இசை என்னும் அரசியல் (மருத்துவம் பார்க்கும் இசை !) -8 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

 

மனதையும்,  சிந்தனையையும்  களங்கப்படுத்துவதை தவிர்ப்பதற்கு, நாம் தெரிவு செய்யும்  இசையைக் குறித்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதை நாம் எப்படி அணுகுவது  என்பதில் இருந்து இசை தன் இருப்பை தக்கவைத்து கொள்திறது.

கிராமப்புறங்களில் உடல் உழைப்பை செலுத்தி உழைக்கும் மக்களுக்கு தங்களுடைய வேலைப்பளுவை குறைப்பதற்கு, அவர்களை புத்துணர்ச்சி ஆக்கிக் கொள்வதற்கு இசை வடிவம் தேவைப்படுகிறது.

நாற்று நடுதல் வேலை செய்யும் பெண்கள் தங்களின் உடலை குனிந்து வேலை செய்யும்பொழுது, வேலை என்பது கடினமாக அமைகிறது. அந்த வலியை போக்கிக்கொள்ள அவர்கள் தானாகவே பாடல்களாக வெளிப்படுத்துகிறார்கள்.  இந்த பாடல் சுற்று வட்டாரத்தில் இருக்கிற அனைத்து வேலை ஆட்களுக்கும் கேட்கும் அளவிற்கு உதவி செய்வது, கழனிகளில் நிறைந்திருக்கும் தண்ணீரும், கானல் நீராக தெரியும் காற்றும் மற்றவர்கள் இடத்தில் கொண்டு போய் சேர்கிறது.

நெல் நாற்று நடவின் போது பெண்கள் ...

இரவு நேரங்களில் காடுகளில்,  வயல்வெளிகளில் பாதுகாப்பிற்காக இருக்கும் மக்களுக்கு தங்களுடைய பயத்தை,  இருள் சூழ்ந்த அந்த சூழலை கடந்து செல்வதற்கு தங்களை தைரியப் படுத்திக் கொள்வதற்கு பெருத்த குரலெடுத்து பாடுகிற இந்த இசைப் பாடல்கள் தான் அவர்களுக்கான மருந்தாக செயல்படுகிறது.

குறிப்பாக “ஒத்திசையை தவறாமல் கேட்பது, ஒரு குழந்தையின் கற்றுக்கொள்ளும் திறமையை அதிகரிக்கிறது என ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. ஆனால் பெரும்பாலான வீடுகளில், குழந்தைகள் எதுவுமே கேட்பதில்லை இன்றைக்கு கார்ட்டூன்களில் சிக்கி தவிக்கின்றனர் இது பெற்றோர்களின் இயலாமையை காட்டுகின்றது என்கின்றனர். “இசை மட்டுமே சுண்டி இழுக்கக் கூடியது, அலைபாயும் மனதை ஆசுவாசப்படுத்தக் கூடியது, அலைக்கழிக்கும் மனதை ஆறுதல்படுத்தக் கூடியது.” என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்காக  நேரத்தை ஒதுக்குவதில் சிக்கல் இருக்கின்றது.

இளைஞர்கள் துள்ளல் மற்றும்  ஹெவி மெட்டல் இசையிலேயே  லயித்திருந்தப் பிறகு, அவர்கள் சிடுசிடுப்பானவர்களாகவும்,  முரண்டுபிடிக்கிறவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள் என்பதற்கு அவர்களுடைய பெற்றோரே சாட்சி பகருகின்றனர். 1930-கள் மற்றும் 40-களில், அடால்ஃப் ஹிட்லருடைய வசீகரிக்கும் பேச்சை மக்கள் கேட்பதற்காக, உணர்வை தட்டியெழுப்பும் அணிவகுப்பு இசையை நாஸிக்கள் பயன்படுத்தினர். இதிலிருந்தே இசையின் வலிமையை தெரிந்துகொள்ளலாம்.

இசையால் மனதையும், இதயத்தையும் மயக்க முடியும், அதோடு நன்மையோ தீமையோ செய்ய தூண்டுவிட வும் முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. உதாரணமாக, சிலவகை இசையை சிறுபிள்ளைகள் கேட்டுக்கொண்டே இருந்தால், அது அவர்களுடைய அறிவுப் புலமையையும் உணர்ச்சிரீதியிலான வளர்ச்சியையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. பேசமுடியா திக்குவாயர்களும்கூட சிலசமயங்களில் பாடல்களின் சிலவரிகளை வாய்விட்டுப் பாடிவிடுகின்றனர்.

நகரமுடியாமல் தவிக்கும் நரம்பு கோளாறுகளையுடைய நோயாளிகள் மீதும் இசை ஏற்படுத்தும் தாக்கம் சிலசமயங்களில் மலைக்க வைக்கிறது என்று இசையும் மனமும் என்ற ஆங்கில நூலில் சொல்கிறார் அந்தோணி ஸ்டோர். ஒரு பெண்ணின் உதாரணத்தை ஸ்டோர் குறிப்பிடுகிறார்: “[பார்கின்ஸன் நோயால்] நகர முடியாமல் உறைந்துபோன நிலையில் இருந்தாள் அந்தப் பெண். தான் இளமையில் கேட்டிருந்த சில ராகங்களை ஞாபகப்படுத்திப் பார்க்கும் வரை அசைய முடியாமல் கிடந்தாள். அவை மீண்டும் நினைவுக்கு வந்தபோதோ அவளால் மறுபடியும் நகர முடிந்தது.”

Exploring the Mechanisms of Music Therapy | The Scientist Magazine®

ஒருவரின்  ஆரோக்கியத்தை எடுத்துபார்க்கும் போது.  அதனை இரு பிரிவுகளாகப் பகுத்துப் பார்க்கலாம். ஒன்று உள ஆரோக்கியம்; அடுத்தது உடல் ஆரோக்கியம். உள்ளத்தோடு சம்பந்தப்பட்ட பல கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிக்கக்கூடியது இசை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இது எவ்வாறு சாத்தியமாகின்றது வியப்பு ! எமது உடலில் உள்ள நரம்பு மண்டலம் மூளையின் கட்டுப்பாட்டிலுள்ளது. நரம்பு மண்டலத்தில் தொடர்ச்சியாக மிக நுண்ணிய மின்னலைகள் உற்பத்தியாகின்றன. மூளைக்கான செய்திகளை இந்த மின்னலைகளே எடுத்துச் செல்கின்றன. மூளையிலிருந்து அச்செய்திகள் உடலின் மறுபாகங்களுக்குக் கட்டளைகளாகக் பரவிச் செல்லப்படுகின்றன. மூளையின் மின் அலைவரிசைகளுக்கு ஏற்ப, இசையின் ஒலியலைவரிசை அமையும்போது, நமது எண்ணங்களிலும் மனோநிலையிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகளூடாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒலியின் அலைவரிசையை மாற்றி அமைப்பதன் மூலம், மூளையின் அலைவரிசையில் உரிய தாக்கங்களை நிகழ்த்தி, நோய்களைக் குணப்படுத்தலாம் என இசைமருத்துவம் நம்புகிறது. இவ்வாறாக, மூளையும் மனமும் உடலும் இசையால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்துப் பலவித ஆராய்ச்சிகள் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நரம்பியலும் இசையியலும் ஒன்று சேர்ந்து நரம்பிசையியல் மருத்துவம் எனும் புதிய மருத்துவப் பிரிவு உருவாக்கப்பட்டு, இவ்வாறான ஆய்வுகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மனோவுணர்வுசார் துன்ப துயரங்கள், மன அழுத்தம், மனச் சிதைவு, மனப் பதற்றம், நாட்பட்ட உடல் நோவுகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு ’மகிழ்ச்சியுடன் கூடிய மருந்துச் சீட்டு இந்த இசையாகும். இவ்வாறான பிரச்சினைகள் உள்ளவர்கள் நல்ல இசையைச் செவிமடுக்கும்போது, அவர்களது இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், கோர்ட்டிசோல் மட்டம் என்பன சீரடைகின்றன. இதனால் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆறுதல் கிடைக்கின்றது. தியானம், யோகா, ஆக்கக் கலைகள்  போன்ற மாற்றுச் சிகிச்சை முறைகளெல்லாவற்றையும் விட, இசை தீவிரம் மிக்கது; எங்கும் எப்போதும் உடனடிப் பயன்பாட்டை அனுபவிக்க முடிகின்றது. குறிப்பாக சமூக முன்னேற்றம்சார் பாடல்களுடன் கூடிய இசையைக் கேட்கின்றபோது நாம் உணரமுடிகின்றது.

நம் ஆன்மாவை தாலாட்டும், மலர்த்தும், புத்துணர்வாக்கும் சக்தி இசைக்கு உண்டு. அதை மனதார நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால், அது மருத்துவ ரீதியாகவும் உண்மை என்று தெரிவிக்கின்றன ஆய்வுகள்.

நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள், நல்லிசைக்கும், மனதுக்கும் மூளைக்குமான தொடர்பு பற்றி வெளியிட்டுள்ள ஆய்வு முடிவகள் தெரிவிக்கின்றன.

Blog Archives | Page 33 of 254 | The Asia Foundation

யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமங்களில் நிறைமாத கர்ப்பிணிக்கு சுக பிரசவம் ஆவதற்கு தோல் இசை வாத்தியம் பறையை பயன்படுத்தியிருக்கின்றனர், இந்த பெண் மகப்பேறு வலியால் தவிக்கும் பொழுது வயிற்றில் எண்ணையை தடவி தயார்படுத்தி வைக்க ஒரு மூதாட்டி உடன் இருக்க அவருடைய வீட்டை சுத்தி ஐந்து பறை இசை கலைஞர்கள் பறையை இசைக்கின்ற பொழுது,  நான்கு முறை சுற்றி வருவதற்குள் குழந்தை பிறந்துவிடும், தோலில் இருந்து வரும் அதிர்வுகள் இந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று கூறுகின்றனர். இது நேரடி கள ஆய்வில் பெறப்பட்ட தகவல், அதேபோல் சாவு வீடுகளில் ஒப்பாரி இசையை பாடுகிற பொழுது அவர்களின் மனதில் இருக்கும் சோகத்தை களைவதற்கு உழைக்கும் மக்களின் இசை செயலாற்றுகிறது. அங்கேயே பயன்படுத்தக்கூடிய வாணவேடிக்கைகள் அவர்கள் மனதில் இருக்கும் இருக்கத்தை கலைய உதவுகிறது நாம் அறிந்ததுதான்.

இசை கேட்கும்போது அது மனதிற்கும், மூளைக்கும் ஊட்ட  மாற்றங்களைத் தருகிறது. ‘பிரைன் ப்ளாஸ்டிசிட்டி’ என்பது வயது, நேரம் என்ற வரம்புகள் அற்று மூளையின் செயல்களைத் தூண்டச் செய்யும் ஒரு பயிற்சி. அந்தப் பயிற்சி, இசை கேட்கும்போது தானாகக் கிடைக்கிறது. பொதுவாக இசையுடன் நேரம் செலவழிக்கும் மனித மூளை, இசையிடம் இருந்து விலகி இருக்கும் மனித மூளையைவிட மாறுபட்டு இருப்பதாகவும், இசைப் பிரியர்களுக்கு ‘கார்ப்பஸ் கொலோஸம்’ எனப்படும் நரம்பு இணைப்புகள் இயல்பைவிட வலுவாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

‘ஆக்ஸிடைஸின்’ எனப்படும் பிரைன் ஹார்மோன், நம்பகத்தன்மை, தாராள உணர்வு, மகிழ்ச்சி ஆகியவற்றை தரக்கூடியது. அதிகமாக சாக்லெட் சாப்பிடும்போது, வெற்றி பெறும்போது என குஷியான  தருணங்களில் எல்லாம் மனதில் ஏற்படும் அந்த ஜில் மாற்றம், அந்த ஹார்மோன் தூண்டப்படுவதால்தான். ம்யூசிக் கேட்கும்போது ஆக்ஸிடைஸின் ஹார்மோன் அதிகமாகத் தூண்டப்படுகிறது என்பது தகவல்.

இசையின் தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் பொருந்தும் என்கிறது ஆய்வு. இசைஞானி இளையராசா அவர்களின் பாடல் உடுமலைப்பேட்டையில் மலையடிவார கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கொட்டகையில் ராசாத்தி உன்ன என்கிற அந்த பாடல் தொடங்கும் பொழுது காட்டிலிருந்து ஒரு யானை கூட்டம் அங்கே வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்வது வழக்கமாக வைத்திருந்தனர் அது இயல்பு என்று நம்பினார்கள் மற்றொரு திரைப்படத்தின் பாடல்கள் ஓடுகிறது அந்த யானை கூட்டம் வருவதில்லை அப்பொழுது அறிந்து கொண்டார்கள் யானை கூட்டத்திற்கு அந்த இசை  ஏதோ ஒரு தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்று இசை விமர்சகர் குறிப்பிடுகின்றார்.

அழிந்துவரும் பூர்வீகக்குடி மக்களான ...

பழங்குடிகளின் இசையில் இயல்பாகவே மருத்துவ குணம் கொண்டவையாக விளங்குகின்றது அவர்களின் வாழ்க்கை சூழலை தீர்மானிப்பதே அவர்களின் இசைமரபில்  இருந்து தான் தூங்குகிறார்கள் மருத்துவத்தையும் இசையையும் வேறு எந்த எண்ணத்தோடும் கடனாக பெற்றுக் கொண்டது இல்லை என்று கூறுகிறது ஆய்வுகள். படைத்தவர்களாக காணப்படுகின்றன அதேபோல் இஸ்லாமியர்கள் பக்கீர்கள் தங்களுடைய துவாவை பாடி நோய்களை குணம் அடைய செய்கிறார்கள் என்று நம்பப்படுகிறது

இப்படி இசையில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி மனித மனம் ஏற்கிறது, ஆனால் இதில் ராகங்கள் அடிப்படையில் அமைந்த செவ்விசை, நாட்டுப்புற இசைக்கும் இடையில் நடக்கும் உள்நாட்டு தந்திர இசை போர் . இதை  அறிவியல் துணைக்கொண்டு பயணிப்போம்…

 

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-7/