பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை - முனைவர் பா. ராம் மனோகர் | www.bookday.in

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை – முனைவர். பா. ராம் மனோகர்

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை…..

– முனைவர். பா. ராம் மனோகர்

இயற்கை ஆதாரங்கள், வளம் ,உயிரினங்கள், மனித குலம் உலகெங்கிலும் ஆரோக்கியமாக வாழ இன்றியமையாதது
அல்லவா!?.. எனினும், கடந்த 50 ஆண்டு காலமாக ஏற்பட்டு வரும் அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி, மனிதஇனத்தின் வாழ்வியல் முறைகளை மாற்றி அமைத்துவிட்டது என்றால் மிகையில்லை. ஆனால், பெரும்பாலும் வளர்ச்சி என்ற நிலையினை நாம் அடைவதற்கு, இயற்கை வனவளம், கடல், மலைகள், விலங்குகள், பறவைகள், விவசாய நிலங்கள் போன்றவற்றை நாம் அழிப்பதும் அல்லது மாற்றியமைத்து கொள்ளும் வழக்கம் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். கட்டுமானங்கள், தொழிற் சாலைகள், மனித குடியிருப்புகள், நகர மயமாக்கம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக ஆசிய நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளில் இத்தகைய போக்கு தொடர்வதை நாம் அறிவோமா!!?

வளர்ச்சி தேவை என்பதை நம் மக்கள் அனைவரும், அரசு களும் ஏற்றுக்கொண்டு முன்னேற்றம் காண்பது என்பது சமூகத்தில் ஒரு அத்தியாவசிய நடவடிக்கை என்பது ஒரு உண்மை. அடிப்படை ஆதாரங்கள் அழிப்பு, பாழாக்கி மாசுப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள், வளர்ச்சி என்று நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள இயலும்!!?. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குழுமம் (IUCN) அமைப்பு இந்த நிலை அறிந்து “நீடித்த நிலையான தொடர் வளர்ச்சி “ (Sustainable Development Goals) என்று 17 குறிக்கோள்களை நோக்கங்களாக கொண்டு அனைத்து நாடுகளும் செயல் பட பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு மாநாடுகள் பலவற்றை நிகழ்த்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

சமீபத்தில் அபுதாபி நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு மாநாட்டில், பல்வேறு நாடுகளின் இயற்கை பாதுகாப்பு குறித்த, உடனடி நிலை குறித்த அளவீடுகள் அறிக்கையாக வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் இந்தியாவின் மிக முக்கிய இயற்கை
வளமான ஒரு சரணாலயம், மேற்கு வங்காள மாநில, காடுகளுள் ஒன்றான சுந்தர வனக்காடுகள், புலிகள் வசிக்குமிடம் ஆகும். அலையாத்தி வகை (MANGROVES) தாவரங்கள் காணப்படும் இந்த காட்டின் உயிரினங்கள் வேற்றுமையின் ஒரு சிறப்பு மண்டலமாக அமைந்துள்ளது.

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை - முனைவர் பா. ராம் மனோகர் | www.bookday.in

எனினும் சமீப காலமாக பல்வேறு எதிர் மறை காரணிகள் இயற்கை பகுதி பாதிக்கப்பட வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்ட நிலை மிக வருந்துதற்குரியதாகும். ஆம்!அதிக உப்புத் தன்மை, கன உலோகங்கள் நீர் மூலம் பரவுதல். மீட்கவே இயலாத அளவிற்கு சுந்தர வனத்தில் உள்ள இயற்கை வள சுரண்டல், கடற்கரை பகுதி நில பயன்பாடு மற்றும் ஆக்கிரமிப்பு, பங்களாதேஷ் பகுதியில் அடிக்கடி ஏற்படும் புயல், பருவ கால மாற்றம், விலங்கு வேட்டை, சுற்றுலா வளர்ச்சி, தொற்று நோய்கள், அந்நிய உயிரின ஆக்கிரமிப்பு வளர்ச்சி திட்ட பணிகளாக, காடுகளுக்குள் சாலைகள் அமைத்தல், ரயில் பாதை அமைத்தல் ஆகியவை முற்றிலும் மிக பெருமை வாய்ந்த இந்த இயற்கைப் பகுதியில், வன பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது என்பது உண்மை!.

குறிப்பாக 2020 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு கால கட்டத்தில் பாதிப்புகள் இங்கு நிகழ்ந்துள்ளன. நம் நாட்டில் உயிரின வேற்றுமை அதிக அளவில், பாதிக்க முக்கிய காரணங்கள் பின்வருவன ஆகும்.நில பயன்பாட்டு முறைகளில் தீவிர மாற்றங்கள், விலங்கு, பறவைகள் வாழிட மாற்றங்கள்,, காட்டுக்குள் சாலைகளில், உயிரின மரணம், காட்டு தீ மற்றும் பவள பாறைகள் கொள்ளை, பாதிப்புகள் போன்ற “மனிதர்களின் தவறுகள்” மட்டுமே என பன்னாட்டு இயற்கை வள மைய பாதுகாப்பு அறிக்கை தெரிவிக்கிறது..

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை - முனைவர் பா. ராம் மனோகர் | www.bookday.in

மிக தீவிர பாதுகாப்பு அக்கறை கொள்ள வேண்டிய இயற்கை பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை, அசாம் மனாஸ் தேசிய பூங்கா, பனிப்பாளங்கள் உருகி, நன்னீர் பாழாக்கி வரும், இமாலய மலை பகுதிகள் போன்றவை எனவும் அறிக் கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
கிரேட் இமாலய தேசிய பூங்கா, காசி ரங்கா சரணாலயம், கீலோதேவ் பரத் பூர் தேசிய பூங்கா, நந்த தேவி தேசிய பூங்கா, மலர்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா போன்ற இயற்கை பகுதிகள் மட்டும், ஓரளவிற்கு சிறு பிரச்சினைகள் கொண்டிருந்த நிலையில், நன்றாக இருப்பதாக தெரிகிறது.

அதே போல் கஞ்சன் ஜூங்கா தேசிய பூங்கா மட்டுமே எவ்வித அப்பழுக்கின்றி நல்ல இயற்கை பகுதியாக விளங்குவதாக சான்றினை பெற்றுள்ளது என்ற தகவல் மகிழ்ச்சி தருகிறது. எனினும், இயற்கை வள பாதுகாப்பு மேலாண்மை என்ற நிலை நோக்கி காணுகையில் ஆசிய இயற்கை பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஓரளவு கண்காணிப்பு மற்றும் தீவிர அக்கறை கொண்ட கண்காணிப்பு என்று துல்லியமாக மதிப்பிடப்பட்டுள்ளது. IUCN 2014 ஆம் ஆண்டு துவக்கிய இந்த நேர்மறை இயற்கை வள பாதுகாப்பு குறியீடு முறை கணக்கெடுப்பு திட்டம் உலகம் முழுவதும் 228 இடங்களில் நடத்தப்பட்டது. 63% சதவீத இடங்களில் நேர்மறை இயற்கை வள நிலை அறியப்பட்டது. 2017,2020 ஆம் ஆண்டுகள் தொடர்ந்து இதே நிலை இருப்பினும் 2025 ஆம்ஆண்டு 57% இடங்களில் மட்டும் அந்த குறியீடு நேர்மறை என்று அளவீடு செய்யப்பட்டது.

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை - முனைவர் பா. ராம் மனோகர் | www.bookday.in

உலக அளவில் மதிப்பீட்டுக்காக, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 228 பாரம்பரிய இயற்கை பகுதிகளில் 43% 117,முழுமையாக, பருவ கால மாற்றத்தின் காரணமாக பாதிப்புகள் அடைந்து வருவது அறியப்பட்டுள்ளது. குறிப்பாக 2020 ஆண்டுக்கு பின், 2025 ஆம் ஆண்டு வரையில் அதிக பயமுறுத்தல் மற்றும் மிக அதிக பயமுறுத்தல் என்று அழிந்து போகும் நிலையில் இருக்கின்றன.

காலபாகுஸ் தீவு, (இக்வாடார்), ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள லார்ட் ஹோவெ தீவு, சீஷல் தீவுகள், காஸ்டரிக்கா
நாட்டின் கோகோஸ் தீவுகள், நியூஸிலாந்து நாட்டின் சப் அண்டார்டிகா தீவுகள்,ஏமன் நாட்டின் ஆர்ச்பிலாகோ தீவுகள் ஆகியவை அந்நிய சிற்றினங்கள் வழியில் 30% சதவீதம் பாதிப்புகளை அடைந்து வருகின்றன. கால பாகஸ் தீவுகளில் 1575, தரை வாழ் மற்றும் கடல் வாழ் அந்நிய சிற்றினங்கள் வசிக்கின்றன. எனினும் பெரும்பாலும், அவை அதிக பிரச்சனை தருவதில்லை.

ஆனால் 59 சிற்றினங்கள் வேகமாக பரவுகிறது 83 சிற்றினங்கள் உள்ளூர் உயிரினங்களுக்கு அதிக பயமுறுத்தல் உருவாக்க முயலுகின்றன. வெப்ப நிலை மாறுபாடு, ஈரப்பதம் உயர்வு காரணமாக, உயிரிய செயல்பாடுகள் அதிக அந்நிய தாவர சிற்றினங்களின் காரணமாக ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் அதிக பயமுறுத்தல் என்பது வன விலங்குகள், தாவரங்களின் நோய்கள் ஆகும்.

பல்வேறு நோய் உருவாக்கி பெருகி விட்ட நிலையே இதற்கு காரணம் ஆகும். 2020 ஆம் ஆண்டில் 2 இடங்களில் மட்டும் அறியப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டு 19 இயற்கை வாழிடங்களில் நோய் உருவாக்கிகள் அதிகம் பெருகி உள்ளது. பருவ கால மாற்றத்தின் விளைவால், நோய் உருவாக்கிகள். மற்றும் அந்நிய சிற்றினங்கள் செயல்பாடுகள் விபரீத விளைவுகளை இயற்கை சூழல் மையங்களில் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் தொடர்ந்து வருகின்றன.

எனவே கடுமையான தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை, அனைத்து நாடுகளின், சரணாலயங்கள் மற்றும் இயற்கை வள பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய அவசிய அவசர, தேவை உள்ளது என்பதை உணரவேண்டும். மிகவும் முக்கியமாக, மக்கள், சிற்றினங்கள், சுற்றுசூழல் அமைப்பு ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று இணைந்த நிலையில் அவற்றின்,ஆரோக்கியம் “மனிதர்களின் ஆரோக்கியம்” என கருதுவதும், அதற்கெற்ப உரிய தொடர் நடவடிக்கை அரசுகள் எடுக்க வேண்டும்.

குறிப்பாக நம் இந்தியாவில் வளர்ச்சி அவசியம் என்று நாம் நினைத்தாலும், அதன் பாதிப்புகளால் நாட்டின் இயற்கை வளம் என்ற அடிப்படை கட்டமைப்பு சிதைந்து போகாமல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. வெறும் விழிப்புணர்வு செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மேற்கொண்டு வருவதால் மட்டுமே, இயற்கை வளம் பாதுகாக்க உதவி செய்யாது என்பதை நாம் அனைவரும் உணர்ந்திட வேண்டும். சற்று சிந்திப்போமா!!?

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿.

எழுதியவர் : 

✍🏻 முனைவர். பா. ராம் மனோகர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *