இசை என்னும் அரசியல் (மொழி சிதைவு இசை போர்) -5 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

இசை என்பது ஒருவருடைய தாய் மொழியிலிருந்து பிறக்கிறது. இசை, உலக அறிஞர்களைத்  தோற்கடித்து வியப்பு மிகுந்த  சவாலாக நிற்கிறது. இசை  தோற்றத்தைப் பற்றி நம்முடைய தொழில்நுட்பத்தால் இந்த நாளில் ,இச்சூழலில், இக்காலகட்டத்தில், இதனடிப்படையில், குறிப்பிட்ட இடத்தில் தோன்றியது இன்று இதுவரையில் உலக அறிஞர்கள் யாரும் தன்னுடைய கருத்தை முன் வைக்கவில்லை காரணம் இங்கே அறிவியலை, விஞ்ஞானத்தை வியக்க வைத்து அமர்ந்து கொண்டிருக்கிறது இசை என்னும் பேராயுதம். இதில் உலக மொழிகளில் கிடைக்க கூடிய இசை தரவுகளில் உற்று நோக்கும்போது. நம் சொந்த நிலத்தில் பகையற்ற முரண்பாட்டைபோல ஒரு குழப்பமான, யாதோ ஒரு நீரோடையை மடைமாற்றம் செய்வது போலத்

 தமிழ் இசையா –  தமிழர் இசையா ?  தமிழ் மொழியா  – தமிழர் மொழியா ? இந்த நுண்ணரசியலில் ஒரு மிகப்பெரிய மறைபொருள் நோக்கம் என்பது மறைமுக துத்தப்  போர்தான்.

பாடல் வழி வரும் பாடங்கள் (in Tamil) | Vikalp ...

இசைக்கு மொழி கிடையாது என்று சொல்லப்படுகிறது. உண்மையில் பார்க்கப் போனால் இசை தனக்கென்று ஒரு இசை மொழியை உருவாக்கிக் கொள்கிறது. ஒருவருடைய தாய் பேசும் தாய்மொழியில்  இருக்கக்கூடிய பேசும் பொருளின் உச்சரிப்பிலிருந்து இசை என்னும் சொற்கட்டு கட்டமைக்கப்படுகிறது. இதில் இரண்டு வித்தியாசங்களை நாம் காண முடியும்.  மேற்கத்திய நாடுகளில்  இருக்கக்கூடிய இசை சொற்கட்டுகள் நாம் உச்சரிக்கும் பொழுது ஒரு வித்தியாசத்தை முன்வைக்கிறது. அதேபோல் இந்தியத் தத்துவ மரபில்  பல்வேறு இசை சொற்கட்டுகள் இந்திய மொழியில்  சற்று  வித்தியாசமானதாகவும் உச்சரிக்க படுக்கிற அந்த இசை ஒரு இனம் சார்ந்ததாக, மக்களிசையாக இருக்கிறது.  முற்றிலும் வேறு ஒரு பரிணாமமாக  இங்கே இசை நம் முன் நிற்கிறது.

ரிச்சார்ட் வாக்னர் ஒரு ஜெர்மன் இசையமைப்பாளரும், நடத்துநரும், நாடக இயக்குநரும் ஆவார். முதன்மையாக இசை நாடகங்களுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர். பெரும்பாலான பிற இசை நாடக இசையமைப்பாளர்களைப் போல இல்லாமல்  இவர் காட்சிகளையும், வசனங்களையும் கூட எழுதினார். வாக்னரின் இசையை ஜெர்மானிய இசை என்றே  சொல்லப்படுகின்றது.  ஷைகாவ்ஸ்கியின் இசையை ரஷ்ய இசை என்றே குறிப்பிடுகின்றனர். காரணம் அங்குத் தேசப்பற்று முன்வைப்பது இல்லை பல்வேறு நாடுகளின் இசை அதை மேற்கத்திய இசை என்ற  பொதுப்பெயர் அடையாளங்களில் குறிப்பிடப் படுகின்றது.

முதன் முதலில் இத்தாலியில் தான் இசை நாடகங்கள் தோன்றின. அதனால் அவை இத்தாலி மொழியில் எழுதப்பட்டன .  இன்றும் மேலைநாடுகளில்  அவை பாடப்படுகின்றன, நிகழ்த்தப் படுகின்றன. அவற்றை இத்தாலி மொழி என்று எவரும் வெறுத்து ஒதுக்குவதில்லை. அதைப் பின்தொடர்ந்து  பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் இசை நாடகங்கள் எழுந்தன. அவரவர் மொழியில் எழுந்த இசை நாடகங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன என்றாலும், “பாவரோட்டி” இத்தாலிய மொழியில் பாடும்போது, யாரும் ஆங்கில இசையினைப் பாடு என்று குரல் கொடுப்பதில்லை. (  ஏ ஆர் ரஹ்மான் ஒரு ப்ராட்வே ஆங்கில நாட்டிய நாடகத்துக்கு இசை அமைத்தபோது அதன் பாடல் வரிகளில் பல இந்தி மொழியிலிருந்தன. அமெரிக்கர்கள் “ஆங்கில மொழியில்” பாடு என்று கூச்சல் போடவில்லை. ) என்ற வாதத்தை முன்வைக்கின்றனர் இங்கே மொழித் தூய்மையைப் பேசுகிறார்களாம்.

 - New Songs, Playlists & Latest News - BBC Music
Nusrat Fateh Ali Khan

நுஸ்ரத் பதே அலிகானின் இசையை யாரும் பாகிஸ்தானிய இசை என்று குறிப்பிடுவதில்லை. அந்த இசை வட இந்திய இசை மரபில் எழுந்து கிளைத்த ஒன்று. என்று கூறுவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இசையில் பாடல் என்பது ஒரு  மிகச் சிறிய  அங்கமே. வாத்திய இசை தான் பெரிதும் இசையின் உயிர். பாடல் புரிந்து கொள்வதற்காக இசையை ரசிப்பவர்கள் சிலர், பாடல்மொழியையும் மீறி இசையில் லயிப்பவர்களே ஏராளமானோர். ஆனால் இங்கு  இசை அறிவு யாருக்கு இருக்கின்றதோ அவர்களுக்கு மட்டும் புரிந்தால் போதும் என்பது செவிடன் காதில் சங்கை ஊத்தும் கதைதான். முக்கியமாய் தியாகராயர் கீர்த்தனைகளைப் பாடுகிறார்களாம். அது தெலுங்கில் இருக்கிறதாம் பாடுபவர்களில் நிறையப் பேர் பிராமணர்களாம், அதை எதிர்க்க என்ன செய்யலாம் என்பது தான் அவர்களின் சிந்தனையாய் இருந்தது. தியாகராயர் தமிழகத்தில் வாழ்ந்தவர். தமிழகத்தில் வீட்டில் தெலுங்கு பேசிய எண்ணற்ற மக்களில் ஒருவர். அவர் சுந்தரத் தெலுங்கினில் இசைப்பாடல்கள் பாடினால் அதில் என்ன முரண்பாடு இருக்க முடியும்? தமிழ்ப் பாடலைப் பாடாதே என்று யார் கையைப் பிடித்துத் தடுத்தார்கள்? என்று தன் வேற்று மொழி பாசத்தையும் , பிராமண துதிபாடலையும் முன் வைக்கின்றார். இசை ஆசிரியர் மஞ்சுளா நவநீதன்.

இத்தகவலைச் சுட்டிக்காட்டுவதன் பின்னணி, என்னதான் இசைக்கலைஞன் மொழிகளைக் கடந்தவொரு பொதுமொழியில்  இயங்குபவனாக இருந்தாலும் அவனது தாய்மொழி சார்ந்து இயங்குகையில் தான் அந்த இசை என்னும் மீள்மொழி அவனில் பேரழகு கொள்கிறது என்று கூறுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். 

இசை உச்சரிப்பு என்பது பண் என்று சொல்லப்படுகிறது. துத்தம் என்பது அடி வயிற்றிலிருந்து வருகிற ஒரு இசை பல்வேறு படிநிலைகளைத் தாண்டி தன்னுடைய குரலின்  வழியாக வெளிக்கொணர்கிறது. அதன் பின்னரே  இசையாய் மாறுகிறது. பல்வேறு சுரங்களை  நாம் தனித்தனி இசைக்கருவிகளில் வைத்திருக்கின்றோம் .  இங்கே ஒருவருடைய குரலின் அத்துணை ஏழு சுரங்களையும் நாம் நமக்குள்ளே வைத்துக்கொண்டிருக்கும் அதை ஏற்றார்போல் நாம் வெளிப்படுத்துகிறோம். இதற்கு மனிதர்கள் தான் மொழி வர்ணம் பூசுகின்றனர்.

Music really is a universal language

இசை ஒரு மொழியா என்பது பலருக்கு விவாதத்துக்குரியதாக இருக்கலாம். இசையும் மொழியும் மக்களோடு மக்களை தொடர்புப் படுத்தும் கருவிகளில் ஒரு சில. மொழியும் இசையும் மனிதர்களை இணைக்கவேண்டுமே தவிரப்  பிரிக்கக்கூடாது என்று மேதைகள் கெஞ்சுகிறாள்.

இசையில் மென்மையான இசை, அதிர்வு இசை  என்று இருவகையாகக் குறிக்கப்படுகிறது.  மென்மையான இசை என்பது ஒருவருடைய காதுகளில் வருடிவிட்டுப் போகிற பாதசாரியாக அமைகிறது. மற்றொன்று ஒருவனுடைய உடலில் ஒரு அதிர்வை உண்டாக்கிச் செல்லக்கூடிய இசையாகத் திகழ்கின்றது. இங்கே தாய்மொழியைப் பேசுகிற பொழுது ஒரு மனிதனுடைய உடல் சத்துக்கள் குறைந்த அளவிலே குறைகிறது என்று அறிவியல் கூறுகிறது. மாற்று மொழிகளில் குறிப்பாக  சமஸ்கிருதத்தில் அல்லது வடசொற்கள் கொண்ட பெயர்களை நாம் குழந்தைகளுக்குச்   சூட்டி வருகிற பழக்கத்தை  இப்போது  கடைப்பிடித்து வருகிறோம்.இதே போல் தான்  சொந்த  தாய்மொழி இசையை  மறுத்தும் வருகின்றோம். 

இசை நோக்கங்களும் அப்படித்தான் ஒருவர் தாய்மொழியில் இசைத் தட்டை,  இசைத்தொகுப்பை வெளியிடும்போது  மக்களிடத்தில்  எளிமையாகவும்,  சிறப்போடும் வெளிக்கொணர்வதற்குப் பயன்படுகிறது. இங்கே மொழி மோக அரசியல் என்பது மொழி இசை அரசியலாக வெளிப்படுகிறது. தம்முடைய  மொழியில் இருக்கக்கூடிய இசை சொற்களைப் புறம் தள்ளிவிட்டு மாற்று மொழியில் இருக்கக்கூடிய  இசை சொற்களை நாம் வரவேற்கும் பொழுது  இங்கே இரண்டு சிதைவுகள் அடங்கி இருக்கிறது.  ஒன்று தன்னுடைய தாய் மொழியை இழக்கச் செய்வது. மற்றொன்று பாரம்பரிய பெயர்ச் சொற்களைப் புறம் தள்ளுவது. 

அவரவர் மொழிநடையில் அவரவர் வாழ்வில் பயன்படுத்துகிற உள்ளிருந்து ஒரு இசை வெளியே வருகிற பொழுது அது பலருடைய நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிப்பதற்கு வழிவகுத்து நிற்கிறது. தாய்மொழி என்பது தாய்ப்பால் போன்றது என்கிறார் காந்தியடிகள் இது காந்தியின் தேசம்?

தமிழ் மொழியின் மீது உங்களுக்கு ...

இசைக்குத் தமிழ் மொழி பொருந்தாது என்று சொல்லிவிட்டு, தமிழர்கள் பிற மொழியில் இசை பாடுவதைப் பாரதிதாசன் வெறுக்கிறார். மேலும் சிலர், தமிழிசை என்று சொல்லிக் கொண்டு வேற்று மொழியைக் கலந்து பாடுகிறார்கள். இதைக் கண்ட பாரதிதாசன்,

 “தமிழிசையைப் பிறமொழியால் இசைத்தல் வேண்டாம்

தமிழிசை பாராட்டிடுவீர்”  என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  தமிழ் மொழி மீது பற்று இருந்தால்தான் தமிழ் இசை பாடமுடியும். அடிப்படையில் தமிழ்மொழி மேல் வெறுப்பை வைத்துக் கொண்டு தமிழிசையை வளர்ப்பதாகக் கூறுகிறவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்; பிழைப்புக்காகப் பொய் சொல்கிறார்கள். மேலும் அவர்கள், தமிழிசையை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். இதில் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்கிறார்  பாரதிதாசன்,

  நாட்டுப்புற இசை என்னும் பாடல் வழியாக எளிய நாட்டுப்புற இசைப் பாடல்களைப் பயன்படுத்தலாம் என்றும் பாரதியாரின் பாடல்களைப் பாடலாம் என்றார்  பாரதிதாசன். நிகழ்காலத்தில் நடக்கிற மொழியினுடைய அறியாமையை நாம் பார்க்க முடிகிறது. அவருடைய தாய் மொழியிலிருந்து அதனுடைய பொருளை வேறு ஒரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யும்பொழுது கருத்துப்பிழை வந்துவிடக்கூடாது என்பது தன்மையான புரிதல். ஆனால் இங்கே இருக்கிற சிக்கல் என்னவென்றால் ஒரு மொழியினுடைய அர்த்தத்தை வேறு மொழிக்கும் அதே உச்சரிப்பும் அர்த்தத்தைத் தந்துவிட வேண்டும் என்று கருதுகிறார்கள். இத்தன்மை மிக மோசமானது குறிப்பாக ஆங்கிலத்தில் உச்சரிப்பது பழனி  என்ற ஊருக்கு மாற்று மொழி உடையவர்கள் “ழ” என்ற உச்சரிப்பு அவர்களுக்கு வருவது கடினம் தான் புரிந்து கொள்ளவேண்டும்.

எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை ...

இலங்கையில் வாழுகிற தமிழ்மக்களின் ஊர்ப் பெயர்கள் வேறு வேறு மொழிகளில் முட்டி மோதி சண்டையிட்டுக் கொள்வதில்லை.  தமிழில் யாழ்ப்பாணம் என்றும் ஆங்கிலத்தில் ஜாப்னா என்றும் உச்சரிக்கப்படுகிறது, பருத்தித்துறை என்பதை ஆங்கிலத்தில் பாயிண்ட் பிட்ரோ என்று அழைக்கிறார்கள் இப்படி ஒரு தீர்க்கமான முடிவைத் தமிழக மண்ணில் எடுப்பது என்பது வக்கற்று போனது. நமது மொழியிலிருந்து வேறு ஒரு மொழிக்கு  மொழிபெயர்ப்பு செய்வது சரி ஆனால் இங்கே அவர்கள் மொழியிலிருந்து நமக்கு மொழிபெயர்ப்பு என்பது தான் வியப்பு.

ஊருக்கும், பெயருக்கும் மொழி சிதைவு என்று சாட்டை எடுக்கும் நாம் இசைக்  கலப்பை இயல்பாகக் கடந்து விட்டுப் போகிறோம். இந்த யுத்தம் பல்வேறு கிளைகளாகப் பரந்து விரிந்து தன்னுடைய அழிச்சாட்டியத்தைக் கோலோச்சுகிறது. இப்போது  கல்வியாக்கப்பட்ட இசை தன் அரசியல் உந்துதலாகக் கல்லூரி , பல்கலைக்கழகங்களில் உச்சிச்சிக்குடுமியும் , உழுவதலையனும் போல நிழலாடிக் கொண்டிருக்கிறது.