லறை வர்த்தகர் சங்கம் கொஞ்சம் பலமாக இருந்ததினால், சமூக வலைத்தளங்கள் உதவியுடன் உடனடியாக மக்களின் பார்வைக்கு கொண்டு வந்துவிட்டது. இதற்கு முன்னரும் காவல் நிலைய சித்தரவதை மக்கள் கவனத்திற்கு வந்து கொஞ்சம் நீதியும் கிடைத்ததுண்டு. சித்தரவதைக்குள்ளான சிதம்பரம்- பத்மினி -நந்தகோபால் வழக்கில் பத்மினிக்கு நீதிகிடைத்தது. ஆனால் நந்த கோபாலை சித்தரவதைசெய்து கொன்ற கொலை குற்றத்திலிருந்து அதிகாரிகள் தப்பிவிட்டனர் . அதே ஆண்டில் சென்னையில் ரஜனி ரசிகர்மன்ற நிரவாகி ரமேஷ் காவல் நிலையத்தில் அதிகாரிகள் சித்தரவதை செய்து கொன்ற நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு மக்கள் கவனத்திற்கு வந்தும் நீதி கிடைக்கவில்லை.
காவல் நிலைய சித்ரவதை என்பது இந்திய சட் டப்படி குற்றமல்ல, காவல் நிலையத்தில் சித்தரவதையால் சாக நேரிட்டாலும் கொலை குற்றமாகாது. அரசு விரும்பினால் மட்டுமே குற்றவியல் சட்டம் பாயும். இது பிரிட்டீஷ் விக்டோரியா ராணி காலத்து மரபு இன்றும் தொடர்கிறது.
கிரிமினல்களை திருத்தவும், உண்மைகளை வரவழைக்கவும் இது அவசியம் என்று இடது சாரி கட்சிகளைத் தவிர அனைத்து அரசியல்கட்சிகளும் கருதுகின்றன. ஏகாதிபத்திய நாடுகள் சித்தரவதை செய்வதற்குகான பயிற்சியை ராணுவத்திற்கும், காவல் துறைக்கும் கற்றுக் கொடுத்துவருகின்றன. உடல் வேதனையோடு மனவேதனையை உருவாக்கும் விதத்தில் இணைத்து செய்ய பாடத்திட்டமே உண்டு. காவலர்கள் கெட்டவார்த்தைகளின் அகராதி ஆவர்.
ஈராக் நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்தபொழுது அங்கிருந்த அபுகரீப் சிறைச்சாலையை நவீன சித்தரவதை கூடமாக அமெரிக்க ராணுவம் மாற்றியது. விநோதம் என்ன வெனில் இந்த சிறைச்சாலைதான் ஈராக்கில் கம்யூனிஸ்ட் ஆதரவு அரசை அகற்றி 1968ல் ஆட்சியில் அமெரிக்க ஆதரவுடன் சதாம் உசேன் சர்வாதிகாரியானான். அபுகரீப் சிறை ஈராக் நாட்டு கம்யூனிஸ்டுகளை சித்தரவதை செய்து கொல்லக் கட்டிய சிறைச்சாலையாகும் பின்னர் அமெரிக்க சொல்படி கேட்க சதாம் உசேன் மறுத்ததால் அவனைவிட நூதன சித்தரவதை சிகிச்சையை அவனுக்கு அமெரிக்க ஜனாதிபதி அளித்தான்.. அங்கு சித்தரவதைக்கென கையாண்ட நூதன முறைகள் 2004ல் வெளிவந்தன. உலகமே அதிர்ச்சியில் மூழ்கி சில நாளில் பழைய நிலைக்கு வந்துவிட்டது. 1984ல் ஐ.நா சாபை கஸ்ட்டடி சாவை குற்றமாக கருதவேண்டுமென கொண்டுவந்த கன்வென்ஷனை இந்தியா போன்ற முதலாளித்துவ நாடுகள் ஊறுகாயாக ஆக்கிவிட்டன.
இந்தியாவில் இடது சாரிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் கிரிமினல்களை திருத்த சித்தரவதை அவசியம் என்ற மரபை பேணுவதால் காவல் நிலைய சாவுகள் தொடர்வதை தடுப்பாரில்லை..
2018 மார்ச் 14 அன்று மாநிங்களவையில் வைத்த அறிக்கையின்படி 2017ம் ஆண்டில் 1674 காவல் நிலைய சாவுகள் நிகழ்ந்துள்ளன. அதில் 1530 சாவுகள் நீதிமன்றம் விசாரணைக்காக காவல்நிலையத்தில் ஒப்படைத்த பிறகு நடந்தவைகள். 144 சாவுகள் போலீஸ் பொறுப்பில் இருந்தபோது நிகழ்ந்தவை. அதாவது நாள் ஒன்றுக்கு இந்தியவில் சரசரி ஐந்து மனித உயிர்கள் போலீஸ் காவல் நிலையத்தில்2017ல் பறிபோனது. 2019 உள்துறை அமைச்சகம் தருகிற தகவல் படி 2018ல் குஜராத் கஸ்ட்டடி சாவு 13 அடுத்தது தமிழகம் 12 கஸ்ட்டடி சாவு எனத் தெரியவருகிறது
பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்து விடுதலை பெற்றபிறகும் அரசின் கொள்கை காவல் நிலைய கொலைகளை நியாயப்படுத்தி பேசுவது தொடர்கிறது. காவல் நிலையத்தில் பெண்ணை வண்புணர்ச்சி செய்வது காவலர்களின் பணிச்சுமையின் காரணமாக நடைபெறும் அபூர்வ நிகழ்வு இதனைப் பெரிது படுத்தக் கூடாது என்று பொன்மன செம்மல் எம்ஜிஆர் சட்டமன்றத்தில் கொடுத்த விளக்கம் தமிழக அரசியல் கட்சிகளின் பார்வைக்கு சான்றாகும். காவல்துறை மேலதிகாரிகள் இதனை அபூர்வ நிகழ்வு என்று கூறியே சமாதனப்படுத்துகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சி சாத்தான்குள காவல் நிலைய கொலைக்கு சம்பத்தப்பட்ட காவலர்களை கைது செய்து கொலைகுற்றபிரிவில் செசன்ஸ் கோர்ட் விசாரிக்க உத்திரவிட வேண்டும் அதிகாரிகள் சார்பில் அரசு வழக்குரைஞர் வாதாடக் கூடாதுஅந்த குடும்பத்திற்கு வியபாபரிகள் சங்கம் கோருவது போல் ஒரு கோடி ரூபாய் நட்டஈடு தரவேண்டும் என்று தெளிவாக கூறுகிறது.
மற்ற கட்சிகள் நீதி வேண்டும். நட்டஈடு கொடுக்கவேண்டும் விசாரனைக் கமிஷன் போடுக சட்டப்படி நடவடிக்கை எடுத்திடுக என்பதைத்தாண்டி எதையும் கேட்கவில்லை.
( https://timesofindia.indiatimes.com/city/chennai/tn-saw-second-highest-custodial-deaths/articleshow/73219508.cms https://timesofindia.indiatimes.com/city/chennai/tn-saw-second-highest-custodial-deaths/articleshow/73219508.cms )
காவல் உடை தரித்த பிணம் திண்ணிகள் இன்னும் உலாவுவதை எதைக்காட்டுகிறது ?.ஆட்சி மாறினாலும் கொள்கை மாறவில்லை என்பதை காட்டவில்லையா. நமது சட்டங்கள் நீதி மன்றங்கள் மனித உரிமையை காக்க தவறுகிறது என்று புலம்பினால் போதுமா? இவர் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகும் என்கிற மனநிலையும் நம்மிடமிருந்து அகலவேண்டும்.
1984ல் ஐக்கிய நாட்டு சபை காவல் நிலைய அதிகாரிகள் விசாரனை செய்ய சித்தரவதை செய்வதையைத் தடுக்கும் தீர்மானத்தை ஆதரித்து நல்ல பெயரை எடுக்க இந்திய அரசு கையெழுத்திட்டது. அந்த தீர்மானத்தை இந்திய அரசு நாடாளுமன்றம் 1987ல் விவாதித்து சட்டமாக்கியிருக்க வேண்டும் ஆனால் இதுவரை அதை செய்யவில்லை . அதனையொட்டி காவல் நிலைய சித்தரவதை தடுப்பு சட்டம் கொண்டுவரவேண்டும் அதுவும் இன்று வரை நடக்கவில்லை. அரசியல் எதிரிகளை வேட்டையாடும் மோடி அரசும் இதைச் செய்யுமென்று நினைத்தால் முட்டாளதனமாகும். மனித உரிமைக்காக குரல் கொடுப்போரை சிறையில் அடைத்து மன உளச்சலுக்கு உட்படுத்தும் கொடிய மனம் படைத்த மோடி- அமித்ஷா ‘ஹிட்லர்- கோயரிங் கூட்டின் இந்திய பதிப்பு என்பதை மறந்துவிடலாகாது.
1984 ஐ.நா. கொண்டுவந்த காவல் நிலைய சித்தரவதை தடுப்பு கன்வென்ஷனை நாடாளுமன்ற ஏற்பதாக தீர்மானம் இயற்றி அதனைச் சட்டமாக இயற்று என்ற முழக்கம் நாடுமுழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
இதற்காக நாடு முழுவதும் மக்கள் திரள் எழவேண்டும் . நாங்கள் சுதந்திர சுயமரியாதை உணர்வு கொண்ட மானுடம் உயிரைப் பறிக்க மோடி- எடப்பாடி தர்ம ராசாக்களின் பிரஜை அல்ல என்பதை காட்டவேண்டும்.
அந்த நாள் விரைவில் வரும் ஒன்று கூடுவோம்! சந்திப்போம்!!
கட்டுரை நன்றாக உள்ளது. எழுத்துப் பிழைகள் சரிபாத்திருக்க வேண்டும்.
கட்டுரைத் தலைப்பிலேயே தின்னும் என்ற சொல் ‘திண்ணும்’ என்று எழுதப்பட்டுள்ளது.
தயவுசெய்து பிழைகளைத் திருத்திய பின் கட்டுரைகளை வெளியிடவும்.
இல்லையேல் கட்டுரைகளின் நம்பகத் தன்மை போய்விடும்.
’புக் டே’ யில் வெளியாகும் கட்டுரைகள் தரமானவை என்றழைக்கப்பட வேண்டும்.
தங்களது கருத்திற்கு நன்றி…
இனி வரும் காலங்களில் பிழைகள் இல்லாதபடி பார்த்துக்கொள்கிறோம்.
என்றும் தோழமையுடன்
சுரேஷ் இசக்கிபாண்டி