அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை (The Miracle Morning) : நூல் அறிமுகம்
நாம் என்னவாக ஆக வேண்டும் என்பதற்கும் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் பயிற்சி திட்டங்களுடன் அணுகுகிறார் ஹால் எல்ராட் அவர்கள்.
பெரிய பெரிய கனவுகள் லட்சியங்கள் சபதங்கள் இமாலய இலக்குகள் என்று புரட்சிகரமான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க துவங்குகையில் எதிர்படும் ஒன்றிரண்டு சோதனைகளிலேயே சராசரிக்கும் குறைவான அம்சங்களுடன் நிறைவு பெற்று விடுகிறது 95% மனிதர்களின் வாழ்க்கை மீதமுள்ள 5% மக்கள் எப்படியேனும் போராடி தனது இலக்குகளை அடைந்து விடுகின்றனர்.
நம்மை சுற்றி இருக்கும் 5 நபர்களின் சராசரியாகத்தான் நாம் இருப்போம் இந்த 5 நபர்களின் மனோநிலை செயல்புரியும் திறன் நம் தனிப்பட்ட வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது என்கிறார்.
பொருளாதாரம், உடல்நலம், உறவுகள் மேலாண்மை, தனிநபர் முன்னேற்றம் என ஒவ்வொரு அம்சத்திற்கும் 1 லிருந்து 10 வரை மதிப்பெண் கொடுத்தால் அனைத்திலும் 10/10 பெறும் பட்சத்தில் இந்த புத்தகம் வாசிக்க அவசியமில்லை ஏதேனும் ஒருசில அம்சங்களில் நமக்கு முன்னேற்றம் தேவை என்று உணர்ந்தால் நிச்சயம் வாசிக்கலாம்.
ஒரு நாளின் துவக்கத்தில் இருக்கும் ஒரு மணி நேரம் அன்றைய நாளுக்கான மிக முக்கியமான உந்து சக்தி போன்றது இந்த ஒரு மணி நேரத்தை பயன்படுத்திக் கொள்ள, நம் கனவுகளை இலட்சியங்களை எட்டிப்பிடிக்க 6 முக்கியமான செயல்முறைகளை விளக்குகிறார்.
இந்த ஆறு செயல்முறைகளினால் அவருடைய வாழ்வில் ஏற்பட்ட மகத்தான மாற்றங்கள் உலகெங்கிலும் லட்சக்கணக்கான மனிதர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களையும் நூலில் பகிர்ந்திருக்கிறார்.
S-A-V-E-R-S
S – Silence
A – Affirmations
V- Visualization
E – Exercise
R- Reading
S- Scribing
This Savers save our dream and unlock our full potential.
என ஒவ்வொன்றிற்கும் பத்து நிமிடம் நேரம் ஒதுக்குவதால் ஏற்படும் மகத்தான விளைவுகளை பட்டியலிடுகிறார்.
Silence – அமைதி, தியானம், மூச்சு பயிற்சி, பிரார்த்தனை, நன்றியுணர்வு என எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
Affirmations- சுயபிரகடனம் நம்மை பற்றி நாம் உருவாக்கி வைத்திருக்கும் எல்லைகளை உடைத்து அடுத்த நகர்விற்கான தன்முனை பயிற்சி.
Visualization – மனக்காட்சிப்படுத்துதல்
Excersise- உடற்பயிற்சி இந்தபுத்தகம் உருவாவதற்கான சுவராஸ்யமான பிண்ணணியை ஆசிரியர் விளக்கும்போது பொருளாதார ரீதியாக மிகவும்
பாதிக்கப்பட்ட சூழலில் தன் நண்பருடன் உதவி கோரும் போது உனக்கு காலையில் ஓடும் பழக்கம் உள்ளதா என்கிறார் இல்லை என இவர் கூற நாளை காலை எழுந்ததும் ஒடு என்கிறார். ஒடினால் எப்படி சரியாகும் என்கிறார். இருப்பினும் நண்பரின் அறிவுரையின் பேரில் காலை ஓடும் போது தீர்வு பிறக்கிறது.
Reading – பத்து நிமிட வாசிப்பு பயிற்சி வருடத்திற்கு 200 பக்கங்கள் கொண்ட 18 புத்தகங்களை வாசிக்க வழி செய்யும்.
மண்ணில் வேரூன்றவும் விண்ணில் சிறகு விரிக்கவும் உதவும் வாசிப்பின் அவசியத்தை இவரும் குறிப்பிட மறக்கவில்லை.
Scribing – எழுதும் பழக்கம் ஒரு பிரச்சனையையோ சிக்கலையோ பேப்பரில் தெளிவாக எழுதும் போதோ அதற்கான பாதி தீர்வு கிடைத்து விடும் என்கின்றனர்.
60 நிமிடம் நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு 6 நிமிட பயிற்சி திட்டத்தையும் எளிமையான உருவாக்கியிருக்கிறார்.
பழக்கங்களின் தொடர் சங்கிலியில் இருந்து நம்மை புதுப்பித்துக் கொள்ளவும் எண்ணியதை ஈடேற்றும் பழக்கங்களை உருவாக்கவும் இந்த நூல் வாசிப்பு நிச்சயம் உதவும்.
நூலின் தகவல்கள் :
நூல் : அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை (The Miracle Morning)
ஆசிரியர் : ஹால் எல்ராட் – தமிழில் PSV குமாரசாமி
பதிப்பகம் : மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
பக்கங்கள்: 228
விலை: ரூ. 299
நூல் அறிமுகம் எழுதியவர் :
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.