“நான் ஒரு இசைக் கலைஞனாக விரும்புகிறேன்” என்று பொருள்சேர் ஓய்வூதியத் திட்டத்திற்கு என எடுக்கப்பட்ட 1992 இன் பிற்பகுதியில் ஒளிபரப்பப்பட்ட வணிக விளம்பரம் ஒன்றில் வந்த வாசகம் இது. நாற்காலியில் சாய்ந்து, கனவுலகின்  சிந்தனையில், ஆழ்ந்த பாவனையில் கேட்கும் கருவியைத் தலையிலிருந்து இசை கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுடன் அது தொடங்குகிறது. இது போன்ற முன்னெடுப்புகளைக் காணமுடிகின்றது.

இசையால்  அவன் தேர்ந்தெடுக்கிறான், அதற்கேற்ற லயத்தோடு, அவன் கால் தாளம் போடுகிறது, தலையும் அசைகிறது ஆனால் அவன்  மூழ்கிவிடவும்  இல்லை ஏனெனில் தான் என்னவாக ஆகவேண்டும் என்று அவன் சிந்தித்துக் கொண்டிருக்கிறான். மேற்கண்ட வார்த்தைகள் எவராலும் மறுத்துப்  பேசப்படவில்லை அவன் மூளையில் உள்ள  இசை பின்னணியில் வார்த்தைகள் இயல்பாகவே தோன்றுகின்றன.  ஏனெனில் இசையைக் கேட்கும்போது மக்களுக்கும் , பொருள்களுக்கும்  உள்ள யதார்த்த உலகை விட்டு நாம் நீங்கிச்  சென்று சிந்தனை உணர்ச்சி கொண்டு தனித்த ஒரு உலகில் நாம் இருப்பது போலத் தோன்றுகிறது. இதுதான்  குறைந்த பட்சம் இசை நமக்கு அளிக்கக் கூடிய பல அனுபவங்களில் இதுவும் ஒன்று என்று கருதுகிறோம்.

தமிழர் இசையும் வாழ்வும் | Read Book Reviews ...

உதாரணமாக  நிகழ்ச்சிகளில் நீங்கள் பார்ப்பது ராக் இசை.  வாக்மேன் இசையைக் கேட்டு அந்த இளைஞனின் பின்னணி இசையை நீங்கள் கேட்பது இல்லை காரணம்  உண்மையில் நீங்கள் கேட்பது பொது நடைமுறை இசை.  அதாவது பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கையாளப்பட்ட மேற்கத்தியக் கலை இசை. பல்வேறு நூல்களைத் தொகுத்து வைத்திருக்கிறார்கள் இசை என்று கூறுவனவற்றை ஒரு நீர்த்த வடிவம் தான் அதனுடைய மதிப்பீடு என்பது உண்மை.

ஒரு  இனிமையான இசை காரணத்தால்,  மனிதனால் எழுப்பப்படும் ஒலிகள் என்று இசையை  வரையறுக்கலாம்.  மனிதனால் எழுப்பப்படுகின்ற என்பது காற்றின் கொஞ்சல்கள், பறவைகள் பாடுவதையும், இசைக்குறிப்புகள்  என்று உள்ளது.  சில சமயங்களில் நாம் மேடைப்பேச்சு அல்லது கவிதையின் இசைத் தன்மை பற்றிக் குறிப்பிடுகிறோம்.  ஒரு வரையறையின் முதல் பகுதி பேச்சொலி என்பது உண்மை ஆனால் நல்ல விடயங்களைக் கேட்பது என்பதற்கு அப்பால் இசை என்பது எவ்வளவு கூடுதலான சக்தியாக  இருக்கிறது. அதில் ஒலிக்கும் இசை என்ன,  அதன் வகை என்ன , அதனுடன்  அது எந்தவிதமான தொடர்புகளை உருவாக்கிக் கொள்கிறது என்பதே நாம் உற்றுநோக்க வேண்டிய கால சூழ்நிலையில் நின்று கொண்டிருக்கிறோம்.

இடத்திற்கு இடம் இசையின்  தன்மை மாறிக்கொண்டே வருகிறது.  ஒரு காலத்தில் உடைகள் போல அல்லது இப்போது உணவு வெளிப்படுத்துவது போல,  இசையும் அதன் சேர்க்கை ,கதையும் மிகவும் வேறுபடுவதால் மாநில  அல்லது தேசிய அடையாளத்தின் குறியீடாகச் செயல்படுகிறது.  நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறிய இனங்கள் அயல்நாட்டில் தங்கள் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சில சமயங்களில் தங்கள் மரபான இசையை இறுக்கப் பிடித்துக் கொள்கிறார்.  உலகம் முழுக்க பரவி வாழும் தமிழ் மக்கள் பாரம்பரிய நாட்டுப்புறக் கலையைக் கையில் எடுக்கின்றனர். எடுத்துக்காட்டாக வட அமெரிக்காவில் உள்ள கிழக்கு ஐரோப்பியச் சீன சமுதாயங்களைச் சொல்லலாம் ஆனால் இசை கட்டமைக்க உதவுவது தேசிய அடையாளம் ஒன்றை மட்டுமல்ல அதற்கான வடிவங்களையும் கட்டமைக்க முயலுகிறது. ஆனால்  அவர்கள் மத்தியில் இணைப்பை உருவாக்கும் காரணியாக இசை செயலாற்றியது ஆனால் முன்பைவிட இப்பொழுது இசை  தீவிரமாகச் செயல்படுகிறது.

நாட்டுப்புற கலை வளர்க்கும் கோடங்கி ...

ஜனரஞ்சக இசை வேகமாக தலைகீழாகின்றன இசையின் நிலையங்களைக் கேட்பவர்கள் அல்லது இசை இதழ்களை வாசிப்பவர்களுக்கு மட்டும்தான் இப்போதும் இந்த இசை இருக்கிறது,  இல்லை என்ற விஷயம் தெரியும்.  இதன்  விளைவு இப்போது இசையைக்  கேட்பவர்கள்,  கேட்காதவர்கள் என இரு பிரிவுகள் உள்ளன இன்றைய நிலையில் இசையை இளைய தலைமுறைக்கு,  முதியோர்களுக்கானது இருவருக்குமான ஒன்றாக மட்டுமல்ல இன்றைய நகர்ப்புற,  மேற்கத்திய அல்லது மேற்கத்திய மயமான சமூக வேறுபாடுகள் உள்ள இசைகள்  ஒன்றையொன்று  வெட்டிக் கொள்கின்றன என்று குறிப்பிடுகின்றார் இசை ஆய்வாளர் நிக்கோலஸ் கூக்.

உபகலாச்சாரங்கள்  ஒன்று கிடைக்கின்றது அதில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அடையாளம் இருக்கிறது. இன்றைக்கு எந்தவித இசையைக் கேட்பது,  என்பது யார் முடிவு செய்கிறார்கள் என்றால் நீ என்னவாக போகிறாய் என்பதைவிட நீ யாராக இருக்கிறாய் என்ற சூழலே  முடிவு செய்து பிறருக்கு அறிவிப்பதில் ஒரு இசை மதிப்பு  முக்கிய பகுதியாக உள்ளது.

உலகிலுள்ள கலாச்சார அடையாளங்களில்,  வடிவங்களில்  உள்ளடக்கிய ஒன்றுக்கு இசை என்ற மிகச்சிறிய சொல் போதாது. இசை  தான் எல்லா சிறிய சொற்களையும் போலவே அதிலும் அபாயம் இருக்கிறது.  நாம் இசை பற்றிப் பேசும்போது அந்த சொல் குறிக்கின்ற பொருள் ஒன்று இருக்கிறது என்று எளிதில் நம்பி விடுகிறோம்.  ஏதோ இசை நமக்குப் புரிந்துள்ள ஒன்று,  நாம் இசை என்று பெயர் வைக்கக் காத்திருப்பது போல அவரின் இசையைப் பற்றிப் பேசும்போது நாம் உண்மையில் பலவிதமான செயற்பாடுகளையும், அனுபவங்களையும் பற்றியும் பேசுகிறோம்.  அந்த செயற்பாடுகள் எல்லாவற்றையும் இசை என்று நாம் அழைப்பதால் தான் இசை  ஒரே விதமானவை என்று நாம் நம்புகிறோம்.

முச்சந்தி இலக்கியம்/Muchandi Ilakkiyam - Uma ...

ஒரு நூற்றாண்டில் தோன்றி அதே காலகட்டத்தில் நீர்த்துப் போன இசையையும் , அதன் மதிப்பையும் பார்க்கப் போனால் குஜிலி இசை பாடல்கள் காணக்கிடைக்கின்றன . இந்த குஜிலி இலக்கியம் பற்றி முதன்முதலாக விரிவான ஆய்வு செய்து ‘முச்சந்தி இலக்கியம்’ என்ற நூலை வெளியீடாகக் கொண்டு வந்தவர் பேராசிரியர் ஆ.ரா.வேங்கடாசலபதி. அதில், முதலில் குஜிலி இடப்பெயருக்கான காரணத்தை விளக்கமாக விவரித்துள்ளார்.

‘‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக முக்கிய அகராதியான வின்சுலோ அகராதி, ‘குச்சிலி’ என்பதற்கு   அந்திக்கடை’ எனப் பொருளுரைக்கிறது. இதனை அடியொற்றியே, ச.வையாபுரிப் பிள்ளையின் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியும் ‘குஜிலி’ என்பதற்கு ‘காண்க: குஜிலிக் கடை’ எனச் சுட்டி அதற்கு  அந்திக்கடை’ என்று பொருள் தருகிறது.

தல புராணம்-குஜிலி பஜாரும் ...

குஜிலி நூல்கள்:

மெட்ராஸ் ரயில் கலகம்

பஞ்சாப் படுகொலைச் சிந்து

இராவுத்தர் புகழ் அலங்காரச் சிந்து

சைதாப்பேட்டை ஆற்றில் பஸ் விழுந்த சிந்து

சென்னை வினோத சிங்காரப் பாட்டு

கள்ளப்புருசன் ஆசையால் பிள்ளையைக் கொன்ற கனகாம்பாள் துயரம்

அம்மாக்கண்ணு கொலைச் சிந்து, தென்னிந்திய தீவட்டி திருடன் பாட்டு

காசைக் கவரும் வேசி விலக்கு, கிண்டி ரேஸ் பாட்டு, அண்டாசீட்டுப் பாட்டு

வெள்ளசேதக் கும்மி, ஆதிதிராவிடன் பாட்டு, பாரதியார் பாட்டு பறிமுதல் சிந்து

சுயமரியாதைக் கும்மி, மகாத்மா காந்தி அரஸ்ட் பாட்டு

தென்னமரக் கும்மி

புறா பாட்டு

தேசமக்களை நாசப்படுத்தும் தேயிலைத் தோட்டப் பாட்டு

திருச்செந்தூர் இரயில்மார்க்க வழிநடைச் சிந்து

இராஜ விசுவாசக் கும்மி

கிண்டிரேஸ் பாட்டு

சிலோன் கலகச் சிந்து

காந்திச் சிந்து

பகத்சிங் சிந்து

மாப்ளாக் கலவரச் சிந்து

போதி: குஜிலி பஜார்

பொதுவாக `குஜிலி’ என்பது பெண்களை பாலியல் அடிப்படையில் மோசமாகக் குறிப்பிடும் ஒரு சொல்லாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், `குஜிலி’ என்பதற்கும் பெண்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குஜிலி என்றால், மாலை நேரம் என அர்த்தம். சென்னை மருத்துவக் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு தெருவில் மாலை நேரச் சந்தை நடந்துள்ளது. இங்குப் பேனாக்கள், பூட்டுகள், கடிகாரங்கள், விளக்குகள், உட்பட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் இங்கே திருட்டுப்பொருள்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்படி விற்பனை நடைபெற்ற இந்தப் பகுதி  `குஜிலி தெரு’ என அழைக்கப்பட்டுள்ளது. இது, சென்னையில் மட்டுமல்லாது புதுக்கோட்டை, திருச்சி, தூத்துக்குடி போன்ற பகுதிகளிலும் உள்ளது.

குஜிலி பஜாரில் விற்கப்படும் பொருட்களில் முக்கியமானது பாட்டுப் புத்தகங்கள்தாம். பாட்டுப் புத்தகங்கள் என்றவுடன், சினிமா பாடல்கள் என்று எண்ண வேண்டாம். அவை வேறு ரகம். சொல்லப் போனால், அங்கு விற்கப்பட்ட பாடல்கள் குஜிலிப் பாடல்கள் என்றே அழைக்கப்பட்டன. இன்றைய புதுக்கவிதையைப் போன்றும் கானா பாடல்களைப் போன்றும் அது தனி பாணியில் அமைந்த ஒரு வித இலக்கியமாகவே இருந்தது.

எந்தப் பொருள் புதிதாக அறிமுகமானாலும் அதைப் பற்றிப் பாட்டாக எழுதி இருக்கிறார்கள். நடப்பு நிகழ்வுகளும் சுடச்சுடப் பாட்டாக அன்று எழுதி விற்கப்பட்டுள்ளன. இந்தப் பாட்டுப் புத்தகத்தின் விலை வெறும் அரை அணாதான்.

Hindu Tamil தெரு வாசகம்: குஜிலிப் பாட்டுத் தெரு

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலைவர்களின் கைதுகளை ‘அரெஸ்டு பாட்டு’ என்ற பெயரில் உடனுக்குடன் பாடல்களாக எழுதி விநியோகித்துள்ளனர். தேச பக்தர்களுக்கு எதிரானவர்கள் தரப்பிலிருந்து ‘இராஜ விசுவாசக் கும்மி’ போன்ற சில பாட்டுப் புத்தகங்களும் வெளி வந்திருக்கின்றன.

இன்று நம்மிடையே இருக்கும் கானா பாடல்களைப் போன்று குஜிலிப் பாடல்கள் அன்று மிகவும் பிரசித்திபெற்று விளங்கின. அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இந்தத் தெருமுனைக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். 1960கள் வரைகூட இந்த வகைப் பாட்டுப் புத்தகங்கள் குஜிலி பஜாரில் கிடைத்து வந்தன.

எரிக்கப்பட்ட குஜிலிப் பாடல்கள் மதராஸ் ரெயில் கலகம், கிண்டிரேஸ் பாட்டு, சிலோன் கலகச் சிந்து போன்ற குஜிலிப் பாடல்கள் அப்போது மிகவும் பிரபலமாக இருந்துள்ளன. காந்திச் சிந்து, பகத்சிங் சிந்து, மாப்ளாக் கலவரச் சிந்து போன்ற பாடல்களால் இந்த வகைப் பாடல்கள் ஆங்கிலேயர்களின் வெறுப்புக்கு ஆளானது. பல்லாயிரக் கணக்கான குஜிலிப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆங்கில அரசால் எரிக்கப்பட்டன.

குஜிலி இலக்கியம் குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் அதை இப்போது தெரிந்து கொள்ளவேண்டியதன் தேவை குறித்தும் சென்னை பற்றிய வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர் நிவேதா லூயிஸ் குறிப்பிடுகின்றார்.இந்த இலக்கிய ஆய்வுக்கு, பேராசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதியின் `முச்சந்தி இலக்கியம்’ என்ற நூல்தான் மூல ஆதாரமாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டுப் பேசுகிறார்.

குஜிலி இலக்கியத்தை மீட்டெடுக்க ...
மொனாலி

குஜிலி இலக்கியப் பாடல்கள் சில அதில் குறிப்பிடப்பட்டிருந்த ராகத்தோடு மோனாலி பாலசுப்பிரமணியம் என்பவர் பாடுகிறார்.வெகுஜன மக்களின் பார்வையிலான வரலாறும் உண்டு என்பதையும், அவற்றை அவர்கள் பதிவுசெய்துள்ளார்கள். அப்படிப் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தி நமது வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும்போது இன்னும் முழுமையான வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு இசையின் தன்மைகளைக்  கொண்டு நாம் மதிப்பைச் செலுத்துகிறோம், அதிலும் ஒரு சார்பு இசை அரசியலை முன்னிறுத்துகிறோம். இசை மதிப்பு என்பது மிகப்பெரிய விளம்பரத்தின் பின்னணியில் சிக்குண்டு கிடக்கின்றது. இதற்கு  நம் மக்கள் இசையும்  விதி விலக்கல்ல.. இசை  நேர்மையோடு  பேசுவோம் !

 

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-9/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *