இசை என்னும் அரசியல் (கணக்கை தீர்த்துக்கொண்ட இசை) -3 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

 

கணக்கை தீர்த்துக்கொண்ட இசை!

இசை ஒரு கருவியாகவும்  பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தொன்மைச் சிறப்பு வாய்ந்தது என்று  தென்னாட்டு கர்நாடக இசையை குறிப்பிட படுகின்றது . இதன் வரலாற்றை நடுநிலையான நெறியுடன் ஆராய்ந்து நோக்கினால் பல ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் தோன்றி பண்டைத் தமிழர்களால் அரும்பாடுபட்டு வளர்த்த ஓர் இசை முறையின் பிற்காலத்துப் பரிணாம வளர்ச்சி என்கின்றனர். வாயால் பாடி, கருவியால் இசைத்து, முறைப்படுத்திய ஓசைகளாலானது,  இசைக்கலையாகும்.

இசை, இன்று உலகெங்கும் பரவி நிற்கும் உன்னத கலையாகத் திகழ்கிறது. இசைக்கருவிகள் தனித்துவம் பெற்று விளங்குவதோடு மட்டுமல்லாமல் குரலோடு சேர்ந்து இசைக்கு மேலும் வலு சேர்க்கின்றது . இசையின்  புதிய உத்திகளைக் கையாண்டு  இசை வரலாற்றில் இசைக்கருவிகள் பெரிதும் வளர்ந்து வந்துள்ளன. இசையின் வளர்ச்சி, இசைக்கருவிகளின் வளர்ச்சி என்பவை மக்களின் பண்பாட்டு வளர்ச்சி, நாகரீக  வளர்ச்சியைப் பொறுத்தது.

இசைத் துறையின் வளர்ச்சிக்கு அதன் சொல்வளம், சிறந்ததொரு அறிகுறியாகும். இசைத்துறையின் கலைச் சொற்கள்  தொல்காப்பிய காலம் தொட்டு இன்று வரையும் வளர்ச்சி நிலையில் உள்ளது. ‘இசை’ இயற்கை நமக்கு அளித்த ஒரு நன்கொடையாகும். மனிதன் படிப்படியாக வளரத் தொடங்கிய போது இயற்கையாகக் காடுகளில் கிடைக்கும் மூங்கில்கள், விலங்குகளின் தோல்கள் போன்றவற்றைக் கொண்டு அவனது தனிப்பட்ட இரசனைக்கு ஏற்ப இசைக்கருவிகளைச் செய்ய முற்பட்டான்.

இசை சிந்தனை, இசை நோக்கு ஆகியவற்றின் பாணிகள் தான் முக்கியமானவை வரலாற்று செயல்முறைகளில் சுவடுகளாக நாம்  இசை படைப்புகளை காண்கின்றோம்.  அவற்றுக்கு ஒரு காலத்தில் அர்த்தம் அளித்த அனுபவங்களை கற்பனையாக மீட்டுருவாக்கம் செய்த மூச்சு அந்த காலி கூடுகளில் நிரம்பி இசையாக உருப்பெறுகிறது என்பது நமது சொந்தக் கற்பனை. தற்போது  காண்கின்ற இசையின் வரலாறு என்பது படைப்புகளின்  பயணத்தில் குறிப்பிடுகின்றோம் .  இசையை கற்கும்போது நம்மில் இருந்து வேறுபட்ட ஒன்றை கற்கவில்லை ஏதோ “அங்கே” வெளியில் இருப்பதை கற்கவில்லை.  நாம் நம்மை தான் கற்கிறோம் என்று  பீத்தோவன் குறிப்பிடுகின்றார். அது ஒரு கற்பனைப் பொருள் அதனால்  அப்படித்தான் இருக்கவும் முடியும்.

“ஒரு வாக்கியத்தின் அர்த்தத்தை உணர்வது என்பது ஒரு இசை பொருளை உணர்வது போல”  என்று தத்துவ ஞானி லுட்விக் விட் ஜென்ஸ் டீன் குறிப்பிடுகிறார். இசை பொருளின் கற்பனை திறன் தான் “சித்திரக் கொள்கை”  என்று அவர் முன்வைக்கிறார்.  உண்மைக்கு  எதிராக பேசும்போது இப்படியான விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

42 Resonating Facts About Ludwig van Beethoven | The Fact Site

இசையியல் (கிரேக்கத்திலிருந்து music (mousikē) , அதாவது ‘இசை’, மற்றும் -λογία (-லோஜியா) , அதாவது ‘ஆய்வு’) என்பது இசையின் அறிவார்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான ஆய்வு ஆகும். இசையியல் என்பது மனிதநேயத்தின் ஒரு பகுதியாகும். இசை ஆராய்ச்சியில் பங்கேற்கும் ஒரு அறிஞர் ஒரு இசைக்கலைஞர்.

பாரம்பரியமாக, வரலாற்று இசையியல் (பொதுவாக “இசை வரலாறு” என்று அழைக்கப்படுகிறது)  வரலாற்று இசையியல், எத்னோமியூசிகாலஜி மற்றும் முறையான இசைவியல் ஆகியவை ஏறக்குறைய சமமானவை. எத்னோமுசிகாலஜி என்பது அதன் கலாச்சார சூழலில் இசையைப் படிப்பதாகும். முறையான இசையியலில் இசை ஒலியியல், ஒலியியல் இசைக் கருவிகளின் அறிவியல், கணிதம்  மற்றும் தொழில்நுட்பம் மற்றும் உடலியல், உளவியல், சமூகவியல், தத்துவம் மற்றும் கணினி ஆகியவற்றின் இசை தாக்கங்கள் உள்ளன.

‘அறிவாற்றல் இசைவியல்’ என்பது இசையின் கணக்கீட்டு மாதிரியைச் சுற்றியுள்ள நிகழ்வுகளின் தொகுப்பாகும். சில நாடுகளில், இசைக் கல்வி என்பது இசையியலின் ஒரு முக்கிய துணைத் துறையாகும்,   ஆசிரியர் கல்வி, கல்வி ஆராய்ச்சி மற்றும் மக்கள் தொடர்புடைய துறைகளுடன் இன்னும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

“இசை” கல்வி ஆராய்ச்சிக்கான பொதுவான சொல். இன்று ஒரு முறையான அறிவியலாக நிறுவப்பட்டுள்ளது.  தற்போது இசை வரலாறு, மற்றும் பிற இசை அழகியல், இசை உளவியல், இசை ஒலியியல், இசை சமூகவியல், இசைக் கல்வி ஆய்வுகள் என்று  பல உள்ளன. இசை அமைப்பு மற்றும் இசை நடத்தை தொடர்பாக இனக்குழுக்களின் இசையைப் சேகரிக்க முயற்சிக்கும் எத்னோகிராஃபிக் இசை ஆய்வுகள் சமீபத்திய ஆண்டுகளில் ஆராய்ச்சி முடிவுகளை ஆழப்படுத்தியுள்ளன.

இளம் ராமனின் இசை ஆய்வுகள் | இளம் ...

‘ராமன் விளைவு’ சர்.சி.வி.ராமன்   ஒளியைப் பற்றிய  ஆய்வுகள் என்று உலக விஞ்ஞானிகளால் போற்றப்படுகின்றன. தெரிந்த ஒண்டு  ‘ராமன் அலைகள்’ இசையை பற்றி பேசுகிறது.

சென்னைமாநில கல்லுரில்  மாணவராக இருக்கும் பொழுது அப்போது  நவீன ஆய்வுக்கூடங்கள் இல்லை. இசைக்கருவிகள்  அவரது ஆய்வுக் கூடமாக மாறியது.இசைக் கருவியில் இருந்து வெளியாகும் இன்னிசைக்கும் மூன்று பண்புகள் உண்டு.

1.இசை ஒலியின் அடிப்படை அதிர்வெண்

2.இசை ஒலியின் நாத அளவு

3.இசை ஒலியின் பண்பு

வயலின் இசையின் தனித்தன்மையை ராமன் ஆராய்ந்தார். அது பற்றி ஹெம்ஹோல்ட்ஸ் என்பவர் ஏற்கனவே சில அடிப்படைக் கருத்துகளை மட்டும் கூறியிருந்தார். ராமன் அவற்றை மேலும் வளர்த்தார்.

இசையின் பகுதிகள் வயலினின் விறைப்பான கம்பியின் மேல் குதிரை வால் முடியிலான வில் ஓடும்போது கம்பி சிறிது இழுக்கப்பட்டுப் பின்னர் வழுக்கிப் பழைய நிலைக்கு திரும்பும். இந்த ஓட்டமும் வழுக்கலும் தொடரும். விட்டு விட்டுத் தொடரும். அப்போது கம்பியில் குறுக்கு அலைகள் தோன்றும். அவை வில் தொடும் இடத்திலிருந்து கம்பியின் இருபுறமும் பரவும்.

கம்பியின் முடிவில் அவை பிரதிபலிக்கப்பட்டு எதிர் அலைகளுடன் கலந்து நிலை அலைகளாக மாறும். இதனால் கம்பியில் அடிப்படை அதிர்வெண் ஒலியும், அதன் முழு மடங்கான அதிர்வெண் கொண்ட ஒத்திசை ஒலியும் உண்டாகும். இவற்றின் சேர்க்கை ஒலியே வயலினில் இருந்து வெளிப்படும் இனிய ஒலி என்கின்றார். முன்னால் இயற்பியல்துறை பேராசிரியர் சூரிய தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

ராமன் அதன்பிறகு மிருதங்கத்தை ஆராய்ந்தார். மேலை நாட்டு டிரம்ஸில் வராத இசை மிருதங்கத்தில் வருவதை அவர் ஆராய்ந்தார் என படுகின்றது. வட்டமான உலோகத்தைத் தட்டினால் அபஸ்வரம்தான் வரும். அதைத் தவிர்ப்பதற்காகப் பழந்தமிழர்கள் இருபக்கத்திலும் விறைப்பான தோல்களைக் கட்டியுள்ளனர். அதுவும் ஒருபக்கத்தில் மட்டும் தோலின் மேல்பக்கத்தை வட்டமாக நீக்கிவிட்டு உள்தோலின் மேல் இரும்புத்தூள், கரி, பிசின் ஆகியவற்றின் கலவையைப் பூசுவார்கள்.அதன் கனம் அபஸ்வரத்தை நீக்கும்விதமாக இருக்கும். மறுபக்கத்தில் உள்ள தோலின் மையத்தில் ரவை மாவைப் பூசுவார்கள். இவ்வளவும் செய்தபிறகு மிருதங்கத்தைத் தட்டினால் அடிப்படை ஒலியும், அதன் முழுப்பெருக்க அதிர்வெண் ஒத்திசை ஒலியும் வெளியாகும் என மிருதங்கத்தின் இசை ஒலியை அறிவியல்பூர்வமாக விளக்கியவர்.

இன்று அன்று| 1970 நவம்பர் 21: மறைந்தார் ...

மிருதங்கத்தைச் செங்குத்தாக வைத்து அதன் தோலின்மேல் பொடிமணலைப் பரப்பி வைத்துப் பின் மேல்பக்கத்தைத் தட்டினார்.மணல் ஒன்றுகூடி ஒரு நீள்வடிவத்தை உருவாக்கியது. அதை விளக்கி ராமன் இசையை அறிவியல் ஆக்கினார். அவரது விளக்கங்கள் சிறந்த மிருதங்கக் கருவிகள் உருவாக வழி காட்டுகின்றன. ஆனால் இசை யாருக்கும் துரோகம் செய்ததில்லை ஆனால் இசைக்கு இங்கே நிறைய துரோகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கால  கீதமான சமயப் பண்பு கொண்ட கலை என்னும் சிந்தனை தான் பதினெட்டாம் நூற்றாண்டில் இசை பற்றிய சிந்தனை.  ஆனால் செவ்வியல் அழகு கலைகளின் சட்டத்திற்குள் இசையை அதற்கு முன்னரே கொண்டு வந்தாயிற்று.  இசைக்கு அப்பாலான ஏதோ ஒரு விடயத்திற்கு இசை விட்டுச் செல்வது தொடக்கம்  பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.  இசை என்பது உலக  சீர்மை அல்லது ஒழுங்கு பற்றியது  எடுத்துக் காட்டுகின்ற ஒரு சீரமைப்பு முறை  என்ற சிந்தனை என்கிறார் பித்தாகரஸ் என்ற அறிஞர்.   இன்றைக்கு இது ஒரு இனிமையான மனம் போன போக்கில் கற்பனையாக தோன்றலாம்.  ஆனால் இந்த சிந்தனை மத்திய காலத்திலும்,  மறுமலர்ச்சி காலத்திலும் மேலோங்கியிருந்தது.  ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் அளவில்

‘போலி செய்தல்’ என்ற முறை இசை கொள்கை பின்னுக்கு தள்ளி விட்டது அதற்கு உணர்ச்சியை ‘விளைவு கொள்கை’ என்று சொல்லப்படுகிறது.

இங்கே ஒரு மனநிலைக்கும், உணர்ச்சிக்கும் இடையிலான ஒரு பொருளை குறிப்பதாகக் கொள்ளலாம் இந்த கொள்கையின் படி அன்பு, கோபம், பொறாமை, போன்ற எந்த உணர்ச்சியையும் வியூகத்தில் வெளிப்படுத்துகின்ற தனது திறமையால் இசை தனது அர்த்தத்தைத் தருகிறது.  இப்படி பார்க்கும் போது  சங்கீத நாடக அரங்கங்களில் தான் இது தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Folk And Tribal Dances Of India - Regional & State Wise (com imagens)

இதுபோன்று பல்வேறு ஆய்வுகள் நடை பெற்று இருந்தாலும் வெற்றி அடைந்தவர்களை நாம் பின் தொடர்கிறோம் இதிலும்,  நாம் அரசியல் பாகுபாடு காட்டுகிறோம். ‘பறை’ என்கிற ஒரு இசைக்கருவியை மையப்படுத்தி லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஆய்வு மாணவர் வத்ராப் புதுப்பட்டியை சார்ந்த பாக்கியராஜ் அவர்கள் (the frequency of parai) என்ற ஒரு ஆய்வை மேற்கொண்டார்.  இதனுடைய அதிர்வு,ஒலி  வடிவம், கணக்கீடு, கேட்கும் திறன், ஊடுருவல், தாக்கம் என்று பல்வேறு பரிணாமத்தில் கணிதமும், அறிவியலும் இந்தப் புத்தகத்தினுடைய  ஆய்வு நமக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. ஆனால்  என்ன செய்ய பாமர இசைக்கருவிகளின்  தொடு, தீண்டல் முறையில் தன் கணக்கை தீர்த்துக்கொண்ட தமிழ் சமூகத்தில் ராமன் கையில் பறை கிடைத்திருந்தால் “பறை அலைகள்” என்று பேசப்பட்டிருக்குமோ? பக்குவமாய் பதப்படுத்தப் பட்டிருக்குமோ?”மேதைக்கு”தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை அதுவும் அரசியல் கணக்குதான்….