“ஒரு மனிதன் பிறக்கின்ற பொழுது சாதி என்ற முத்திரையோடு பிறக்கின்றான், அவன் விரும்பினாலும் விரு பாவிட்டாலும், அவன் பிறந்த சாதியை அவன் மாற்றிக்கொள்ள முடியாது”.ஆனால் ஒரு இனக்குழுவின் கையில் இருந்த இசை மரபும் அப்படித்தான் இருக்க முடியம். இசை தூய்மையை, இசைக்கலப்பை பேசினால் இசை பேதம் பேசப்படுகின்றது என்ற கருத்து முன் வைக்கப்படுகின்றது. பறை இசையின் ஆய்வுகள் உலகம் முழுவதும் துவங்கி இருக்கிறது. ஆகவே கழுகு பார்வையில் பறையிசையை பார்க்கவேண்டிய சூழல் இன்றைக்கு உருவாகி நிற்கின்றது.

இயக்கம் என்பது இயங்கிக்கொண்டு இருந்தால் தான் அது இயங்கியல் விதி, அமைதியாக இருந்தால் அருங்காட்சியகத்தில் இருக்கவேண்டியது தான்! அப்படி இயக்கின்ற பொழுது பல்வேறு திசை வழிநோக்கி தன் பயணங்களை துவங்கி இருக்கிறது பறையிசை. அதில் சிதைவுகளும், மடை மாற்றங்களும் கட்டாயம் நடை பெரும், ஒரு வேலை காணாமல் கூட போகலாம். இதில் இருந்து ஒரு வரலாறு கட்டமைக்கப்படுகின்றது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். பிற இசை மரபுகளில் இல்லாத அளவுக்கு இங்கே கருதியால் , தத்துவம் என்ற பெயரில் மடைமாற்றம் செய்யும் செயலை நாம் கண்டிக்கின்றோம். இசை வாசிப்பதில் பகுப்பாடு காட்டும் சமூகம் இதில் மேன்மை அரசியலை முன்வைத்துதான் தொட்டு , பழக , இசைக்க துவங்குகின்றனர்.

இங்கே சிக்கல் என்ன வென்றால் தமிழ் சமூகத்தில் இசைக்கான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் இருந்து தான் நமக்கு கிடைக்கின்றது. “பறை” என்ற சொற்கள் இலக்கியங்களில் பல இடங்களில் காண கிடைப்பதால், இப்போது இசையை விட்டு பறையர் சமூகத்தை கேள்விக்கு உப்படுகின்றனர் அவர்கள் தமிழர்கள் இல்லை, அவர்கள் மூவேந்தர்களின் கீழ் வரவில்லை என்ற கருத்தை மையப்படுத்தி அப்பொழுது அவர்கள் இசைக்கும் இசை எப்படி தமிழரின் தொல்குடி இசையாக இருக்கமுடியும் ? என்று பட்டியல் சமூகத்துக்குளே ஒரு சாதி பேசுகின்றது.

இதே பறை இசை கருத்தியல் பரப்புரைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது பள்ளர், பறையர், அருந்ததியர் என்ற மூன்று சமூகங்களுக்கு உள்ளேயே ஒரு இன பாகுபாட்டை, இசை பாகுபாடுகளை, ஏற்றத்தாழ்வுகளை பார்க்க முடியும். இங்கே பட்டியல் சாதிகளாக இருக்கிற மற்ற சாதிகள் எல்லாம் “ஊருக்கு ஒருக்குடி” இன்றளவிலும் பார்க்கப்பட்டு வருகிறது. அவர்களை இச்சமூகம் அடிமைச் சமூகமாக தான் பார்த்து வருகிறது. அவர்களின் இசையை கணக்கில் கூட எடுத்துக் கொள்வதில்லை காரணம் பல அரசியல் பாகுபாட்டை சமூகம் கட்டமைக்கின்றது.

இறை இசையாக இருந்த பறை இசையின் வரலாறைத் தெரிந்துகொள்ளுங்கள் ஐயன்மீர்! – THE  TIMES TAMIL

இன்றய சூழ் நிலையில் பெரியார் இயக்கங்களின் தங்களுடைய கருத்து பரப்புரைக்கு பறை இசையை பயன்படுத்துகிற சமூக சமத்துவ முன்னோடிகள் அவர்களின் மனதிலும், ஒரு சாதிய மனப்பான்மையை கொண்டதாகவே உணர முடிகிறது. ஒருவர் குறிப்பிட்ட இனக்குழுவை அல்லது இசைக்குழுவை சிந்தையாளர்களிடத்தில் அறிமுகம் செய்து வைக்கிற பொழுது அந்த முன்னோடி சொல்கிற வார்த்தை நம்முடைய பிள்ளைகள் இப்பொழுது இதே இசையை கையில் எடுத்து விட்டனர் என்று ஒரு கருத்தை முன்வைத்து வருகின்றனர். சமூக, சமத்துவம் பேசினாலும் கூட சாதி என்கிற உளவியல் ஊடாட்டம் செய்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ் தேசிய இயக்கங்கள் மொழியின் அடிப்படையில் பார்க்க முற்படுகின்றது. தலித் இயக்கங்கள் இசையை அடையாளமாக பார்க்கின்றது. பொதுவுடைமை மேடைகளில் பாடல்களோடு சேர்ந்த துணை இசையாக பார்க்கின்றனர்.இஸ்லாமியர்கள் இசையை போதனையாக பார்க்கின்றனர். இதுபோக மொழி பிரிவினையை நாம் பறை இசையோடு ஒப்பிட்டு பேச முடியும் என்ற வாதமும் வருகின்றது. இதை தவிர்த்தால் சமூகங்களின் அரசியல் எதிர் கொண்டு நிற்கின்றது.

தாழ்த்தப்பட்ட பட்டியல் இன சமூகங்கள், அனைத்து சமூகங்களும் இந்த பறை இசையை வசிப்பதில்லை , இனக் குழுவிற்கு ஏற்ற இசைக் கருவிகளோடு அவர்கள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக வட தமிழகத்தில் “வெட்டியான்” என்கிற ஒரு சமூகம் சாவு வீடுகளில் பறை வாசித்து, பிணங்களை எரிக்கக் கூடிய பணிகளை செய்து வருகின்றனர். இங்கே பறையர் என்கிற சாதியை சார்ந்த இசைக்கலைஞர்கள் கொண்ட பணி என்பது வேறு. தென் மாவட்டங்களில் அருந்ததியர் சமூகங்களில் இன்றைக்கு பறை இசையை தன்னுடைய வாழ்வியலாக அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் தோல் பதனிடும் வேலைகளை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இப்படித்தான் தமிழகச் சூழலில் இசை மீதான அரசியல் பார்வை என்பது பல்வேறு அடுக்குகளாக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. இசையின் ஊடாக ஒரு இனப் பெருமையை தனக்கு கீழாக இருக்கக்கூடிய சமூகங்கள் பெற்று விடக்கூடாது என்பதற்காக இந்தப் பட்டியல் சமூகங்களில் உயர்வாக கருத க்கூடிய குறிப்பிட்ட சமூகங்கள் இன்றைக்கு தங்களை மேன் மக்களாக அறிவித்துக் கொள்கின்றனர் என்பதும் அரசியல் தான்.

திணை சார்ந்து நிலங்களும், இனக்குழுக்களும், அவர்களின் இசை பண்பாடும் வெவ்வேறு வகைப்படுத்தி பார்க்க முடியும். இந்த அரசியலில் பழங்குடி இசையை இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை பட்டியலின சாதிகளும், பழங்குடி சாதிகளும் பெரும்பாலும் இசையோடு, பாடல்களோடு செயல்பட்டு வருவதை தமிழக சூழலில் நாம் பார்க்க முடியும். இன பெருமையை இசையில் பேச முடியாது, அப்படிப் பேசினால் இசைக்கான அரசியலாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை கடந்து பல்வேறு மாநிலங்களில் பறை, தென் மாநிலங்களில் இது போன்ற இசைக்கருவி காணப்படுகிறது, பயன்படுத்தியும் வருகின்றனர். அவர்கள் பயன்படுத்துகிற பெயர்களை தமிழகத்தில் இருக்கக்கூடிய கலைஞர்களும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தென் இந்திய கலை, பண்பாடுகளில் இசை வெளிப்பாட்டை காணமுடிகின்றது. அவரவர் மாநிலத்திற்கு தனித்த அடையாளம் கொண்ட பாரம்பரிய கலை வடிவத்தை முன் நிறுத்திக்கொள்ள தங்களின் இசை பாரம்பரியத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.

கர்நாடகத்தில் டொல்லு குனிதா, கேரளத்தில் செண்டை மேளம், ஆந்திர மாநிலத்தில் டப்பு, ஒரிசாவில் டோல் டுனி, மராத்தியில் டோல் என்று இசைக்கருவிகளில் வித்தியாசங்கள் இருந்தாலும் கூட அதன் பயன்படுத்துதல் வார்த்தை என்பது ஒருவகையில் ஒத்துப்போவதாக காணப்படுகிறது. காரணம் இவை அனைத்தும் தோலிசைக் கருவிகள் என்ற தொகுப்பாக நாம் எடுத்துக்கொள்ள முடியும்.இவை பறையின் வேறு பெயர்களாக, வடிவங்களாக புலப்படுகின்றது.

அதை போல் பிற நாடுகளில் இலங்கையில் இருமுக பறை என்று அழைக்கப்படுகிறது அங்கே இருக்கக்கூடிய முருகன் கோவில்களில், அம்மன் கோவில்களில் இவ்வகை பறையை நாம் பார்க்க முடிகிறது. சீனர்களின் பௌத்த கோயில்களில் அவர்களின் வழிபாட்டுக்கு டென்னிஸ் பேட் போன்ற இசைக்கருவியை அவர்கள் புத்த சரணத்தை கூறும்போது வாசித்து வருகின்றனர் அதை சூரியப்பறை எனப்படுகிறது. ஜப்பானில் இருக்கக்கூடிய கலைஞர்கள் தங்களை இந்நிலையில் வைத்துக்கொண்டிருக்கிற மேன்மை சமூகத்தில் இருந்து விடுபடுவதற்காக தங்களுடைய பாரம்பரிய வடிவமான தோலிசைக் கருவிகள் மையப்படுத்தி தங்களின் போராட்டங்களை தொடங்குகின்றனர். அதற்கு உதவியாக இருந்தது அவர்களின் தோல் இசைக்கருவி அப்போது அக்குழு “ஆங்கிரி ட்ரிம்மர்ஸ்” என்று தங்களை அறிவித்துக் கொண்டனர். அதன் பிறகு அந்த நாட்டில் அனைத்தும் அந்த இசைக்கருவி வடிவிலான பல்வேறு விளம்பரங்களை அங்கு பார்க்க முடிந்தது. அதேபோல் மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் ஒத்த வடிவம் உடைய தோலிசைக் கருவிகளின் பார்க்கமுடிகிறது இங்கே “கொப்பாங்” என்று அழைக்கப்படுகிறது. இப்படி ஆய்வுகள் தொடரும்.

பறை ஆட்டம் - Parai attam

பறையிசையின் இயல்கள்! இசை என்பதை தாண்டி அவற்றில் ஒளிந்திருக்கும் கலை-அறிவியல்- அரசியலை நாம் உற்று நோக்க வேண்டும். எந்த ஒரு கலையையும், இசையும் தேவயின்றி உருவாகிவிடாவில்லை என்கிற புரிதலுக்கு நாம் வரவேண்டும். ஏதோ ஒரு அடிப்படையில் கலை என்கிற ஒரு வடிவத்தில் அறிவியலை புகுத்தி அதை தொடர்ந்து இயங்குவதற்கான மறைபொருளை கலை வடிவங்களில் ஒளிந்திருப்பதாக நாம் பார்க்கிறோம். இசையோடு மட்டுமல்லாது, பல்வேறு இயல்களோடும் பயணம் செய்கிறது. அதற்கு இயற்பியல், சமூகவியல், மொழியியல், கணக்கியல்,இசையியல், நிலவியல், மானுடவியல் என்று பல்வேறு அறிவியல் கூறுகளோடு இணைந்து பயணிக்கக்கூடிய இசை வடிவமாக பறை இசையை நாம் பார்க்கிறோம்.அறிவியல், கணக்கியல், இயற்கை வழிபாடுகளில் மருத்துவ குணங்கள் என்று பல்வேறு துறைகளுடன் இணைந்து பயணிக்கக்கூடிய எளிமை நிறைந்த, இனிமையான இசை.

ஒரு இசையை வாசிப்பதற்கு என்ன கருத்தியல் நிலைபாடு இங்கே தேவைப்படுகிறது என்கிற ஒரு கேள்வி எழுகிறது. கருத்தியல் நிலைப்பாடு, வர்க்க நிலைப்பாடு, சாதிய கட்டமைப்பு, கருத்தியல் பரப்புரை, ஒரு இசை வடிவத்தின் அடிப்படையில் பல்வேறு சோதனைகள் இங்கே நடைபெற்று வருவதை பார்க்கமுடியும். பறை வாசிப்பவர்களின் கருத்தியல் என்பது பண்பாட்டை மீட்டெடுக்கும் செய்யும் பணியை நான் தொடர்ந்து செய்து வருவேன் என்று கூறுவதும், எங்களுடைய பாரம்பரியத்தையும் நாங்கள் பாதுகாப்போம் என்று ஒரு கருத்தியலும், அமைப்பாகும் குழுக்கள் இதைத்தொடர்ந்து அரசியல் மீள் எழுச்சியாக பறை இசையின் மீதும் கட்டமைக்கப்படுகிறது.

சாவு வீடுகளில் வாசிக்கப்பட்டவை பறைகள், இன்றைக்கு பல்கலைக்கழகங்களிலும், தங்களின் உரிமை கோரும் அரசியல் மேடைகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அங்கிருந்து அதற்கான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துக்கொள்கிறது. மக்களை ஒன்று திரட்ட தேவைப்பட்ட இசை, செய்திகளை அறிவிப்பதற்காக பயன்பட்ட இசை, தன்னெழுச்சியாக தன்னுடைய அரசியலை முன்வைத்துள்ளது. சாவு வீடுகளில் பறை வாசிக்க மாட்டோம் என்பதும், இழிவு என்று சொல்லப்படுகிற இசைக்கருவியை தாங்கள் உலகம் முழுக்க வாழ கூடிய தமிழர்கள் மத்தியில் பரப்புவோம் என்றும், சமூக ஏற்றத்தாழ்வுகளை களைவதற்கு இசைக்கருவியை பயன்படுத்துவோம் என்று தங்களின் கருத்துகளை முன்வைத்து பேசுகிற கலைஞர்களாக இன்றய நிலப்பரப்பில் காண்கின்றோம். சமூகத்தின் நிலைப்பாடுகள், சமூகத்தில் காணப்படுகிற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு இங்கே ஒரு இசை வடிவம் தேவைப்படுகிறது.

இரண்டு செய்திகளை சமூகம் தொடர்ந்து செய்து வருகிறது.

1. சமூகப் புறக்கணிப்பு
2. சமூக கட்டுப்பாடு

இவை இரண்டும் இன்றி எந்த ஒரு செயலையும் புதிதாக சமூகத்தின் ஊடாக நாம் செய்து விட முடியாது காரணம் மொழி, இனம்,கலாச்சாரம், பண்பாடு இவை அனைத்தையும் தாங்கிக் பேசக்கூடிய இடங்களில் இசையும் சேர்ந்து இருக்கிறது என்பதற்காக சமூகம் தங்களின் பார்வையை பிரதிபலிக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல மேலை நாடுகளிலும் இதுபோன்ற அடக்குமுறைகளும், சமூக ஏற்றத்தாழ்வுகளும் பல்வேறு நாம் காணமுடியும். கறுப்பர் இனத்தில் இருந்து பூர்வகுடிகளிடமிருந்து பல்வேறு பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும்.

ஒரு இசைக்கருவி பல்வேறு காலகட்டங்களை கடந்து வருகிற பொழுது பல்வேறு இனக் குழுக்களை சந்தித்துக் சந்திக்க வேண்டிய வாய்ப்புகளைத் பெறுகின்றது . இசை என்பது மிகப்பெரிய அரசியல் சொல்லாக பார்க்கிறேன். இசை என்ற தத்துவம் இல்லாது ஒரு உலகத்தை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. தமிழர்கள் தொல்குடி சமூகத்தில் இசைக்கு மயங்காதோர் இல்லை என்கிற வரலாற்றை முன்வைக்கின்றனர். தமிழ் சமூகங்களில் இசை வல்லுநர்கள், பாணர்கள், பல சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பாணன் குடி ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட சமூகங்கள் தனக்கு சொந்தமான வேலைகளை தேர்வு செய்துகொள்வது, ஒரு கட்டமைப்பு, தன்னுடைய உழவுத் தொழில், கால்நடை வளர்ப்பு, வேளாண்மை, இசை என்றெல்லாம் பிரித்துக் கொள்கிறார்கள்.

தொடர்ந்து பேசுவோம் …

பறை ஓவியம் | பென்சில் ஓவியங்கள்

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-12/

தொடர் 13ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-13/

தொடர் 14ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-14/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *