பூமியின் கண் – ஏற்காடு இளங்கோ
குரோஷியா என்பது ஒரு சிறிய நாடு. இது மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா பகுதியில் அமைந்துள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக 2013 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று சேர்க்கப்பட்டது. இந்த நாட்டில் செட்டினா (Cetina) என்ற நீளமான நதி உள்ளது. இது டினாரா (Dinara) என்ற மலைத்தொடரின் தெற்கு பள்ளத்தாக்கில் உருவாகிறது.
இந்த மலைத்தொடர் 100 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதன் உயரமான சிகரம் சின்ஜால் அல்லது தினாரா ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1831 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. செட்டினா நதியின் நீரூற்று ஒரு அற்புதமானது. இந்த நீரூற்று சுண்ணாம்புப் பாறையால் ஆன நிலத்தடியில் இருந்து தோன்றுகிறது. இது அசாதாரண வடிவத்தையும், நிறத்தையும் கொண்டுள்ளது.
இந்த நீரூற்றுக்கு பூமியின் கண் (The Eye of the Earth) அல்லது குரோஷியனின் கண் (Croatia’s Eye) என்று செல்லப் பெயர் வைத்து அழைக்கப்படுகிறது. வானத்திலிருந்து பார்த்தால் கண் போன்ற அமைப்பில் உள்ளது. உயரமான இடத்தில் இருந்து பார்த்தால் இது ஒரு பெரிய நீலக் கண் (Giant Blue Eye) போல் வியக்க வைக்கிறது. இது நீலக் கண் போலவே காட்சித் தருகிறது.
இது பிரகாசமான நீலம் மற்றும் நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் (Turquoise) போல் காணப்படுகிறது. இது சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் கவர்ச்சிகரமான இயற்கை அழகுகளில் ஒன்றாகும். இது 155 மீட்டர் ஆழம் கொண்டது. இதில் நீச்சல் வீரர்கள் (Divers) 120 மீட்டர் ஆழம் வரை சென்று ஆய்வு செய்துள்ளனர்.
இந்த மாய நீர்க் குழியின் மேற்பரப்பில் துணிச்சலானவர்கள் மட்டுமே நீந்த முடியும். ஏனென்றால் தண்ணீர் பனிக்கட்டி போல் குளிர்ச்சியாக இருக்கும். இது 1972 ஆம் ஆண்டில் ஒரு இயற்கை நீரியல் நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. இதிலிருந்து உருவாகும் செட்டினா நதியானது 105 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அட்ரியாடிக் கடலில் (Adriatic Sea) கலக்கிறது.
கட்டுரையாளர் :
– ஏற்காடு இளங்கோ
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.