வண்டு துளையிட்ட மூங்கிலிலே

இசையை இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றார் நிகோலஸ் கூக் “இசை ஒரு கற்பனைப் பொருள்” சிலருக்கு உணரமுடியும், சிலருக்கு கட்டித்தழுவ முடியும், சிலருக்கு இசையோடு பேசமுடியும். அதைப்போல் , இசையைத் தொடர்ந்து பாடவும் முடியும். ஆனாலும், இசை ஒரு உருவமில்லா கற்பனை பொருள்தான். நமது வாழ்க்கையிலும், சிந்தனையிலும் இசை ஓட்டங்கள் பற்றியதாக அமைந்திருக்கிறது. “இசை இருக்கின்றது ஆனால் இல்லாமலும் இருக்கிறது” இன்னும் தெளிவாக சொன்னால் இசையின் அடையாளங்கள் எங்கும் நிறைந்து இருக்கின்றன.  இசை என்பது குறிப்புகளில் , புத்தகங்களில், இசைக்கருவிகளில் இருந்தாலும் இவை, இசை அல்ல. நீங்கள் இசையை சுட்டிக்காட்ட முடியாது. இதுதான் இசை என்று கையில் பிடித்து உணரவும் முடியாது, அது உருவான உடனே மறைந்து விடுகின்றது, சுவடே இல்லாமல் அமைதியால் விழுங்கப்பட்டு விடுகிறது.

இசை மூன்று பங்குகளை ஆற்றுகிறது என்று சொல்ல முடியும். முதலாவது மிகவும் வெளிப்படையானது, பாதுகாக்கும் காட்சிப் படங்களைப் போல, காலத்தை, அதன் பாதையை நிறுவிக்கொள்ளும். மாற்றி சொல்லுகின்ற விஷயங்களுக்கு ஒரு மாறா தன்மையை கொண்ட பிம்பத்தை பிரதிபலிக்கும் தன்மை உடையது.

இரண்டாவது பணியும் முதலாவது போலதான், தெளிவாகத் தெரியக் கூடியது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இசை தொடர்பு படுத்துகிறது. உதாரணத்திற்கு ஒரு இசை அமைப்பாளர் இடமிருந்து நிகழ்த்துக் கலைஞர்களுக்கு, ஒரு இசை குறிப்பு தொடர்பை ஏற்படுத்துகிறது.

இசை சிகிச்சையின் அற்புதமான ...

மூன்றாவது பணி அவ்வளவு, வெளிப்படையாக தெரியாவிட்டாலும் மற்ற இரண்டையும் போலவே முக்கியமானது. பல இசை மரபுகளில், இசையை ஆவணம் செய்வதற்கு இசை குறிப்புகள் எழுதுதல் இன்றியமையாதது ஆகிறது. இசை அமைப்பாளர்கள், நிகழ்த்து கலைஞர்கள், உடன் பணி செய்யக்கூடிய பிறர் ஆகிய யாவரும் இசையை கற்பனை செய்வதற்கும், உணர்ந்து கொள்வதற்கு, அவசியமாக அமைகிறது.

பழங்காலங்களில் இருந்து இசையை இவ்வாறு தான் பார்த்து வருகின்றனர். எனவே ஒரு நிரந்தர வடிவத்தை பெற முயற்சி செய்கின்றது. இவற்றில் அவரவர், புகழை , தனித்தமையை சுமந்து கொண்டு நிற்கிறது. எடுத்துக்காட்டு: எகிப்து நாகரீககத்தில் மறந்து போன பல சமுதாயங்களில் இசையும் கூட பாதுகாக்கப்பட்ட வடிவங்களில் ஒன்றாக நிலவுகிறது. இடைக்காலத்தில் அழிந்துபோன இசைக்கருவிகள் கிடைத்தாலும் கூட அவை ஒரு உணவு மேசையின் மீது அடிக்கிவைத்து வைத்து விட முடியும். என்கிற, அளவில் கருவிகளும், குறிப்புகளும், இருந்து வருகின்றன. ஆனால், உயிர் பிழைத்தல் என்பது பலமான வார்த்தை, காரணம் பழங்கால இசை, இன்று வரை உயிரோடு வாழ்கிறது.

இசைக்கு மருத்துவ குணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு இசையை நாம் கேட்கிற பொழுது நமது மனசாட்சியை, அமைதியை, உரத்த சிந்தனையை, தன்னைத்தான் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவத்தை, அந்த இசையின் வாயிலாக நாம் நம்மை ஆட்படுத்திக் கொள்கிறோம் என்று சொல்லப்படுகின்றது.

நாம் நம் தமிழ் மரபில் உடுக்கைப் பாட்டில் , ஒரு கற்பனை உருவகத்தை ஏற்படுத்திக் கொள்கின்றோம் , என்று சொல்லப்படுகின்றது. இஸ்லாத்தில் பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும். என்ற கருத்தை முன்வைக்கின்றது, இசையை எப்படி பார்க்க முடியும். முன்னாட்களில் இசைகள் பலவற்றையும், அசலான மூலங்களிலிருந்தும் , குறிப்பேடுகளில் இருந்துதான் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியிருந்தது. மற்றொன்று இசையின் மீது ஒரு மூட நம்பிக்கையே திணித்த பண்பையும் நாம் பார்க்க முடிகிறது. இசையை, பாடகர்கள் மீது மேற்கோள்காட்டி பயணம் செய்ய வழிவகுக்கின்றன. மேலைநாடுகளில் “ஆவே மரியா” என்ற பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெறுகிறது.

உடுக்கு / உடுக்கை

இசையின் மீது அவநம்பிக்கையை உண்டாக்கி விடக் கூடாது என்பதற்காக அதை, அலெக்சாண்ட்ரா வாங்கி என்னும் பாடகர் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் காலத்தில் ரோம் நகரத்தில் தேவதை என்று அழைக்கப்பட்டவர். 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் நல்ல பாடகர்களாக, தெரிவுச் செய்யப்பட்ட ஆண் சிறுவர்களை, அவர்களுடைய குரல் வளம் உடையாமல் இருப்பதற்காக ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு. அவர்களை, தலைமை படரகர்களாக முன்னிறுத்துவது , தலைமை இசைக் குழுக்களில் தலைமை குரலாக பாடவைத்து அவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்து வந்தார்கள். இதை, சிலர் காட்டுமிராண்டித்தனம் என கருத்து தெரிவித்தார்கள். காலப்போக்கில் இந்த வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பதினெட்டாம் நூற்றாண்டில் இல்லாமல் போனது அந்த மரபில் கடைசி மனிதராக திகழ்பவர் மோரஸ்கி என்ற பாடகர் தான்.

இசையில் அதிசயங்கள் எப்படி நிகழ்கின்றது என்று அறிய! நாம் இசைக்குறிப்புகள் என்றால் என்ன; எப்படி அவை வேலை செய்கின்றது. என்று விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டியதாகும். அவை, இரண்டு விதமான இசைக்குறிப்புகளை கொண்டதாக அமைகிறது. அவை ஒலியின் குறியீடாக நிற்கின்றன என்பது ஒன்று. அந்த ஒலியினை உருவாக்க நிகழ்த்துக் கலைஞர்கள் செய்யவேண்டிய விடயங்கள், இசைக்குறிப்புகள், இவை இரண்டும் இணைந்து செய்யப்படும் சோதனை ஓட்டம் தான் ஒரு புதிய” இசை”

இவை அடிப்படையில் வெவ்வேறு கொள்கைகளை கொண்டவை. ஆனால், ஒற்றைப் புள்ளியில் செயல்படக்கூடிய தன்மை கொண்டவை. தமிழக சூழ்நிலைகளில் பாமரர்களின் கருத்தியலில் இசையை, காற்றினுடைய பிம்பமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அந்தந்த நிலப்பரப்பில் இவற்றுக்கு மிஞ்சிய வேறு ஒரு வெளி இல்லை என்பது தான். நம் கால சூழலுக்கு ஏற்றாற்போல் “இசை” தன் தன்மையை மாற்றிக் கொள்கிறது. அதை ஒட்டிய மனிதர்களும், அதன் தன்மையை மாற்றி ரசிக்கின்றனர்.

All The Information You Need For Jazz Festival Week in Buffalo ...

ஒரு விசை, காற்றை ஆட்கொள்கிறது, காற்றை ஆற்றுப்படுத்துகிறது , மெல்லிய துவாரங்களில் கிழிசல்களளில் கடந்து செல்கின்ற பொழுது, அந்த காற்றும் லயங்கள், சுவரம்களாக, ஆதாரங்களாக மனம் போன போக்கில் ஒலித்து விட்டுப் போகிறது.
நம்முடைய கவிஞர் பாவலர் சுப்பையாவின் வரிகளில்
“வண்டு துளையிட்ட மூங்கிலிலே,
காற்று புகுந்திட்ட வேளையிலே,
கேட்குது இனிமை காதினிலே – அந்த
கீதமே முதல் இசை பூமியிலே”
என்று பாடுகிறார் ஒரு உண்மை சம்பவத்தை நாட்டுப்புற இசை வடிவங்களில் முன்னிறுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து
”நெருப்பால் மூங்கிலில் துளைப் போட்டு,
அதில் நிரப்பும் காற்றை அசைபோட்டு,
ஏற்ற, இறக்கம் சுருதி சேர்த்து- அங்கு
பிறந்தது ஐந்ததிசை ஒலி கூற்று”
என்று இயற்கையையும், அந்த இயற்கையின் துணையோடு ஒரு செயற்கை தன்மையை வாய்ப்பாக வைத்து , ஒரு இசைக்கருவி எப்படி உருவகப் படுத்துபடுகின்றது என்பதும். அந்த இயற்கை இசையை போலவே மனிதன் ஒரு செயற்கை விசையை உள்புகித்தி எவ்வாறு கையாளுகிறார் என்பதையும், ஒரு பாடலின் வடிவில் சொல்லப்படுகிற கருத்தை நாம் பார்க்க முடிகிறது. இசையின் உருவாக்கத்தின் தேவையை பேசுகிறார்கள், இசையை உணராமல் இம்மண்ணில் யாவரும் பிறப்பதில்லை, இசை இல்லாத ஒரு உலகத்தை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு, இசையின் ஆளுமை இப்பூமிப்பந்தில் பரவிக்கிடக்கிறது ஒரு மனிதனை, “ இசை மயக்க நிலைக்கும் இட்டுச் செல்லும், அதே இசைமனதை உறைய வைக்கும் வல்லமையும் உடையது” நம் நெடும் பயணத்தில் ஆராய்வோம்.

இசையறிவோம்……..

Image

மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

4 thoughts on “இசை என்னும் அரசியல் -1 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர் ”
  1. அருமையான பதிவு 💐💐💐மு.வெ.ஆடலரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *