இசை என்னும் அரசியல் (தற்சார்பு இசை வேர்கள் நமது அடையாளங்கள்) -2 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

 

தற்சார்பு இசை வேர்கள் நமது அடையாளங்கள் !

இசை என்பது ஒரு  இனிமையான ஒலி வடிவமாகும். ஆனால் இசையில் “இசை தூய்மை” அரசியலை முன் வைக்கப் படுகின்றது.உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் குறிப்பாக இசையை பற்றி பேசுபவர்கள் யார், எந்த இசையை பற்றி பேசுகிறார்கள் , அதில் பாகுபாடு காட்டப் படும் இசை எது , ஏற்றத்தாழ்வுக்காட்டப்படும் இசை எது,  மரபான இசை எது, மறப்பில்லா இசை எது, என்று இப்பொழுது இருக்க கூடிய மக்கள்தொகையில் இசைக்குறித்து பேசிவருபவர்கள், அதிலும்மரபு சார்ந்த,  மரபு சாரா இசையை தொடர்ந்து பேசுபவர்கள்  சொற்பமான எண்ணிக்கைதான் ஆனால் இங்கு இசை அனைவருக்கும் தேவைப்படுகின்றது.

இசையில் பாகுபாடு கட்டுவதை நாம் பார்க்கின்றோம்,  இனிமையானா இசையை தேவமொழி  என்றும் உணர்வு பெருக்கில் வரும் இசையை இரைச்சல் என்றும் பல்வேறு அடையாளத்தை இசையின் தவப்புதல்வர்கள் தத்துவங்களாகமுவைக்கின்றனர்.

அடிப்படையில்  இசை வெளிப்பாட்டில்  ஒரு சுவரம் உயர்வாகவும், மற்றோன்று தாழ்வாக இருக்கிறது என்று சொல்லுவது தான் அடிப்படை கூற்று அதனால் உயர்வான  இசை வானத்தில் இருந்து வந்ததா ? இல்லை தாழ்வான சுவரம் பாதாளத்தில்  இருந்து வருகின்றதா என்ன ? இசை ஒரு உருவகம் மட்டுமே.எப்படியோ உச்ச சுவரங்கள் செறிவாகவும்,தெளிவாகவும், பளிச்சென்றும் உயரத்தில் இருப்பதாகவும் தோன்றுகின்றன. ஆம் இசை குறிப்பேட்டில் மேல் கீழாக தான் காணப்படுகின்றது. அப்படியென்றால் நீங்கள் ஒரு இசையின் இழைவமைதி பற்றி  பேசலாம் என்று கூறுகிறார் நிகோலஸ் கூக் இசை என்று  சொல்லும்போது இழைவமைதிய ? இதில் மரப்பட்டை , பாசி , வெல்வெட் , கித்தான் போன்றவற்றில் நாம் பார்க்க முடியும் ஆனால்   இசையை தொட்டு  பார்க்க முடியாத போது எப்படி இழைவமைதி வந்தது எப்படி நிலை பெறுகின்றதுஎன்பதும் அரசியல் தான் . இசை என்பது பல்வேறு ஓசைகளின் தொகுப்பு என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

உயிரியலாளர் ரிச்சர்ட் டார்க்கின் ஒரு உண்மை தகவலை “தருகின்றார் மரபணுக்களின்” ஆறு தான் இசை என்று முவைக்கின்றார் இசையையும், மனிதனையும் பிரிக்க முடியாது என்பார்கள். அதனால்தான் இசையால் நாமும் நம்மால் இசையும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய சிறப்பு  வாய்ந்த, இசை தோற்றம் பெற்ற காலம் தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் உறுதியான சான்றுகள் என்று சொல்லமுடியாது   இன்னமும்  அனுமானங்களாகவே  இருந்து வருகின்றன. ஆதிமனிதனின் முதல் ஆயுதம் கோடரி எனவும், அதன் ஆயுள் 1.7 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் எனவும், அடுத்த ஆயுதமான ஈட்டியின் வயது 500,000 ஆண்டுகளாக இருக்கலாம் எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இதே ஆய்வுகள், முதலாவது இசைக்கருவி இற்றைக்கு 40,000 ஆண்டிற்கு முன்னதாக  தோன்றியதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.  ஆனால் அடிப்படையில்  முதல்  இசையானது இவை அனைத்திற்கும் முன்னதாகவே தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்றும்,  பறவைகள், மிருகங்களிடமிருந்தே மனிதன் இந்த இசையெனும் ஓசையை தொடர்பை  பெற்றிருக்கின்றான் என்றும் இன்னொரு ஆய்வு கூறுகின்றது. இதன் விளைவாக, மனிதனிடமிருந்து முதன் முதலாகத் தோன்றிய இசைவடிவம் கைதட்டல் ஓசை  எனவும், பின்னர் தடிகளைக் கொண்டு தட்டுதல் வழியாக  அது மேலும் பயணித்திருக்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்துதான் மனிதன் தன் குரலை இசையின் ஊடகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

Music Evolution by shadowgun - Meme Center

இதற்குப் பிற்காலங்களில்  வந்த கற்காலத்தில், கல்லாலான கருவிகளால் தானியங்கள், கிழங்குகள், வேர்களை இடித்தும் துவைத்தும் உணவாக்க முற்பட்டபோது தாளலயம் ஆதிமனிதர்களால்  உணர்ந்தி ருக்க முடியும்  எனவும் கருதப்படுகிறது. இசையின் துணைக் கொண்டு நம் முன்னோர்கள் தொலைத்தொடர்பு ஊடகமாக  சமூகங்களைக் கட்டியெழுப்பவும், ஆதிமானுடதின்  ஒரு கூட்டு அடையாளத்தையும், பரஸ்பர நம்பிக்கையையும் ஏற்படுத்தி அவர்கள் முன்னோக்கி நகர்வதற்கு இசை உதவியிருக்கிறதென்றும் இதில்  உண்மை உண்டு என்றே சொல்லத் தோன்றுகின்றது.

இசையை எழுப்புவதற்கும், இசையை இரசிப்பதற்குமான மனித ஆற்றல்தான் ஆரம்பகால மனித பரிணாம வளர்ச்சியின் ஒரு முக்கிய படிநிலை என்பதே இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய கூறுகளாகும். மனித வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள இசையெனும் இந்த அற்புதக் கலையின் அல்லது அறிவியலின் சுவடுகள்  தெரிய முடியாதவாறு ஆய்வாளர்கள் திணறிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், இசை என்பது நவீன மனிதனின் கண்டுபிடிப்பு எனக் கூறி இறுமாப்படைவது சுத்த அபத்தம். அதுமட்டுமன்றி, இசையானது வெறுமனே ஒரு வேடிக்கைச் சாதனம் என்றும், வெகுமானம் ஈட்டித்தரும்  இன்ப நுகர்வுக்கலை மட்டுமே என்றும் இந்நாட்களில் கருதப்படுவது இசை பற்றிய அறியாமையின் இன்னோர் வெளிப்பாடாகும். இசையைக் கேட்பதால், மூளை மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்ற ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இதனால் இசையைக் கேட்கும்போது மகிழ்ச்சி,  உணர்வு தோன்றுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

திருநங்கைகள் என்பது அவர்கள் யாரும் தன்னை தானாக மாற்றிக் கொள்ளவில்லை இயல்பாகவே குரோமோசோம்களின் உருவாக்கத்தின் போதே ஒரு மனிதனின் இயல்புகளை அவை முடிவு செய்கின்றன.  இது ஒரு உயிரியல் தத்துவம்.  அப்படித்தான் பெண் ,  ஆண் என்றும்  வேறுபடுத்தி பார்க்கின்றோம்.ஒருபெண்ணின் கைத்தட்டல் முறை என்பது மென்மையானதாகவும் ஏதோ ஒரு அடிப்படை இசை சரத்தை சார்ந்ததாகவும் அவர்களுடைய கைத்தட்டல் நடையில் நாம் உணரமுடியும்.  ஆனால் ஆண்களின் கைத்தட்டல் முறை என்பது ஒரு பெருத்த ஒலியை தரும் அதில் திடமான ஒரு ஓசையை நாம் உணர முடியும்.

Finally, gender-neutral restrooms for third gender community in ...

இதற்கு காரணம் இசை என்பது இது ஒரு உயிரியல் சார்ந்தது.  ஒருவர் விருது பெறுகின்ற  பொழுது அல்லது அவருக்கு  மரியாதை செய்கிற பொழுது அங்கே கூடியிருக்கிற பொதுமக்களால் கைத்தட்டல் ஓசை வருகின்ற பொழுது, அதை அவர்களே கொடுக்கும் வரம் என்றும்  மேலும் பல முயற்சிகளை நாம்  செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் விருது பெறும் நபர் கைதட்டல் ஓசையோடு தன்னை இணைத்துக் கொள்கிறார்.

கைதட்டல் ஓசையை ஒரு முறைமையாக பின்பற்றி வருகின்றனர்.  அதனால் பெருத்த கைத்தட்டல் இசையாக உருமாறுகிறது இன்று நம் நாட்டுப்புற கலைகளில் மிகவும் முக்கியமான அனைவராலும் உணர்ந்து, கற்று  செய்யக்கூடிய ஒரு கலை வடிவம் “கும்மி” என்பர் கும்மியாட்டம் என்று சொல்லப்படுகிற அந்த நிகழ்த்துக்கலை யாரால் நிகழ்த்தப்படுகிறது,  எந்த சூழலில் நிகழ்த்தப்படுகிறது இதன் நோக்கம் என்ன,இதன்  தேவை ஆகியவற்றை புரியவைக்கின்றது.கைதட்டல் முறை என்பது ஒரு மனிதனுடைய வாழ்வில் குழந்தைப் பருவத்தில் இருந்தே பயணப்படுகிறது அதனால் தான் பள்ளியில்  சேர்ந்தவுடன் காலையில் பள்ளி கூடுகை , அணிவகுப்பு,  சாரணர் இயக்கம்,  தேசிய மாணவர் இயக்கம், என்றெல்லாம் தனித்தனியே ஒரு கைதட்டல்அடையாளத்தை  ஓசையை வைத்திருக்கின்றனர்.

ஒரு மனிதனின் உள்ளங்கையில் தன்  உடம்பில் இருக்கக்கூடிய அத்தனை நரம்பு முடிச்சுகளும்  இருப்பதாக சொல்லப்படுகின்றது.  இப்படியான பலவழிகளில்இசையை  கண்டறிந்து ஒரு கலை வடிவத்தின் ஊடாக மறைத்து வைத்திருக்கிறான். நம்முடைய முனோர்கள் அப்படி 16 தடவை கைதட்டல் முறை செய்தால் ஒருவருக்கு எட்டு மணி நேரம் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும் என்கிறது அறிவியல். ஆக கும்மியாட்டம் என்ற கலை வடிவம்,  விவசாய வேலை  செய்கிற மக்களுக்கு மத்தியில் மாலை நேரங்களில் களைத்துப்போனசூழலில்  களைப்பை  போக்க அன்றைக்கு அவர்கள் செய்த பணிகளை, அவர்களின் பாடுகளை சொல்லும்விதமாக குறிப்பாக பெண்கள் மாலை நேரங்களில் தங்களின்  பொதுவெளியில் உடலை குனிந்து, நிமிர்ந்து அதற்கேற்றாற்போல் ஒரு பாடலை பாடி அதற்கு ஒத்தாசையாக கைத்தட்டல் முறை அறிமுகம் செய்கின்றனர்.  அப்போது  இன்ப, துன்பங்களை, வரலாற்று நிகழ்வுகளை பாரம்பரியத்தை சொல்லும் தளமாக பயன்படுத்துக் கொள்கின்றனர்.  அப்படித்தான் திருநங்கைகளின் காரணங்களை நாம் காணமுடிகிறது ஒன்று அவர்களுடைய கைத்தட்டல் ஒரு அடையாளத்தை உணர்த்துகின்றது,  தன்னைத்தானே புத்துணர்ச்சி பெற வைக்கிறது என்று கருத்தை முவைக்கின்றனர் .  இரண்டாவதாக தங்களுக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் தங்களை பாதுகாத்துக்கொள்ள தங்களுடைய சக தோழர்களுக்கு எச்சரிக்கை அபாயத்தை உணர்த்த இந்த கைத்தட்டல் முறை என்பது எங்களுக்கு தேவைப்படுகிறது என்று  என்னுடைய கள ஆய்வில் நண்பர்கள் மத்தியில் அறிந்து  கொண்ட செய்தி.

பிரிட்டன் : தேசிய அளவில் சுகாதார ...

இப்படி கைத்தட்டல் முறையிலிருந்து முதல் இசை பிறந்து  இருக்கின்றது என்று சுட்டிக் காட்டப்படுகின்றது. இசை எப்படி உயிர்களோடு கலந்து இருக்கிறதோ அதை போல் சூழலியம் சார்ந்து இயங்குகிறது. நிலம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்று எடுத்துக்கொள்ள முடியும். இசை அப்போதுதான் இரண்டு தீர்க்கமான நிலைப்பாட்டினை  எடுக்கின்றது.  முதல் நிலை “இசை தீவிரமானது” , இரண்டாவது நிலை “தீவிரம்குறைந்தது”. குறிப்பாக இசை  தீவிரமானது என்பதிலிருந்து இசையின் அரசியல் துவங்குகிறது.  எவன் ஒருவன் தன்னுடைய பாரம்பரியத்தை வலிமையாக முன்வைக்கிறோனோ, அவன் வேர்களை நோக்கி பயணிக்கிறான், பாதுகாக்கிறான், மீட்டுருவாக்கம் செய்கிறான் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது உலக இசையமைப்பாளர்களின் “மேஸ்ட்ரோ”, “இசைஞானி” என்று போற்றப்படுகிறார் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள்.   தன்னுடைய இசையமைப்பில்  பாமர மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பிடித்தவர். அவருக்கு இசை குறித்து பட்டறிவை,  மக்களின்  பாடுகளை குறித்தும்,  மக்களை தன்வயப்படுத்திக் கூடிய ஆளுமை சக்திகளை பட்டறிவால், பகுத்தறிவால் மக்களின் மனநிலையை நேரடிகளத்தில் உணர்த்திக் காட்டியவர் அவர்களுடைய மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் அவர்கள்.

பாவலர்கற்று, உணர்த்தி தந்த அந்த இசை தான் இன்று உலகமெங்கிலும் பரவிக் கிடக்கிறது. குறிப்பாக அந்த காலகட்டத்தில் இசையில்  தற்சார்பை முவைத்தார் பாவலர்.  ஆனால் இசைக்கு சங்கீதம், இசை, சுவரம்  என்பதைத் தாண்டி “இசைத்  தூய்மை” அரசியலை முன் வைக்கப்பட்டது. இசை என்பது மேட்டுக்குடி, மெத்த அறிவு படைத்த, ஒரு குடும்பத்தில் வழிவழியாக பாடப்படும்  மக்களால் மட்டுமே இசை என்கிற அந்த அற்புத நிகழ்வை நிகழ்த்த முடியும் என்கிற அந்தக் கருத்தை வெகுசன ஊடகங்களில் வந்தவுடன் பல்வேறு தடைகள் இருந்தாலும் கூட அதை தகர்த்தெறிந்து விமர்சனங்களை, ஒதுக்கிவைத்துவிட்டு தன்னுடைய உழைப்பால் உரத்த சிந்தனையால், வெற்றி அடைந்தவர் என்று சொன்னால் அது  இசைஞானி அவர்கள் தான். ஆனால் இசையில் தர்க்க பெதத்தையும், வேதங்களையும், வேத இதிகாசங்களையும் ஒப்பிட்டு பேசுகிற மரபு  மரபாக மாறிப்போனது. அந்தமரபு போக்கை மடைமாற்றம் செய்தவர் என்று சொன்னாள் இளையராசா அவர்களை குறிப்பிட முடியும்.

இன்று மாலை முக்கிய அறிவிப்பு ...

“இசை இங்கு அவரவர் தாய்மொழியில் கலந்து இருப்பதால் நாம் அதை கண்டுகொள்வதில்லை” ஆனால் இசை பற்றிய முன்வைப்புக்களை பார்க்கிற பொழுது வேற்று மொழி ஆதிக்கம் தலை தூக்கியதாக இங்கே எடுத்துக்காட்டுகள் கிடைக்கின்றன. இது நிதர்சன உண்மை என்பதுதான். மறைந்த பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் அவர்கள் ஒரு நாட்டுப்புற பாடலில் இந்த உலகத்திற்கே இசை தந்த இசைஞானி இளையராஜாவுக்கு அவரின் நாட்டுப்புற சாயலில் ஒரு பாடலை பாடி வந்தார்.  இந்த பாடலை எழுதிய கவிஞர்வேறொருவர், அப்பாடலை மேடைகளில் பாடி வந்தவர் கே.ஏ. குணசேகரன் அவர்கள். ஆண்டாண்டு காலமாக அடிமைகள் என்று சொல்லப்பட்டு வந்த தமிழ் சமூகத்தில் சாதி தீண்டாமை என்கிற அந்தக் கொடுமையிலிருந்து மீண்டு வர பல்வேறு முயற்சிகளை எடுத்த அந்த கால கட்டங்களில்  மேல்தட்டு இசைக்கு எதிர் இசையாக இந்த பாடல் களம் இறங்கியிருக்கிறது என்று குறிப்பதற்கு ஒரு பாடலை கட்டமைக்கிறார்கள் அதில்

“பஞ்சமர்க்கு இசைஞானம்

பிறப்பிலே இல்லை என்றான்

ஆட்சி செய்த தமிழ் சினிமா ராசா – நீங்க

கலக்கிட்டீங்க  அக்ரகாரத்தை லேசா,

மாமதுரை சீமையிலே,  மலையடிவாரத்திலே

தேவாரம் பக்கத்திலே, பண்ணைபுரம் கிராமத்திலே

சிற்றூரில்(சேரி)  பூத்த  கருப்பு ரோசா – எங்கள்

சிந்தையைக் கவர்ந்த இளையராசா…..ஓ …ஓ ….

என்று  இந்த பாடல் வரிகள் அமைந்திருந்தன.  இவர்கள் இந்த “இசைத் தூய்மை” என்று சொல்லப்படுகிற அந்தக் கட்டுப்பாட்டை உடைத்த பெருமையில் இளையராஜாவைபாடினார்கள். ஆனால் மக்கள் பாடல்களை வெகுஜன  ஊடகங்களின் வழியாக கொண்டுவந்த பெருமை இளையராஜா அவர்களுக்கு  உண்டு.  தான்   பிறந்த, மண்ணை , கற்றறிந்த கலை, சமூகத்தை குறிப்பிட்டதற்காக அந்த நாட்டுப்புற பாடகர் மீது  அவர் வழக்கு தொடர்ந்ததும் “இசைஅரசியலே” அதற்கு ஆதாரங்களும் உண்டு என்று பேசப்படுகிறது.

இசை எல்லாவெளிகளிளும், இயல்களிளும் பயணம் செய்கிறது அடுத்து எந்த இயலோடு சண்டை  செய்கிறது, அரசியல் ஆக்கப்படுகிறது என்று பார்ப்போம்….

Image

மு.வெ . ஆடலரசு