ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், ஃபார்ரைட் (தொலை-வலது)களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெரு அணிதிரட்டல்களுக்கு  ஆதாவளித்திருந்தாலும் கூட கோவிட் 19  பெரும் நோய்த்தொற்றை பொய்க்காரணம் கூறி, தனது விமர்சகர்களை மௌனிக்கவைக்க, பயன்படுத்திக் கொண்டார். ஆனால் இவை எல்லாம் பலவீனமான ஜனநாயக மரபுகளைக்கொண்ட ஒருநாட்டின் வெறும் நோய்க்குறியீடுகள் அல்ல.. அவை மேற்கு நாடுகள் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பிற்போக்குத்திருப்பத்தின் தீவிரமான வடிவம்.

ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் கோவிட் 19  பெரும் நோய்த்தொற்றை, பயன்படுத்தி சட்டக்கட்டளைகள், காவல்நாய்கள் மூலம் ஆட்சியை நடத்த தனக்குத்தானே நடைமுறையில் பரிசோதிக்கப்படத அதிகாரத்தை அளித்துக்கொண்டார், மேலும் கருத்துரையாளர்கள் எச்சரிக்கைமணியை ஒலித்தார்கள். மற்றவர்களோ, ஒரு கேவலமான, பொதுமக்கள் உறவுக்கான புத்திசாலித்தனமான தந்திரம் போல  –எதிரணியினரின் ஆட்சேபனைகளை, ’அவர்கள் பெரும் நோய்த்தொற்றை எதிர்த்துப்போராடும் முயற்சிகளையேகூட தடுக்கிறாகள்’ என்பதுபோன்ற கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்கும் ஒரு நகர்வு  என்று கருத்து தெரிவித்தார்கள்..

அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதிலிருந்து இன்றுவரையான வளர்ச்சிப் போக்குகள், ஹங்கேரியின் எதிர்காலம் பற்றிய தோல்வி மனப்பான்மையைப் பெருமளவுக்கு நியாயப்படுத்துவதாக இருக்கின்றன, என்று தெரிவிக்கின்றன. இருளான மற்றும் ஆபத்தான ஏதோ ஒன்று வடிவமைக்கப்படுகிறது என்பதற்கான தெளிவான சான்றுகள் அங்கே உள்ளன. விக்டர் ஓர்பனின் கட்சி இன்னும் உறுப்பினராக உள்ள – ஐரோப்பிய மக்கள் கட்சியின் மத்திய-வலதுசாரிகள் உள்ளிட்ட ஐரோப்பிய  நிறுவனம். வேறுவழியின்றி, வேறுவித மாக பார்ப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளது.

Hungary's far-right leader Viktor Orban praises Boris Johnson as ...

பத்து ஆண்டுகளுக்கு முன் ஓர்பன் அதிகாரத்துக்கு வந்தபோதும், ஜனநாயக நிறுவனங்களைக் கலைத்தபோதும், இந்த வெளிப்புற ஐரோப்பிய நாடுகள்  மிகச்சிறிய உலக முக்கியத்துவம்வாய்ந்த – அப்படி ஏதாவது இருந்தால்-தனிமனப்போக்கு கொண்டவையாகக் காணப்பட்டன. இன்றும்கூட, மோடியின் இந்தியாவிலிருந்து டிரம்ப்பின் அமெரிக்கா வரையான நாம் வாழும் இந்த உலகம் மிகவும் வித்தியாசமான இடமாக இருக்கிறது. தற்போதைய தீவிரவாத மற்றும் இனக்குழு பதட்டங்கள் சூடேறிவருவதையும்,இந்தப் புவிக்கோளத்தை சுற்றிலும் அடக்குமுறைகள் தீவிரமாகிவருவதையும் பார்க்கும்போது,, ஹங்கேரி அத்தகைய ஒரு மாறுபட்ட பிரச்சனை அல்லவா என்றுநாம்கேட்கலாம் – மேலும் அது அப்படித்தான் என்றால், அதற்குப்பதிலாக புதிய இயல்புத்தன்மைக்குத் திகிலூட்டும் வழிகளை அது சுட்டிக்காட்டுகிறது.

அரசின் ஒப்புதல் பெற்ற கொடுமைப்படுத்தல்கள் 

குடியுரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் வைரஸ்பரவலை தடுத்து நிறுத்துவது என்ற பெயரால், குறிப்பிட்ட முறையில் நியாயப்படுத்தப்படுகிறது. கருத்து மாறுபாட்டுக்குரிய அவசரநிலை சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்த மசோதாவை எதிர்க்கும் குரல்கள் ஏதேனும் இருந்தால், அவை  காணாமல் போக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த  மேலும் பிற்போக்குத் தனமான மாற்றங்களின் தொடர் வரிசைகளை- ஹங்கேரி அரசு அறிமுகப் படுத்தி வருகிறது.

‘கொரோனா மசோதா’’ என்ற பதாகையின்கீழ் திணிக்கப்பட்ட இந்த வகைமாதிரியான பிற்போக்கு நடவடிக்கைகள் நாடு கடந்த மக்களின்மீதான தாக்குதலாகும். அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பாலின அடையாளத் தைப் பெறும் அவர்களது உரிமை, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது: இப்போதுமுதல் பிறக்கும்போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாலினம் மட்டுமே அவர்களது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் காட்சிப்படுத்தப்படும். இதன்பொருள், அவர்கள் தங்கள் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களிடம் மட்டுமல்ல, வரவேற்பாளர், கணக்காளர்களிடமும்கூட கடன் அட்டைகளைப் பயன்படுத்தும்போதெல்லாம், வெளியேற்றப்படுவார்கள்.

இது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அரசுக்கு நன்கு தெரியும். ஹங்கேரியைச் சமுதாயம் பெருமளவில் இருப்பதால், அவர்கள் நாடுகடந்த மக்களை ஏற்றுக்கொள்வதைவிட வேறு எதைவேண்டுமானாலும் செய்வார்கள்.. இந்த கருத்தியலான உணர்வில் எடுக்கப்படும் நடவடிக்கை நாடுகடந்த மக்களின் “அடையாளங்களுக்கான” அவர்கள் உரிமைகள் மீதான தாக்குதல் மட்டுமே அல்ல.. சமுதாயத்துடனான வழக்கமான தொடர்புகள் மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தும் சடங்குகளாக மாறுவதுபோல் இருந்தது. ஊடகங்களில் நடைபெற்ற விவாதங்களின்படி சிலர் புலம்பெயர்வது அல்லது தற்கொலை செய்துகொள்வது பற்றியும் கூட ஆழ்ந்து சிந்தித்தார்கள்.

விரத்தியூட்டும் எதிர்வினைகளால் நாடுகடந்த செயல்பாட்டாளர்களின் ஒரு குழுவினர் அவர்களுடைய பிறப்புச்சான்றிதழ்களை பொதுஇடத்தில் எரிக்கவும் முடிவுசெய்தார்கள். நாடு கடந்தவர்களின் செயல்பாட்டாளரும், ‘புடாபெஸ்ட் பிரைடு’ வின் அமைப்பாளருமான ஆடம் சிசிகோஸ். “எங்களுடைய அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எழுதப்பட்டுள்ள ஒன்றில் எங்கள். பெயரும், பாலினமும் எழுதப்பட்டிருந்தால்தான் நாங்கள் பாதுகாப்பான வாழ்வை வாழமுடியும்” என்கிறார்.

நிரந்தர அவசரநிலை

Central Europe more 'satisfied' with democracy amidst deepening ...

அரசு,அதன்பங்குக்கு, கருத்துமாறுபாட்டுக்குரிய ‘அவசரநிலை’ எப்போதைக்கும் என்று நீடிக்காது, . என்று அறிவுறுத்துகிறது. –மே 26 அன்று, பிரதம அமைச்சர் ழ்சோல்ட் செம்லியென் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தார். அது அவசரநிலையை முடிவுக்குக்கொண்டுவரும் என்:று கருதப்பட்டது. அத்தகைய ஒரு நடவடிக்கை,, ’முடிவே இல்லாமல், சட்ட ஆணைகள் மூலம் ஓர்பன் ஆட்சி  நடத்த திட்டமிடுகிறாரா?’, என்று கேட்கும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு உற்றுநோக்கர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.

இதுவரை எல்லாமும் எப்படித்தோன்றுகிறதோ அப்படி நடப்பதில்லை. உண்மையில், ,ஹெல்சிங்கி குழு, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் ஹங்கேரியின் மக்கள் உரிமைகள் யூனியன் போன்ற மக்கள் உரிமைகள் குழுக்களால் வெளியிடப்பட்ட முதல் பகுப்பாய்வின்படி,இந்தப்புதிதாக இயற்றப்பட்ட சட்டம், நேர் எதிரானதையே செய்கிறது.. இது அரசியல் சாசன நிர்வாக அதிகாரத்தைப் புறக்கணித்து, நிரந்தரமாகப் பலவீனப்படுத்துவதன் மூலம், மூலமசோதாவின் மிகவும் கவலைப்படத்தக்க சில அம்சங்களை வலுப்படுத்துகிறது.

மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட முறையும்கூட , ஓர்பன் ஆட்சியின் ’உண்மையான செயல்படும் தன்மையை அம்பலப்படுத்துவதாக தோன்றுகிறது. ஹங்கேரியில், ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது பாராளுமன்றம் அல்ல: (பாராளுமன்ற ஜனநாயகத்தில்  வழக்கமாக உள்ள நடைமுறை போல) ஆனால் எதிராக. என்று விளக்கப்பட்டது.. புடாபெஸ்டில்,அரசாங்கம்  தான் வைத்துள்ள பாராளுமன்றத்தைக்கொண்டு தனது ஆணைகளைச் செயல்பட வைக்கிறது..

ஜனநாயக உரிமைகளின் மீதான பரவான தாக்குதல்களை நாம் பரிசீலிக்கும் போது, இது குறிப்பாகக் கவலையளிக்கிறது.. அவசரநிலை சட்டத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சங்களில் ஒன்று ‘”பொய்யான தகவல்களைப் பரப்புவதற்கு” ஐந்து ஆண்டுகள்வரை சிறை என்று அது அறிமுகப் படுத்தியதுதான். எதிரணி உடனடியாக ,இந்த நடவடிக்கை அதிருப்திக் குரல்களை மௌனப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்று தனது கவலையைத் தெரிவித்தது. அந்தக்கவலையை மறுத்தபோதிலும், மிக நுட்பமாக என்ன நடந்ததோ, அது இதுதான்.

குறைந்தபட்சமாக இரண்டு வழக்குகளில் காவல்துறை இதை காட்டியது: பெரும் நோய்த்தொற்றுக்கு அரசின் எதிர்வினையை விமர்சித்ததைவிட வேறு எதுவும் செய்யாத அதிருப்திக்குரல் தந்தவர்களின் வீடுகளுக்கு அதிகாலையில் அவர்களைக் கைது செய்வதற்காக காவல்துறை சென்றது ” தவறுதலாக” என்ற இரண்டு முகநூல் பதிவுகள் எந்த தவறான தகவல்களையும் கொண்டிருக்கவில்லை. அதை எழுதியவர்களின் கருத்துக்கள் தான் அவை. அவர்கள் இருவரும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லாமல் விடுதலை செய்யப்பாட்டாலும், அந்த கைதுகளோடு வந்த அவமானமும், பகிரங்கப்படுத்தலும், அவர்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது. – குறிப்பாக, அந்தஇரண்டு நிகழ்வுகளும்   கிராமப்புற சமுதாயங்களில் நடந்தன.

அந்த இருவரில் ஒருவரான ஜனோஸ் சிசோகா-ஸ்ழுக்ஸ், அவரது விடுதலைக்குப்பிறகு, அவரது வீட்டுக்குச்செல்ல எந்த ஒரு உதவியும் மறுக்கப்பட்டார்: அவர் ஒரு ஊனமுற்றவர் என்ற அம்சத்துக்கும் மாறாக. அவரது கைப்பேசி கைப்பற்றப்பட்டது: கையில் பணம் இல்லை. அவரது வீட்டுக்கு நடந்துசெல்ல வற்புறுத்தப்பட்டார்., அதிருப்தி பார்வைகளைத் தெரிவித்ததற்காகக் காவலர்கள் அவரை கிடுக்கிப்பிடி போட்டு இழுத்துச்சென்றது இது முதல்முறை அல்ல. இடதுசாரி பிரிவு இணையவழி ஒலிபரப்பான ‘பார்டிஸான்’-ல் அவர் கூறினார், சோவியத் ஆதரவு பெற்ற கத்தார் ஆட்சி  அதிகாரத்தில் இருந்தவரையிலும், இதேதான் அவருக்கு 1987ல் நடந்தது. அதை அவர் நினைவுகூர்ந்து,” வீட்டில் நான், ’’இந்த உலகத்தில், காவலர்கள் உன்னிடம் வரலாம் விரைவிலோ அல்லது பின்னரோ, (பேசிக்கொண்டிருப்பதற்காக) என்ற சாத்தியத்தைப்பற்றி . நகைச்சுவை செய்துகொண்டிருந்தேன்: ஆனால் இந்த சாத்தியத்தைத் தீவிரமானதாக எடுத்துக்கொள்ளவில்லை”

குடியுரிமைகளைத் தற்காலிகமாக நீக்கிவைத்தல் (தொலை வலதுகள் – ஃபார் ரைட்- தவிர)

ஓர்பன் ஒருவகையில் குடியுரிமைகளுக்குக் கடிவாளமிட்டுக் கட்டுப்படுத்தவும் கூட, இந்த பெரும் நோய்த்தொற்றைப் பயன்படுத்திக்கொண்டார்: அது வைரஸ் களை கட்டுப்படுத்துவதில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் அதற்கு அப்பாலும் சென்றது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓர்பனின் பரிசோதிக்கப்படாத அதிகாரத்துக்கு எதிராக வரிசையான ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார்கள்: ஆனால் அதில் பங்கேற்பவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக,, தங்கள் வாகனங்களிலிருந்தே தங்களை வெளிக் காட்டிக்கொள்ளவும், முழக்கங்கள் எழுப்பவும் மக்களைக் கேட்டுக்கொண்டார்கள். .

இந்தவகையான எதிர்ப்புக்கள்  பெரும்பாலும் நோய்த்தொற்றும் ஆபத்துக்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் 7,50,000ஃபோரிண்ட்ஸ் (2,400 டாலர்கள்) வரை அபராதம் விதிக்கப்பட்டார்கள். இந்த மலைக்கவைக்கும் தொகை ஒரு சராசரி தொழிலாளியின் மத வருவாயைவிடப் பலமடங்குகள் ஆகும். வசதியான குடும்பங்களுக்கும்கூட தீவிரமான சிரமங்களை ஏற்படுத்துவதற்கு போதுமானதைவிட இது அதிகம்.

Authoritarian politicians in Hungary need organized, united opposition

காவல்துறை போராட்டக்காரர்களை தங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு வற்புறுத்தியதில், உண்மையில் நோய்த்தொற்றும் ஆபத்தை அதிகப்படுத்தியது ஒரு புரியாத புதிராக இருந்தது. வாகனங்களில் இருந்த போராட்டக்காரர்கள் மீது வானத்தைத்தொடும் அளவுக்கான அபராதங்களை விதிக்கும் நடைமுறை இருந்தது, – அதுவும், ஊரடங்கு முடிந்து, மதுக்கூடங்களும், உணவகங்களும் திறக்க அனுமதிக்கப்பட்ட பிறகும். . ஓர்பனின் ஹங்கேரியில்  நுகர்வுக்கான சுதந்திரத்துக்கு, குடி உரிமைகளை விட  .முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதுபோல தோன்றியது.

ஒவ்வொரு ஆர்ப்பாட்டமும், எவ்வாறோ காவல்துறையால் தடுக்கப்பட வில்லை. கார்களில் இருந்த  ஜனநாயகத்துக்கு ஆதரவான செயல்பாட்டாளர்கள் தொல்லைகுள்ளாக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டபோது, புதிய-நாஜிகள் எந்தவிதமான சமூக விலக்கமும் இல்லாமல் அவர்களது ஆயிரம் பேரைத் தெருவுக்கு அழைத்துவர   அனுமதிக்கப்பட்டார்கள் என்று தோன்றியது.

முதல் வாரத்தின்முடிவுநாள் அன்று, சமூக விலகல் நடவடிக்கைகள் எளிதாக்கப்பட்ட பிறகு, புடாபெஸ்ட் நகரின் தாழ்வான பகுதியில் உயிருக்கு ஆபத்தான இரட்டைக்கத்திக்குத்து பற்றிய செய்தி ஹங்கேரியை மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நிகழ்ச்சி செய்தியாகத் தகுதியுடையது, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப்போலவே,ஹங்கேரியும் கண்டிப்பான துப்பாக்கி கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும், ஒப்பீட்டளவில் மிக உயர்வான பொதுமக்கள் பாதுகாப்பையும் கொண்டிருந்தது: இத்தகைய எழுச்சிகளை அபாயகரமான வன்முறையாக ஆக்குவது அபூர்வம்.

பாதிக்கப்பட்டவர்கள் கால்பந்து ரசிகர்கள், அவர்களில் ஒருவர் ஃபார் ரைட்கள் மீது அனுதாபம்கொண்டவர்போல தெரிந்தது. ஊடகங்களில் தோன்றிய அவரது படங்களில் அவர் கெல்ட்டிய இன சிலுவையை அணிந்திருந்தது  ஊடகங்களில் காணப்பட்டது., தடைசெய்யப்பட்ட ’ஸ்வஸ்திகா’வுக்கு சட்டபூர்வமாற்றாக, பலநாடுகளில் புதியநாஜிகளால் இது அணியப்பட்டுவந்தது.

ஃபாசிஸ்ட்டுகள் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குச் சொந்தமானவர்கள் என்று உரிமை கோரினார்கள். அந்த செய்தி வெளியானவுடன், ஃபார் ரைட் கட்சி, “மி ஹஸாங்க் மோஸ்கலோன்” அல்லது “எங்கள் தாய்நாடு இயக்கம்” அதன் ஆதரவாளர்களை ; நேஷனல் ரோமா செல்ஃப் கவர்ண்மெண்ட்’ன் தலைமை அலுவலகத்துக்கு ;ஜிப்ஸி கிரைம்’ – நாடோடிகள் குற்றத்துக்கு- எதிரா்க  ஒரு பேரணிக்கு வருமாறு அழைப்புவிடுத்தது. (தாக்கியவர்கள் பெருமளவுக்கு வெள்ளையர்களாக இருந்ததால் அந்தப்பெயர் மாற்றப்பட்டது). ;அல்ட்ராஸ்’ –கடும் தீவிரவாதிகள் என அழைக்கப்படகால்ப்ந்து வன்முறையாளர்களின் குழுக்களும்கூட  திரட்டப்பட்டன.

மி ஹசாங்க் அவர்களது பேரணியை, நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையின்றி, ’பத்திர்கையாளகள் சந்திப்பு’ என மாறு வேடமிட்டு நடத்திய போது, கடும் தீவிரவாதிகள் போராட்டத்தின்மீதான தடையைச் சுற்றிவளைக்க விழிப்புணர்வுடன் இருக்குமாறு அழைப்பு விடுத்தார்கள். காவல்துறை அந்த நிகழ்ச்சிகளைத் தடை செய்திருந்தபோதிலும்,, பங்கேற்பவர்களிடமிருந்து விலகி நிற்கும் அறிகுறிகளைத் துவக்கத்தில் காட்டியது, முடிவில் அந்தப்பேரணி நடக்க அனுமதித்தார்கள்.

அந்த இரண்டு குழுக்களும் இணைந்து,”ஆம். இருக்கிறது இங்கே நாடோடிக் குற்றம்’ போன்ற இனவெறி முழக்கங்களை எழுப்பின. சிலர் ஹிட்லர் வணக்கத்தையும்கூட வீசினார்கள். அருகில் நின்ற காவல்துறை, தடை இருந்தபோதிலும், எதையும் செய்யவில்லை. அந்த பேரணியைத் தொடர்ந்து மாலை முழுவதும் ரோமாமக்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் நடந்தன. 

Hungary anti-terror spy law breaches privacy: European rights ...

ஃபாசிஸ்ட்களுக்கு எதிரான அணிதிரட்டல்கள் அண்மை மாதங்களில் வலுவடைந்திருந்தாலும், செயல்பாட்டாளர்கள் மக்களின் சுகாதாரம் பற்றிய கவலைகளை. குறிப்பிட்டு, அணி திரட்டல்களைச் செய்யவில்லை. ’ நாடோடிகள் தான் கொலைகாரர்கள் என்ற  ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் இனவாத மூலைமுடுக்குகள் எங்கும் காட்டுத்தீபோல இணையத்தில் பரவியது.அந்த நிகழ்வின் இயங்கு விசையை  கைப்பற்றிக்கொள்ளும் ஃபார் ரைட்களின் ஆற்றல், உண்மைபோன்ற எந்தவிதமான பாவனைகளையும் புறக்கணித்த புதுவகை அரசியலின் குணாம்சமாக இருந்தது. திமோத்தி ஸ்னைடர் குறிப்பிடுவதுபோல, ’இது முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் முதலில் தோன்றியிருந்தாலும், இப்போது ‘”முதிர்ச்சியடைந்த”  அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்து போன்ற மேற்கத்திய ஜனநாயகங்களில் பொதுவாக வளர்ச்சியடைந்து வருகிறது. 

பேரணிக்குப்பின்னால்இருந்தஃபார் ரைட் மி ஹசாங்க் இயக்கம் ஜாப்பிக்கின் முன்னாள் உறுப்பினர்களால் நிறுவப்பட்டது: அவர்கள் இந்தக்கட்சியின் ’மையத்துக்கு நகர்’ அழைப்பால் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள்: (கடந்த காலத்தில் செமிட்டிகளுக்கு எதிரக வெளிப்படையாகப் பேசுபவர்களாக இருந்த போதிலும், சிலயூதவேர்களுடன்,ஜாப்பிக் ஒரு தலைவரையும்கூட தேர்ந்தெடுத்திருந்தது.) மற்ற எதிர்க்கட்சிகள் பொது மற்றும் தனியார் ஊடகங்களில் அரசின் கட்டுப்பாட்டால் முற்றிலும் விலக்கிவைக்கப்பட்டிருந்தபோது, இந்த சலுகைபெற்ற அமைப்பு வியக்கத்தக்கவகையில், இலவச ஒளிபரப்பு நேரத்தைப் பெற்றிருந்தது. இது எந்த ஒரு தேர்தலிலும் 4 சதவீத வாக்குகளுக்குமேல் பெற்றதில்லை.

இந்தக்கட்சியின் சுதந்திரத்தைப்பற்றி சந்தேகம் கொள்ள எவரொருவரும் ஈயத்தால்-தொப்பிகளை அணிந்திருக்கவேண்டிய தேவை இல்லை ஒரே நேரத்தில் பல பதவிகளை வைத்திருக்கத் தூண்டுவதற்கு எதிர்க்கட்சிகளை மாற்று வேட்பாளர்களாகப் பயன்படுத்தும் நடைமுறை ரஷ்யாவிலிருந்தும், அதேபோல மற்ற முன்னாள் சோவியத் அரசுகளிடமிருந்தும் நன்கு அறியப்பட்டிருந்தது. அரசியல் விஞ்ஞானியும், உக்ரெய்ன் நிபுணருமான ஆண்ட்ரூ வில்சன் இந்த நிகழ்ச்சிப்போக்கை ‘ நடைமுறை அரசியல்’ என்று அடையாளமிட்டார்..

ஹங்கேரியில் ரோமா சமுதாயத்தை பலியாடுகள் ஆக்குவது உண்மையில் அரசியல் சிறுபிரிவுகளுடன் மட்டும் என வரையறுக்கப்படவில்லை. ஓர்பன் தானேகூட, மக்கள் கருத்துக்களை, சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒதுக்கப்பட்ட ரோமாக்களுக்கு எதிராக திருப்புவதில் அதிகப்படியான ஆர்வத்துடன் காணப்பட்டார் .

ஜார்ஜ் சோராஸ், (இவர் பெயர் ‘யூதநிதி’’க்கான மங்கலச்சொல்லாக வழிபடப்பட்டது) புலம்பெயர்ந்தோர், மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் போன்ற மற்ற பலியாடுகளைப் பார்த்து மக்கள் களைத்துப்போய்விட்டதாகத் தோன்றியபோது ஓர்பனின் பிரச்சார வலைத்தளம் புதிய எதிரிகளைக் கட்டாயம் கண்டுபிடித்தாக வேண்டும்: அது இந்த முறை ரோமா என தோன்றுகிறது.

1000s rally in Hungary, accuse govt of drifting away from EU ...

அண்மையில் சில அறிக்கைகளில் ஓர்பனின் வெளியோடிகள் இனவாத   அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட கல்வியை வெளிப்படையாக பாதுகாத்தார்கள் அவரது அரசு நீதிமன்றத்தால் கட்டாயமாக்கப்பட்ட ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதை ஜியோங்.கியோஸ் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வகுப்புக்களில் கற்பிக்கப்பட்ட ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு நிறுத்த முயன்றது.

ஓர்பனின் முயற்சிகளுக்கு எதிர்மாறாக அத்தகைய முனைப்பான பாகுபாடு காட்டுவது ஹங்கேரிய, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களின்படி இன்னும் சட்டபூர்வமற்றதாகவே உள்ளது. இன்னும் அந்தச்சூழல் .மோசமாகிவருகிறது. மி ஹசான்க்கின் மூலநோக்கம் ஓர்பனுக்கு விசுவாசமாகவும் ஃபார் ரைட்-க்கு ஆதரவாகவும் ஜாப்பிக்-கின் ஒருமைப்பாட்டை சிதறவைக்க உதவுவதுதான். இன்று அதன் பயன்பாடு, அரசால் நடத்தப்படவுள்ள அடுத்த வெறுப்பு பிரச்சாரத்துக்கு மக்களின் விருப்பங்களைப் பரிசோதிப்பதாக உள்ளது.

சில நல்ல செய்திகள்……..மேலும் ஒரு இரக்கமற்ற எதிர்காலம்.

 ஹங்கேரியின் எதிர்காலத்துக்கான கண்ணோட்டம் நம்பிக்கையூட்டுவதாக இல்லை என்றாலும், அங்கே சில நல்ல செய்திகளும் இருக்கின்றன.. அகதிகளை தண்டனை காலத்துக்குப் பிறகும் நீண்டகாலம் அடைத்துவைத்திருக்கும் ஹங்கேரியின் நடைமுறை சட்டத்துக்கு எதிரானது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் மே 13 அன்று தீர்ப்பளித்துள்ளது. அதை ஆச்சரியப்படத்தக்கவகையில் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த அகதிகள் முகாமின் கூர்மையான மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிவேலிகளுக்கு அப்பால் எதையுமே பார்த்திராத, குழந்தைகள் உட்பட அந்த முகாமிலிருந்தவர்கள்  விடுதலை செய்யப்பட்டார்கள். இந்தமுகாம்களில் வழக்கமாகப் பயன்படுத்தப் படும் மனிதாபிமானமற்ற பட்டினிபோடும் செயலையும்கூட இது முடிவுக்குக் கொண்டுவந்தது.

  ஹங்கேரியில் இந்த வளர்ச்சிகளுக்கு இடையே உள்ள சம்தகாரங்களை பார்க்காமலிருப்பது கடினம். அமெரிக்காவில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஃபார் ரைட் தீவிரவாதிகளில் துப்பாக்கி தாங்கிய ஆர்ப்பாட்டங்களை அனுமதித்தார் கள்; அது தீவிர வன்முறையாகி வெடித்தது.ஆனால், ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை செய்யப்பட்ட பிறகு, தொடர்ந்த அந்த வன்முறைகள் நியாயப்படுத்தப்பட்டன.. அதே போல ஓர்பன், மி ஹசாங்கின் இனவாத குண்டர்களைக் கண்டிக்க மறுத்தார்.  டிரம்ப் அந்த எழுச்சியை டிவிட்டர்களில் தொடர்ச்சியாக ‘இனவாத நாய்கள்’ என்று குறிப்பிட்டு அதை அடக்குவதற்கு அபாயகரமான சக்திகளை அழைத்தார். 

  2008ன் பொருளாதார மந்தத்துக்குப்பிறகு, இனவாத-தேசியவாதிகளின் எழுச்சி பலநாடுகளில் துன்பத்துக்கான உண்மையான காரணங்களை -மானுடத்தின் மதிப்பைச் சூறையாடும் முதலாளித்துவத்தின் மனப்பான்மை குறிப்பிட்ட இடைவெளிகளில் நெருக்கடிகளை உருவாக்குகிறது என்பதை- மக்கள் கவனத்திலிருந்து திருப்பி,   மேல்தட்டுகளின் நலன்களுக்குச் சேவை செய்தது.. இப்போதைய நெருக்கடி முந்தைய ஒன்றைவிட மிகவும் தீவிரமானது என்பதால், டிரம்ப் மற்றும் ஓர்பன் போன்ற அதிகாரம் நிறைந்த செயல்பாட்டாளர்கள் இனவாத அணிதிரட்டல்களைச் செய்துவருவது உண்மையில் கவலையளிக்கிறது.

How Viktor Orban Degraded Hungary's Weak Democracy

  ஓர்பனின் ஆட்சி உருவானதற்கு அங்கே குறிப்பிடத்தக்க வரலாற்றுப்பூர்வ மற்றும் கலாசாரபூர்வ காரணங்கள் இருக்கின்றன. இதுவரை ஹங்கேரியின் ஜனநாயகத்தின் வீழ்ச்சியை விளக்க லிபரல்கட்சி முயற்சிக்கிறது: இதில் ஹங்கேரியின் அதிர்ச்சியடையவைக்கும் கடந்தகாலம், கம்யூனிசத்துக்கு பிந்தைய ஜனநாயக நிறுவனங்களின் எளிதில் உடைந்துபோகும் வலுவற்ற தன்மை, அல்லது ‘ஹங்கேரியர்களின் குணாம்சம் ஆகியவை விடுபட்ட புள்ளிகளாக உள்ளன. கட்டமைப்பு சார்ந்த காரணிகளாக ஓர்பனின் எழுச்சியைக் குறிப்பிட்ட தேசிய அல்லது கிழக்கு ஐரோப்பிய குணாம்சங்களோடு விளக்கு வதற்கு்அவற்றில் எதுவும் இல்லை:ஒவ்வொன்றும் உலக முதலாளித்துவத்தின் ஆற்றலைக்கொண்டே  நடந்துள்ளது.

 கம்யூனிசத்திலிருந்து மாறிவந்தது முன்னாள் தொழில் நகரங்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கியது: அது ஜனநாயகத்துக்கு எதிரான கோபத்தை உருவாக்கியது, மேலும் எதேச்சாதிகாரத்துக்கு வழியமைத்தது. உண்மை இவ்வாறு இருக்கும்போது, இந்த மாறிச்செல்வது பட்டினியைத்தவிர வேறு எதையும் தரவில்லை  அடிப்படை மாற்றம் கோரும்: உள்ளூர் வெளிப்பாடுகளின்படி ஃபோர்டிசத்திலிருந்து முந்தைய ஃபோர்டிசத்துக்கு  உலக அளவிலான நகர்வும் வேறு எதையும் தரவில்லை 

 கிழக்கு ஐரோப்பாவில் இந்தநகர்வு வேகமானதாகவும், வலி நிறைந்ததாகவும் இருந்தது  ஆனால், எது ஹங்கேரியின் தொழில்துறை மையத்தை பேரழிவுக்குள்ளாக்கியதோ, அதே செயல்முறைதான் வட இங்கிலாந்தையும், அமெரிக்க‘ரஸ்ட்-பெல்ட்- துருப்பிடித்த தோள்வாரையும் பேரழிவுக்குள்ளாக்கியது அதன்மூலம் அவற்றை போராட்டத்தலைமைகளில் குறிப்பான இலக்குகள் ஆக்கியது.  சந்தேகத்துககிடமில்லாமல் ஓர்பனின் ’சோசலிஸ்ட்’ முன்னோடி புதியதாராளவாதத்தைஅரவணைத்துக்கொண்டது அவருக்கு உதவியது. முன்னாள் இடதுசாரி பிரிவுகளின் வலுவான இடங்களிலிருந்த பலர் இப்போது பொருளாதார கையறுநிலையை சந்தித்துக்கொண்டு.இருக்கிறார்கள்: ஃபிடெஸ் மற்றும் ஜாப்பிக்-குக்கு மாறிவிட்டார்கள்.. இது மீண்டும் நிகழ்ச்சிப்போக்கின் ஒரு வலிமிகுந்த வெளிப்பாடு ஆகும்: இதன் எதிரொலி உலகில் எங்கெங்கும் உள்ள இதுபோன்ற அரசியல் சக்திகளை அதிகாரத்துக்குக் கொண்டுவந்துவிடும்.

  இந்தவெளிச்சத்தில், நாட்டின் இன்றைய சூழ்நிலை ஏதோ சில மன மாற்றத்தால் அல்ல என்பது தெளிவாகிறது: அது ஹங்கேரியர்களின் ஒழுக்க நெறிகளின் பண்பு நலக்குறைபாடுகளைக்கொண்டு விளக்கிவிட முடியும். அதற்கு மாறாக, ஓர்பனின்கீழ் என்ன நடந்துகொண்டிருக்கிறதோ, அது எந்த ஒருநாட்டின் எதிர்காலமாகவும் எளிதில் ஆகிவிடக்கூடும்: அங்கே இனவாதம் மற்றும் பாசிசத்தின் எழுச்சியின் கட்டமைப்புக்கான காரணங்களுக்கு போதுமான அளவில் தீர்வுகாணப்படவில்லை.. 1939ல் மேக்ஸ் ஹோர்கெல்மர் கூறினார்: ‘நீங்கள் முதலாளித்துவத்தைப்பற்றிப் பேசவிரும்பவில்லை என்றால், பிறகு நீங்கள் பாசிசத்தைப்பற்றி எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பது நல்லது.” மேலும் இந்த வரிகளுக்கு ஸ்லாவோஜ் பொழிப்புரை கூறுகிறார்: “யாரெல்லாம் உலக முதலாளித்துவத்தைப்பற்றி விமர்சன ரீதியாகப் பேச விரும்பவில்லையோ, அவர்கள் ஹங்கேரியைப்பற்றியும் அமைதியாக இருந்தாக வேண்டும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *