The first Teacher (1965)
Russian
புகழ் பெற்ற இரஷ்ய இயக்குனரான Andrei Konchalovsky ன் முதல் திரைப்படம்.
தமிழக கல்வி சூழலில் பலருக்கும் ஆதர்சமாக இருக்கக்கூடிய “முதல் ஆசிரியர்” எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.இதன் ஆசிரியர் சிங்கிஸ் ஐத்மாத்தவ்.இந்நாவலைப் போலவே இவரது ஜமீலா எனும் நாவலும் பலராலும் பாராட்டப்பட்ட நாவலாகும்.
நாவலை முழுமையாக எடுக்காமல் , திரைப்படத்திற்காக சில மாற்றங்களை செய்துள்ளனர்.
1924ல் செஞ்சேனைப் படையைச் சேர்ந்த துய்சேன் என்பவர் , கிர்கிஸ்தான் மலைக்கிராமமான குர்குரெவிற்கு ஆரம்பக் கல்வி அளிக்க அரசால் அனுப்பப் படுகிறார்.
ஸ்டெப்பி புல்வெளியின் ஓரங்கமான இக்கிராமத்தில் விவசாயமும் மேய்ச்சலும் பிரதானமான அம்சமென்பதால் கிராமத்தை சேர்ந்த பலரது நகைப்பிற்கு ஆளாகின்றார்.
சோவியத் அரசின் உத்தரவைக் காண்பித்து ஸடெப்பிப் புல்வெளியில் அலைந்து திரிந்த குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருகிறார்.
இதில் பெற்றோரை இழந்து உறவினரின் பராமரிப்பில் வளர்ந்து வரும் பதின்வயது நிரம்பிய அல்தினாயும் தனது தீரா கற்றல் ஆர்வத்தால் இப்பள்ளிக்கு வருகின்றாள்.
துய்சேன்-அல்தினாய்-குர்குரெவு கிராம மக்கள்-அல்தினாயை மணம் முடிக்க எத்தனிக்கும் நாடோடிக் குழுத் தலைவன் இவர்களுக்கு இடையே நடக்கின்ற முரண்பாடுகளும் , மோதல்களுமே படத்தின் மையக் கதை.
இடையே தனக்குத் தெரிந்த அளவில் தான் கற்றறிந்தவற்றை சொல்லித் தர அவ்வூருக்கு வந்தாலும் , காலம் செல்ல செல்ல அவ்வூரில் ஒருவனாக மாறி பல முன்மாதிரியான
அம்சங்களை முன்னெடுப்பதில் மக்களுக்கான ஆசிரியாக கல்விசார் படைப்புலகின் முன்னத்தி ஏராக துய்சேன் மிளிர்கிறார்.
பரந்துபட்ட நிலப்பரப்பின் அனைத்து விதமான பருவகாலங்களையும் துல்லியமாக காட்சிப்படுத்தி அந்நிலப்பரப்பிற்கே நம்மையும் அழைத்துச் செல்கிற விதத்தில், தொழில்நுட்பக் குழுவின் அசாத்திய உழைப்பு தெரிகின்றது.
கல்விபால் ஆர்வம் கொண்ட அனைவரும் அவசியம் காணவேண்டிய திரைப படம்.
குறிப்பு:
YouTube link ல் 10 எபிசோடுகளாக சராசரியாக 10 நிமிடங்கள் ஓடக்கூடிய தனித்தனி வீடியோக்களாக உள்ளது.
Sub Title இல்லை என்பதை நினைத்து வருத்தப்படத் தேவையில்லாத எளிமையான காட்சிமொழி.
படத்தினைக் காண,
இதேபோன்று அதிகாலையின் அமைதியில் கதை (தமிழில் வெளிவந்த பேராண்மை படத்தின் ரஷ்யப் படைப்பு) பத்து பத்த நிமிடங்களாக யூ ட்யூப்பில் பார்த்தேன். கதை நன்கு தெரிந்திருந்ததால் படத்தை நன்கு ரசித்துப் பார்க்க முடிந்தது.