(ஜம்மு-காஷ்மீரில் புதிய ஊடக கொள்கையினை இந்த கலவர பூமியில் ஊடகப்பணியை அழிக்கிறது. ஏற்கெனவே அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் வினைபுரிதலையே மறந்து மறத்துப்போய் நிற்கின்றன — அஷுதோஷ் சர்மா )
கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் இந்திய நடத்திய தாக்குதலை உலகிற்கு தெரிவிக்க முடியாத நிலை உள்ளது எங்கிறது, புலிட்சர் விருதை புகைப்படசெய்திக்காக மூன்று முறை பெற்ற அசோசியேட்டட் பிரஸ் பத்திரிக்கை நிறுவனம். ஜம்மு- காஷ்மீருக்கு இருந்த ஓரளவு தன்னாட்சியை பறித்து, அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து 10 மாதங்களுக்கு பின்னர், சொல்லொண்ணா பாதுகாப்பு நெருக்கடி கெடுபிடிகளும் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளும் உள்ள சூழலில், காஷ்மீரில் பத்திரிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இருமடங்காகி உள்ளது. உள்ளூர் ஊடகங்கள் செய்வதறியாது மறத்துப்போய் கிடந்த சூழலில், ஜூனில் அறிவிக்கப்பட்ட புதிய ஊடக க்கொள்கையானது அந்த கலவர பூமியில் ஊடகப்பணியை அழிக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.
இந்த புதிய கொள்கையின்படி, தகவல்-மக்கள் தொடர்பு இயக்குனரகம் வாயிலாக யூனியன் பிரதேச நிர்வாகமானது, பத்திரிக்கையாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் விளம்பரங்களை கட்டுப்படுத்தவும் செய்யலாம்.
முறைகேடாக, குறிப்பாக சட்டவிரோதமாக பத்திரிக்கை நிருபர்களை விசாரிப்பது என்பது தான் ஆகஸ்ட் -5 முதல் காஷ்மீரில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை. உள்ளூர் பத்திரிக்கைகள் தமது செய்தி வெளியிடும் பாணிகளையும் அதற்கான வழிக்காட்டுதலைகளையும் தலையங்க கொள்கைகளையும் நரேந்திர மோடி அரசின் அடாவடித்தங்களால் மாற்றி உள்ளன. அரசை கோபபடுத்தும் செய்திகள் வேண்டாமென தமது எழுத்தாளர்களுக்கும் கேலி சித்திரம் வரைவோர்க்கும் (கார்ட்டூனிஸ்ட்) அறிவுரை வழங்கியுள்ளன.
ஊடகங்கள் தமது ஊழியர் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ளன. பெரும்பாலன ஊடகங்கள் தமது ஊழியர்களுக்கும் கட்டுரையாளர்களுக்கும் ஊதியம் வழங்க திண்டாடுகின்றன. பத்திரிக்கைகள் பெரும்பாலும் அரசு செய்திகள், தேசிய செய்தி நிறுவனங்களின் செய்திகள், அரசு விளம்பரங்கள், அரசியல் அல்லாத கட்டுரைகள் – இவற்றால் நிறைந்துள்ளன எங்கிறார்கள் பார்வையாளர்கள்>
காஷ்மீரி ஊடகத்துறை மீதான மோடி அரசின் தாக்குதல்களை முக்கிய மனித உரிமை குழுக்கள் வன்மையாக சாடியுள்ளன. ‘தி ஹிந்து’ நாளேட்டின் ஸ்ரீநகர் சிறப்பு நிருபர், பீர் சாதா ஆஷீர் மீதான முதல் தகவல் அறிக்கை, புகைப்பட நிருபர் மஸ்ரத் சாஹ்ரா மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடை சட்டப்படியான (யூ, ஏ. பீ. ஏ) வழக்குகள், ஆகியனவற்றை சுமத்திய காவல் துறையினை ஏப்ரல் 22- அன்று உலக மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர் நேஷ்னலின் இந்திய பிரிவு பிரதிநிதியான அவினாஷ் குமார் கடுமையாக விமர்சித்தார்.
யூ, ஏ. பீ. ஏ- போன்ற காட்டுமிராண்டித்தனமாக சட்டங்களால் பத்திரிக்கையாளர்க்ளை துன்புறுத்துகிற, அச்சுறுத்துகிற, நடவடிக்கைகளாவன கோவிட்,- 19 உலகதொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை நிலை குலையச்செய்கிறது. அச்சமூட்டும் சுழல் நிலவி வருகிறது.
நீதி மன்ற பணிகளும் சட்ட உதவிகளும் முடக்கப்பட்டு, எவ்வித ஆவணவுமின்றி தாந்தோன்றித்தனமாக கைது செய்வது தொடர்ந்து தொல்லை கொடுப்பது, இணைய சேவையின் வேகத்தை குறைப்பது, பொது முடக்கம் ஆகியன காஷ்மீர் பிரச்சனையினை சிக்கலாக்கிவிட்டது. இவை, உலக , இந்திய மக்களின் தகவல் அறியும் உரிமையினை மறுக்கிறது, காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளை மிக மோசமாக பாதிக்கிறது. ஷோபியான் ‘என்கவுண்டர்’ (துப்பாக்கி சண்டை) தொடர்பாக ஒரு செய்தி வெளியிட்டதற்காக ஆறு மணி நேர இடைவெளியில் இரு வேறு மாவட்ட காவல் நிலையங்களில் ஆஜராக வேண்டும் என பீர் சாதா ஆஷிக் பணிக்கப்பட்டார். செப்டம்பர் – 1, 2019, அன்று கோத்தி பாக் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அவரிடம் 2019, ஆகஸ்ட் 5 முதலான கைதுகள் குறித்த செய்திக்கான ஆதாரங்களை வெளியிடுமாறு மிரட்டப்பட்டார்.
சமூக ஊடகங்களில் ‘தேச விரோத’ பதிவுகளை இட்டதாக யூ, ஏ. பீ. ஏ – சட்டப்படி கவுஹார் கிலானி எனும் பத்திரிக்கையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்திரா காந்தி பண்ணாட்டு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி நாட்டுக்கு செல்ல இருந்த கிலானியை செப்டம்பர் – 2019 தடுத்தது. ஏன் தாம் தடுக்கப்பட்டோம் என்பதற்கு எந்த எழுத்துப்பூர்வ கட்டளையும் கொடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.
பத்திரிக்கை மன்றம் கண்டனம்
பத்திரிக்கையாளர்களை துன்புறுத்துதல், இணைய சேவை முடக்கம், ஊடகவியலாளர்களை அடக்குதல் போன்றவற்ற்க்கு எதிராக அண்மையில் காஷ்மீர் பத்திரிக்கையாளர் மன்றம் பல்வேறு மவுன போராட்டங்களை நடத்தியது. அதன் பொதுச்செயலர், ஆஷ்ஃபக் தந்திரி கூறுகிறார். “எல்லா அரசுகளும் ஊடகத்துறையினையும் அதன் செய்திகளையும் கட்டுப்படுத்தினாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது ஒப்புநோக்குதலில் ஊடகச்செயல்பாடு தொடர்பாக ஒரு மேம்பட்ட நிலையை கொண்டிருந்தது. ஜம்மு- காஷ்மீரின் சுயேட்ச்சையான ஊடகத்தை நெரித்திட இந்த அரசானது தாம் எழுதும் செய்திகளை சுட்டிக்காட்டி காவல் நிலையங்களுக்கு நிருபர்களை அழைப்பது, வழக்குகளை பதிவு செய்வது போன்ற நேரடி தாக்குதல்களை நடத்துகிறது”..
யூ, ஏ. பீ. ஏ – சட்டப்படி தேசிய புலனாய்வு முகமை (ஏன். ஐ. ஏ) ஜனவரி 2018-ல் உள்ளூர் புகைப்பட நிருபர் கம்ரான் யூசுஃப் மீதான வழக்கில் சொல்லப்பட்டிருப்பது என்ன. “இவர் அரசின் / துறையின் / முகமையின் எந்த வளர்ச்சி திட்டங்களையும் – மருத்துவமனை, பள்ளி கட்டிடம், சாலை, பாலம் ஆகியவற்றின் திறந்து வைத்தல், ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியின் / இந்திய அரசின் / மாநில அரசின் சமூக வளர்ச்சி திட்டங்கள் ஆகியன குறித்து எந்த செய்திகளையும் வெளியிடவே இல்லை”. யூசுஃபின் மீதான குற்றங்களுக்கான சாட்சியங்களாக எதையும் அளிக்க முடியாமல் போனதால் 2018-ல் நீதி மன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதன் பின்னர், தாக்கப்படுவோம் என அஞ்சும் பெயர் வெளியிடக்கூடாது எனக்கூறிய அவர்கள் கூறியதாவது. “பல நிருபர்களும் செய்திகளுக்கான ஆதாரத்தை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் லாப் டாப்களையும் மொபைல் ஃபோன்களையும் கைப்பற்றுகின்றனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், சொத்துக்கள் போன்ற தகவல்களை ஆவணங்களில் பூர்த்தி செய்து அளித்திட கட்டாயப்படுத்துகின்றனர் “.
தடைசெய்யப்பட்ட பிரிவினை வாத குழுவினை ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணியின் பத்திரிக்கை செய்தியினை வெளியிட்ட, ‘அவுட் லுக்’ பத்திரிக்கையி ன் நசீர் கீலானியை பிப்ரவரி மாதம் அழைத்தது. தீவிர வாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை குறித்த செய்தி வெளியிட்டதற்காக ‘காஷ்மீரி வாலா’ பத்திரிக்கை ஆசிரியர் ஃபகத் ஷா என்பாரை ஸ்ரீநகர் சைபர் காவல் நிலையத்துக்கு மே மாதம் அழைத்து செல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 30- அன்று ‘எக்னாமிக்ஸ் டைம்ஸ்’ பத்திரிக்கையின் ஹக்கீம் இர்ஃபான், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் பஷராத் மசூத் ஆகியோரை, கார்கோ எனும் பழைய விசாரணை முகாமுக்கு அழைத்துச்சென்று 6 முதல் 8 மணி நேரம் வரை போலீசாரால் கடுமையாக விசாரிக்கப்பட்டனர். உள்ளூர் நிருபரான அமீன் மாலிக் ஆகஸ்ட் 14, 2019 டிரால் எனும் ஊரில் அவரின் வீட்டில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு அடுத்த நாள் தான் விடுவிக்கப்பட்டார்.
காவல் துறையினராலும் ஊடுருவல் தடுப்பு படையினராலும் அண்மை மாதங்களாக அழைத்துசெல்லப்பட்டு விடுவிக்கப்பட்ட பல நிருபர்களும் தொலைபேசியில் கூட பேச மறுக்கின்றனர். அவர்களின் தொலைபேசி எண்கள் எல்லாம் அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளது என்கின்றனர். இவர்களின் அச்சத்திற்கு காரணம் உள்ளது. ஒரு டஜனுக்கு மேற்பட்ட ஸ்ரீநகரில் பணியாற்றும் தேசிய ஊடக நிருபர்கள் அங்கு பணியாற்றுகின்றனர். அவர்கள் அரசால் துன்பறுத்தப்படுகின்றனர். ‘தி ப்ரிண்ட்’ பத்திரிக்கையின் ஆசிரியர் ஜாவேத், ‘நியூஸ் கிளிக்’ பத்திரிக்கையின் அனீஸ் சர்க்கார் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் -17 அன்று ஸ்ரீ நகரில் பொதுமக்களின் முன்னிலையில் போலீஸ் அடித்தது. கடந்த டிசம்பர் 30- அன்று ஷோபியானில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலை படம் எடுத்துக்கொண்டிருந்த ‘சீ’ டீ.வி புகைப்படக்காரர் அய்ஜாஸ் அமகது தர் என்பாரை துப்பாக்கியில் பெல்லட் போடாமல் சுட்டனர். ‘ நரேட்டர்’ எனும் மாத இதழின் காஷ்மீர் இணை ஆசிரியர், ஆசுஃப் சுல்த்தான் ஆகஸ்ட் 27, 2018 முதல் சிறையில் உள்ளார். அவர் மீது யூ.ஏ.பீ.ஏ- சட்டப்படி வழக்குகள் போடப்பட்டன. இதன் முன்னர், தெற்கு காஷ்மீர் பத்திரிக்கையாளரான காசி ஷிப்ளி என்பாரை உத்தர பிரதேசத்தில் பரேலி மாவட்ட சிறையில் இருந்து ஏப்ரல் 13 அன்று விடுவி்க்கப்பட்டார். இவரை கடந்த ஆண்டு ஜூலை மாதததி்ல் கைது செய்து கொண்டு போயிருந்தனர்.
கடந்த ஆண்டு காஷ்மீர் குறித்த முக்கிய அவசர முடிவு எடுப்பதற்கு மாதங்கள் முன்னரே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய ஊடக நிருவனங்களின் குரல் வளை நெரிக்கும் பணிகளை மோடி அரசு துவக்கி இருந்தது. ஹிஜ்புள் முஜாஹிதீன் அமைப்பின் பயங்கர வாதி புர்கான் வானி என்பார் என்கவுண்டரில் கொல்லப்பட்டதை ஒட்டி 2016-ல் பற்றியெரிந்த போராட்டங்கள் தொடர்பாக கட்டுரைகள் வெளியிட்டதால் ‘கிரேட்டர் காஷ்மீர்’ பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியரான ஃபயஸ் காலூ என்பாரை ஒரு வாரத்திற்கு மேலாக தேசிய புலனாய்வு அமைப்பு (என். ஐ. ஏ) ஜூலை 2019-ல் விசாரித்தது. அவரது விசாரணைக்கு முன், பல தவணைகளாக ‘கிரேட்டர் காஷ்மீர்’ பத்திரிக்கையின் பணி முடக்கப்பட்டது. இது போல், ‘காஷ்மீர் ரீடர்’ பத்திரிக்கை ஆசிரியர் ஹாஜி முஹம்மது ஹயத் பட் என்பாரையும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது. இதனால், அந்த நாளேடு அதன் மொத்த பக்கங்களை 16-ல் இருந்து 8 பக்கங்களாக குறைத்தது மட்டுமின்றி, தலையங்கம் எழுதுவதையே தவிர்த்துவிட்டது.
காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறைகளின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் (டீன்) இருந்த நூர் அஹமது பாபா கூறுகிறார். “உள்ளூர் நாளேடுகள் ஒரு காலத்தில் சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருந்தன. அதில் ஆழமான அரசியல் கட்டுரைகளும் விவாதங்களும் தற்போது காண முடிவதில்லை. முன்னர் நாளேடுகளில் வரும் சிறந்த கட்டுரைகளை பின்னர் வெட்டி எடுத்துவைப்பதுண்டு. ஆனால், இப்போது வழக்கமான தகவல்களுக்கு அன்றி ஏறெடுத்து கூட பார்ப்பதில்லை. ஏல விளம்பரம், விளம்பரம், மரணம், தேர்வு நாட்கள், அரசு அறிவிப்புகள் – இவற்றை அறியவே நாளேடுகளை மக்கள் வாசிக்கிறார்கள்; செய்திகளையோ ஆய்வுகளையோ அறிய அல்ல”. சுயேட்சை பத்திரிக்கையாளரான குல்கார் கூறுகிறார், “ தேசிய, சர்வ தேச ஊடகங்களில் இருந்து மனித உரிமை மீறல் நிகழ்வுகளை அறிகிறோம். தீவிர வாதத்திற்கு இளைஞர்களை தள்ளிவிடும் சூழல்கள் குறித்து செய்திகளை திரட்ட பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கள நிலவரம் அறிந்த பத்திரிக்கையாளர்கள் திரட்டிய தகவல்களை தீவிர வாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இப்போது பயன்படுத்தபடுவதில்லை”.
தற்போது பாரமுள்ளா அரசு கலைக்கல்லூரி ஆசிரியரும் முன்னாள் பத்திரிக்கையாளருமான பெர்வேஸ் மஜீத் கூறுகிறார். “கருத்துரிமையினை செயல்படுத்தவும் உரிமை உள்ள பணியே பத்திரிக்கை தொழில் என்பதை, ஒரு பத்திரிக்கைத்துறை ஆசிரியராகவும் பயிற்றுனராகவும் உள்ள என்னால், என் மாணவர்களிடம் ஏற்க வைப்பது கடினமாக உள்ளது”.
மாறிய ஊடக களம்
மஜீத் கூறுகிறார், “கோவிட்-19 முழு அடைப்புக்கு முன்னர், பாதுகாப்பு அடைப்பில் காஷ்மீர் இருந்த போது, ;பல நாளேடுகளும் சிறிது காலத்திற்கு இழுத்து மூடப்பட்டன. ஆனால், அதை ஒட்டி நடந்த விசேஷ அந்தஸ்த்து விலக்கி கொண்டது பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை; கொத்து கொத்தாக மக்களை கைது செய்ததும் செய்தியாகவில்லை. ஊரடங்கின் போது, மருத்துவ சேவைகளையோ, அவசர சேவைகளையோ பெறா முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இது போன்ற முக்கிய விஷயங்கள் தலைப்பு செய்திகளாக வரவில்லை. இத்தகைய செய்திகளை அரசின் பத்திரிக்கை குறிப்புகளில் இருந்தே பெற முடிந்தது. புதிய குடியுரிமை சட்டங்களை, புதிய நிர்வாக கொள்கைகளை விமர்சித்து ஒரு கட்டுரை கூட உள்ளூர் நாளேடுகளில் வரவில்லை”.
காஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியரும் அரசியல் கருத்துரையாளருமான ஹமீது நயீம் கூறுகிறார். நாங்கள் முற்றுகைக்குள் உள்ளோம். ஒவ்வொரு பணியும் ராணுவத்திற்கு உட்பட்டது; எல்லா குரல்களும் முடக்கபட்டுவிட்டது. சிந்திப்பதும் கருத்து செல்வதும் குற்றங்களாகி விட்டன. சொல்ல்க்கூடாத உண்மைகளை சொல்லக்கூடாது என மறைமுகமாக கட்டளையிடப்பட்டுள்ளது. பிரச்சனை அல்லாதவை குறித்து எழுதலாம்; அல்லது எழுதுவதையே நிறுத்திக்கொள்ள வேண்டுமென கட்டுரையாளர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். பெரிய அரசியல் மாற்றங்களுக்காக களத்தை தயார் செய்வதற்காக, ஆகஸ்ட் 5-கு பல மாதங்கள் முன்னரே நாளேடுகளில் இருந்து விமர்சனங்கள் வைக்கும் கட்டுரையாளர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்”.
‘காஷ்மீர் இமேஜ்’ பத்திரிக்கை ஆசிரியர் பஷீர் மனசார் கூறுகிறார். “கடந்த ஆண்டில் நடந்த விஷயம், காஷ்மீர் அரசியலை முழுமையாக மாற்றிவிட்டது. நாளேடுகள் கண்டனங்களை எழுதுவது இல்லை; நாளேடுகள் செய்தி அறிவிப்பாளர்கள் மட்டுமே என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சில கண்டன போராட்ட செய்திகள் வெளிவந்தன. தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாடு போன்ற பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நாங்கள் செய்திகளை வெளியிட்டோம். காஷ்மீர் அரசியல் கட்சிகள் எத்தனை கண்டன போராட்டங்களை நடத்தின. பெரிதாக ஏதுமில்லை. அரசியல் கட்சிகள் செய்யவேண்டியதை, நாளேடுகள் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல. என்னிடம் 40-கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.எனது பதிப்பை நிறுத்திவிட ஒரு காரணத்தை நான் ஏன் அரசுக்கு வழங்கக வேண்டும். எல்லோரும் வேலை இழப்பார்கள்”.
ஸ்ரீநகரில் இருந்து வெளிவரும் ‘தமீச் – இ – இர்ஷாத்’ எனும் உருது நாளேட்டின் இணை ஆசிரியரான நசீம் நசீர் கூறுகிறார். “ஜம்மு-காஷ்மீரின் விசேஷ அந்தஸ்து விலக்கி கொண்ட பின்னர், பல நாளேடுகளை போல் நாங்களும் மக்கள் வேண்டுகோள்களை தலையங்கமாக தீட்டுகிறோம். நாள்தோறும் தலையங்கத்தின் தரம் செத்த்துக்கொண்டிருக்கிறது. அரசை விமர்சிக்கும் பத்திரிக்கை செய்திகள் தணிக்கை செய்யப்படுகிறது. மத்திய அரசின் தகவல்-மக்கள் தொடர்பு துறையும் ,மாநில அரசின் விளம்பர-ஒளி ஊடக விளம்பர இயக்குனரகமும் எங்கள் நாளேடுகளுக்கான விளம்பரங்களை இந்த ஆண்டு ஏறத்தாழ 80 சதம் குறைத்துள்ளது. இதனால் பாதி ஊழியர்களை பணியில் இருந்து விடுவித்துவிட்டோம்”.
நிதி நெருக்கடியின் பெரும்சுமையை உருது ஊடகங்கள் சுமப்பதாக கூறுகிறார், இவர். “கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் 6-கு முன்னர், நாள்தோறும் 60,000 பிரதிகளை வெளியிட்டு வந்தோம். இந்த எண்ணிக்கையினை 15,000 என குறைத்துக்கொண்டோம். தற்போது நாங்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்கல் கவனம் செலுத்துகிறோம். ஸ்ரீநகரில் சில பத்திரிக்கைகள் 2000 பிரதிகளை வினியோகம் செய்கின்றன”.
அரசின் தகவல் கட்டுப்பாடுகளையும் ஊடகங்களின் மீதான வாய்ப்பூட்டுகளையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உச்ச நீதி மன்றத்தில் தட்டிக்கேட்ட, ‘காஷ்மீர் டைம்ஸ்’ ஏட்டின் செயல் ஆசிரியர், அனுராதா பாஸின் கூறுகையில், “ உச்ச நீதி மன்ற தீர்ப்பினை அதன் உண்மையான பொருளில் அரசு அமலாக்கவில்லை. அரசு அதில் இணைய சேவையை மீண்டும் துவக்குவது போன்ற சில பகுதிகளை தேர்வு செய்து அமலாக்கியது. . இது உள்ளூர் ஊடகத்தின் நிலையை எந்த வகையிலும் உதவிடவில்லை. அரசின் சர்வாதிகார கொள்கைகளாவன உள்ளூர் பத்திரிக்கைகளில் இருந்து மக்களின் குரல்களை மறைத்துவிட்டது. தற்போது அரசை அவ்விதமும் விமர்சனம் செய்ய வாய்ப்பே இல்லை”. அரசு விளம்பரங்கள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டதால் 2018-ல் காஷ்மீர் டைம்ஸ் குழுமமானது, தனது தோக்ரி, இந்தி பதிப்புகளை நிறுத்தவேண்டியதாயிற்று.” அரசியல் சட்டப்படியானதல்ல இந்த புதிய ஊடக கொள்கையினை எனக்கூறிய அவர், “இது பத்திரிக்கைகளை அச்சுறுத்துவதும், பத்திரிக்கைகளை சாகடிப்பதுமாகும்” என்றார்.
ஸ்ரீநகரில் இருந்து பணியாற்றும் முதிய பத்திரிக்கையாளரான யூசுஃப் ஜமீல் கூறுகையில், “தற்போது காவல்த்துறை இங்கிருந்து கொண்டு (ஸ்ரீநகரில்) எந்த செய்தி உண்மையானது, பொய்யானது என்பதை முடிவு செய்கிறது. அதன் அடிப்படையில் ஏதாவது ஒரு சட்டப்படி உங்களுக்கு (பத்திரிக்கையாளர்களுக்கு) எதிராக நடவடிக்கைகளை தொடுக்கிறது. இதுவே எங்களின் முக்கிய பிரச்சனை. இது கருத்துரிமை மீதான தாக்குதல். ஆகையால், ஏற்க முடியாது. முன்னரும், ஊடக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பி உள்ளோம். இதை ஒரு சிலரை தவிர, வேறு யாரும் கவனிக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாக உள்ள அரசின் தகவல்-செய்தி கட்டுப்பாடுகளை இந்திய பத்திரிக்கை அமைப்பும் ஆதரித்தது”.
மோடி அரசின் ஊடகங்களின் மீதான நெருக்குதல்கள், எவ்வாறு ஐக்கிய முன்னணி அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து மாறுபட்டது என்பதை பற்றி யூசுஃப் ஜமீல் கூறும்போது, “ 1990 முதல் காஷ்மீரில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் அழுத்தங்களினூடே பணி புரிந்து வருகிறது. ராணுவம் அதன் உச்சத்தில் இருக்கும்போதே, சண்டையிடும் குழுக்கள் எங்களை மிரட்ட முயற்சி செய்யும். இதற்கு முன்னரும், அரசுகள் நெருக்கடிகளை கொடுத்திருக்கின்றன. ஆனால் ஒரு சில நாளேடுகள் மட்டுமே பிரச்சனைகளை சந்தித்தன. ஒரு சில நிகழ்வுகளில் மட்டுமே, பத்திரிக்கையாளர்களின் மீது வழக்குகள் பதியப்பட்டன. இப்போது எல்லாமே வெளிப்படையாக உள்ளது. இப்போது அச்சம் நிறைந்த சூழலும் சுயமான தணிக்கைகளும் உள்ளது.
இது முற்றிலும் வேறான ஒரு உலகம். இந்த சூழலானது, ஜம்மு-காஷ்மீரில் மட்டும் இருப்பது அல்ல. நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, ஊடகத்துறையும் நீதித்துறையும் ஒரே நிலையிலேயே உள்ளன”. புதிய ஊடக கொள்கை குறித்து கூறுகிறார், இஷ்ஃபார் தந்திரி. “இந்த கொள்கையினை தட்டிக்கேட்காமல் இருந்தால், ஜம்மு-காஷ்மீரில் யார் பத்திரிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்பதை ஒரு அரசு எழுத்தர் முடிவு செய்யும் சூழல் ஏற்படும். ஒரு பத்திரிக்கையாளராக இருக்கவோ, அதற்கான சான்று பெறவோ, பாதுகாப்பு படையில் ஒப்புதல் வாங்கியாக வேண்டும் என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றாகும். அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஆசிரியர்களும் பத்திரிக்கை உரிமையாளர்களும் முன்வந்து, ஒரு கூட்டி நடவடிக்கையினை உருவாக்க வேண்டிய நேரமிது. நாங்கள் இதனை இந்திய பத்திரிக்கையாளர் அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்த பின் இதனை அது புரிந்து கொண்டுள்ளது”.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர், மொஹம்மது யூசுஃப் தரிகாமி கூறும்போது, “பத்திரிக்கையாளர்கள் தமது வாசகர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்களாக நடந்து கொள்ளவேண்டியதில்லை என்பதையே, அரசு அதன் புதிய ஊடக கொள்கையின் வாயிலாக வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. பத்திரிக்கையாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன், ஒரு செய்தியானது, பொய்யா, நாகரீகமற்றதா, திருடப்பட்டதா, தேச விரோதமானதா என்பதை முடிவு செய்யும் அரசு அதிகாரத்தை அரசு அதிகாரிகளிடம், பாதுகாப்பு அதிகாரிகளிடம் அளிக்கிறது. பத்திரிக்கையாளர்களை சுய தணிக்கைக்கு கட்டாயப்படுத்தி, விமர்சிக்கும் குரல்களை இல்லாமல் செய்திட அரசு நிர்வாகம் கையாளுகிற துன்புறுத்தல், அச்சுறுத்தல், கண்காணிப்பு, நேரலை தகவல் கட்டுப்பாடு போன்றவை ஒரு நடவடிக்கை பணியே”. புதிய ஊடகக்கொள்கையினை உடனடியாக திரும்ப பெற கோரிய அவர், “ மிக பலன் தரும் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு, புனையப்படும் பொய் செய்திகளை விட,, ஒரு சுதந்திரமான ஊடகத்துறையே உதவி செய்யும்.. நெருக்கடி காலத்தை நினைவுப்படுத்தும் வகையில், தற்போது காஷ்மீர் நாளேடுகள் அரசின் கெஜட்டுகள் (அறிவிப்புகள்) போல் உள்ளன”.
தமிழாக்கம் பேரா.ரமணி, கோவை
நன்றி: ஃப்ரண்ட்லைன்
https://www.google.com/amp/s/frontline.thehindu.com/the-nation/article31951368.ece/amp/