மனிதனில் தொடரும் நியாண்டர்தால் மரபணு..
மர்மமான முறையில் காணாமல்போன ஒரே ஒரு பகுதி..!
ஆம்பள புள்ள பெத்துக்கணும் என்று.. இன்றைக்கும் பாலின பாகுபாடு என்பது நம்மை கொன்றுகொண்டிருக்கிறது. சமூகத்தில் எப்போதெல்லாம் மிகப்பெரிய துயர சம்பவம் நடக்கிறதோ நம்முடைய கள்ளசாராய சாவு உட்பட அவற்றில் பெரும் பங்குவகித்து சீரழித்து தானும் செத்துப்போகிற ஒரு இனமாக ஆண்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கள்ளக்குறிச்சி அருகே ஒரு கிராமத்தில் ஏறத்தாழ 50 குடும்பங்களில் இந்த விஷ சாராயத்துக்கு முற்றிலுமாக ஆண்கள் பலியாகிவிட்டார்கள்.. ஆனால் நியாண்டர்தால் மனிதர்களின் டிஎன்ஏ நவீன ஹோமோசாபியன்ஸ் மனித உடலில் தேடப்படும்போது ஆண் குரோமோசோம் ஆன y குரோமோசோம் மட்டும் காலப்போக்கில் காணாமல் போயிருப்பது எதை காட்டுகிறது
1960 களில் பிரித்தானிய உயிரியலாளர் ஜேபிஎஸ் ஹால்டேன் (JBS Haldane, Indian scientist) இந்தியாவிற்கு குடிபெயர்ந்து நம்முடைய தேசத்தின் பிரஜாயாகி தன் ஆய்வுகளை நம்முடைய நாட்டின் கொல்கத்தாவின் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் மேற்கொண்டு வண்ணத்துப்பூச்சி மேலும் பரவலான இந்திய விலங்கியல் மீதும் மரபணு அடிப்படையிலான தன்னுடைய அபாரமான முடிவுகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார் என்பதை உலகம் அறியும். இன்று ஜேபிஎஸ் ஹால்டேன் வெளியிட்ட ஹால்டேனின் விதி என்ற மிக முக்கியமான மரபணுவியல் சார்ந்த நியாண்டர்தால் Y குரோமோசோம் என்கிற உலகளாவிய சிக்கலை தீர்த்து வைத்திருக்கிறது.
சிக்கல் சாதாரணமானதல்ல நியாண்டர்தால் டிஎன்ஏக்களை.. ஒப்பீட்டளவில் மனிதர்களின் டிஎன்ஏகளோடு ஆய்வுசெய்து நியாண்டர்தால் டிஎன்ஏவின் அனைத்து அம்சங்களும் மனித டிஎன்ஏவில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து அறிவித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு..பகுதியை தவிர!நவீன மனிதர்களின் நெருங்கிய உறவினர்களான நியாண்டர்தால் மனிதர்கள் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அழியும் வரை.. ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வாழ்ந்தனர் 47,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பீட்டளவில் ஒரு குறுகியகால இடைவெளியில் நவீன மனிதனும் நியாண்டர்தால் மனிதனும் இனவிருத்தில் ஈடுபட்டனர் என்று மானிடவியல் கோட்பாட்டாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
இங்கு தான் ஏதோ ஒரு மர்மம் நிலவுகிறது இன்றைய ஹோமோசாபியன்ஸ் என நாம் என்று நாம் அழைக்கும் மனித மரபணுவில் நியாண்டர்தால் டிஎன்ஏ சிறிதளவு கலப்பு உள்ளது. இந்த மரபணுவின் தடையங்கள் ஒவ்வொன்றிலும் நியாண்டர்தால் மரபணு கலந்துள்ளது.. ஆனால் ஆண்களை உருவாக்குவதற்கு பொறுப்பு வகிக்கும் Y குரோமோசோம் மட்டும் இல்லை!
நியாண்டர்தால் மனிதனின் Y குரோமோசோம் காணாமல் போனது என்பது தற்செயலாக நடந்த நிகழ்வா அல்லது இனச்சேர்க்கை முறைகள் தவறியதால் வந்த விளைவா. மேலும் இயற்கைக்கு தாழ்வான செயல்பாடு காரணமாக இழக்கப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து விரிவான ஆய்வுகள்ல் இப்போது விஞ்ஞானிகள் இறங்கி இருக்கிறார்கள் பொதுவாக இன்டர்ஃபேஸ்ல் கலப்பினங்கள் பற்றி.. அவற்றின் ஆரோக்கியம் பற்றி ஒரு நூற்றாண்டு பழமையான கோட்பாட்டில் இந்திய விஞ்ஞானி ஹோல்டன் அன்றே இப்படி நிகழும் என்று பதில் அளித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 5,550000 ஆண்டுகள் மற்றும் 7, 65,000 வரையிலான ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் நியாண்டர்தால்களும் நவீன ஹோமோசேப்பியன் மனிதர்களும் தனித்து இருந்துள்ளனர். அப்போது நியாண்டர்தால் மனிதர்கள் ஐரோப்பாவில் நாடோடியாக-அலைந்து திரிந்தனர்.. நம்முடைய முன்னோர்கள் ஒரே இடத்தில் நிலை கொண்டனர். நம்முடைய இனம் ஒரே இடத்தில் வேட்டையாடுவதையும் பிறகு விவசாயத்தையும் கண்டுபிடித்தது.. ஆனால் ஞானத்தால் மனிதர்கள் உணவு சேகரிப்பு என்கின்ற பழைய முறையிலேயே தங்கிபோயினர். இவர்கள் இடம்பெயர்வு சமூகத்தை சேர்ந்தவர்களாக குகைகளிலும் கிடைத்த இடங்களிலும் தங்கினர்.
40,000 – 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோசேபியன்ஸ் என்கிற மனிதர்கள் அதாவது நம் முன்னோர்கள் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் குடியேறும் வரை அவர்கள் மீண்டும் நியாண்டர்தால் மனிதர்களை சந்திக்கவில்லை
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள நியாண்டர்தால் நபர்களில் நன்கு பாதுகாக்கப்பட்டு எலும்புகள் மற்றும் பற்கள்லிருந்து எடுக்கப்பட்ட மரபணுக்கள் மூலம் நியாண்டர்தால் மனிதர்களின் டிஎன்ஏ சீக்வன்ஸிங் மூலம் முழு விவரங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில் நியாண்டர்தால் மரபணு நம்முடையதைப் போலவே இருக்கிறது.. இதில் சுமார் 20 ஆயிரம் ஜீன்கள் அடுத்த 23 குரோமோசோம்களையில் அடைக்கப்பட்டுள்ளன.. நம்மை போலவே அவர்கள் இடமும் மரபணுக்களில் இரண்டு ரகங்கள்…ஒவ்வொரு பெற்றோரிடமிருந்து ஒன்று. ஒரு ஜோடி செக்ஸ் குரோமோசோங்களும் இருந்தன. பெண்களுக்கு இரண்டு X குரோமோசோம்கள், ஆண்களுக்கு ஒரு X மற்றும் Y இருந்தது.
Y குரோமோசோம் மரபணுக்களை வரிசைப்படுத்துவது மிகக்கடினம்.. ஏனெனில் அவை மீண்டும் மீண்டும் அச்சாக்கம் பெறுகின்ற குழப்பநிலையை ஏற்படுத்தும்.. எனவே இந்த மரபணு பகுதியளவு மட்டுமே கட்டு உடைப்பு செய்யப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஎன்ஏ சிக்குவன்சிங் என்று அழைக்கப்படுகின்ற முறை மிகக்கடினமானது.. அதிலும் Y குரோமோசோம்களை எப்படி தூண்டில் போட்டாலும் அவை முழு தன்மைகளை ஒருபோதும் நவீன கருவிகளால்..கண்டறிய முடியவில்லை. ஆனால் மனிதக்குள் இருக்கின்ற நியாண்டர்தால் மரபணுக்களில் Y-குரோமோசோம்ங்களே-இல்லை என்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயமாக இருக்கிறது.
நவீன மனிதர்களின் SRY என அழைக்கப்படும் குரோமோசோம் மரபணு XY கரு ஆண் குழந்தையாக வளரும் செயல்முறையை தொடங்கி வைக்கிறது.. இந்த SRY மரபணு அனைத்து கருக்கொள்தலின் போதும் இந்த பாத்திரத்தை வகிக்கிறது. எனவே நியாண்டர்தால் பெண்ணும் ஹோமோசாபியன்ஸ் ஆணும் மட்டுமே சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள் இதற்கு நேர் எதிராக ஒரு போதும் நடக்கவில்லை என்று ஒரு அனுமானகோட்பாடு முடிவு செய்கிறது.. இரு இனங்களுக்கிடையே ஆண் பெண் கலப்பு சரிவிகிதமாக இல்லாமல் இருந்திருந்தாலும் Y குரோமோசோம்கள் காணாமல் போய் இருப்பதற்கான சாத்தியங்களும் உண்டு.. ஹோல்டென் தன்னுடைய வழியில் இது எப்படி சாத்தியம் என்பதை மிககட்சிதமாக முன்வைத்திருந்தார். உலகின் தலைசிறந்த மரபணுவியல் அறிஞர்களில் ஒருவராக இன்று அவர் மிளிர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய பணிகள் அனைத்துமே இந்தியாவில் நடந்தவையாகும்.
மதிப்பிற்குரிய ஜான் ஆண்டர்சன் ஹோல்டென் அவர்கள் ஜேபிஎஸ் என்றும், ஜாக் என்றும் நம்முடைய சக இந்தியர்களால் அழைக்கப்பட்டவர் இன்றைக்கு உடலியல் மரபியல் பரிணாமவியல் என்று அவருடைய சுமார் 16 கோட்பாடுகளை பெரிய அளவில் பேசப்படுகின்றன. இந்த கோட்பாடுகள் நியோடார்வினிசத்தின் நிறுவனர்களில் ஒருவராக அவரை நம்முன் நிறுத்துகிறது ராயல் கல்விக்கழகம்.
அறிவியல் கழகம் லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவை இன்றைக்கும் அவர் பெயரில் நாற்காலிகள் கொண்டுள்ளன. இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் செயல் ஆற்றிய காலத்தில் மக்கள்தொகை மரபியல் என்கிற ஒன்றை அவர் முன்மொழிந்தார். டார்வினுடைய கொள்கைகளின் அடிப்படையில் இன்றைய மக்கள்தொகை பிரச்சனையை அணுகுவது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. சிங்கம், புலி, பூனை இவை ஒரே பூனை குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதிலிருந்து தொடங்கி அவருடைய பல கண்டுபிடிப்புகளை விலங்கியல் உள்வாங்கிக்கொண்டுள்ளது.
நியாண்டர்தால் மரபணு பிரச்சனையில் அவருடைய கொள்கையை அறிந்துகொள்ளும் முன் நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்வோம். சீனாவிலும், ஜப்பானிலும் நம்முடைய சென்னைக்கு அருகிலும் நடக்கின்ற தொல்பொருள் ஆய்வுகள் நியாண்டர்தால் மனிதர்கள் அதிகம் நம்மிடையே கலந்து இருப்பதை நிரூபிக்கின்றன. ஐரோப்பாவில் இருக்கும் மனிதர்கள் மரபணுக்களில் சுமார் 2% மட்டுமே நியாண்டர்தால்களின் மரபணு கலப்பு உள்ளது. ஆனால் ஆசியாவில் இருக்கும் நம்முடைய மரபணுக்களில் குறிப்பாக தமிழகத்து மக்களின் மரபணுக்களில் ஏறக்குறைய 6% நியாண்டர்தால் மரபணுவைக்கொண்டிருக்கிறோம். என்று ஒரு காலக்கெடு கணக்கெடுப்பு சொல்கிறது.
இந்திய நியாண்டர்தால் பெரும்பாலானவை 42,000 ஆண்டுகளுக்கு முன்பு 7000 ஆண்டுகளுக்கு தீவிர தொடர்பு இருந்தது.. நியாண்டர்தால் மனிதர்களுக்கும் ஹோமோசாபியன்ஸ் என்கிற நம்முடைய முன்னோர்களுக்கும் இடையே பல ஜோடிகளை உருவாக்கி முழுமையான கலப்பு ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
வெவ்வேறு சமூக மனிதர்களின் மரபணுக்களையில் காணப்படும் துண்டுகளில் இருந்து நியாண்டர்தால் மரபணுவை குறைந்தது ஒரு பகுதியையாவது பிரித்து எடுக்க முடிகிறது. சிவப்பு முடி, மூட்டுவலி, நிவாரணம் மற்றும் சில நோய்களுக்கு எதிர்ப்பு போன்ற நல்ல குணங்களுக்காக நாம் நியாண்டர்தால் முன்னோர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.. (ஆனால் நியாண்டர்தால் மனிதர்களுக்கிடையே ஜாதி இருந்ததாக தெரியவில்லை!)
நியாண்டர்தால் Y குரோமோசோம் தொலைந்துபோனது பெரும் துரதிர்ஷ்டமா.. ஆண்களை உருவாக்கும் வேலையில் அது மிகவும் சிறப்பாகத்தான் இருந்தது.. நியாண்டர்தால் பெண்கள் இனங்களுக்கிடையே இனச்சேர்க்கையில் ஈடுபட்டார்களா ஆண்கள் அவ்விதம் ஈடுபடவில்லையா அல்லது நியாண்டர்தால் Y வை-குரோமோசோமில் ஏதாவது நச்சுத்தன்மைஇருந்து.. பரிணாமவியல் அதை கைவிட்டதா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
இருப்பினும் நவீன மனிதர்களில் நியாண்டர்தால் மைட்டோகாண்ட்ரியா டினே எந்த தடையமும் இன்றி முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நம்முடைய தேடல் ஒரு அளவுக்குமேல் தொடர முடியாத அளவுக்கு தடைபட்டுவிடுகிறது. ஆனால் இந்த காணாமல்போன Y குரோமோசோம் பற்றிய விளக்கம் ஹால்டேனின் விதிப்படி மிகச்சரியாகவே உள்ளது. இனங்களுக்கு இடையிலான-கலப்பினங்களில் ஒரு பாலினம் மலட்டுதன்மை உடையதாகவோ அல்லது அரிதாகவோ அல்லது ஆரோக்கியமற்றதாகவோ இருந்தால் அது எப்போதும் பாலின குரோமோசோம்களைபோல் அல்லாமல் புதிய பால் இனமாகவே மாறிவிடுகிறது என்று ஹால்டேன் குறிப்பிட்டார்.
பாலூட்டிகள் மற்றும் பிற விலங்குகளில் பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் (XX) குரோமோசோம்கள் மற்றும் ஆண்களுக்கு எக்ஸ் வாய் உள்ளது. இது விகிதாச்சாரமற்ற ஆண் கலப்பினங்கள் என்கின்ற இடத்தை நோக்கி நம்மை இட்டுச்செல்கிறது. தகுதியற்ற அல்லது மலட்டு தன்மைகொண்ட கலப்பினங்களில் இவை தடைபடுகின்றன
பறவைகள், பட்டாம்பூச்சிகள் என்று ஆய்வு செய்த ஹால்டேன் இந்தியாவிலிருந்து அற்புதமான தன்கொள்கையை வெளியிட்டார். பிற விலங்குகளில் பாலூட்டிகள் அல்லாத பிற விலங்குகளில் ஆண்களுக்கு ZZ குரோமோசோம்கள் மற்றும் பெண்களுக்கு ZW என்று உள்ளது. இதை கண்டறிந்து அறிவித்தவர் நம்முடைய ஹோல்டேன்தான்.. பல்வேறு வகையான எலிகளுக்கு இடையே பலமாற்றங்கள் பரிசோதிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக சிங்கம், புலி இவை இரண்டுக்கும்மான பிரச்சனை வருகின்ற பொழுது பெண்கள் கருவருகிறார்கள். ஆனால் ஆண் மலட்டுத்தன்மை பெறுகிறது-ஹால்டேனின் அதிகாரம் என்று அழைக்கப்படுகின்ற இந்த பாலியல் விவகாரம் குரோமோசோம்களில் நல்ல விளக்கத்தை தருகிறது.. நீடித்த மர்மங்களில் இறுதியான முடிவை எட்டுவதற்கு ஹோல்டென் வழங்கிய அன்றைய விதி இன்று பயன்படுகிறது.
ஒரு இனத்தின் Y குரோமோசோம் முற்றிலுமாக காணாமல் போவது என்பது விஞ்ஞானிகளிடையே பெரிய பரபரப்பை இன்று ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு இனத்தினுடைய Y குரோமோசோம் அதன் சொந்த இனத்தின் மற்ற குரோமோசோம்களில் மரபணு உங்களுடன் வேலை செய்யும் வகையில் பரிணாமவியலால் உருவாக்கப்பட்ட சிறிய மாற்றங்களை கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு Y அம்சங்கள் இருந்திருக்க வேண்டும்.
நம்முடைய மரபணுவியல் விஞ்ஞானி ஹோல்டென் இன் விதி உலகளவில் இன்று மரபணுவியலின் ஒரு சிக்கலை தீர்த்துவைக்கப் போகிறது என்றால் இந்தியாவின் பிரம்மாண்ட சாதனையாக இது கருதப்பட வேண்டும்.
இன்று நம்முடைய நாட்டில் இது போன்ற பல ஆய்வுக்கூடங்களையும் ஆய்வுகளையும் முற்றிலும் நிறுத்தி விட்டு தனியார் மயமாக்கலும் வியாபா ரரீதியிலான அல்லது கார்பரேட்களுக்கு உதவும் வகையிலான மரபணு மாற்ற சோதனைகளும் நடப்பது துரதிஷ்டவசமானது ஆகும்..
இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் உலகம் முழுதும் இருந்து இணையத்தில் மரபணு விஞ்ஞானி HOLDANE என்பவர் யார் என்பதன் தேடுதல் உயிரியலாளர்கள்…மரபணுவியல் மீது ஆர்வம் கொண்டவர்களால் மில்லியன் கணக்கான எண்ணிக்கையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கூகுள் அறிவிக்கிறது..
கால-காலமாகவே குழந்தைப் பேறை பொறுத்த வரையில் பெண் குழந்தைகளுக்கு தான் இயற்கை அதிக முக்கியத்துவத்தை வழங்கி இருக்கிறது மீண்டும் மீண்டும் நியாண்டர்தால் உதாரணம் நமக்கு அதை நிரூபிக்கிறது நம்ம ஆட்கள் திரும்பத் திரும்ப ஆண் குழந்தைகள் என்று வெறியோடு திரிவது இன்னும் எத்தனை நாட்களுக்கு சாதியம் என்று பார்ப்போம்..
எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.