தமிழகத்தின் மிகப்பழமையான அரங்கக்கலை வடிவம் தெருக்கூத்து ஆகும். இயல், இசை, நாடகம் மூன்றையும் ஒருங்கே நிகழ்த்தக்கூடிய பண்பாட்டு வடிவம் ஆனால் தெருக்களையே ஆடுகளமாகக் கொண்டு நிகழ்த்தப்படுவதால் தெருக்கூத்து எனப் பெயர் பெற்றது. ஒரு கதையைப் பாடியும் ஆடியும் உரையாடியும் நடித்து நிகழ்த்தப்படும் இசை கலையாக இது விளங்குகிறது.

தெருக்கூத்து 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பரவலாக இடம் பெறலாயிற்று. ஆரியமயமாக்கல் காரணமாக தமிழகத்தின் சிறு தெய்வங்கள் பல ஆரியத் தெய்வங்களுடன் இணைக்கப்பட்டன. தென்னிந்தியாவில் தெருக்கூத்து (தமிழ்நாடு) கதகளி (கேரளம்) யகஷகானம் (கன்னடம்) தெய்வம் (கேரளம்) பூதம் (கன்னடம்) முடியேற்று (கேரளம்)ஊராளி, படையணி,தெய்யா  முதலிய வடிவங்கள்தாழ்த்தப்பட்ட மக்களால் கேரளத்தில் நடத்தப்பட்டு வருகின்றது அதற்கான இசை தனித்துவமானது.  ஒரு புராதன வடிவத்திலிருந்தே பின்னர் இவை பிரதேச ரீதியாக பிரிந்திருக்க வேண்டும் என்ற ஓர் கருத்துமுண்டு. 

இவற்றிடையே ஒப்பனை, உடை, மேடை செயற்பாடு, உள்ளடக்கம், அமைப்பு சடங்குத்தன்மை என்பனவற்றில் பெரும் ஒற்றுமை காணப்படுகிறது.ஆனால் இசை வடிவத்தில் கூத்து இசை என்பது ஒரு வகையில் தீட்டு இசை என பார்க்கின்றது இசை தூய்மை பேசும் சமூகம்.

தெருக்கூத்து: நல்லதங்காள் சரித்திரம் | Therukoothu | Nallathangal Sarithiram - YouTube

  தொண்டை மண்டலம் என்பது பழைய வடாற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு (இன்றைய வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது) இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மத்தியில் திரௌபதி அம்மன் வழிபாடு பிரபலமானது. இப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில்களில் 29 அல்லது 21 அல்லது 20 நாள்கள்  (பொருளாதார வசதிக்கேற்ப நாள்கள் எண்ணிக்கை கூடும் குறையும்) சடங்கு நடைபெறும். இச்சடங்கில் தெருக்கூத்து இடம் பெறுகின்றது. இக்கூத்து கோயில் முன்றலில் மேடையிடப்பட்டு கூத்தாக நடைபெறும்.   

    தாய் தெய்வங்களுக்குரிய கோயில்களில் கரகம், கணியன் ஆட்டம் என்பன நடந்துள்ளன. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆடல் வடிவத்தில் ஒரு நாடக வடிவம் இருந்து வந்துள்ளது. நாயக்கர் ஆட்சியில் யஷகானம், கர்நாடக பூத ஆட்டம், பாகவதமேளா என்பன தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகின. இவை அனைத்தையும் உள்வாங்கி திரௌபதி அம்மன் கோயில் ஒரு சடங்கு நாடகமாகத் தெருக்கூத்து உருவானது.

       தெருக்கூத்து என்பது கிராமங்களில் திறந்த வெளிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் கலைவடிவம் ஆகும்.இந்திய கலை வடிவங்களில் மிகத்தொன்மையானதும் மதிப்புமிக்கதுமான ”தெருக்கூத்து” அருகிக்கொண்டே வருகிறது. நாட்டுப்புற நிகழ்கலைகளின் உன்னத வடிவமாக நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து தமிழகத்துப் பாரம்பரியக் கலைகளில் முதன்மையானது மட்டுமன்றி முக்கியமானதும் கூட. ஆடல், பாடல், உணர்ச்சி பொங்கும் வசனங்களுடன் அமையப்பெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட அடவுகளாலும் காட்சி படிவங்களாலும் உடல் மொழியாக வெளிப்படுத்தப்பட்டு இக்கலை வடிவம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுத் திகழ்ந்த காலகட்டம் முடிவடைந்து விட்டதோ என்ற எண்ணத் தோன்றுகிறது.

       கேரளாவின் ”கதகளி” அவர்கள் எவ்வாறு உலகளாவிய ”தொன்மைகலைச் சான்றாக” முன்னிறுத்தப்படுகின்றதோ அதுபோல் தமிழர்களின் ”தொன்மைகலைச் சான்றாக” ”தெருக்கூத்து” இடம்பெறச் செய்யவேண்டும்.பழமையின் சின்னமாகவும் பண்பாட்டின் எச்சமாகவும் விளங்கும் கூத்துக் கலையானது நாட்டுப்புற மக்களின் எண்ணங்கள்,செயல்,பண்பாடு வாழ்க்கை முறைகளை எடுத்துக்காட்டுகிறது.

தெருக்கூத்து. ஈரோடு மணி வாத்தியார் குழு - YouTube

“கூத்தாடி கிழக்கே பார்ப்பான் கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்” என்ற பழமொழி ஒன்று உண்டு. கூத்து விடிய விடிய நடைபெறுவதை இது குறிக்கும்.தெருக்கூத்தின் ஆரம்பகாலத்தில் நாட்டுப்புற நாடக வடிவத்தைக் கொண்டிருந்தது. பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்த காப்பிய இதிகாச அல்லது புராணக் கதையை அடிப்படையாக கொண்டு கூத்து அரங்கேறும்.காரணம் இந்த கலையை ,மக்களோடு தொடர்பு படுத்த இந்த பழமையான வடிவத்தை ஆரியம் கைபற்றிகொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் இசை வடிவத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை இந்த இசைக்கு வரையறை இல்லை எண்டு புறந்தள்ளப்படுகின்றது. காரணம் ஜதிகள்,முத்தாய்ப்புகள் கட்டை வாசிப்புமுறை வேறு ஒரு கோணத்தில் இருக்கிறது செய்வியல் இசைக்கு  போட்டோயாக வந்துவிடும் என்பதால் திட்டமிட்டு அடுத்தகட்ட நகர்வில் ஒழுங்கு இல்லாத இசை என்று தரம் தாழ்த்தப்படுகின்றது. 

தெருக்கூத்தை பற்றி கலைக் களஞ்சியத்தில்; “எளிய முறையில் அதே சமயம் மக்களுக்கு நீதி புகட்டும் கலையாக தெருகூத்து திகழ்ந்தது ” என்று குறிப்பிட்டள்ளது. தெருக்கூத்து ஆடப்பெரும் இடம் நிகழ்வோடு சம்பந்தப்பட்டது.கோவிலோடு தொடர்புடைய கூத்துகள் திறந்த வெளியில் மின்விளக்கு இல்லாத முச்சந்திகளில் நடைபெறும்.குடும்பத்தில் யாரேனும் இறந்து போனால் அக் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கேற்ப கர்ண மோட்சம் என்ற சில கூத்துகளை ஆடுகின்றனர்.தெருக்கூத்து என்ற கலைக்கு கட்டை கட்டியாடும் நாடகம் என்கிற விளக்கமும் உண்டு. மினுங்கும் கட்டையால் ஆன ஆடை அணிகலன்கள் அணிந்து பாடி ஆடுவதே தெருக்கூத்து.ஆண்கள் மட்டுமே ஆடிவந்த கூத்தின் பின்னாட்களில் பெண்களும் ஆடிவந்தனர்.

காலம் செல்லச்செல்ல தெருக்கூத்தின் கருவும் சமுதாய முன்னேற்றக் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக மாறியது.தெருக்கூத்தின் சிறப்பம்சமே அது இன்றைய நாடக மேடைகளுக்கெல்லாம் முதன்மையானது. முழுவதும் பாடல்களால் அமைந்து ஏட்டிலன்றி வெறும் வாய்மொழி மரபாகவே போற்றப்பட்டது.தெருக்கூத்தில் இடம்பெற்ற பற்பல பாட்டுகள் கூத்தில்லா சமயத்தில் மக்களால் களத்து மேடுகளில் வண்டிச்சாலைகளில் பாடப்பட்டன.தொடர்ச்சியாக பாடப்பட்ட பாடல்களே தனி நாடக வடிவைப் பெற்றன.இது கூத்தின் சிறப்பு அம்சமாக பார்க்க படுகின்றது.

கணியான் கூத்து - Kaniyankuttu திருநங்கைகள் - YouTube

கணியான் கூத்து எனப்படுவது கணியான் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக்கலை. மகுடம் என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை மகுடாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில்  இக்கலை நிகழ்த்தப்படுகிறது. முற்றிலும் ஆண்களைச் சார்ந்தே இயங்கும் இக்கலை 16ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஆதிக்கலை என்பது ஆய்வாளர்கள் கருத்து. இந்தக் கலையாடல் ஏராளமான வரைமுறைக்கு உட்பட்டது. இடைவெளியே இல்லாமல் இரவு முழுவதும் ஆடப்படும் இது தெய்வத்தின் எதிர்ப்புறத்தில் மட்டுமே ஆடப்படும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடிமாவட்டங்களின் கிராமப்புறக் கோவில் கொடை விழாக்களில் இக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகிறது.

கூத்தில் பல்வேறு வகையுண்டு. ஆடும் மக்களின் வாழ்க்கை முறை இடம் கருப்பொருள் என கருத்துகளுக்கு ஏற்ப கூத்தின் வகைகள் மாறுபடும்.இருளர் இனமக்களின் கோயமுத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற இருளர் என்ற மலை இன மக்களின் ஆட்டமாகும். தைப்பொங்கலின் போது இவர்கள் குரங்கு , புலி , கரடி போன்ற விலங்குகளின் வேடம் புனைந்து ஆடுவர். இந்த ஆட்டத்தில் ஆண்கள் , பெண்கள் ஆகிய இருவரும் பங்கு கொள்வர். ஆனால் ஆண், பெண் இருவரும் இணைந்து ஆடுவதில்லை. இந்த ஆட்டமானது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வேகமாகவும், மெதுவாகவும் ஆடப்படும் இயல்பைப் பெற்றதாக இருக்கிறது. பெண்கள் தங்கள் கைகளை அசைத்து ஆடும் இவ்வாட்டம், மிகவும் அழகு மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

 பெரும்பாலும் இராமாயணக்கதைகளே பாடல்களாகப் பாடப்படுகின்றன. இது தவிர பவளக்கொடி கதை, மதுரைவீரன் கதை, முருகன் கதை,  சிறுத்தொண்டர்கதை, வள்ளி திருமணக் கதைகளையும் பாடி ஆடுவதுண்டு. ரெட்டியார் மற்றும் முக்குலத்தைச் சேர்ந்த சில இனத்தினர், இக்கலையை மரபு ரீதியாக நிகழ்த்தினர். இப்போது தலித்துகள் உள்ளிட்ட பிற இனத்தினரும் இக்கலையாடலில் ஈடுபடுகின்றனர். மரபுசார்ந்து இயங்கிய பலர் கிறித்தவமதத்துக்கு மாறியதன் விளைவாக, கிறிஸ்தவ ஆலயங்களிலும் அண்மைக்காலமாக இக்கலை நிகழ்த்தப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் பைபிள் கதைகளைப் பாடி ஆடுகின்றனர்.

நாட்டுப்புற கலை வளர்க்கும் கோடங்கி | And to promote folk art kotanki - Dinakaran

 நாட்டுப்புற கலைகளில் ஆர்வம் கொண்ட பாவலர் ஓம்முத்துமாரி கணியன் கூத்து, கரகம், காவடி, ஒயில், கும்மி, தேவராட்டம், தெருக்கூத்து, சிலம்பம் என்ற பல கலைகளில் ஆர்வமும், அக்கறையும் கொண்டவர். அதுமட்டுமில்லாமல் நாட்டுப்புற கலைஞர்களின் சங்கத்தை நடத்தி, சங்கத்தின் விழாவினை ஆண்டுக்கு ஒருமுறை திருவேங்கடத்தில் விமரிசையாக நடத்துவார். அதே போன்று வீரத்தாய் குயிலி என்ற நாடகத்தை கூத்து வடிவில் நிகழ்த்தி கட்டிய பெருமை திருவள்ளூர் பட்டறைபெரம்பத்தூர் கிராமத்தை சார்ந்த கூத்து கலைஞர் ரூபன் மற்றும் குழுவால் அரங்கேட்டரம் சென்னை பல்கலைக்கழத்தக்தில் நடைபெற்றது. சென்னை பல்கலைக்கழகம் தமிழ்த்துறை  பேராசிரியர் கோ. பழனி தெருக்கூத்து களஞ்சியம் என்ற புத்தகத்தில் இக்கலை சார்த்த அறிமுகத்தை செய்துவைக்கின்றார். 

கிராமிய கலைகளில் முக்கியமான தெருக்கூத்து சமுதாய பண்பாட்டு சீரழிவு காரணமாக ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. கலைஞர்கள் சந்திக்கும் சாதியப்பாகுபாடு,பாலினப்பேதம், பாலியல் ரீதியான கொடுமைகள் ஏராளம். கூத்து கட்டும் மக்களின் பிள்ளைகள் வறுமையின் காரணமாக கூத்தினை கைவிட்டு வெவ்வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர். தற்சமயம் சில கூத்துக்களை கட்டவே ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  கூத்துக்கலைஞர்களின் வாழ்வாதார சிக்கல்கள், பழமையான கலைக்கு முட்டுக்கட்டையானது. இதற்கான முன்னெடுப்பை அரசு ஏற்படுத்தினால் மட்டுமே இந்த மாபெரும் கலையை நமது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் சொல்லலாம்.

தெருக்கூத்து ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வாளர் ரிச்சர்ட் பிராஸ்கா, திரௌபதி வழிபாட்டை ஆய்வு செய்த ஹில்ட பெய்டல் போன்றோர், ‘திரௌபதியம்மன் கோயில் சார்ந்து தெருக்கூத்து உருவாகியிருக்க வேண்டும்’ என்பது போன்ற கருத்தை முன் வைக்கின்றனர். அதற்கு, தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட நாள்கள் நடக்கும் பாரதக் கூத்துகள் காரணமாக உள்ளன. ஆனால், தெருக்கூத்தைத் திரௌபதியம்மன் கோயிலோடு மட்டும் சுருக்கி விடமுடியாது. அது பல புராணக் கதைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. வாழ்க்கை வட்ட சடங்குகள், பல்வேறு அம்மன் கோயில்கள், ஆண்தெய்வக் கோயில்களின் கொண்டாட்ட விழாக்கள்,  குலதெய்வ வழிபாடுகள் எனப் பல்வேறு சூழல்களிலும் தெருக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற கதைகள் தனிக்கூத்துகளாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 

வரிச்சியூர் களிமங்கலம் நாடகம் நாரதர் + பபூன் காமெடி - YouTube

குறிப்பாகத் தெற்கத்தி, மேற்கத்தி பாணிகளில் மகாபாரதம் தவிர்த்த ஏரளமான கதைகள் நிகழ்த்தப் படுகின்றன. அக்கதைகள் நேற்று, இன்று உருவாக்கப்பட்ட கதைகள் என்று சொல்லிவிட முடியாது. அவையும் காலங்கடந்தவை தான். ஒருபகுதி சார்ந்த , சூழல் சார்ந்த உள்ளடக்கத்தை வைத்து ஒரு நிகழ்த்து வடிவத்தின் தோற்ற வரலாற்றைச் சொல்லிவிட முடியாது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு பகுதி, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பகுதி இடங்களில் பழம் மரபு சார்ந்த பல்வேறு கூறுகளை தன்னகத்தே கொண்டு இயங்கி வருகிறது தெற்கத்திக்கூத்து. இவ்வகைக் கூத்து பழம் மரபு சார்ந்தது  என்பதற்கு  அதன் ஒப்பனை, ஆடை ஆபரணங்களின் வடிவமைப்பு, அவற்றின் பயன்பாடு, குறிப்பாக இடுப்பில் கட்டப்படும் வட்டுடுப்பு முறை போன்றவை சான்றுகளாக உள்ளன. இன்றும் பல ஊர்களில் இம்முறை தொடர்வதைப் பார்க்கலாம். இது, அந்தந்தப் பகுதிவாழ் சமூகத்தினரையும் கூத்தோடு இணைத்துக்கொண்டு செயலாற்றும் தன்மையை உணர்த்துகிறது. தற்போது தெற்கத்தி தொழில்முறைக் கூத்தர்கள் அத்தகைய ஆடை, ஆபரணங்களை சொந்தமாக வைத்துள்ளனர். 

மேலும் தெற்கத்திக் கூத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளான மிருதங்கம், சுருதிப்பெட்டி, வலுவான பெரிய இரண்டு தாளங்கள், ராக – தாள வேறுபாடு இல்லாத வர்ணமெட்டுக்கள், பாத்திரங்கள் நின்ற இடத்திலேயே வேகமாகச் சுற்றும் கிறிக்கி முறை, தாள இசையோடு தொடர்ந்து வசனம் பேசும் முறை ஆகியன இக்கூத்தின் ஆதித்தன்மைகளைக் குறிக்கும் சில சான்றுகள். வடக்கத்தி பாணியின் ஒப்பனை போன்றோ, இசை போன்றோ, ஆடை ஆபரணங்கள் போன்றோ பொலிவு பெற்றதாகக் தெற்கத்திக் கூத்து மரபு இல்லை என்பது இங்கு நினைவில் கொள்ள வேண்டியது.

நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டரிடம் மனு | Dinamalar

தெற்கத்தி பாணிக்கூத்தை நிகழ்த்திக்கொண்டு வரும் கூத்தர்கள் பெரும்பாலும் ஆதிதிராவிடர், வண்ணார் மற்றும் வன்னியர் சமூத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். சமகாலத்தில் கூத்து வாத்தியார்களாகவும் மேற்கண்ட சமூகத்தவர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், இவர்கள் கூத்து நிகழ்த்திக் கொண்டு வரும் தலைமுறைகள் எத்தனை என்பதைக் கணக்கில் கொண்டு ஆராயுமிடத்து, தெற்கத்தி பாணியில் ஆதிதிராவிட சமூகத்து கூத்து வாத்தியார்கள் பெரும்பாலும் நான்கு தலைமுறைகளுக்கு மேலாகக் கூத்து நிகழ்த்தி வருவதாகக் கூறுகின்றனர். “பொதுவாகக் கூத்து குழுக்களில் எல்லா சாதி ஆட்களும் இருப்பார்கள். பறையர்,  வண்ணார்,  நாவிதர், சக்கிலியர் என்று எல்லோரும் இருக்கிறார்கள். 

நிகழ்த்துபவர்கள் , இசை , சூழல்  போன்றவற்றை சாதி மற்றும் வர்கம் தீர்மானிக்கின்றது.பிற மாநிலங்கள் 

போல் முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.மேன்மக்கள் கொண்ட உயர்ந்த இசை மரபு இங்கே இல்லை என்பதால் பொது தளங்களில் தொடர்ந்து புறக்கணித்து வரும் நாட்டார் நாடக இசை கோலங்கள்முற்று புள்ளிகளாக மாறிவருகின்றது.

 

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-12/

தொடர் 13ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-13/

தொடர் 14ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-14/

தொடர் 15ஐ வாசிக்க

தொடர் 16ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-16/

தொடர் 17ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-17/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *