இசை என்னும் அரசியல் (பழங்குடிகளின் தனித்துவ இசை !) -14 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

 

ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசைகளின் வழியே ஒரு இசை பிறக்கிறது. அவை கருவிகளின் வழியே இசைக்கப்படும் போது வெவ்வேறு முறைகளில் இசையாய்  உண்டாக்கப்படுகிறது. இசை கேள்விக்கான பதில்கள் , மக்களின் உணர்வுகள், இசைக்கருவிகளின் வழியே வெளிப்படுத்துவது இசையின்  இயல்பு.

இசைக்கருவிகளின் வடிவங்களை ஏற்ப ஒலிப்புமுறைகளில் வேறுபாடு கொண்ட இசை வகைகள் அமைந்திருக்கின்றன. இங்கு பழங்குடி இன மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகளின் விவரங்களையும் செய்முறை, இயங்குமுறை, செப்பனிடும்  முறை ஆகியவற்றை  பார்க்கிற பொழுது அவர்களுக்கான கலை வடிவங்களை இசை தன்மைகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக அமைகிறது.

இசைக்கருவிகள் இணைந்த நிலையில் அவற்றின் தன்மைகளை, அடிப்படை கருவிகள், துணைகருவிகள் என்ற வகையில் விளங்கிக்கொள்ள முற்படுகிறது.  இசைக் கருவிகளின்  இயங்கு முறைகள் காட்ட, அசைவு கூறுகளுக்கும் உள்ள தொடர்பு, அதன் நிலைபாடு, மக்களோடு பொருந்தி காட்டப்படுகின்றன இப்படி இசை  வளர்ச்சி நிலைகள் பற்றி பல்வேறு உலகலாவிய பல ஆய்வுகள் நமக்கு கிடைக்கின்றன.

பழங்குடியின மக்களின் இசைக் கருவிகள் கொண்டு இசைக் குறிப்புகளை மட்டும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வர்கீஸ், எட்கர் தர்ஸ்டர், பிரிக்ஸ், ஆகிய அறிஞர்களும். பிலோ இருதயநாத்,சு. சக்திவேல் கே. ஏ. குணசேகரன் போன்றவர்களும் பழங்குடி இன மக்களின் இசைகளை பற்றி பல்வேறு செய்திகளை நமக்கு தருகின்றன.

மீட்டெடுக்கப்படுமா ...

சச்சிதானந்தம் ஆகியோர் இணைந்து எழுதிய நூல் அதுபோன்று டாக்டர் நவநீதகிருஷ்ணன், கே.ஏ.குணசேகரன் ஆகியோர் இணைந்து எழுதிய கிராமிய நடனங்கள் பற்றிய நூல்கள். டாக்டர் ராமசாமி, டாக்டர் அறிவுநம்பி ஆகியோர் கூத்து பற்றிய ஆய்வு நூல்கள் ஆகியவற்றின் தமிழர் போர் கருவிகள் பற்றிய ஆளவந்தாரின் நூலிலும். நாட்டுப்புற இசைக் கருவிகள் பற்றிய பல்வேறு விதமான தரவுகளை நாம் பெற முடிவதாக டாக்டர்.குணசேகரன் அவருடைய ஆய்வு புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னோடிகள், பழங்குடியின மக்களின் இசை பற்றி ஆய்வுகள் நாம் செய்கிற பொழுது குழல்  இசைக்கருவி, தோல் இசைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி என்ற இசைக்கருவியின் வகைகளைப் பற்றி செவ்வியல் இலக்கியங்களின் அடிப்படையில் காணப்படுகிறது.

பழங்குடிகள் பெரும்பாலும் தமக்கென்று ஒரு தனித்த அடையாளத்தை இசையிலும்,சடங்குகளிலும், வாழ்க்கை முறைகளிலும் கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் தரைதளத்தில் வாழுகிற மக்களை காட்டிலும் மலையின மக்களின் வாழ்க்கை முறை என்பது பழங்கால வாழ்க்கை முறையாக தோன்றுகிறது. அவர்கள் பெரும்பாலும் வேட்டைத் தொழில், மீன்பிடித்தொழில், வேளாண்மை, தோட்டப்பயிர்கள் போன்ற தொழிலை அடிப்படையாகக் கொண்டு தங்களுடைய வாழ்வியலை நகர்த்தி வருகின்றனர்.

அவர்களின் மொழிகளில் கலப்பு இருப்பதாக உலக சமூகங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது வைக்கப்பட்டு வருகின்றது. மொழி என்பது ஒரு குறியீடாக இருந்தாலும் கூட அவர்களுடைய மொழியில் ஆதி மொழிகள் இருப்பதாய்    அவர்களிடத்தில் நாம் பார்க்க முடிகிறது. நிலத்தோடு, காடுகளில், மலைகளில், கடல் புறங்களில், பழங்குடியின மக்கள் உலகளாவிய இருக்கக்கூடிய நிலப்பரப்பில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மொழி ஒரு தனித்த அடையாளத்தை, ஒரு முற்றுப்பெறாத இசை வடிவம் உடைய சொற்களாகவே இன்றும் தோன்றி வருகின்றன. எப்படி ஒருவருடைய தாய்மொழியில் தங்களின் இசை கலந்திருக்கிறது என்று நிக்கோலஸ் கூக் குறிப்பிடுவதைப் போல, பழங்குடியின மக்களின் மத்தியிலும் அவர்கள் பேசுகிற தாய் மொழியில் இருந்து தான் அவர்களுடைய மொழி கட்டமைக்கப்படுகிறது, அவர்களுடைய இசை கட்டமைக்கப்படுகிறது. நிலப்பரப்பில் வாழ்கிற சமூகங்களைக் காட்டிலும், சற்று வித்தியாசமான சொற்களையும், இசைகளையும் பழங்குடிகளிடத்தில் பார்க்க முடிகிறது. அப்படித்தான் இசைக்கருவி தான் சூழலுக்கு ஏற்ப இங்கு முழக்குவதை காண்கின்றோம்.

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி ...

ஆப்பிரிக்கா பழங்குடியினர், ஆஸ்திரேலிய பழங்குடியினர் என்று தங்களை ஒரு இசையின் அடிப்படையில் நிலைத்த அடையாளத்தை கட்டமைத்துக் கொள்கின்றனர். இந்த இசையை வாசிக்கிற பொழுது அவர்களின் ஆதியை  நாம் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் மொழிக்கலப்பு  இல்லாதவர்கள், சடங்கில் கலப்பு இல்லாதவர்கள்,  வெளி உறவுகள் இல்லாதவர்கள். ஆனால்  அவர்கள் நாகரீகமற்ற வாழ்கிறார்கள் என்று சொல்கிற இச்சமூகத்தில், இயற்கை சூழலோடு பின்னிப்பிணைந்து வாழக்கூடிய சமூகங்களாக, பழங்குடி இன சமூகமும், அவர்களின் இசைகளும் நமக்கு தரவுகளாக கிடைக்கின்றன.

தமிழக பழங்குடியினர் மத்தியில் பல்வேறு திசைகளிலும் இசை குறிப்புகளையும், இசைக்கருவிகளையும் நாம் காண்கின்றோம். நரம்பிசைக் கருவியை தவிர, மற்ற  எல்லா இனக்குழு மக்களிடத்திலும் நாம்  தோல் இசைக்கருவியை பார்க்க முடிகிறது. பெரும்பாலும் நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பழங்குடியின மக்கள் ஒரு தனித்த அடையாளத்தோடு, தன்னுடைய இசையை பேணி வளர்ப்பதை  நாம் பார்க்க முடிகிறது.

குறிப்பாக கோத்தர் இன மக்களிடம் குழல் இசை கருவியான குழல் வாத்தியம் காணப்படுகிறது. “பீக்கி” என்றும் குழல் என்றும் தமிழில் கூறுகின்றனர். இதே  இசைக்கருவியை இருளரும் மத்தியிலும் காணப்படுகிறது. தோலிசைக் கருவிகள் முழவு இசைக்கருவி உள்ளது அக்கருவியை  இரு இணக்குழுவும்  பயன்படுத்துகின்றனர். மத்தளத்தை “பர்” என்கின்றனர் மத்தளம் என்கின்றனர். முழவு இசைக்கருவி அவர்கள் “தம்பட்டை” எனும் ஒரு தோலிசைக் கருவிகள் பயன்படுத்துகின்றனர்.அவர்களின்   மொழியில் “தபட்க்” என்றும் கோத்தர்கள் பயன் படுத்துகின்றனர் .  அதேபோன்று இருளர் இனத்தில்  அவர்களிடத்தில் பல்வேறு  தோல்கருவிகள்  இருப்பதாக சொல்லப்படுகிறது.  பானை கொண்டு இருபுறமும்  தோலில் மூடப்பட்டு “பொரெ ” இசை கருவி என்று சொல்லுகின்றனர் இது “கும் கும்” இசையை தருவதால் ‘கும் பொரெ’ இசை கருவி என்று பெயர் கொண்டுள்ளது. ஒரு கருவியை குறிப்பிடுகின்றன வார்த்தையில் இருந்து அதன் பெயர் அமைகின்றது என்று கூறுகின்றனர். இப்படி  மக்களுக்கு மத்தியில் பல்வேறு வித்தியாசமான இசை வார்த்தைகளில் நாம் நிறைய இசை வாத்தியங்களை பார்க்க முடிகிறது.

பழங்குடி இசையில் தம் இசை மரபினை புதுமை படுத்தி காண முயற்சிக்கலாம்,ஆனால்  ஒரு வட்டாரத்தில் மரபு அருகிலுள்ள வட்டாரங்களிலும் காணமுடியாது.  அதனடிப்படையில்  இசையின் பரவல் முறையை புரிந்து கொள்வதாகும். இசை மரபினை காணும் போது, இசையினுடைய  முறைகளை கொண்டும், இசை பிறருக்கு விளங்கும் முறைகளை கொண்டும் இவ்வாறு இசையை, இசை மரபை  கணிக்கலாம். இசை உருவாக்கப்படும்  இசைக்கருவியில் இருந்து வெளிப்படும் இசை முறைகளையும், அதன் வேறுபாடுகளை அறிவது, இசையை நாம் எளிதில் புரிந்து கொள்வதற்கு சான்றாக அமையும்.

தமிழக பழங்குடியினர்களின் இசை நடன ...

பழங்குடிகள்  இசை மொழியில் ஆட்டம் ஆடுவதற்கும், இசையை லயத்து இசைப்பதற்கும், துடிப்பான தாள வாசிப்புக்கும், அமைதியான இழுவை நடையிலும் அவர்களின் இசை காலப் பிரமாணம் அறிய முடியும் என்று செவ்வியல் இசையில் கூறப்படுகிறது.

‘ ஓய்  ஓய் ஓய்

ஓய்  ஓய்  ஓய்’

எனும் இசை குறிப்பானது கலைஞர்கள் ஆடும் பொழுது துடிப்பு நிலை பெறுவதற்கு ஏதுவாக அமைகிறது. மேலும் அதனை ஒரு குறிப்பு போல சொல்லாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் அந்தச் சொல்லாடல் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால்  கால்நடைகளைப் பராமரித்து  வளர்க்கும் பொழுது  இதே சொல்லாடல்களை அவர்கள் தின்தோறும் தொடர்புக்கு பயன்படுத்துகிறனர் என்பதை  பார்க்க முடிகிறது.

குறிப்பாக தோடர்களில் பாடல்களை,  ஆட்டம் அல்லாத பாடல்கள் என்று வகைப்படுத்துகின்றனர். ஒரு தனித்த அடையாளத்தை பளிச்சென்று காட்டுவதற்கு ஏற்ப ஒலிப்புமுறை அமைகிறது. அதேபோல பாடல், இன்னிசை இதை வெளிப்படும் இசை வகைகள்  எல்லாம் வேறுபடுகிறது.

அதேபோல் கோத்தர்கள் இசையிலும் பல்வேறு சொல் கட்டுகளை நாம் காணமுடிகிறது. இவர்கள் இசை வாசிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். தங்களது ஆட்டத்திற்கு இசைக்கருவி கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய கதைப்பாடல்கள் வேறு, ஆட்டம் இல்லாத  பாடல்களும் உள்ளன என்ற முறையில் கீழ்கண்ட முறையில்  குழல்  வாத்தியம் வாசிக்க “லாலி லாலில் லே”  தமிழக சூழலில் இது போன்ற பல்வேறு இசைக் குறிப்புகளை நம்மால் எடுத்துக்காட்டாக கூறமுடியும். காணி பழங்குடியினர், கோத்தர், தோடர்கள், இருளர்,முதுவன் என்று 34 பழங்குடியினரை நம்முடைய தமிழகத்தில் நாம் பார்க்க முடிகிறது. அதேபோல இந்தியாவில் பழங்குடியினர் என்ற எண்ணிக்கை குறைந்துகொண்டு வரும்  சூழலில் அவர்கைளினுடைய  பண்பாடும், கலாச்சாரமும், தனித்த இசை தன்மைகளும், அழிந்து  கொண்டு வருவது வருத்தத்திற்குரியது.

பழங்குடியினரின் இசையில்; ஒரு இசை தூய்மையை பார்க்கிறோம், காரணம் அவர்கள் நிலப்பரப்பில் வாழுகிற சமூகங்களை காட்டிலும் அவர்களுடைய சூழலுக்கு ஏற்ப அவர்களே ஒரு இசைக்கருவியை, வாத்தியங்களை,  வாசிப்புமுறைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள் அல்லது பின் தொடர்ந்து வருகிறார்கள். சிறிய வயது முதல் பெரியவர் வரை ஒரு கலை வடிவத்தை அல்லது ஒரு இசை வடிவத்தை ஒரு கிராமமே கற்கக்கூடிய பண்பை பழங்குடி சமூகத்தில் வியப்பாக பார்க்க முடியும்.

Góral z bumerangiem

தினம்தோறும் கூடி தங்களின் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்ளுகிற தளமாக தங்களுடைய கிராமத்தில் உடைய சாவடியை பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவர்களுடைய இசையிலும், நடையிலும் ஒரு தனித்துவத்தை, அடையாளத்தை நாம் தொடர்ந்து கவனிக்க முடியும். அதேபோல் சமத்துவத்தையும், சமபங்கு, உரிமை , பொறுப்பு , நிறைந்த   சமூகமாக பழங்குடி சமூகத்தை நாம் முன் நிறுத்த முடியும். அவர்களின் ஆட்ட வடிவங்கள் நடன அசைவுகள் எல்லாம் விடுதலையை, கூட்டு முயற்சியை, சமதர்மத்தை போதிப்பதாக இன்று வரையில் அமைந்திருக்கிறது.

பழங்குடி இன மக்களின் ஆய்வுகள் என்பது இன்றைக்கு அரிதாகி போனது. அவர்களிடத்தில் எளிதில் அவர்களோடு பயணிக்க முடியாது என்பதால் பல்வேறு எதிர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக நாட்டுப்புறவியலும், பழங்குடியினர் இசையும் பழமைவாதம் பேசுகிற இசை மரபு என்கிற தன்மையை செவ்வியல் இசை முன்வைக்கிறது.

அது காட்டுமிராண்டிகள் இசை, ஒரு ஒழுங்கு நிலை அற்ற இசை, ஆசிரியர்கள் இல்லாத இசை என்றெல்லாம் ஒரு இசையின் மீது விவாதத்தை வைக்கின்றனர். குறிப்பாக இவர்களுடைய இசை நுணுக்கங்களை நாம் உற்று நோக்குவோம் ஆனால் அவர்களுடைய குலமரபு, பழைய பண்பாட்டை, கலாச்சாரத்தை, சடங்கியல் வாழ்க்கைமுறையை நாம் அறிவதற்கு பழங்குடிகள்  இசை ஏதுவாக இருக்கிறது.

கீர்த்தனைகளில், தாளம் முறைகளில் ஒரு ஓரத்தில் ஒரு லயத்தில் அடைத்து வைத்தார் போல இருக்கக் கூடிய ஒரு இசை மரபை ஆசிரியர்கள் பயிற்றுவித்த பிறகு கற்றுக்கொண்டு அதை ஒப்புவிக்கும் இசை மரபை தூக்கி பேசுகிற இச்சமூகம். இயல்பாகவே ஒரு இசைக் கலையை வளர்த்தெடுக்கும்  முன்னோடி  சமூகங்களை இவர்கள் புறம்தள்ளி வருவதை கவனத்தில்  எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பல காரணங்களை நாம் கூற முடியும் சமூகத்திலிருந்து, பொருளாதார மேன்மை அடைந்து ஒரு பணியை அல்லது ஒரு நிரந்தர ஊதியத்தை பெறக்கூடிய பணியை பெறுகிற பூர்வகுடி  சமூக மக்கள், அவர்கள் ஏன் அவருடைய இசையில் ஆய்வுகளை மேற்கொள்வது இல்லை என்று கேள்வி எழுப்புகிறது இச்சமூகம்.

மானுடவியல் அறிஞர்கள், நாட்டுப்புறவியல் அறிஞர்கள் அவர்களுடைய பண்பாட்டை, இசை மரபை ஆய்வு செய்வது என்பது இன்றைக்கு ஒரு சடங்கியல் முறையாக மாறிப் போயிருக்கிறது. இதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் அதற்கு ஒரு வழி குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து ஒரு மீள் எழுச்சி வந்தால் மட்டுமே தங்களின் சமூக அங்கீகாரத்தை நாம்  நிலைநிறுத்த முடியும். அதற்கான அரசியல் முன்னெடுப்பாக  இசையை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-12/

தொடர் 13ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-13/