கவிஞரின் வசந்தகுமாரனின் கவிதைகள்

Birds Nest Drawing Stock Illustrations – 1,537 Birds Nest Drawing ...
ஒரு பறவையை
வரைவதற்குமுன்
ஒரு கூட்டை வரைந்துவிடு.
பாவம்
எங்கு போய்த் தங்கும்
அந்தப் பறவை?
*************
உணவு விடுதியின்
சமையலறை போன்றது
மனிதனின் மறுபக்கம்.
***************
பறவையைவிடவும்
அழகு
உதிர்ந்து கிடக்கும்
இறகு.
*******************
உதிர்ந்த இறகுகளைச்
சேகரித்தவாறே
தொடுவானம் வரை
வந்துவிட்டேன்.
********************
இறைவனின் நிழல்
இரவு.
விளக்குகளை
அணைத்துவிடு.
விளக்குகளை
அணைத்துவிடலாம்.
மின்மினிப்பூச்சிகளை
என்ன செய்வது?
*******************
கால் இடறும்
கற்களில்
எது கடவுள்?
எது ஆயுதம்?
***********************
இருளைக்
காண்பதற்கு
விழிகள்
தேவையில்லை.
***********************
என்னைத் தேடாதீர்.
விதைத்தபிறகு
யாரேனும்
விதையைத் தேடுவார்களா?
************************
என்னை
வழியில் கண்டால்
நான் தேடுவதாகச்
சொல்லுங்கள்.
***
Stone Heart Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock
 ஒரு கல்லைத்
துடிக்க வைக்க
அதில்
இதயத்தைச் செதுக்கு.
***
நெருப்பல்ல
சீதையின் கற்புக்கு
இராவணனே சாட்சி.
***
புழுவாகச்
சம்மதித்தால்
வண்ணத்துப்பூச்சி
ஆகலாம்.
***
ஆடுகளம் (மணல் வீடு - Sands House) | மணல் ...
காற்று
கலைத்த பிறகே
அழகாகிறது
மணல்வீடு.
***
தனிமை பயம்.
கண்ணாடியில் தெரிந்த
என் பிம்பத்தை
துணைக்கு
அழைத்துக்கொண்டேன்.
***
மழையே நன்றி.
நீதான் அவளை
என் குடைக்குள்
அழைத்துவந்தாய்.
***
Stars Are Suns, Suns Are Bright—So, Why Is the Night Sky Dark ...
நட்சத்திரங்களை
எண்ணிக்
கொண்டிருக்கையில்
கணக்கைத்
தவறாக்கிவிட்டன
குறுக்கே நுழைந்த
மின்மினிப்பூச்சிகள்.
***
வானம்
வசப்படவேண்டாம்.
பூமியே எனக்குப்
போதும்.
***
விழிப்பும்
உறக்கம்தான்.
விழிப்பிலிருந்தும்
விழி.
***
என் தவத்தைக்
கலைத்துவிட்டது
பூவின்மீது
இறகு விழுந்த
சப்தம்.
***
What are the best arguments for colonising the moon before/instead ...
நிலவில் மனிதன்
கால் வைத்தான்.
இனிமேல்தான்
கை வைப்பான்.
***
மனசும்
தெரிந்தால் நல்லது
புகைப்படத்தில்.
***
சவ ஊர்வலமா
சாமி உற்சவமா?
அவதானிப்பதற்குள்
கடந்துபோய்விட்டது
பல்லக்கு.
***