இசை என்னும் அரசியல் (இசையின் பாலியல்பு..!) -9 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

தாட்சர் ஆட்சிக்காலத்தின் போது அடுத்த நபரின் சிந்தனைதான் கேள்வி ஞானம் ஆகும். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது கருத்தியல் கிடையாது.  அது இயல்பாக இருப்பது ரசிகர்களுக்கு தான் கருத்தியல் உண்டு. இதேபோல கருப்பர்களுக்கு தான் இனம்  உண்டுவெள்ளையர்களுக்கு கிடையாது. பெண்களுக்குத்தான் பாலியல்பு உண்டு, ஆண்களுக்கு இல்லை இப்படி பல்வேறு கருத்துக்களை முன்வைக்கப்படுகிறது.ஆனால் கருத்தியல் என்பது நம்பிக்கைகளின் ஒரு தொகுதி அது கண்ணுக்கு புலப்படுவதில்லை இப்படித்தான் பல விஷயங்களை நாம் இயல்பாக கண்டிருக்கின்றோம். இப்படித்தான் பல விடயங்கள் நம்மை நம்ப வைக்கின்றது இயல்பான தோற்றம் என்பதில்தான் முதலாளித்துவ ஜனநாயகம் தன் கருத்தியல் நிலைபாட்டை பலப்படுத்திக் கொள்கிறது.

1930-களில் முதலாக சமூகவியல் துறை ஒரு புரட்சிகரமான  துறையாக விமர்சன கோட்பாடுகள் தினசரி வாழ்க்கையில் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கைகள் வாயிலாக கருத்தியல் செயல்படுகிறது. தனிமனிதன் தங்கள் நம்பிக்கைகள் இயல்பானவை என்று முடிவுசெய்ய எவ்விதம் இடமளிக்கிறது, கருத்தியல்கள் எவ்விதம் மாறுகின்றன, இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தியது கோட்பாடு. ஆகவே கலாச்சார விமர்சனத்தின் மிகச் செறிவான வளர்ச்சி அடைந்ததால் அதன் தாக்கம் இலக்கியக் கல்வி, திரைப்படம், ஊடக ஆய்வு, கலை வரலாறு, வெகு அண்மையில் இசையிலும் கூட பாதிப்பை ஏற்படுத்தியது.

“விமர்சனம்” கோட்பாட்டை உருவாக்ககியவர்களில் ஒருவரான தியோடர் அடர்நோ சமூகவியலாளர் மட்டுமல்ல, ஒரு திறனாய்வு இசைக் கலைஞரும் கூட. அவர் இசை அமைப்பினை “சோம் பர்ட்ஸ்” இன் மிகப்புகழ் பெற்ற மாணவர் ஆல்பம், சமூகவியல் பற்றி எழுதிய அளவுக்கு, இசை பற்றியும் எழுதினார்.அவரின்  நூல்கள் படிக்க எளிதானவை அல்ல என்று சொல்லப்படுகின்றது. அவர் நூல்கள் எத்தனை பேர் வாசித்தார்களோ  அத்தனை விதமான விளக்கங்கள் இருக்கின்றன என்று கூறுகின்றனர். 

இசைக்கும் பொதுவான தன்மைகள் இருக்கின்றன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இசையமைப்பாளர் சூசான் கியூபிக் சொல்வது போல மனதுக்குள் அடுத்தடுத்த அறைகளில் உள்ள இசையை வர்ணிக்க பயன்படும் சொற்கள் இதை காட்டும். இசை கவர்ச்சியாக இருக்கிறது ஆங்கிலத்தில் ரவிஷிங் மியூசிக் நேர் பொருளியல் எனவே இசையை ஒரு பாலுணர்வு  செய்கையின் உடனடியாகவே பார்க்கிறோம். எவ்வித இசையமைப்பாளர்கள் அதற்கு பாலியல் தன்மைகளை வழங்கி இருக்கிறார்கள் என்று கேட்பது இதன் அடுத்த நிலைதான். 

 இசையினால் ஆண் அகவை தன்மையின் மாற்று மாதிரி ஒன்றை உருவாக்க முன் வந்ததாக சொல்லப்படுகிறது. கிளாரி என்பவர் விளக்கம் அளித்து அதனை பிரபலப்படுத்த வில்லை மாறாக 1988 இல் அமெரிக்க இசையில் ஆராய்ச்சிக் கழகத்தில் அவனுடைய மிகப் புகழ்வாய்ந்த நவீன வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் சாலமன் அவர்களின்  ஆராய்ச்சி கட்டுரை தான் இந்த விளைவை ஏற்படுத்தியது. 

 அடிக்கடி சென்ற வியப்பான நகரை சுற்றி அவர்  ஒரு ஆண் பாலுறவுக்கு பெயர் போனவை என்பதற்கு சந்தர்ப்பம் சாட்சியை விளக்கங்கள் பலவற்றை அவர் அளித்தார். ஆனால் அவரும் ஒரு வேளை ஒரு ஆண் பாலுறவில் நாட்டம் கொண்டவராக இருக்கலாம் என்று கருத்தையும் முன்வைத்தார் மேலும் இருபுறமும் பெருகும் வெறுப்பு உமிழும் வாதப் பிரதிவாதம் ஒன்று அக்கால முக்கிய பத்திரிகைகளிலும் இசைக்கென வெளிவரும் ஆய்வு இதழ்களிலும் உருவாகியது வாதங்களும் எதிர் வாதங்களும் எந்த முடிவுக்கும் வரவில்லை.

 இப்போது பாலின அரசியலில் நோக்கிலிருந்து அந்த துன்பத்தை நாம் சற்றே வேறு வகையாக பார்க்கலாம் இசையை ஒரு புனித தொகுதியில் முனைப்பாக உள்ள இசை படைப்பு ஆணின் தன்மைகளை வெளிப்படுத்தினால் அது இருபால் உறவு அகவையை தன்மையை காட்டுகிறது. அப்போது அந்த இசை ஆணினுடைய இருபால் தன்மை கொண்ட மதிப்புகளை உலகப் பொதுவானதாக முன்வைக்கிறது.

 ஆனால் பாலியல்பு அதற்குள் வராதது போல் நடிக்கிறது கருத்தியல் எவ்விதம் செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.  இங்கே பாலினம் குறித்து சில பிரச்சினைகளை விட்டு நாம் புதிய இசைகளின் இதயத்துக்கு வருகிறோம் இந்த பெயர் தவிர்க்க இயலாமல் சிறிதுகாலம் அலமாரி பெயர்களுக்கு உரியதாக இருந்தாலும் முக்கிய இசையின் பகுதியாக புதிய இசையில் மாறிவிட்டது என்ற கருத்தை முன்வைக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இசை  நிலைபாடுகளை கோட்பாடாக முன்வைத்தனர்.  குறிப்பிட்ட பாலின நோக்கிலிருந்து இசை பற்றி எழுதுவது குறிப்பாக ஆண் ஒரு பெண் ஒரு பாலுணர்வு நோக்கில் இசையில் என்பது வெளிப்படையாகவே அடிப்படை நிலைப்பாடுகள்  எடுப்பதாகவும் இது ஒரு வகையான தொழில் ரீதியான வெளிப்பாடாக  உள்ளடக்கி உள்ளது.  அப்போதுதான் இசையுடன் ஒரு லெஸ்பியன் உறவு நேர் பாலியல்பு சந்திப்பதற்கு ஒரு தீர்வு முயற்சி போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் வெளியாகத் தொடங்கின. ஆண்டுகளாக இனமான கொண்டிருந்த அமெரிக்க நாட்டுப்புற பெண் பாடகர்கள் கேடிலா தான் ஒரு லெஸ்பியன் என்று அறிவித்துக் கொண்டார் ஒருவேளை இப்படி செய்த அறிவித்துக்கொண்ட முதல்  பாடகர் அவராகவே இருக்கலாம். 

ஒற்றுமை, வேற்றுமை முரண்பாடு, தீர்வு ஆகிய பணிகளில் பொதுவாக காணப்படுகின்றன ஆனால் நாம் விரிவுபடுத்தும் எந்தவித உருவாக்கத்திலும் இசையின் பொதுத் தன்மையை அடைகிறது. உருவகங்கள் இசையை குவிய படுத்துகின்றன அதன் உள்ளார்ந்த பண்புகளுக்கு அவை குறித்து வெளிப்பாடுகளை அளிக்கின்றன. ஆனால் இந்த உள்ளார்ந்த பண்புகள் முதலில் இசையின் அதன் ஒப்புமை விரிவு போன்ற பணிகளில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பயன்படுத்தும் உருவகம் சற்றும் மனத்தை தூண்டுவதாக இருக்காது.

 இசைக்கு இப்பொழுது அதிகமான வார்த்தைகள் தேவைப்படுகின்றன அப்படி பெற்ற பிறகுதான் இசை கருக்  கொண்டிருக்கிறது. அது மொழியின் அர்த்தத்தை மட்டும் பிரதிபலிப்பதில்லை ஆனால் வார்த்தைகள் இசையில் பெற்று செவ்வியல் ஆக பணிபுரிகின்றன. வார்த்தைகள் உள்ளார்ந்த அர்த்தத்தை வெளிப்படையான அர்த்தமாக மாற்றுகின்றன. அவை படைப்புகளுக்கும் உலகிற்கு மான இணைப்பை உருவாக்குகின்றன. 

இசையின் வலிமையால் நன்மைகள் இருப்பதாக தெரிகிறது. ஆனால், இசையின் இந்த வலிமையை தீயவர்களோ அல்லது பேராசைமிக்க ஆட்களோ சாவுக்கேதுவான ஒரு கருவியாக பயன்படுத்தும் ஆபத்துகளும் இருக்கின்றன. சமூகவிரோத நடத்தைக்கும் சில வகை இசைக்கும் இடை யே நேரடித் தொடர்பு இருப்பதாக சில ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

இதை ஆதரித்து சைக்காலஜி ஆஃப் விமன் குவாட்டர்லி இவ்வாறு அறிவிக்கிறது: “ராக் இசை வீடியோக்களைப் பார்ப்பது ஆபாச படங்களைப் பார்ப்பதைப் போலவே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதில் ஓரளவு உண்மை இருக்கிறது. வன்முறையற்ற ராக் இசை வீடியோக்களைப் பார்க்கும் ஆண்களைவிட, வன்முறைமிக்க ராக் இசை வீடியோக்களைப் பார்க்கும் ஆண்கள் கல்நெஞ்சமுள்ளவர்களாகவும் பெண்களிடம் முரட்டுத்தனமாக நடப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.”

இந்தப் பாதிப்பு ஆண்களுக்கு மட்டும்தான் என சொல்வதற்கில்லை. பெண்களும் இப்பாதிப்புகளுக்கு விதிவிலக்கல்ல. அதே அறிக்கை மேலும் சொல்கிறது: “லாயக்கற்றவர்கள் என பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் பகைமையுணர்வு வளர வழிநடத்தலாம்.”

செக்ஸ் ரோல்ஸ் என்ற பத்திரிகை இதை ஒப்புக்கொண்டு பின்வருமாறு குறிப்பிட்டது: “பருவ வயது மங்கையர் திருப்தியற்ற குடும்ப சூழலிலிருந்து வருவதும் இசை வீடியோக்களை அதிகமாய் கேட்பதுமே நெறிகெட்ட மனநிலைக்கும் நடத்தைக்கும் காரணம் என சமீப ஆராய்ச்சி கண்டுபிடித்தது.” சில ராப் ஆல்பங்கள் “சமுதாய தராதரங்களுக்கு மிக மோசமானவை” என அமெரிக்காவிலுள்ள ஒரு மாவட்ட நீதிபதி தீர்ப்பு வழங்கும் அளவுக்கு சில ராப் இசையில் தத்ரூபமான வன்முறையும் அப்பட்டமான செக்ஸ் பாடல்களும் இருந்தன.

 இந்தக் கொந்தளிப்பு, “வெறித்தனமான மற்றும் அழிவுக்கேதுவான நடத்தைகளோடும்” பள்ளியில் நல்ல மதிப்பெண் வாங்காததற்கான காரணத்தோடும் தொடர்புடையது.

உண்மையில், குறிப்பிட்ட வகை இசைக்கும் செக்ஸ், தற்கொலை மற்றும் சமூகவிரோத நடத்தைக்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்பதற்கு அநேக அத்தாட்சிகள் உள்ளன. ஆனால் எல்லா வகை இசையுமே இப்படிப்பட்ட தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா

இசை ஒருவனுடைய நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது. அவன் சமூகத்தில் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும், எப்படி வாழவேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைக்கிறது.  இது அனைத்து இசைகளில்  இருந்தாலும் கூட ஒரு இசைக்கு பாலியல்பு தன்மையை எங்கே புகுத்தப்படுகிறது, பாலியல்பு தன்மையை எங்கே நுகரப்படுகிறது என்பதிலிருந்து இசையின் அரசியல்  தொடங்குகிறது. 

இசை நுணுக்கங்களை, இசை சொற்களை ஒருபால் இயல்பு தன்மையோடு நாம் அரங்கேற்றம் செய்கிற பொழுது இன்னும் கவனமாக கையாளுகிறோம். காரணம் அந்த இசையின்  வீச்சு என்பது ஒரு குரலில் காணக்கிடைக்கின்றது. அதிலும் ஒரு வசீகர குரலோடு கொண்ட கட்டழகு உடைய ஒரு பெண்ணின் உணர்வோடு தொடர்புபடுத்தி  இசைவடிவம் முன்வைக்கிறது இதை பொதுமக்கள் இயல்பாகவே விரும்பி கேட்கிற தன்மைக்கு ஆளாகின்றனர். 

இதேபோல் கிறிஸ்துவ பாடல்கள் இந்த குரலை இவர்கள்தான் குறிப்பாக பெண்கள்தான் இந்த கூட்டுப் பிரார்த்தனைகளை அந்த சொற்களை ஒரு மென்மையான முறையில் உச்சரிக்க முடியும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறார்கள் இதுவரையில் அந்த முறையை பின்பற்றி வருகிற ஒரு பழக்கத்தை கிறிஸ்துவ பாடல்கள் அரங்கங்களில் நம்மால் பார்க்க முடியும். 

எம்.எஸ் சுப்புலட்சுமி உலகறிந்த ஒரு பாடகர் அவருடைய குரலில் பாடுகிற பொழுது அனைவராலும் ரசித்து கேட்க முடிகிறது என்று சொல்லப்படுகிறது. அவருக்கு ஒரு அரசியலைக் கற்றுக் கொடுத்தது  இந்த இசைதான் அவர்கள் மீது ஒரு விமர்சனம், குற்றச்சாட்டும் உண்டு நடனக்கலைஞர் பாலசரஸ்வதி, சுப்புலட்சுமியும் இணைந்து புகை பிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் கிடைக்கின்றது எப்படி இருந்தாலும். நம் மேடை நிகழ்வுக்கு முன்  பெண்ணியம் என்கிற ஒரு பிம்ப அடையாளத்தோடு, மங்கல வார்த்தைகளோடு ஒரு மேடையில் காட்சி அளிக்கிறார் இதை கற்றுக் கொடுத்ததும் ஒரு இசை சார்மரபு தான். 

நாட்டுப்புற இசை மரபில் ஒரு இசை அழிவின் விளிம்பில் நிற்கிற பொழுது அவை இரண்டு பரிணாமங்களை எடுப்பதை நாம் பார்க்கின்றோம். ஒன்று தேய்பிறை போல அதனுடைய மரபுத் தொடர்ச்சி குறைந்து கொண்டே வருவது. மற்றொன்று  இந்த மக்களால் கவர்ந்து பார்க்கப்படுகிறது அதனூடாக பயணிப்பது. அப்படி பார்க்கப்போனால் கரகாட்டம் என்கிற ஒரு நடனமும் அதை சார்ந்த ஒரு நையாண்டி இசையும் இன்றைக்கு கலை வடிவம் என்பதை தாண்டி பாரம்பரிய வடிவம் என்பதிலிருந்து மூன்றாவது தளத்தை ஆபாச நிலையை எட்டி இருப்பதை நாம் பார்க்க முடியும். அதற்கு காரணம் ஒரு கலை வடிவத்தை இந்த மக்கள் ஆபாச நோக்கத்தோடு பார்க்கப்படுகிறது அந்த கலைஞர்கள் மக்களுடைய மனநிலைக்கு ஏற்ப தங்களைத் தயாரித்துக் கொள்வது என்பதிலிருந்து  இசையின் உடைய அரசியல் துவங்குகிறது இசையின் மீது பாலியல் திணிப்பு என்பது தொடர்ச்சியாக நடந்து வருகிற மறைமுக செயல்திட்டம் என்பதை மறுக்க முடியாது. 

பால் உணர்ச்சிக்கு அப்பாற்பட்டு ஒரு இசை வடிவத்தை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இது கருப்பின வரலாற்றிலிருந்து தற்கால சூழல் வரை நாம் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். இன்றைக்கு கருத்தியலும், கோட்பாடுகளும் தான் இன்று இசையை, பாலியல்பை இயக்கி கொண்டிருக்கின்றது …

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-8/