பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் – திலீப் மண்டல்

The reservation law for the Economically Weaker Sections (EWSs) should be withdrawn - Dilip Mandal. The Print Article Tamil Translation. பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் - திலீப் மண்டல்பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான (EWS) இடஒதுக்கீடு விரைவில் நீதித்துறையின் ஆய்வின்கீழ் வரப் போகிறது. ஆனால் நீதித்துறை மட்டுமல்லாது இந்திய பாராளுமன்றமும் இந்தச் சட்டத்திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மருத்துவ சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் (ஏஐக்யூ) பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான பத்து சதவிகிதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் உயர்நீதிமன்றம் அந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுடன் மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளது. இதற்கிடையில் மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு இருபத்தியேழு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நரேந்திர மோடி அரசுக்கு அறிவிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. நீதிமன்றத்தால் தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை என்றால் மருத்துவச் சேர்க்கையைப் பொறுத்தவரை பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நிச்சயமாக நிறுத்தி வைக்கப்படும்.

The reservation law for the Economically Weaker Sections (EWSs) should be withdrawn - Dilip Mandal. The Print Article Tamil Translation. பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் - திலீப் மண்டல்

இது சட்டரீதியாக 2019ஆம் ஆண்டின் 103ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எதிர்கொள்கின்ற முதல் சோதனையாகும். இதற்கிடையில் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்பின் அடிப்படையில் இல்லை, அது சட்டப்பூர்வமற்று இருக்கிறது என்று கூறி பத்து சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எதிராக (ஜாங்கிட் எதிர் இந்திய ஒன்றியம்) சில மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் இன்னும் உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையிலேயே இருந்து வருகின்றன.

பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு பொருளாதார ரீதியாகப் பலவீனமாக உள்ள அனைவருக்குமான ஒதுக்கீட்டைக் குறிக்கிறது என்றாலும் பட்டியலினத்தவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர்களும் அந்தச் சட்டத் திருத்தத்தின்கீழ் ஏழைகளாகவோ அல்லது பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களாகவோ கருதப்படவில்லை. பட்டியலினத்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களைத் தவிர்த்து மற்ற பிரிவுகளைச் சார்ந்த பொருளாதாரரீதியாகப் பலவீனமாக உள்ள குடிமக்களுக்கு ஆதரவாக பணி நியமனங்கள், பதவிகளில் இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான அதிகாரத்தையே அந்த சட்டத் திருத்தம் அரசுக்கு வழங்கியுள்ளது.

The reservation law for the Economically Weaker Sections (EWSs) should be withdrawn - Dilip Mandal. The Print Article Tamil Translation. பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் - திலீப் மண்டல்

அந்த இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தற்போது ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் என்பது வருமான வரம்பாக உள்ளது. எனவே அந்த இடஒதுக்கீட்டை நாம் பல்வேறு மதங்களில் உள்ள ‘உயர்’சாதிகளைச் சேர்ந்த ஏழை அல்லது நடுத்தர வர்க்கத்தினருக்கானது என்றே கூறலாம்.

பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை மீண்டும் சட்டமியற்றுகின்ற அவைகளில் மறுபரிசீலனை செய்வதற்கு நான்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

அவசரமாக இயற்றப்பட்ட சட்டம்

முதலாவதாக இந்த இடஒதுக்கீட்டுச் சட்டம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அது கள்ளத்தனமாக நிறைவேற்றப்பட்ட சட்டமாகவே உருவாகியுள்ளது. ஏதோ தேசிய பாதுகாப்பு விஷயங்கள் சம்பந்தப்பட்டிருப்பதைப் போல அந்த அரசியலமைப்பு (நூற்று இருபத்து நான்காவது திருத்தம்) மசோதா – 2019 பாராளுமன்றத்தில் முன்னரே அறிவிக்கப்படாமல் 2019 ஜனவரி 8 அன்று நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

The reservation law for the Economically Weaker Sections (EWSs) should be withdrawn - Dilip Mandal. The Print Article Tamil Translation. பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் - திலீப் மண்டல்

நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு மறுநாளே குடியரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்ற இந்த  அரசியலமைப்பு (நூற்றி மூன்றாம் திருத்தம்) சட்டம் – 2019  பின்னர் 2019 ஜனவரி 12 அன்று ஒன்றிய அரசிதழில் வெளியிடப்பட்டது. அடிப்படை உரிமைகள் குறித்த அத்தியாயத்தில் 15(6), 16(6) என்ற புதிய பிரிவுகளைச் செருகுவதாக இந்த அரசியலமைப்பு திருத்த மசோதாவின் நோக்கம் இருந்ததால் இந்தியாவின் மிக உயர்ந்த சட்ட அமைப்பான நாடாளுமன்றத்தில் அது முழுமையாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே அந்த மசோதாவின் வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தால் உறுப்பினர்கள் மசோதாவை நன்கு படித்து தங்களுடைய எதிர்வினைகளைத் தயாரித்திருக்க முடியும். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய மசோதாக்கள் பரந்த விவாதங்கள், ஆலோசனைகளுக்காக துறை சார்ந்த குழுக்களின் ஆலோசனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெதையும் செய்யாமல் அவசர அவசரமாக ஒரு மசோதாவை அறிமுகம் செய்து நிறைவேற்றுவது சட்டவிரோதமானதாக இருக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக அது அரசியலமைப்பு அறநெறி, உரிமைகளுக்கு எதிரானதாகவே இருந்தது. நாடாளுமன்றத்தின் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட அந்த மசோதாவிற்கு வாய்ப்புகள் எதுவும் ஏற்படுத்தித் தரப்படவே இல்லை.

உரிய தரவுகள் இல்லாது இயற்றப்பட்ட சட்டம்

இரண்டாவதாக, இந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் தவறான அல்லது சரிபார்க்கப்படாத முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. மசோதாவின் பொருள் மற்றும் காரணம் குறித்த அறிக்கையில் ‘பொருளாதாரத்தில் மிகவும் பலவீனமான பிரிவினர் அதிக சலுகை பெற்றிருக்கும் நபர்களுடன் போட்டியிடுவதற்கு பொருளாதார ரீதியாக அவர்களின் நிதி இயலாமை இடம் கொடுக்காததன் காரணமாக உயர்கல்வி நிறுவனங்கள், அரசு வேலைவாய்ப்புகளில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் காரணத்தை ஆதரிக்கும் வகையில் எந்தவொரு தரவையும் அரசாங்கம் உருவாக்கித் தரவில்லை என்பதால் அந்தக் கருத்து மிகச் சிறந்த கற்பனையாக, அனுமானமாக மட்டுமே இருந்தது. உண்மையில் எட்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட ‘உயர்’சாதியினருக்கு அரசு வேலைகள், உயர்கல்வி நிறுவனங்களில் போதுமான அளவிற்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை நிரூபிக்க ஒன்றிய, மாநில அரசுகளிடம் தரவுகள் எதுவுமில்லை. அவ்வாறான தரவுகள் எதுவுமின்றி அவர்களை அதிக அளவிலே பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதற்கான வலுவான வாய்ப்பு இந்த இடஒதுக்கீட்டின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கென்று இருக்கின்ற  குறைவான பிரதிநிதித்துவத்தை நிரூபிக்க நம்மிடம் பல்வேறு தரவுகள் உள்ளன என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டே என்னுடைய கருத்தை நான் வலியுறுத்துகிறேன். அது ‘உயர்’சாதியினர் கூடுதலாகப் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருப்பதைக் குறிப்பதாகவும் உள்ளது. இதுதொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி அடிப்படையிலான கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன். 2021ஆம் ஆண்டு நடைபெறப் போகின்ற மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி குறித்த ஒரு பத்தியை ஒன்றிய அரசு உள்ளடக்கினால் மட்டுமே பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அரசிடம் நீதித்துறை தரவுகளைக் கேட்கும் போது அதை அரசால் வழங்க முடியும் என்று நம்புகிறேன். பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் வருகின்ற உயர்சாதியினருக்கு  குறைந்த பிரதிநிதித்துவம் இருப்பதை நிரூபிப்பதற்கான எந்த தரவுகளும் இல்லாமலேயே அவர்களை இடஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வருகின்ற இந்தச் சட்டம் மிகவும் மோசமானதாகவே இருக்கிறது.

இது தொடர்பாக மேலும் ஒரு சிக்கலும் உள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு அவர்களின் மொத்த மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டது. மண்டல் கமிஷனின் கூற்றுப்படி இதர பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை 52 சதவிகிதம். ஆனால் இடஒதுக்கீட்டில் ஐம்பது சதவிகிதம் என்ற வரம்பு உள்ளதால் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருபத்தியேழு சதவிகிதம் மட்டுமே இடஒதுக்கீடு கிடைத்தது. இந்த நிலையில் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான பத்து சதவிகித இடஒதுக்கீட்டிற்கான அடிப்படை என்ன? அவர்களுக்கு ஏழு அல்லது பதினைந்து சதவிகிதம் ஏன் ஒதுக்கப்படவில்லை? பத்து சதவிகிதம் என்று ஒதுக்கப்பட்ட அளவு தரவுகள் எதுவுமின்றி தன்னிச்சையாக வரையறுக்கப்பட்டதாகவே இருக்கிறது.

இடஒதுக்கீட்டிற்கான வரம்பை மீறி இயற்றப்பட்ட சட்டம்  

மூன்றாவதாக அரசியலமைப்பில் இடஒதுக்கீட்டிற்கென்று உச்சவரம்பு எதுவும் இருக்கவில்லை; பாராளுமன்றம் அதற்கான வரம்பை ஏற்படுத்தித் தரவில்லை; இந்திரா சாஹ்னி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வே ஐம்பது சதவிகிதம் என்று இடஒதுக்கீட்டிற்கான வரம்பை விதித்தது.

The reservation law for the Economically Weaker Sections (EWSs) should be withdrawn - Dilip Mandal. The Print Article Tamil Translation. பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் - திலீப் மண்டல்

அந்த தீர்ப்பில் ‘கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையாக, உறுதிப்படுத்துகின்ற நடவடிக்கையாக இருப்பதால் இடஒதுக்கீடு என்பது கொஞ்சம் இடங்களுக்கு மட்டுமானதாகவே இருக்க வேண்டும். அரசியலமைப்பு இடஒதுக்கீட்டிற்கான எந்தவொரு குறிப்பிட்ட தடையையும் வகுத்துத் தரவில்லை என்றாலும், அரசியலமைப்புத் தத்துவம் விகிதாச்சார சமத்துவத்திற்கு எதிரானதாக இருப்பதால் இடஒதுக்கீட்டின் மூலம் சமத்துவத்தை சமநிலைப்படுத்துகின்ற கொள்கை எந்தவிதத்திலும் ஐம்பது சதவிகிதத்திற்கு மிகாத இடஒதுக்கீட்டையே கொண்டிருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் இதுபோன்ற சிக்கலைக் கருத்தில் கொள்ளாமல் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு உச்சநீதிமன்றம் விதித்த  உச்சவரம்பை மீறும் வகையிலேயே இருக்கிறது. இந்தப் பிரச்சனை குறித்து மசோதாவின் நோக்கம் குறித்த அறிக்கையிலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அரசியல் நிர்ணய சபையின் உணர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டம் 

நான்காவதாக, இந்த சட்டத்திருத்தம் அரசியல் நிர்ணய சபையின் உணர்வுக்கு எதிரானதாகவும் உள்ளது. அரசியலமைப்பில் இடஒதுக்கீடு வழங்குவது சமத்துவம் பற்றி குறிப்பிடுகின்ற பிரிவு 16இல் இடம் பெற்றுள்ளது. அரசியல் நிர்ணய சபையில் முன்வைக்கப்பட்ட வரைவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: (1) அரசின் கீழ் வருகின்ற வேலைவாய்ப்பு விஷயங்களில் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்பு தரப்பட வேண்டும் (2) எந்தவொரு குடிமக்களும் மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த இடம் என்று இவற்றில் எதனைக் கொண்டும் அரசின் கீழ் உள்ள எந்த அலுவலகத்திற்கும் தகுதியற்றவர்களாகக் கருதப்படக் கூடாது (3) அரசின் கருத்துப்படி போதிய பிரதிநிதித்துவம் இல்லாத குடிமக்களின் எந்தவொரு வகுப்பினருக்கும் ஆதரவாக அரசின் கீழ் உள்ள சேவைகளில் நியமனங்கள் அல்லது பதவிகளை இடஒதுக்கீடு செய்வதை இந்த சட்டத்தில் உள்ள எதுவும் தடுக்காது.

The reservation law for the Economically Weaker Sections (EWSs) should be withdrawn - Dilip Mandal. The Print Article Tamil Translation. பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் - திலீப் மண்டல்

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் இருந்த வரைவுக் குழு. ‘குடிமக்களின் எந்தவொரு வகுப்பினருக்கும் ஆதரவாக’ என்ற வார்த்தைகளுக்கு இடையில் ‘பின்தங்கியவர்’ என்ற வார்த்தையை நுழைத்தது. பின்தங்கிய என்ற அந்தச் சொல் இறுதியாக அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்டு அரசியலமைப்பின் ஒரு பகுதியாக மாறியது.

பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்கள் என்ற பிரிவில் வருகின்ற உயர்சாதி மக்கள் அரசியலமைப்பு குறிப்பிடப்பட்டுள்ள ‘பின்தங்கியவர்கள்’ என்ற வார்த்தைக்கான தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்களா என்பதே இப்போது எழுகின்ற கேள்வி. அந்த உயர்சாதி மக்கள்குழுவின் பின்தங்கிய நிலைமையை அறிந்து கொள்ள அரசு ஏதேனும் ஆய்வுகளை மேற்கொண்டதா? அந்தப் பிரிவினர் ஏதேனும் களங்கம் அல்லது பாகுபாட்டை எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்களா? பொருளாதாரப் பின்னடைவு என்பது மிகவும் நெகிழ்வானதொரு அடையாளம் ஆகும். அது எந்த நேரத்திலும் மாறக் கூடும். எந்த நேரத்திலும் பணக்காரர்கள் ஏழைகளாகவும், ஏழைகள் பணக்காரர்களாகவும் மாறலாம். மேலும் சாதிகளைக் காட்டிலும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுடன் தொடர்புடையதாகவே அது இருக்கிறது, அதேசமயத்தில் பழங்குடியினர், தீண்டாமையை எதிர்கொண்ட/எதிர்கொள்ளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பது ஒருவருக்கு இருக்கின்ற நிலையான அடையாளங்கள் ஆகும். ஒரு குழுவின் சமூகம் மற்றும் கல்வி அளவிலான பின்தங்கிய தன்மையும் ஒப்பீட்டளவில் நிலையானதாகவே இருக்கிறது.

இந்த சட்டத்திருத்தம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை மற்றுமொரு வறுமை ஒழிப்புத் திட்டமாக மாற்றுகின்றது, அது இடஒதுக்கீட்டிற்கான உண்மையான நோக்கத்துடன்  இருக்கவில்லை. இடஒதுக்கீடு என்பது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான அரசியலமைப்புத் திட்டமாகும்.  அது பின்தங்கிய வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது என்ற நோக்கத்துடன் மட்டுமே இருக்கிறது. ஆக பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பில் இடஒதுக்கீட்டிற்காக உள்ள திட்டத்தைத் தோல்வியுறச் செய்யும் வகையிலேயே அமைந்திருக்கிறது.

The reservation law for the Economically Weaker Sections (EWSs) should be withdrawn - Dilip Mandal. The Print Article Tamil Translation. பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் - திலீப் மண்டல்

https://theprint.in/opinion/ews-quota-is-a-bad-law-it-needs-to-go/734902/

திலீப் மண்டல்
முன்னாள் நிர்வாக ஆசிரியர் 
இந்தியா டுடே ஹிந்தி இதழ்

நன்றி: தி பிரிண்ட் இணைய இதழ்
தமிழில்: தா. சந்திரகுரு