இசை என்னும் அரசியல் (கலங்கடித்த இசைக் கல்வி !) -6 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

 

இசை யாருக்கானது என்று முடிவு செய்யும் அதிகாரத்தை இன்றைக்கு கல்வி நிறுவனங்கள் எடுத்துக்கொண்டது. நாம்  பண்டைய காலத்தில் காடுகளிலும், மலைகளிலும் ,வயல் வரப்புகளிலும் தன்னுடைய களைப்பை போக்க பயன்பட்ட இந்த இசை வடிவம் கிராமப்புறங்களில் காடுகளில், வயல்வெளிகளில் ஆரோக்கியமாக வலம் வந்ததை நாம் பார்க்கமுடியும். மனிதன் தன்னுடைய பொருளாதார தேவையை நோக்கிய பயணத்தை கிராமங்களிலிருந்து நகரத்துக்கு பயணிப்பது போல கிராமப்புறங்களில் அணில் ஆடிக்கொண்டிருந்த அந்த இசையும் நகரங்களை நோக்கி பயணிக்கப்பட்டது .

பெரு நகரத்தில்  ஒரு கண்ணாடி குடுவையை தயாரித்து வைத்து இசை என்கிற சாதுரியத்தை கண்ணாடி குடுவைக்குள் அடைத்து வைத்து வேடிக்கை பார்க்கும் உலகமாக திகழ்கிறது.  இசை என்பது உற்சாகம் தரக்கூடியது என்பதால்  அதற்காக இசை ஆய்வாளர்கள் இசை கல்வியை விரும்பிப் படித்தார்கள் ஆனால் அதற்கு இன்னும் ஒரு தீவிரமான நோக்கமும் இருந்தது!

Music research project of A R Rahman Foundation- Dinamani

இசை ஆராய்ச்சியின் ஒரு விதமான சமூக வரலாற்றை அது முன்வைத்தது, அவருடைய வாழ்க்கை காலத்தில் ஆராய்ச்சியும், வரலாற்றை அக்காலத்திலேயே பரந்த கல்விக்கழக, கல்வி நிறுவனங்களோடு தொடர்புபடுத்தி கூறவேண்டும் என்று முனைப்பாக செயல்பட்டவர் ஜோசப் கெர்மென். 1985இல் இசை ஆய்வு சார்ந்த பணியில் துவங்குகிறார். சமூக , இசை  வளர்ச்சி என்பது  மத்திய காலகட்டத்தில் இசை பற்றிய சிந்தனை அக்காலத்தில் நடை முறையை சார்ந்தது என்பதை விட, கோட்பாடுகள் சார்ந்ததாக அறியப்பட்டவர்கள்என்பது உண்மை .

இதில் கணிதம்,இலக்கணம், ஆகியவற்றுடன் பெருமிதமான இடத்தை பிடித்திருந்தது அதற்குப் பிறகு இந்தத் துறை நீண்ட பிரதானமான  ஒரு நடைமுறை பழக்கத்திற்கு வந்தது.  ஒரு  சில பல்கலைக்கழகங்களில் இசை கல்வி குறித்தும் பேசப்பட்டது , மறு  பக்கத்தில்  சமுதாயத்தைப் பற்றிய ஆய்வு என்பது அந்நாளில்  ஒரு முக்கிய துறையாக நிறுவப்படடு இருந்தது .

1.இனஇசை ஆராச்சியாளர்கள்

2.இசை கோட்டபாளர்கள்

3.இசை ஆசிரியர்கள்

4.இசை ஆய்வளர்கள்

இது மரபு சார்ந்தது , இசை ஆசிரியர்களுக்கு இசை ஆராய்ச்சியாளர்  என்பது பொருள். இதில்  இசை கோட்பாட்டாளர்கள்,  அனைவரும்  இசை ஆராய்ச்சியாளர்கள்தான்.   இசை  வரலாற்று ஆசிரியர்கள் தங்களை இசை ஆராய்ச்சியாளர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள் அதன் மூலம் தங்களை கோட்பாட்டாளர்கள் என்பதில் இருந்து வேறுபடுத்திக் கொள்கிறார்கள் இந்த வேறுபாடு முக்கியமாக கருதப்படுகிறது. இன இசை ஆராய்ச்சியாளர்கள் தங்களை  கோட்பாட்டாளர்கள் என  அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் இதன் தேவை என்ன என்பதை தெளிவாக கற்றுக்கொடுக்கின்றது இசை என்று குறிப்புடுகிறார் நிக்கோலஸ் கூக் .

Joseph Kerman, Colorful Critic of Musicology, Dies at 89 – The New …

கட்டுப்பாடுகள் இல்லாத இசை, பரந்து விரிந்து காணப்பட்ட இசை, இங்கே சொற்கட்டுக்குள்  கொண்டுவரப்படுகிறது.  தாலாட்டு என்றால் நீலாம்பரி, ஒப்பாரி என்றால் முராரி,தெம்மாங்கு, சிந்து , காவடிச் சிந்து ,நடை சிந்து, என்று பல்வேறு அடிப்படைகளை  குறித்து  தந்தார்கள் நன்றாக இருந்தது ஏற்றுக்கொண்டோம். உச்சரிப்பு  இப்படித்தான் செய்யவேண்டும் என்று கருதினார்கள்  கற்றுக்கொள்ள முற்பட்டோம், ஆலாபனை என்பது அறிவு சார்ந்தது  என்று சொன்னார்கள் அறிந்து கொண்டோம், கட்டுக் கதைகளை கல்வி என்று சொன்னீர்கள் கலங்கி நின்றோம் , கற்றுக்கொண்டோம்.

இசை அடிப்படையில் இயங்கியல்  இயல்பு கொண்டது என்று இங்கே  இயங்கிக் கொண்டிருக்கிறோம். கல்வி முறையில்  இசையை  கற்பது என்பது அனைத்து மக்களுக்குமானது என தங்கள் முன்னோர்கள் முடிவுசெய்து வைத்ததாக கருத்து வைப்பது என்பது அபத்தமானது.  இசைக்காக  தனி பல்கலைக்கழகங்களை, கல்லூரிகளை இந்த அரசு நிறுவனம் தொடங்கியது . எந்த இசையை  கற்பதுக்கான இசை நிறுவனங்கள் என்பது கேள்வியே ? ” குலக்கல்வி முறையாக இருந்த இசையை அனைத்து மக்களுக்கும் கிடைக்கப்பெற செய்யவேண்டி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன”  என்று தன்னுடைய கருத்தை முன்வைத்த சுதா ரங்கநாதன் அவர்களின் பார்வையில் அனைவருக்கும் இசை கல்வி என்கிற சமூக,  சமத்துவத்தை நிறுவுகிறார்.அது அவரின் புரிதலுக்கான குறைப்பாடு  என நமக்கு  தெரிகிறது .

இசைக் கல்லூரிகளில் இவரின் நிலைகளும், இசையின் இயம்பு தன்மைகளும்,  பல்வேறு இடைச்செருகல்களும் இங்கே காணப்படுகின்றன.  குலக்கல்வி முறையை மறைமுகமாக கடைபிடிப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் . இசையை கற்றுக்கொள்ள  இந்த முன்னோடி மக்கள் அவர்களிடத்தில் தனக்கென்று ஒரு அடையாளத்தை,  பாணியை,  குரல் வலிமையை பெற்றிருந்த மக்கள் தனக்கென்று ஒரு அடையாளத்தை நிறுவிக் கொண்டார்கள்.  இந்த இசையை  எல்லாம்  முறையாக கற்றுக் கொண்டால்தான் இசை ஆய்வாளர்கள் , ஆசிரியர்கள் , நிகழ்த்துனர்கள் என்கிற மாய கருத்தியலை முன்வைத்து பாரம்பரியமாக இசை சொல்லித் தருகிற குடும்ப வழக்குகளிலிருந்து இந்த குல கல்வி மரபு என்பது தொடங்குகிறது.

எண்ணம், சொல், செயலால் யாரையும் ...

கிராமங்களில் இது முடிவுற்றது,  நகரங்களில் இந்தக் கேள்விகள் கல்வி நிறுவனங்களாக, பல்கலைக்கழகங்களாக  தலைதூக்கி இருக்கிறது. பொதுவான கல்வி  என்று நம்பினாலும் கூட நவீன குருகுல கல்வியை தான் இங்கே நாம் பார்க்க முடிகிறது. வாய்மொழியாக  வைத்திருந்த சில விடைகளை, சொற்களை, கலைவடிவங்களை, மரபுகளை பல்வேறு தொகுப்பான பாடல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, ஆய்வுக்கு முன்வைத்து இந்த ஆய்வின் அடிப்படையில் பல்வேறு பட்டங்களையும், விருதுகளையும், வெளிநாடு பயணங்களையும் போன்ற லாபகரமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

படிக்காத மக்களுக்கான  இசை பல்கலைக்கழகங்களில் மகுடம் சூடிக்கொண்டு  இருக்கிறது என்று பெருமைப்பட பேசுகிறார்கள் . ஆனால்  மக்களுக்கு மத்தியில் திரும்பிப் பார்க்க வைக்கிறது சில இசைக் கல்வி கற்பிதங்கள். அடிப்படையில் கல்வியை கற்க வேண்டும் என்ற முறையில்  இருந்தது அதை உடைத்து அனைத்து மக்களும் கல்வி கற்கலாம் என்ற முறைக்கு வந்த பிறகு,  இசையை இவர்கள்தான் கற்கவேண்டும் என்ற முறையில் இருந்து இசைக்கருவியை அனைவரும் கற்க முடியும் என்கிற அளவிற்கு முன் நிறுத்தப்பட்டது ஆச்சரியமில்லை.

University of Madras: Colleges, Courses, Fees, Ranking, Admission 2020

ஆனால் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பல்கலைக்கழகத்தில் இசை துறையின் வளர்ச்சி என்பது பின்னோக்கி  இருக்கின்றது. அவர்களுடைய இருப்பு நமக்கு இங்கே நினைவூட்டுகிறது. அதே துறையில் நாட்டுப்புறவியல் இசை என்று தனி பிரிவு கல்விமுறை இருந்தது,  சென்னை பல்கலைக்கழகம் பழமை வாய்ந்த பல்கலைக் கழகம் என்று சொல்வதால் மாணவர்கள் இத் துறையில் சேர்ந்து படிப்பதற்கு ஆர்வம் காட்டப்படுகிறார்கள். விண்ணப்ப படிவத்தில் அவர்கள் ஒரு  குறிப்பை போட்டிருக்கிறார்கள் நாட்டுப்புற இசையை கற்றுக் கொடுக்க போதுமான ஆசிரியர்கள்/பேராசிரியர்கள்  இங்கே இல்லை என்பதால் இத்துறையை நாங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். பின்பு எதற்கு ஆட்சிமன்ற குழு, கல்விஆணைக்குழு, துறைவாரியான நிதி முதலீடு, பேராசிரியர் சேர்த்தல் இதை யார் கேள்வி கேட்பது என்ற மந்த நிலை இன்னும் இருக்கிறது. காரணம் அவரவர் துறை சார்ந்து  காட்டுகிற அக்கறையை பிற துறைகளில் காட்டுவதில்லை என்பது தான்.

இதை தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்து ஆசிரியர் நியமனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இங்கே தான் தன்னுடைய குலமரபு அரசியலை, மறைமுகமாக நவீன தீண்டாமையை கடைபிடித்து வருவதை நமக்கு புலனாகிறது. இசைத் துறையில் முனைவர் பட்டம் பெற்று பல்வேறு மேடைகளில் நிகழ்த்துக்கலைகள் அனுபவம் பெற்றவர்.  அவருக்கென்று நாட்டுப்புறவியல் இசையில் ஒரு பாணியை உருவாக்கி வைத்துக் கொண்டவர் புஷ்பவனம் குப்புசாமி, அவர் இசை கல்லூரி  முதல்வர் பதவிக்கு விண்ணப்பித்த பிறகு தகுதி அடிப்படையில் நிராகரிக்க படுகிறார். அவர் எந்தக் கல்லூரியிலும் பணியாற்றவில்லை என்பது இருக்கட்டும் , இங்கே வேறு ஒருவர் இருந்திருந்தாலும் இப்பித்தலாட்டம்   அரங்கேறியிருக்கும்.  அவருக்கு இருக்கிற திறமையை விட   தற்பொழுது பதவி வகித்து வரும் முதல்வருக்கும் ஒப்பீட்டு பார்த்தோமானால் நமக்கு கோரமான  இசை அரசியலை புரிந்து கொள்ள முடியும். மனுதர்ம சாஸ்திரத்தில் பஞ்சமர்க்கு இசைஞானம், மெய்ஞானம் பிறப்பிலே இல்லை என்றான் அதை வேத வாக்காக கருதி மறைமுகமாக கடைபிடித்து வரும் போக்கை இங்கே பார்க்க முடிகிறது.

முனைவர்பட்டத்தை முடித்த, அனுபவம் வாய்ந்த இசையை கற்றுத் தரக்கூடிய வல்லமை பெற்ற இன்னும் பல்வேறு கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், நாட்டுப்புறவியல் பேராசிரியர்கள் தமிழ்நாடு முழுக்க பரவி கிடக்கிறார்கள்.  சென்னை பல்கலைக்கழகம் நாட்டுப்புற இசையை  முடக்கி வைக்கின்றது,  காரணம் இசை கலப்பு வந்து விடக்கூடாது என்பதுதான்.  இப்படி செவ்வியல் இசையோடு நாட்டுப்புற இசையை மாணவர்கள் கற்க முற்படும்போது  அங்கு அவர்கள் அதற்கான ஒரு பிம்பத்தை வைத்து பாதுகாக்கக்கூடிய அந்த சூழலில்  நாட்டுப்புற இசை என்பது அவர்களுடைய  இசைக்கு களங்கத்தை ஏற்படுத்த கூடும் என்று பலஆண்டுகளாக  இந்த நிலை தொடர்ந்து வருவதை நாம் காண்கின்றோம்.

தகுதியுள்ள தமிழரைப் புறக்கணித்த ...
புஷ்பவனம் குப்புசாமி

இன்று நேற்றல்ல 2000 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளியை யாரிடமிருந்து  தொடங்குவது  என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ்ச்சமூகம் இன்னும் எதிர் பார்த்துக்கொண்டே இருக்கட்டும் .  இதனால் இசை துறையில் நாட்டுப்புறவியல் துறையில் படித்தால் வேலைவாய்ப்பு உறுதி இல்லை , பிறகு இசை கல்வி  நமக்கு எதற்கு என்று  தனக்குள்ளேயே ஒரு கேள்வியை எழுப்பி வைத்துக்கொள்கிறார் மாணவர்கள் .  மாணவர்களுக்கு மத்தியில் இந்த குறியீடு காழ்ப்புணர்ச்சி அரசியலை உடைப்பது யார் என்பதுதான் இங்கே மையப்பொருள்.

இசையின் வளர்ச்சி என்பது சமூகத்தின் வளர்ச்சி என்று சொல்லுவது  சரியான வார்த்தையாக இருக்க முடியும். மத்திய கல்வி திட்டத்தில் இது பரிதாபமான வீழ்ச்சி அடைந்திருப்பது நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் கற்றுக்கொள்ள , உணர முடிந்தது  ஆனால் அந்த இசை கல்வியை இருபக்கங்களிலும் விரிந்தன என்று  தன்னளவில் ஒரு  முக்கிய துறையாக நிறுவப்பட்டது என்கிறார் ஜோசேப் கெர்மென்.

பிழைகளையும் ,  முரண்பாடுகளையும்   எல்லாப் படைப்புகளுக்கும் தனித்தனியே அவருடைய இறுதியான உள்நோக்கங்கள் ஒரே சமயத்தில் வெளிப்படுமாறு செய்வது அவரின் பணி  ஆனால் பீத்தோவனின் பணி நிறைவடையவில்லை. இத்திட்டத்தில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன என்று யோசித்த அவர் .  அது முதலில்  ” கடினமானது”  இரண்டாவது அது “சாத்தியமற்றது”  என்று இரண்டு பிரச்னைகளையும் காரணம் காட்டுகின்றார் . பெரும்பாலான இசைக்குறிப்புகள் பற்றிய குறிப்புகள்,  இசைகளின் மூலங்கள்  பரவலாக  இருப்பதே இதற்கு காரணம் என்று முன்வைக்கிறார்.

இசையமைப்பாளர்கள் இசை குறிப்பை எப்படி நீங்கள் மீளுருவாக்கம் செய்ய முடியும்?  என்று கேள்வி எழுப்புவது தனக்கு முந்தைய இசையமைப்பாளர்களிடம் கிடைத்திருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.  குலமரபிலிருந்து ஒரு மரபை நாம் கண்டறிய முடியும் என்று சொல்லுகிறார்கள் .  இன இசை ஆய்வாளர்கள் பங்கு  என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

தாங்கள் படிக்காத ஒரு துறை ஆகவே இசையியல் துறையை  இசை ஆராய்ச்சியாளர்களும், இசை கொள்கையாளர்கள் நினைக்கிறார்கள்.  இசை வரலாற்று ஆய்வாளர்கள்  தங்கள் துறையை அதன் சமூக, கலாச்சார, சூழலில் இசை உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை ஒன்றாக காண்கிறார்கள். ஆகவேதான்  இசை ஆராய்ச்சி, இசைக் கோட்பாட்டை அணுகுவதற்கும் முன்னாலேயே இசைத்துறையில் சேர்க்கப்பட்டது.

இந்த மாதிரியான சூழல் இசையில் நிறைய சான்றுகளை நாம் பார்க்க முடியும். இதுபோன்ற சிக்கலில் முன்னணியில் இருந்தவர்கள் இன இசை ஆய்வாளர்கள்.  அவர்களது அனுபவங்கள் ஒருவகையில் 1970 வாக்கில் குறிப்பாக அமெரிக்காவின் பட்டப்படிப்பு நிறுவனங்களில் பயிற்சி பெற்ற இசையமைப்பாளர்கள் தலைமுறையோடு கொண்டவையாக இருந்தன என்று குறிப்பிடுகிறார் நிகோலஸ் கூக் .

Nicholas Cook: Music as Creative Practice

அப்போதுதான் போர்க்காலம் மாணவர்கள் பலரும் சேர்ந்து எதிர்ப்பு இயக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் “நாட்டார் இசையும்” மையமாக இருந்தன. ஆகவே நீங்கள் பகலில் இசையில் ஆராய்ச்சியில் ஈடுபடலாம், பேசிக்கொண்டு, கேட்டுக் கொண்டிருக்கலாம், இசை சார்ந்த கல்வி அறிவானது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது என்கிறார்கள் .

நாட்டுப்புற இசைக்கும் , உலகத்திற்கும் தொடர்பில்லை என்று கூற முடியாது . பல்வேறு புரட்சிகளை முன்னெடுத்தது  தன்னுடைய மரபுசார்ந்த  நாட்டுப்புற இசை தான். ஆனால் உங்கள் வாழ்க்கையின் மீதான பற்றும்,  அரசியல் பார்வை,  வெளியீடுகள்,  இசை என மிக நெருக்கமாக தொடர்புடையது என்பதை உணர்த்துகிறது.   இந்த சூழலில் இசை ஆராய்ச்சியாளர்கள் தங்களை தொழில்ரீதியான வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் பிரித்து வைத்துக் கொள்வதில் திருப்தி அடைந்தார்கள்.   ஆனால் மற்றவர்கள் அப்படி அல்ல. தொழில் முறை கலைஞர், பாரம்பரிய கலைஞர்கள் இருவரையும்  வழிநடத்தும் ஊக்க மருந்தாக இசை ஆர்வளர்கள் தங்களை அடையாள படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு பண்பாட்டு துறை என்ன எதிர் வினையாற்ற போகிறது என்பது  ஒதுக்கப்பட்ட நிதியில் இருக்கிறது இசை அரசியல் …