காணாமல் போனவை கவிதை – பாரதிசந்திரன்

காணாமல் போனவை கவிதை – பாரதிசந்திரன்
அவர் அவற்றைக் குறித்து எதுவும் சொன்னதும் இல்லை.

பெரிதாகவோ, சிறிதாகவோ பாராட்டியதாக ஏதுமில்லை.

உள் உணர்ந்து கொண்டாரா என்பதும் தெரியவில்லை.

அவருக்குப் பிடித்திருக்காதோ?

சொல்லியிருக்கலாமே.

பிடித்திருந்தால் ஏதாவது வந்திருக்கலாம்.

படித்தபோது என்னதான் நினைத்திருப்பார்?

ஒருவேளை பிறகு சொல்ல இருந்திருப்பாரோ?

படித்து முடிக்கும் பொழுது குமட்டல் எதுவும் வந்திருக்குமோ?

அவை அவரை மயக்கி விட்டனவா?

இனி வேண்டாம்.

அவற்றோடு நிறுத்தி விடலாம்.

உனக்குக் கூறவேண்டும் எனும் தேவையில்லையென ஆகியிருக்கலாம்.

படித்தால் எதுவும் கூறத்தான் வேண்டுமா?

சம்பிரதாயத்திற்காகவாவது நன்று என்று சொல்லியிருக்கலாமே.

சிறிதாய் ஒன்று புரிகிறது

அவையெல்லாம்

அவர் குறித்த எதுவுமாக இல்லை என்பதாக இருக்குமோ?

காணாமல் போனவை

அவையும்- அவரும்.

பாரதிசந்திரன்
[email protected]
9283275782

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Show 1 Comment

1 Comment

 1. S. Baskar

  காணாமல் போனவை!

  எல்லோர் வாழ்விலும்
  ஏதோ ஒன்றாவது
  கைகூடி கனிந்துவரும் என
  காத்திருந்த தருவாயில்
  கைநழுவிக் காணாமல் போயிருக்கும்!

  காணாமல் போனவை சில-பலர் வாழ்வில்
  கணக்கிலடங்காதவைகளாகவும் இருக்கும்!

  ஆனந்தச் சுதந்திரத்தை
  அந்நியனிடமிருந்து அடைந்துட்டோம் என
  அகமகிழ்ந்திருந்தோம் ஆனால் அம்மகிழ்ச்சியும் அவனியில் இன்று காணாமல் போய்விட்டது
  அடிமைகளாய் நம்மவரிடமே நாம்
  அடிமைப் பட்டுக் கிடப்பதினால்!

  ராசி. பாஸ்கர்
  கவிஞர் மற்றும் எழுத்தாளர்

  குறிப்பு:
  பாரதி சந்திரனாரின்
  பாங்கான கவிதை வரிகள்
  பாஸ்கரையும் கவிதை படைக்கத் தூண்டியது
  பல மாத இடைவெளிக்குப் பிறகு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *