இசை என்னும் அரசியல் (பறை பேசும் அரசியல்!) -15 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

 

சங்க இலக்கியங்களில் பறை, ‘பறை’ என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். ‘பேசு’ எனப்பொருள்படும் ‘அறை’ என்ற சொல்லினின்று ‘பறை’ தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி ‘பறை’ எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம். கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம். பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையரின் தொழிலாகவும் அமைந்தது. 

பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் ‘பறை’ பயன்படுத்தப்பட்டவரலாறு உண்டு. எந்த ஒரு ஆதாரங்களும் இன்றி இசை கருவியை, இசைக்குறிப்பு பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போவது மிக குறைவு . அந்த இசை பாரம்பரிய வரலாற்றை பற்றது பேசுவது  குறித்து தங்களின் கருத்தை முன்வைக்கின்றனர். தமிழர்களுடைய தொன்மையான வாழ்வில், பல்வேறு காலகட்டங்களில் அவர்கள் பயன்படுத்திய இசை குறித்தான குறிப்புகளை,அவர்கள்  பயன்படுத்திய இசைக்கருவிகள் குறித்தான தகவல்களை நாம் நம்முடைய இலக்கியங்களில் இருந்து எடுத்துக் கொள்கிறோம்.

 “பறை” என்கிற இந்த சொல்லாடலை இந்திய தத்துவ மரபில் பெரிதும் பயன்படுத்துகிற இனக்குழு தமிழர்களே! நாம் கூர்ந்து கவனித்தால்  பறையர் என்ற இனக்குழுவாள் பயணம் செய்கின்றது. தமிழகம் மட்டுமல்லாது இந்திய முழுக்க பரவிக் கிடக்கக்கூடிய  தொல்குடி சமூகங்களின் தோலிசைக் கருவிகள் அதிகம் காணப்படுகின்றது.  அவற்றை இனம் காணுவது எளிதாக இருகின்றது. இங்கு இசைக்கான ஆதி தரவுகளை மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து எடுத்துக் கொள்வதற்கும் வாய்ப்புகள் குறைவாக தென்படுகிறது காரணம் மண்ணின் இசையை ஒட்டிய பாரம்பரியத்தை பின்தொடர்ந்து வரும் சமூகங்கள் தான் பெரும்பாலும் இப்பணியைச் செய்து கொண்டிருக்கின்றது.  அந்த வகையில் இசையோடும், தோல் இசைக்கருவிகளுடன் ஒத்து வாழ்கின்ற  சமூகங்களை பற்றித்தான் நாம் பேச முடியும்.(பிழைப்புக்கு தேடிக்கொண்டவர்களை அல்ல). 

பறை ஆட்டம் - Parai attam

 வாழ்வியல் கூறுகளுடன் பறை

  • குறிஞ்சிப்பறை, 
  • முல்லைப்பறை,
  • மருதப்பறை,
  • நெய்தற்பறை, 
  • பாலைப்பறை                                               

என ஐய்ந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. ‘பறை’ என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது என தொல்காப்பியம் கூறுகிறது. 

மிடரிசை (தோலிசை வாத்தியங்கள் )  திருமுறைகளில்  70 இசை வாத்தியங்களை குறிப்பிடுகின்றனர், 72 பறை வகைகளை குறிப்பிடுகின்றனர். பறையின்  வடிவங்கள், பறை இசைக்கான தாள  வகைககள், பறையின் வட்டார அடையாளங்கள் இரண்டாக வகைப்படுத்த முடியும்.

. வடதமிழகம்    

. தென் தமிழகம் 

தென்தமிழகத்தில் இதுபோன்று பறைஇசையை பல்வேறு பெயர்களில் அழைத்து வருகின்றனர். குறிப்பாக கொட்டு, தப்பு, தப்பு கட்டை என்ற சொற்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் இசை வடிவமாக காணப்படுகின்றது. அவர்களுக்கான இசை தொடர்பில் கருவியாக பறை  பேசப்படுகிறது. மன்னர்களின் காலங்களில் அறிவிப்புகள்,மக்கள் கூடுகைக்கான   கருவியாக நிலை பெறுகின்றது. 

நூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு | வினவு

“பறை இசை” என்கிற சொல் ஒரு பொதுப் பெயராக தமிழக சூழலில் காணப்படுகின்றது. தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் வாழக்கூடிய தமிழர்கள் சாதி, மதம், உயர்வு தாழ்வுகளை கடந்து அனைவரும் இந்த சொல்லாடலை பயன்படுத்துகின்றார். தமிழகச் சூழலில் ஆனால் இந்திய சமூக கட்டமைப்பில் ஊர், சேரி என்ற பிரிவில் பறை இசை ஒரு தீட்டுக்கருவி என்று நிலைபெற்றிருக்கிறது.

 ஆனால் தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் பறை மேளம், சட்டி மேளம், பறைச் சேரி, பலகை, வெட்டியான் மேளம், சாவு மேளம், ஒப்பாரி மேளம்,என்றும் அழைத்து  வருகின்றனர்.  பெரும்பறை, சிறுபறை என்ற வழக்கத்தை தமிழகத்தினுடைய மையப் பகுதி விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் போன்ற பகுதிகளில் இச்ச்சொற்களை நாம் கேட்க முடிகிறது. கோவை போன்ற பகுதியில் முழவு மேளம், மத்தளம், மண் மத்தளம் பறை கருவிக்கான  வேறு பெயர்களாக இந்தப் பகுதியில் காணப்படுகிறது.

இசை வகைப்பாடு என்பதில் இருந்து, கலைஞர்களின் வகைப்பாடும்  ஒரு கால கட்டத்தில்  எடுத்துக்கொண்டனர். அதற்கான வகைப்படுத்தல் அவசியமாக கருதப்படுகிறது. இசை  என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஒரு பண்பாட்டை எடுத்துச் சொல்வது மட்டுமல்லாமல் இசை வளர்ச்சிக்கான பணியையும் அவை செய்கின்றன.  இந்த வகையில் கலைஞர்களை பாரம்பரிய கலைச் கலைஞர்கள், தொழில் கலைஞர்கள், பறை  ஆர்வலர்கள் என இன்றைக்கு தொழில் கலைஞருடைய கலை சுரண்டலை, வாழ்வாதாரத்தை இழக்க செய்கின்றானர்.  குறிப்பாக ஆர்வலர்கள் தங்களுடைய பங்களிப்பை செலுத்தி பறை இசையை எடுத்துக்கொண்டு  பல்வேறு கருத்துக்களை முன்வைத்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் பாரம்பரிய கலைகளில் உள்ள பண்பாடு என்பது பொருளாதார  நுகர்வு கலாச்சாரத்தை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கிறது.

 கலைஞர்கள் அவர்களுடைய மரபை மறந்து முற்றிலுமாக தொழில் முனைவு கலைஞர்களாகவே தங்களை பிரதிபலிக்க  செய்துகொண்டு வருகின்றனர். வழக்கமாக  நாட்டுப்புற இசை என்பது ஆசிரியர் அற்றது, மரபுவழி, இன தொடர்ச்சி என்று சொல்லப்படுகிறது. ஆனால் மேன்மை சமூகம்  பறையிசை என்கிற இசையின் மீது பல்வேறு தரப்பட்ட இசை கூறுகளை இங்கே புகுத்திக்  கொண்டிருக்கிறது. வாய்ப்பாட்டு முறையில் சொல்லுகிற பழக்கத்தை நம் முன்னோர்கள் பெற்றிருந்தார்கள். குறிப்பாக தமிழ் சார்ந்த சொல்லாடல்களை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் டாக்டர் கே.ஏ குணசேகரன் அவர்கள் ‘தன்னானே’ என்று தன்னுடைய சொல்லாடல்களை  தொடர்ந்து பதிவு செய்து வந்தார்.

பறை இசை கலைஞர்களின் வாழ்க்கையை சொல்கிறார் எடிட்டர் லெனின் - Editor Lenin to  speak about Parai music

பாரம்பரிய கலைஞர்கள் தங்களுடைய மூல ஆதாரமாக இருக்கக்கூடிய கலைகளை இசை பணியை விட்டு வேறு தொழிலுக்கு நகர வேண்டிய கால சூழ்நிலை இதுபோன்று இருட்டடிப்பு செயலை  பறை ஆர்வளர்கள்   செய்து வருகிறகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அழகர்சாமி வாத்தியார் இருபதுக்கும்  மேற்பட்ட இசைக் கருவிகளை, ஆட்ட கலைவடிவங்களை ஆர்வமாக சொல்லி தர முன்வந்ததாக சொல்லப்படுகின்றது.  பாடல், இசை, நடனம் நாட்டுப்புற கலை வடிவங்களை அவர் மக்களுக்கு முன் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்ததாக கூறப்படுகின்றது. 

இன்றைக்கு இருக்கக்கூடிய கலைஞர்கள் நடுநிலை வாதிகள் குறிப்பாக தொழில் கலைஞர்களாக மாறி வருகின்ற சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. கலை பண்பாட்டுத்துறை ஒரு தகவலை கூறுகின்றது பாரம்பரிய கலைஞர்கள் பதிவு செய்வதை காட்டிலும், ஆர்வலர்களும், தொழில் முனைவோர் கூடுதலாக பதிவு செய்திருப்பத அரசு தகவல் தருகிறது.

பறை என்னும் “இசை வாத்தியம்” இந்த சூழலில் பறை இசை என்கிற வடிவம் அடையாளமாகப் பார்க்கப்படுகிறதா  அல்லது கலை வடிவம் என்கிற முற்றுப்பெறுகிறதா? அடையாளம் என்பது பாரம்பரியமாக, தங்களின் இனகுழுவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பறையர் இனக்குழு தங்களின் அடையாளமாக கருதுகிறது. மற்ற குழுவினர்கள் பறைஇசை வடிவத்தை கலைவடிவமாக பார்க்கின்றனர். அவர்கள் தங்களுடைய கருத்துக்களை பரப்புரை செய்வதற்கு, மக்களை ஒருங்கிணைக்க ஒரு பண்பாட்டு கலை வடிவத்தை  கலை வடிவத்தை தேடி வருகின்றனர்.   வேண்டும் என்கிற கட்டாயத்தில் பல்வேறு மேடைகளில் நாம் இன்று காண்கிறோம். ஒடுக்கப்பட்டவர்கள் மேடைகளில், தமிழ் தேசிய மேடைகளில், பொதுவுடமை மேடைகளில் நாம் தொடர்ந்து காணமுடிகிறது. பெரும்பாலான கலைகளை நிகழ்த்துக்  கலைஞர்கள் கலை வடிவமாக பார்க்கின்றனர். அதனால் கலைஞர்களின் உணர்வை இவர்கள் அழிவு பாதையை  நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கின்றனர். இன்றைய தமிழகச் சூழலில் கலப்புகளும், மாற்றங்களும் உண்டாக்கியிருக்கிறது.  

பறை அடுத்த தொடரில் பேசும் …..

பறை ஓவியம் | பென்சில் ஓவியங்கள்

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-12/

தொடர் 13ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-13/

தொடர் 14ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-14/