‘மரபணு வரிசை பொய் சொல்லாது’: சார்ஸ்-கோவ்-2 தோற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மைக்  கதை – எம்.கே. பத்ரகுமார் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

‘மரபணு வரிசை பொய் சொல்லாது’: சார்ஸ்-கோவ்-2 தோற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மைக்  கதை – எம்.கே. பத்ரகுமார் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

கோவிட் -19இன் தோற்றம் குறித்த தேடல் காவியக் கதை போன்று வளர்ந்து வருகிறது. ‘சீன வைரஸ்’, ‘வூஹான் வைரஸ்’ போன்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வார்த்தைகள், அவர்களின் அரசியல் மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளின் உள்ளடக்கத்தை வெளிக் கொண்டு வரும் வகையில் இருந்ததற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

முன்னெப்போதையும் விட இந்தக் கதையின் அடிப்பகுதிக்கு செல்வதற்கு பெய்ஜிங் இப்போது மிக உறுதியாக உள்ளது. அவமானப்படுத்தப்பட்ட பெய்ஜிங்  இப்போது தன்னை ஆற்றல் மிக்கதாக மாற்றிக் கொண்டிருப்பது உண்மையிலேயே நல்ல விஷயம் ஆகும். கோவிட்-19இன் தோற்றம் குறித்த இந்தக் கதை வெகுவிரைவிலேயே பொதுக் களத்திற்கு கொண்டு வரப்படும்.

கோவிட் -19 பற்றிய முழு கதையும் வெளிவரப் போகிறது, உலக சமூகத்திற்கு ஏராளமான ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்று  மாஸ்கோவிற்கான சீனத் தூதர் ஜாங் ஹன்ஹுய் கடந்த வார இறுதியில் எடுத்துரைத்தார். பெய்ஜிங்கிற்குத் தெரியாமல் தூதர் ஜாங் பேசியிருப்பார் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. சீனத் தூதர் ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸை தேர்ந்தெடுத்து சில திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. சீனத் தூதர் குறிப்பிட்டுள்ளவற்றில் பின்வரும் முக்கியமான செய்திகள் இருக்கின்றன.

The Viruses That Shaped Our DNA – WSJ

·         நான்கு கண்டங்களில் உள்ள 12 நாடுகளின் உள்ளீடுகளின் அடிப்படையில் உலகளாவிய தரவுத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கோவிட்-19இன் 93 மரபணு மாதிரிகளின் தரவை, ஐந்து தலைசிறந்த சீன அறிவியல் நிறுவனங்கள்  சேகரித்துள்ளன.

·         கோவிட்-19 இன்  ஆரம்பகால ’மூதாதையர்’ என்பது எம்வி 1 என்கிற வைரஸ் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. பின்னர் அது H13 மற்றும் H38 என்ற ஹாப்லோடைப்களாக உருவானது. (ஹாப்லோடைப் என்பது ஒரு உயிரினத்திற்குள் உள்ள, ஒரு பெற்றோரிடமிருந்து ஒன்றாகப்  பெறப்பட்ட மரபணுக்கள் குழு)

·         இதற்குப் பின்னர், H13 மற்றும் H38 ஆகியவை இரண்டாம் தலைமுறை ஹாப்லோடைப் ஆன – H3 ஆகப்  பரிணமித்தன. அதற்குப் பின்னர் அது H1 (கோவிட் -19) ஆக உருவானது.

·         அதாவது, கோவிட் -19இன் ’தந்தை’ எச் 3; அதன் ’தாத்தா பாட்டி’ எச் 13 மற்றும் எச் 38; மற்றும், அதன் ’பெரிய தாத்தா’ எம்வி1 ஆகும்.

·         வூஹான் கடல் உணவுச் சந்தையில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் (கோவிட் -19) எச் 1 வகையைச் சேர்ந்தது என்றாலும், அதன் ’தந்தை’யான எச் 3 மட்டுமே வூஹானில் காணப்பட்டது. ஆனால் அதுவும் கூட கடல் உணவு சந்தையில் காணப்படவில்லை.

·         கோவிட் -19 இன் ’தாத்தா பாட்டியான  எச் 13 மற்றும் எச் 38 ஆகியவை வூஹானில் ஒருபோதும் காணப்படவில்லை.

’தொற்றுநோயைத் தூண்டிய எச் 1 மாதிரி சில பாதிக்கப்பட்ட நபர்கள் மூலமாக கடல் உணவுச் சந்தைக்கு வந்து சேர்ந்தது என்பதையே இது காட்டுகிறது.   மரபணு  வரிசை பொய் சொல்லாது’ என்கிறார் தூதர் ஜாங்.

Coronavirus: How Disease X, the epidemic-in-waiting, erupted in China

கோவிட்-19 இன் பரவலின் மூல ஆதாரம் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தப் பாதை  எந்த திசை நோக்கியும் செல்லக் கூடும். தற்போதைய நிலவரப்படி, கோவிட்-19 முதன்முதலாக வூஹானில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன்  உண்மையான தோற்றம்  எங்கே நடந்தது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இதற்கிடையில், வேறு சில தகவல்களும் உள்ளன. அவற்றை தூதர் ஜாங் இவ்வாறு விவரித்தார்:

1. ஜப்பானைச் சேர்ந்த திருமணமான தம்பதியினர் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை ஹவாயில் (அமெரிக்க பசிபிக் தளம் அமைந்துள்ள இடத்தில்) இருந்த போது, கோவிட் -19ஐ எதிர்கொண்டனர். இருப்பினும் அவர்கள் சீனாவுக்கு விஜயம் செய்யவில்லை அல்லது எந்த சீன நபருடனும் தொடர்பு கொள்ளவில்லை. பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் கணவருக்கு நோயின் அறிகுறிகள் தோன்றியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

2. வடக்கு இத்தாலியில் உள்ள லோம்பார்டியில் முதன்முதலாக ஜனவரி 1 அன்று கோவிட்-19 தோன்றியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3. புகழ்பெற்ற இத்தாலிய மருத்துவ நிபுணரான கியூசெப் ரெமுஸியின் கூற்றுப்படி, கோவிட் -19 தொற்றுநோய் சீனாவில் தொடங்குவதற்கு முன்பாகவே, இத்தாலியில் பரவத் தொடங்கியிருந்தது. .

4. மிகவும் பிரபலமான அமெரிக்க வைராலஜிஸ்ட் ராபர்ட் ரெட்ஃபீல்ட் – தற்போது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குநராகவும் (அமெரிக்காவின் முன்னணி தேசிய பொது சுகாதார நிறுவனம் மற்றும் ஒரு கூட்டாட்சி  நிறுவனம்)  மற்றும் நச்சு பொருட்கள் மற்றும் நோய் பதிவேடு முகமையின் நிர்வாகியாகவும் ( ஜார்ஜியாவில் உள்ள  அட்லாண்டாவை த் தளமாகக் கொண்ட ஒரு கூட்டாட்சி பொது சுகாதார நிறுவனம்) இருக்கிறார் – அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் ஏற்பட்ட காய்ச்சல் இறப்புகளுக்கு (கடந்த குளிர்காலத்தின் போது 80,000 அமெரிக்கர்கள் காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்பட்ட சிக்கல்களால் இறந்து போனதாக மதிப்பிடப்பட்டுள்ளது) உண்மையில் COVID-19 காரணமாக இருக்கலாம் என்று ஊகித்துள்ளார். அந்த நேரத்தில் அமெரிக்கா அதைச் சோதிக்கவில்லை

5. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அழைக்கப்படுபவர்களில் கோவிட்-19இன் முதல் தொற்று நோயாளி இருக்கலாம் என்பதால், காய்ச்சலால் இறந்தவர்களைத் தோண்டியெடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இத்தாலி விரும்பியது,. ஆனால் அமெரிக்கா அதற்கான அனுமதியைத் தர   மறுத்துவிட்டது.

சமகாலத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கோவிட் -19இன் பாதையை அறிந்து கொள்ளும்  அளவிற்கு நன்கு முன்னேறியுள்ளது. மறைக்கப்பட்ட  அனைத்தும் வெளிப்படுகின்ற நாள் விரைவில் வரும்  என்பது நிச்சயம் என்று தூதர் ஜாங் கூறியுள்ளார்.

Why Is Trump Cheerleading For The Unproven ‘Corona’ Drug?

ரஷிய செய்தி நிறுவனமான தாஸ் நடத்திய நேர்காணலில்  தூதர் ஜாங் தோன்றியதிலிருந்து, சீனாவின் உடந்தை மற்றும்  தீய நோக்கங்கள் குறித்த தனது முந்தைய குற்றச்சாட்டுகளை அதிபர் ட்ரம்ப்  கட்டுப்படுத்திக் கொண்டுள்ளார். பெய்ஜிங்கை பழிவாங்கப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தாலும், தனது நிலைப்பாட்டை மிதப்படுத்திக் கொண்ட அவர், சனிக்கிழமை வெள்ளை மாளிகையில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்: ”நீங்கள் சீனா மீது கோபப்படுவீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது உங்களுக்குத்  தெரியும்.

அதற்கான பதில்  ஆம் என்பதாக இருக்கலாம், ஆனால் அது மற்ற விஷயங்களையும் சார்ந்துள்ளது: இது கட்டுப்பாட்டை மீறி நடந்த தவறா அல்லது வேண்டுமென்றே  செய்யப்பட்டதா? அந்த இரண்டிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அது எப்படி நடந்திருந்தாலும், அவர்கள் எங்களை உள்ளே செல்ல அனுமதித்திருக்க வேண்டும். உங்களுக்குத் தெரியும், நாங்கள் எங்களை ஆரம்பத்திலேயே உள்ளே விடச் சொன்னோம். அவர்கள் எங்களை உள்ளே அனுமதிக்க விரும்பவில்லை. அவர்கள் சங்கடப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இதில் ஏதோ மோசமான விஷயம் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும் என்றே நான் நினைக்கிறேன். அதனாலேயே அவர்கள் சங்கடப்பட்டார்கள் என்றும் நான் கருதுகிறேன்”.

சீனாதான் குற்றவாளி என்று டிரம்ப் இனிமேல் குற்றம் சாட்டப் போவதில்லை. அதே போன்று அதைத் தெளிவுபடுத்துவதற்கான தேவையும் இருக்கப் போவதில்லை. சொல்லப் போனால், அது இப்போது பேச்சுவார்த்தைக்குட்பட்டதாகவே இருக்கிறது. தூதர்  ஜாங்கின் நேர்காணல் வெளியான இரண்டு நாட்கள் கழித்தே டிரம்ப் பேசினார். கோவிட் -19இன் பாதை அறிவியல்ரீதியாக மிகத்தெளிவாக கண்டுபிடிக்கப்படலாம் என்பதை சீனத் தூதர் சுட்டிக்காட்டியுள்ளார். கோவிட் -19 இன் பாட்டி, தாத்தா மற்றும் பெரிய தாத்தா உண்மையில் அமெரிக்காவில் குடியேறியிருந்தவர்கள் என்பது டிரம்ப்பிற்கு மிகக் கடுமையான பிரச்சினையாகவே  இருக்கும்.

https://www.newsclick.in/index.php/COVID-19-China-Wuhan-Coronavirus    

எம்.கே. பத்ரகுமார்

நியூஸ்கிளிக், 2020 ஏப்ரல் 22

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *