இந்திய அறிவியல் ஆய்விதழ்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற புவியியல் ஆய்வு மையம்!
– ஆயிஷா இரா. நடராசன்
உலக வரைபடம் அதில் இந்திய வரைபடம் என்பது இன்று பள்ளிக்கூடத்தின் அங்கமாகி விட்டது. GPS பயன்படுத்தி இடங்களை அடைவதற்கான வரைபடங்கள் மிக துல்லியமாக்கப்பட்டு நம்முடைய கைபேசிக்குள் வந்துவிட்டன. ஆனால் முதலில் ஒரு இந்திய வரைபடம் எப்போது வெளியிடப்பட்டது என்பதை அறிவீர்களா இதற்குரிய விடையை தேடி கொண்டிருங்கள்.. அதற்குள் நாம் இந்த கட்டுரைக்குள் நுழைவோம்.
அறிவியல் ஆய்விதழ்கள் இல்லை என்றால் உலக வரைபடம் என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கான சாதியங்கள் இல்லாமலே போயிருக்கும் என்பதே உண்மை. ஆரம்பகட்ட உலக அட்லஸ் 1570 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒர்டெல்லிஸ் என்பவரின் முயற்சியில் வெளிவந்த தியேட்டர் ஆர்பிஸ் டெரராம்.. என்கிற ஒன்றாகும் வரைபடத் தாள்களில் இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பாக அது இருந்தது அதற்கு முன்பு கிளாடியஸ் தாலமியின் இரண்டாம் நூற்றாண்டின் படைப்பான ஜியாக்ராஃபிக்யா வரைபட இயல் குறித்த ஒரு அடித்தள கட்டுரையாக அமைந்தது இந்த கட்டுரைதான் உலகில் நாம் எங்கிருக்கிறோம் என்பதை வரைபட முறையில் கண்டறிந்து சொல்லத்தக்க அறிவியலை உருவாக்கியது.
நவீன புவியியல் வெளியீடுகள் என்றால் அது 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக சொல்லப்படுகிறது ராயல் புவியியல் சங்கம் இங்கிலாந்தில் 1830 காலகட்டத்தில் நிறுவப்பட்டது. அதுதான் பயணங்களின் வரைபடங்களை உள்ளடக்கிய ஒரு இதழாக வெளிவந்தது. அமெரிக்காவில் தேசிய புவியியல் சங்கம் 1888 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. ஆனால் இது இரண்டுக்கும் நடுவில் இந்தியாவில் இந்திய புவியியல் சங்கம் தொடங்கப்பட்டுவிட்டது என்பதே வரலாறு. நாம் சர்வதேச வரைபட இதழ் ஒன்றை அப்போதே நடத்த தொடங்கி விட்டோம் என்பது ஆச்சரியமான விஷயம் தான்.
1767 ஆம் ஆண்டு சர்வே இந்தியா என்கிற ஒரு அமைப்பை கொல்கத்தாவில் நிறுவினார்கள் கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய நலன்களுக்காக இங்கிலாந்தில் தொழில் புரட்சியை முழுமையாக கச்சா பொருட்களின் மூலம் நடத்துவதற்கு அவர்கள் கண்டிப்பாக பல வகையாக ஆய்வுகளை மேற்கொண்டு எங்கெல்லாம் பூமிக்கு அடியில் நிலக்கரி இருக்கிறது என்பதை கண்டறியும் அவசரத்தில் இருந்தார்கள் அப்போது இருந்த அமைப்பு மேலே குறிப்பிட்ட பிரிட்டிஷ் புவிஇயல் சங்கம் ஆகும் .. அந்த காலத்தில் இந்தியாவில் எத்தகைய வரைபடமும் இருக்கவில்லை.
எது ஊரின் எல்லை அடுத்த ஊரு எந்த இடத்தில் தொடங்குகிறது என்பதெல்லாம் குறித்து தோராயமாக கூட கணக்கீடுகள் கிடையாது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஊர் என்று சொல்வார்கள்.. ஆறு காததூரம் என்பார்கள் இவற்றிலெல்லாம் எந்தவகையிலும் துல்லியம் இல்லை. எனவே ஆங்கிலேயர்கள் மிகவும் குழம்பி போனார்கள் திப்பு சுல்தான் உடனான யுத்தம் முடிவுக்கு வந்த பொழுது எது எல்லை என்பதை தீர்மானிப்பதில் பெரிய சிக்கல்ஏற்பட்டது.. தெரியாமல் எல்லைகளை கடந்து சென்று தாமே அவசரப்பட்டு போர்களை தூண்டுகின்ற சூழ்நிலைகளை கடந்து செல்ல வேண்டிய அவசியமும் இருந்தது.
அந்த காலகட்டத்தில் இந்தியாவிற்கு வந்தவர்தான் வில்லியம் லாம்டன் (William Lambton). பிரிட்டிஷ் ஆதரவு சிப்பாய். சிறு வயது முதலே புவியியல் சார்ந்த அளவீடுகளை கணித முறைக்கு உட்படுத்துகின்ற ஆர்வத்தை பெற்றிருந்தார் லாம்டன். 1753 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கிராஸ்பி என்கிற பகுதியில் பிறந்தார். அவருக்கு பள்ளிக் கூடத்தில் ஒரு கணித ஆசிரியர் இருந்தார் அவர் பெயர் எமர்சன் என்று குறிப்பிடப்படுகிறது அவர் உள்ளூரில் தீவிரமான புவியியல் ஆய்வுகளை மேற்கொண்டவர் அவருடன் சென்று துல்லியமான வரைபடங்களை உருவாக்கும் கலையை அப்போதே லாம்டன் கற்றுஇருந்தார்..1781 ஒரு ராணுவ வீரராக அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார் இனிப்பு வெல்லஸ்லி பிரபு அவர்களின் முப்பத்தி மூன்றாவது காலாட் படை பிரிவில் அவர் இணைக்கப்பட்டார். நில அளவையில் அவருடைய திறமையை ஏற்கனவே அவர் அமெரிக்காவில் குடியேறிங்களுக்காக நிரூபித்திருந்தார்.

அப்போது ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டது. பலருக்கும் அவரிடம் ஒரு தியோடலைட் கருவி இருப்பது தெரியாது. தியோடலைட் கருவி பற்றி கண்டிப்பாக நீங்கள் அறிந்திருப்பீர்கள் சாலைகளை செப்பனிட அல்லது புதிய சாலைகள் போடும் பொழுதோ டெலஸ்கோப் போல வைத்துக் கொண்டு இப்பொழுது சிறிய கையடக்க கருவிகளை பயன்படுத்துகிறார்கள். இதுதான் தியோடோலைட் அல்லது தியோடலைட்.
லாம்ப்டன் இந்தியாவுக்குள் நுழையும் பொழுது ஒரு அசாதாரண சூழல் நிலவியது அப்போது இந்திய புவியியல் சர்வே அமைப்பின் தலைவராக இருந்தவர் டேவிட் கிராம் வில்லியம்ஸ் என்பவர் இவர் கரி இந்தியாவில் கிடைக்கின்ற மாவட்டங்களை குறியீடு செய்வதற்காக அங்கிருந்து அனுப்பப்பட்டிருந்தார் ஒரு இதழைத் தொடங்குவதற்கு பெரிய முயற்சியை அவர் மேற்கொண்டு வந்தார் தங்களுடைய கண்டுபிடிப்பை கண்டிப்பாக ஒரு ஆய்வு கட்டுரையாக இதழ்களில் வெளியிட்டால் மட்டுமே உலக அரங்கில் அவை நிலைபெறும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் ஆய்விதழ் வெளி வருவதற்கு முன்னாலேயே யானை மீதிருந்து கீழே விழுந்து டேவிட் வில்லியம்ஸ் அப்போது மிக பிரபலமாக அறியப்பட்ட இந்திய ஜங்கள் காய்ச்சல் வெடித்து அவர் இறந்து போயிருந்தார்.
லாம்டனின் அமெரிக்கா பணிகளை நன்கு அறிந்திருந்த கிழக்கிந்திய கம்பெனி அடுத்து அவரை இந்தியாவினுடைய பூவி இயல் சங்கத்தின் பொறுப்பாளராக நியமித்தது. அவரிடம் எதிர்பார்க்கப்பட்டது என்னவென்றால் இந்தியாவினுடைய மிக பிரம்மாண்டமான தீபகற்பத்தில் இருக்கின்ற அனைத்து வகையான மூலப்பொருட்களையும் பூமிக்கடியிலிருந்து கண்டறிந்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான். ஆனால் லாம்டனின் திட்டம் வேறாக இருந்தது. அவர் தெளிவான ஒரு ஆய்வு இதழை தொடங்குவது என்றும்.. இந்தியாவை முழுதும் வரைபட இயலுக்கு உட்படுத்துவது என்றும்.. முடிவுசெய்து தான் ஏற்கனவே வைத்திருந்த மூன்று பிரம்மாண்ட தியோடலைட்.. கருவிகளுடன் களமிறங்கினார்.
லாம்டன் ஒப்பற்ற அறிவியல் அறிஞர் ஆவார். அறிவியல் தளத்தில் சூரிய கிரகணத்தை நேரடியாக தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்ததால் ஏற்கனவே அவர் இடது கண்ணை இழந்திருந்தார். தனியாக தனக்கு தானே ஆழமான கணிதத்தை கற்றவர். 1796 ஆம் ஆண்டு ஒரு லெஃப்டினன்ட் ஆக பதவி உயர்வு பெற்று சீரங்கப்பட்டினம் முற்றுகையின்போது படைப்பிரிவு மேஜராக்கப்பட்டார் திப்பு சுல்தானின் முகாமை சுற்றி வர முயற்சிக்கும் தருணத்தில் ஜெனரல் எபியர் என்பவர் தவறான திசையில் சென்ற பொழுது அந்த முக்கிய தவறை தடுத்து பெரிய அளவில் பேசப்பட்டவர். அதற்கு காரணம் வரைபட இயலில் அவருக்கு இருந்த பரிச்சயம்.
லாம்டன் இந்திய வரைபட ஆய்வு இதழ் ஒன்றை தொடங்கி தன் கருவிகளை இங்கிலாந்திலிருந்து கப்பலில் வரவழைத்து தன்னுடைய வேலையை தொடங்கினார் அவருடைய சுவடுகள் இந்தியா முழுவதும் இப்போது இருப்பதை நாம் பார்க்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய புவியியல் சங்கம் தன்னுடைய கண்டுபிடிப்புகளை. விவரங்களோடு வெளியிடுவதற்கு இந்த அறிவியல் ஆய்விதழ் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆய்வுகள் மூலம் தான் தற்போது பல வகையான புதிர்கள் விடுவிக்கப்படுகின்றன.

இந்தியாவை முழுமையாக வரையப்பட இயலுக்கு உட்படுத்துவதற்கான வேலை நம்முடைய சென்னையில் பரங்கிமலை என்று அழைக்கப்படும் செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்கிற இடத்தில்தான் தொடங்கியது.1800 ஆம் ஆண்டில் அந்த பணி லாம்டன் தன்னுடைய தியோடலைட் மூலம் தொடங்கிவைத்த பணியாகும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் ஏற்கனவே சிறந்த அளவை முறைகள் இருப்பதை அவர் கண்டார். காணி என்பது ஒரு ஏக்கர் 33 சென்ட் என்பதை துல்லியமாக அறிவிக்கின்ற அளவை அமைப்புகள் நம்மிடம் இருந்தன. நீர்ப்பரப்பிற்கு அருகில் முதல் நிலம் உடையவர்களுக்கு வாய்க்கானி என்று பெயர். ராஜராஜசோழன் வளநாடு எனும் பிரிவைத் தோற்றுவித்து நிலம் அளந்து தரம் பிரித்த காரணத்தால் உலகளந்த சோழன் என்று பெயர் பெற்றான் அதே பெயரை தான் ஆங்கிலேயர்கள் லாம்டனுக்கு சூட்டினார்கள். 1802 ஆம் ஆண்டில் அடிப்படை தயாரிப்புகளை எல்லாம் முடித்து ஏப்ரல் பத்தாம் தேதி அன்று பரங்கிமலையில் இருந்து முக்கோண வரைபட அளவீடுகளை தொடங்கினார் லாம்டன். பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்தியா புவியியல் சங்கத்தின் ஆய்விதழில் அவருடைய விரிவானஅறிவியல் புவியியல் சார்ந்த ஆய்வு கட்டுரைகள் வெளிவர தொடங்கின.
அது என்ன முக்கோண வரைபட அளவீடு? பரங்கிமலை உச்சியில் 11 அடி உயரத்திற்கு ஒரு துணை அமைத்து அதன்மீது தன்னுடைய தியோடலைட் கருவியை அவர் பொறுத்தினார். அது முக்கோணத்தின் ஒரு புள்ளி. . அங்கிருந்து பல்லாவரம் குன்று… பெரும்பாக்கம் குன்று என்று மூன்று புள்ளிகளை இணைக்கின்ற ஒரு முக்கோணம் உங்களுக்கு குன்றுகள் மூலம் கிடைக்கும் அந்த இடங்களிலும் அளவிட்டு தூண்களை மலைகளில் குன்றுகளின் மேலே அமைத்தார்கள் மூன்று தியோடலைட்.. கருவிகளைப் பயன்படுத்தி துள்ளியமாக இடம் அளவைக்கு உட்படுத்தப்படும். இந்த முக்கோணம் முடிந்த பிறகு அடுத்த முக்கோணங்களை ஏற்படுத்த வேண்டும் கடல் மட்டத்தில் இருந்து எத்தனை உயரத்தில் அது இருக்கிறது என்பதையும் சார்ந்து தெளிவாக நாம் நிலத்தை அளந்துவிடலாம் இதுதான் லாம்டனின் யோசனை.. அப்போது அவரிடமிருந்த கருவி அரை டன் எடை இருக்கும் அதை சுமந்து கொண்டுசென்று அளவையில் ஈடுபட வேண்டும்.. லாம்டனின் உதவியாளர் பெயர்தான் ஜார்ஜ் எவரஸ்ட் அவருடைய பெயரை தான் நாம் இப்போது எவரஸ்ட் சிகரத்திற்கு வைத்திருக்கிறோம்.
லாம்டன் அவர்களுக்கு நம்முடைய பரங்கிமலையில் ஒரு சிலை கூட இருக்கிறது.. இந்த லாம்டன் உருவாக்கிய முக்கோண அளவை இயலின் ஒரு கல் திருப்பரங்குன்றம் என்கின்ற அந்த குன்றின் மீது வைக்கப்பட்டு தியோடலைட் கருவி பயன்படுத்தப்பட்ட இந்திய புவியியல் சங்கத்தின் அளவீட்டு துணை தான் நீதிபதி தீபத்தூண் என்று குறிப்பிட்டுவிட்டார் என்பதுதான் அறிவியலாளர்களின் வாதம். அந்த அரசியலுக்குள் இப்போது நாம் நுழைய வேண்டாம்.
இந்திய புவியியல் சங்கத்தின் உடைய ஆய்வு இதழ் குறித்து நாம் சிந்திப்போம் லாம்டன் இருந்தவரையில் எட்டு இதழ்கள் வெளிவந்தன தென்னாப்பிரிக்காவில் ஆண்டிஸ் மலைத் தொடர் தான் உலகின் மிக உயரமான சிகரத்தைக் கொண்டது என்கின்ற பழைய வாதத்தை இமயமலையின் உச்சியில் இருக்கின்ற எவரஸ்ட் சிகரம் தான் உலகிலேயே உயரமானது என்கிற உண்மையை கொண்டு வந்தது இந்த ஆய்விதழ் தான். அந்த உண்மை வெளிவருவதற்கான தொடக்கபுள்ளி நம்முடைய பரங்கிமலையில் தொடங்கிய புள்ளிதான் என்பது இங்கே பதிவிடப்பட வேண்டும்.

லாம்டனின் மறைவுக்குப் பிறகு ஜான் மேக்லாண்ட் என்பவர் இதழுக்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.1848 முதல் இந்திய புவியியல் சங்கத்தின் இதழ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதை பொருட்கள் ரேடியோ மெட்ரிக் முறையில் செய்யப்பட்ட கணக்கீடுகள் என்று விரிவடைந்தது முதலில் இந்தியாவை சேர்ந்தவர் இந்த இதழில் எழுதத் தொடங்கியது என்பது இன்னொரு மிக சிறப்பான வரலாறு ஆகும். ராவத் சகோதரர்கள் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கிஷன் சிங் ராவத்.. நியான் சிங் ராவத்.. மணி சிங் ராவத்.. ஆகியோர் இந்திய புவியியல் சங்கத்தின் அற்புதங்களை சாதித்து வரலாறு படைத்தனர்.
ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்ட கிஷ்ணன் சிங் ராவத் முதன்முதலில் பண்டிட் என்று அழைக்கப்பட்டவர். அவருக்கு ஒரு குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டிருந்தது எ கே. இந்திய சீன எல்லையில் மிலாம் என்கிற கிராமத்தில் பிறந்தவர் அவர் கம்பிசாங் அரசு பள்ளியில் ஆசிரியர் பயிற்சியை முடித்து அல்மோராவில் பெண்கள் பள்ளியில் கணித ஆசிரியரானார். இந்தியா பூவியல் ஆய்வகத்தின் டேராடூன் அலுவலகத்தால் பணி அமர்த்தப்பட்டவர். அவருக்கு நேரடி பயிற்சியை வழங்கியவர் லாம்டன்.. முதன்முதலில் இந்திய புவியியல் சங்கத்தின் ஆய்வு இதழில் தன் கணக்கீடுகளை ஆய்வு கட்டுரைகளாக வெளியிட்டு அசத்தினார் கிஷன் சிங்.. உயிரை பணயம் வைத்து விபத்து எல்லையில் இந்தியாவுக்கான சரியான வரைபட புள்ளிகளை லாம்டன் விட்டுச் சென்ற முக்கோண வரைபட இயலுக்கு உட்படுத்தியவர்.
இந்திய புவியியல் சங்கத்தின் ஆய்வு இதழில் 1869 ஆம் ஆண்டு கைலாஷ் மனசரோவர் பாதை குறித்த அறிவியல் கட்டுரையும் பிறகு தொடர்ச்சியாக ஷிகாச்சி லாசா பாதை குறித்த கட்டுரையும் டார்ஜிலிங்க்கும் லாசாவுக்கும் இடையிலான மங்கோலியா பயணம் குறித்த அறிவியல் ஆய்வு கட்டுரையும் அடுத்தடுத்து வெளிவந்தது.
ரஷ்ய எல்லையில் ஆப்கானிஸ்தான் பகுதியில் இதே மாதிரியான அளவையியலில் ஈடுபட்டு மணி சிங் ராவத் ஏழு ஆய்வுக் கட்டுரைகளை இந்திய புவியியல் சங்கத்தின் அறிவியல் ஆய்வு இதழில் எழுதி இருக்கிறார். இந்த முக்கோணவியல் ஆய்வு என்பதற்கு அடிப்படையாக தான் முதலில் நம்முடைய இந்திய புவியியல் சங்கத்தின் அறிவியல் ஆய்விதழ் தொடங்கியது என்றாலும் பின்நாட்களில் மகஞ்சதாரோ ஹரப்பா சிந்து சமவெளி நாகரிகத்தின் தொல்லியல் கூறுகளை முதலில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையை தாங்கியது இந்த இதழ்தான்.
1800 களிலேயே இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 90 சதவிகிதத்தை முழுமையாக ஆய்வுசெய்து வரை படம் மட்டுமல்ல நம் நாட்டில் கிடைக்கக்கூடிய நிலக்கரி முதல் இரும்புத் தாது வரை பலவகையான இயற்கை செல்வங்களை எங்கெல்லாம் அவை கிடைக்கின்றன என்கிற துல்லிய விவரத்தோடு அவர்கள் வெளியிட்டார்கள். பின்னாட்களில் டி என் வாடியா என்னும் பேரறிஞர் இந்த நிறுவனத்திற்குள் நுழைந்து இந்தியாவினுடைய முழுமையான வரைபடம் ஒன்றை உருவாக்குவதற்கான ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்த வரலாறு இந்த இதழ்களோடு தொடர்புடையது தான். டி என் வாடியா 37 வயதில் இந்தியா புவியியல் சங்கத்தில் இணைந்தார். ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் முக்கோணவியல் ஆய்வை எடுத்துச் சென்றவர் வாடியா. இந்தியாவில் காணப்படும் 24 வகையான அணு கனிமங்கள் உட் பட இலித்தியம் கிராப் போயிட்டு தாமிரம் கோபால்ட் இரும்பு நிக்கல் காலியம் பிளாட்டினம் பாஸ்பரஸ் என்று வரிசையாக அவை எங்கே கிடைக்கின்றன என்பது குறித்த புள்ளிவிவரங்களோடு.. அடுத்தடுத்து ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன
இப்போது நான் தொடங்கிய கேள்விக்கு வருவோம் இந்தியாவின் முதல் வரைபடத்தை வெளியிட்டவர் யார். ஜேம்ஸ் ரென்னல் என்கின்ற பிரித்தானிய புவியியலாளர் தான் அந்த பெருமைக்கு உரியவர். இந்திய புவியலின் தந்தை என்று அவரைத்தான் போற்றுகிறோம் ஆனால் இன்றைக்கு அவர் பெயரை சொல்ல ஆளில்லை இந்திய துணைக்கண்டம் என்கிற ஒன்று குறித்த உலகளாவிய அறிவுக்கு வித்திட்டவர்.1770 ஆம் ஆண்டு வங்காள அட்லஸ் என்கிற ஒன்றை அவர் வெளியிட்டார். ராபர்ட் க்லைவ் இந்தியா வந்தபொழுது தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் அவர் நியமிக்கப்பட்டார். அப்போது அந்த பிராந்திய முழுவதும் பிரெஞ்சுக்காரர்களின் கையில் இருந்தது ஒரு பிரம்மாண்ட பேச்சுவார்த்தையின் மூலம் கடலூர் பகுதியை பிரான்ஸிடம் இருந்து ஆங்கிலேயர்கள் வாங்குவதற்கு முற்பட்டார்கள் ஆனால் எப்படி அளவிடுவது என்பதில் மிகப்பெரிய சிக்கல் இருந்தது ஏனென்றால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களுக்கும் சரியான வரைபட இயல் தெரியாது.

பிரான்ஸ் நாட்டின் எல்லைப்பகுதி பாண்டிச்சேரிக்கு சற்று அருகிலிருந்து ஒரு பீரங்கி குண்டை போடுவது என்றும் அந்த குண்டு எவ்வளவு தூரத்திற்கு சென்று விழுகிறதோ அது வரையில் கடலூர் என்று அழைக்கப்பட்டு அது வெள்ளைக்காரர்களிடம் கொடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அப்படி குண்டு விழுந்த இடத்தை தான் கடலூரில் இன்றைக்கு குண்டு உப்பலவாடி.. குண்டுசாலை என்று அழைக்கின்றோம் அதுதான் கடலூரின் எல்லை. ஆனால் இந்த காலகட்டத்தில் முறையாக அவற்றை வரைபட இயலுக்கு உட்படுத்தும் பணியை ராபர்ட் கிளைவ், ஜேம்ஸ் ரெண்னலிடம் ஒப்படைத்தார்.. கடலியல் மாலுமியாக இருந்த ரெண்னல் நில அளவையில் லண்டனின் ராயல் புவியியல் சங்கத்தை சேர்ந்தவர். இந்தியாவின் முதல் வரைபடத்தை உருவாக்குவதற்கான அந்த முயற்சியும் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கியது என்பது வரலாறு.
இன்று இந்திய புவியியல் சங்கத்தின் இதழ் எப்படி போய்க் கொண்டிருக்கிறது.. மிகவும் துயரமான பின்னணி உருவாகி இதழ் ஏறக்குறைய செத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதழ்களை தொடர்ச்சியாக வெளியிட்டு உலக அளவில் புவியியலுக்கான அற்புத ஆய்வு இதழ் என்று மூன்று முறை விருது பெற்ற இந்திய புவியியல் சங்கத்தின் ஆய்விதழ் தற்பொழுது போய்க்கொண்டிருக்கும் பாதை சரிதானா என்பதை பல அறிவியலாளர்கள் கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறார்கள் சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று அறிவிப்பதற்கான அடிப்படை கூறுகளையும் இந்தியாவின் பல சர்ச்சைக்குரிய இடங்களில் பூமிக்கடியில் இந்து கோவில்கள் புதைந்து கிடக்கின்றன என்பது போன்ற ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிடுகின்ற ஒரு இலக்கை நோக்கி நாம் செல்லத்தான் வேண்டுமா.. என்கின்ற கேள்வி ஒரு புறம் மறுபுறம் உண்மையான அகழ்வாராய்ச்சி மூலம் எடுக்கப்பட்ட கீழடியின் கண்டுபிடிப்புகளை இதழ் புறக்கணித்தது மற்றொரு சர்ச்சை. இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அறிவியல் ஆய்வு இதழ் பழைய அறிவியல் பாதைக்கு செல்வது எப்போது என்பதுதான் தற்போதைய புவியலாளர்கள் அனைவர் மனதிலும் எழுகின்ற கேள்வி.
📚 எழுதியவர்:
ஆயிஷா இரா. நடராசன்
நன்றி: அறிவியல் பலகை
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

