பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - பாடல்கள் | Pattukkottai Kalyanasundaram - Songs

பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள்

“ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே…
கரையோரத்தில் நிற்கதே கெண்டைக் குஞ்சு…
தூண்டில்க் காரன் வரும் நேரமாச்சு
ரொம்ப துள்ளிக்குதிக்காதே கெண்டைக் குஞ்சே…”

 

மக்கள் கவிஞர் – சுவடு

 

என்று 14 வயதினில் ஒரு ஆத்தங்கரயில் முளையிட்டது அவனது கவிதைகள்.

கரையில் துள்ளிக்குதிக்கும் கெண்டைக் குஞ்சுகள், தூண்டில்க் காரனின் வளையல் சிக்கி துடிதுடித்து இறந்து போவதை கூட ஏற்றுக் கொள்ளாத மனம். உயிரினங்களின் மேல் உள்ள காதல் அன்றே வெளிப்பட்டது என் கவிஞனின் பாட்டில்

ஆம்! மக்கள் கவிஞன், பொதுவுடமைக்கு சொந்தக்காரன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முதல் கவிதைதான் இது..
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கோட்டை தாலுகாவில் செங்கண்படுத்தான்காடு என்னும் ஒரு கிராமம். 13. 4. 1930 ல் பிறந்தார் கல்யாணசுந்தரம். தமிழ் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கிய காலமும் அதுதான். சிறுவன் கல்யாணசுந்தரத்துக்கு படிப்பதில் நாட்டம் போகவில்லை. நாடகம் பார்ப்பது, சினிமா பார்ப்பது,பார்த்துவிட்டு அவற்றில் வரும் பாடல்களை வரி பிசகாமல் பாடிக் கொண்டிருப்பது இவையெல்லாம் தான் கல்யாண சுந்தரத்தின் விருப்பங்களாக இருந்தது. இதனாலையோ என்னவோ? இரண்டாம் வகுப்போடு முடிந்தது அவரது பள்ளி படிப்பு.

கல்யாணசுந்தரத்தின் கிராமதில் அன்று கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பாக செயல் பட்டுகொண்டிருந்ததால் இளமை பருவத்திலேயே கட்சியோடு இணைதார். கட்சி நிகழ்ச்சிகளிலும், மற்றும் பிற நிகழ்ச்சிகளிலும் பாட்டுக்கட்டி பாடுவது கல்யாண சுந்தரத்தின் கட்சி பணியாக இருந்தது….

“தேனாறு பாயுது!
செங்கதிர் சாயுது!
ஆனாலும் மக்கள் வயிறு காயுது..”

என்று தன் பாட்டில் கம்யூனிசதயும் நுழைதார்..

 

17 வயதில் கம்யூனிஸ்டு கட்சி தோழர்களின் உதவியால் கல்யாணசுந்தரம் கவிஞர் பாரதிதாசனின் சிஷ்யனாக சேர்க்கப்பட்டார். அப்படி இருக்கே ஒரு நாள்

” டேய் ஆம்பள பசங்களா இங்க வாங்க டா. நீங்களும் தான் எழுதறீங்களே கவிதைன்னு,
இங்க பாருங்க அகல்யான்னு ஒரு பொம்பள புள்ள என்னம்மா கவிதை எழுதி இருக்கு ”

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் « Siragu Tamil Online Magazine, News

என்று தன் சிஷ்யர்களிடம் ஒரு பத்திரிக்கையில் வந்த கவிதையை நீட்டினார் பாரதிதாசன். அந்தக் கவிதையின் கீழ் அகல்யா இன்று பெயர் எழுதப்பட்டிருந்தது… அகல்யா யார் என்று தெரியாவிட்டாலும் அந்தக் கவிதை வரிகளை பாரதிதாசன் மிகவும் பாராட்டினார்… வருங்காலத்தில் தமிழ் சினிமாவின் திருப்புமுனையாக இருக்கப் போகிறார் இந்த அகல்யா, அதுவும் தன்னுடைய சிசியர்களில்  ஒருவன் என்று அவருக்குத் அன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுதான் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கையில் முதல் பாராட்டு, ஆம் கல்யாணசுந்தரத்துக்கு மட்டுமே தெரிந்த “அகல்யா”. கல்யாணசுந்தரத்தின் முழு பெயர் அ.கல்யாண சுந்தரம் இதில் ஆவிற்க்குப் பிறகு வரும் புள்ளியையும், கல்யாணசுந்தரம் என்ற பெயரில் கல்யாவிற்கு பிறகு வரும் எழுத்துக்களையும் நீக்கினால் வருவதுதான் அகல்யா…. தனது பெயரை தான் அகல்யா என்று குறிப்பிட்டு அக்கவிதையை எழுதி இருப்பார் கல்யாணசுந்தரம்.

இன்று நமக்கு கல்யாணசுந்தரம் ஒரு பாடல் ஆசிரியர் ஆக அறியலாம். இவர் பன்முகங்களைக் கொண்டவர். ஒரு பாடலாசிரியராக ஆவதற்கு முன்பு 18 வகையான தொழில்களை செய்தவர்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த தினம் – சக்கரம்

விவசாயி

மாடுமேய்ப்பவர்

மாட்டு வியாபாரி

மாம்பழ வியாபாரி

இட்லி வியாபாரி

முறுக்கு வியாபாரி

தேங்காய் வியாபாரி

கீற்று வியாபாரி

மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி

உப்பளத் தொழிலாளி

மிஷின் டிரைவர்

தண்ணீர் வண்டிக்காரர்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)

அரசியல்வாதி

பாடகர்

நடிகர்

நடனக்காரர்

கவிஞர்

கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகள் ஆனது கற்பனை உலகத்தை கடந்து, அவர் அன்றாடம் சந்திக்கும் சம்பவங்களிலிருந்து உயிர்பெற்றது. பாடல்களின் பல்லவி வரிகளுக்காக மிகவும் மெனக்கிடுவார்…. அந்த வரிகள் சாதாரண எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் இருக்க மிகக் கவனமாக கையாண்டார்.

தான் அன்றாடம் சந்திக்க கூடிய மனிதர்களில் இருந்தும், சம்பவங்களிலிருந்துமே தன் பாட்டுக்கான வரிகளை எழுதுவார். இந்தப் பழக்கம் அவருக்கு சினிமா பாட்டு எழுதும் போது வந்தது அல்ல,சிறுவயதில் இருந்து அவர் எழுதிய கவிதைகள்,பாடல்களில் இப்படி அனைத்திலுமே இது வழக்கமாக இருந்தது..

அந்த காலத்தில் சினிமா பாடல்கள் அனைத்துமே கற்பனையை அடிப்படையாகவும், மிக மிக இலக்கிய சாரோடு கூடியதாக இருந்தது,பாடல்களில் கவிஞர்கள் தன் திறமையை நிரூபிக்க போட்டா போட்டி போட்டார்கள்….. பட்டுக்கோட்டை மட்டுமே பாட்டாளி வர்க்கத்தின் பிரச்சனைகளை பாட்டாகினார். சமூகத்தின் அவலங்களை திரையில் காட்டினார்.

அவர் எழுதிய சமூக சிந்தனை பாடல்கள் அனைத்துமே அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்குமே மனிதனின் வாழ்க்கைக்கு பொருத்தமாக அமைந்திருப்பதுதான் இந்தக் கவிஞனின் சாமர்த்தியம்.

மதியின் திரை நட்சத்திரங்கள்: கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம் - அக்டோபர் 8 , 1959 .

பொழுதுபோக்குக்காக பார்க்கும் சினிமாவில் கூட எங்களது பொதுவுடமை சித்தாந்தத்தை சொல்ல முடியும் என்று நிரூபித்தவர். சிவப்பு மையால் பாமரரையும் சிந்திக்க வைத்த இந்த கவிஞனை மக்கள் கவிஞன் என்று அல்லாமல் வேறு எப்படி அழைக்க முடியும்.

நடிப்பு, மிடுக்கு, குரலில் செருக்கு; புதுபாணியில் அசத்திய ஓ.ஏ.கே.தேவர் | o.a.k.devar - hindutamil.in
          ஓ. ஏ. கே. தேவர்

சினிமா வாய்ப்பு தேடி மெட்ராஸில் ஓ ஏ கே தேவருடன் பத்துக்கு பத்து ரூமில் தங்கியிருந்தார் பட்டுக்கோட்டை.. வறுமையின் பிடியில் இருந்திருந்தாலுமே தன் என்னைத்தை மாற்றிக்கொள்ளவில்லை….. ஒரு நாள் அவர் நினைத்தவாறு ஒரு சினிமா பாடல் எழுதும் வாய்ப்பும் வந்தது, தயாரிப்பாளர் பட்டுக்கோட்டையை அழைத்து இருந்தார். உடுத்திச் செல்ல நல்ல உடைகளோ இல்லை! அவரிடம் இருந்ததோ இரண்டே இரண்டு வேட்டிகள் தான், ஒன்னு அழுக்காகவும், இன்னொன்று இஸ்திரி போடுவதற்காகவும் கொடுக்கப்பட்டிருந்தது..

இஸ்திரி செய்த வேட்டி வாங்கிக் கொண்டு வருவதற்காக பட்டுக்கோட்டையின் நண்பர் செல்கிறார்.

” ஏற்கனவே நிறைய பாக்கி இருக்குது அது கழிச்சிட்டு வேட்டி எடுத்துட்டு போங்க! என்று கராராக சொன்னார் அந்த கடைக்காரன்..

” அண்ணே என் நண்பனுக்கு சினிமா வாய்ப்பு கிடைச்சிருக்கு, இனி நாங்க எப்படியும் அந்த பாக்கி எல்லாத்தையும் அடைச்சு போடுவோம்! இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோங்க அண்ணே ”

எப்படியோ அந்த கடைக்காரனிடம் பேசி வேட்டியையும் வாங்கிக் கொண்டு வந்து பட்டுக்கோட்டையிடம் கொடுத்தார். உடுத்துவதற்காக பிரித்து பார்க்கும்போது தான் தெரியுது! பழைய பாக்கிக்காக பழி வாங்கிட்டானா தெரியல அந்த கடைக்காரன்? வேட்டியின் நடுவில் ஒரு பெரிய ஓட்டை. அந்த ஓட்ட வழியே பார்த்தால் எதில் இருக்கும் தன் நண்பரான ஓ ஏ கே தேவர் கூட நன்றாக தெரிகிறர்

.உழைப்பாளர் தினக்கவிதை - 'காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம். - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -

இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோரும் மனம் உடைந்து போவார்கள்… உடுத்தி செல்வதற்காக இருந்த ஒரு வேட்டியும் இப்படி போனால் யாருக்குத்தான் இயல்பாக இருக்க முடியும். ஆனால் கல்யாணசுந்தரதல் முடியும்.. அந்த நேரத்தில் கூட நகைச்சுவையாக ஒரு கவிதையை பாடினார்

” ஓரம் கிழிஞ்சாலும் ஓட்டு போட்டு கட்டிடலாம்
இது நடுவே கிழிஞ்சிருக்கு நாகரத்தினமே
அதுவும் நாள் மூலம் வேட்டியடி நாகரத்தினமே “

ராயபுரத்தில் இருக்கும் பொன்னுசாமி என்பவரின் கடையில்தான் அக்கவுண்ட் வைத்து பட்டுக்கோட்டையும் அவரின் நண்பர்களும் சாப்பிடுவார்கள். அவ்வபோது காசு இருந்தாள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார்.. அதுவும் பொன்னுச்சாமி கடையில நல்ல காரசாரமா காடை கறி ரொம்ப ஃபேமஸ், அன்று ஒரு நாள் பட்டுக்கோட்டையும் அவரின் நண்பர்களும் சேர்ந்து காடைக்கறியை நன்றாக சுவைத்தனர். காரமாக சாப்பிட்டதால் பட்டுக்கோட்டைக்கு அடுத்த நாளே உடல் ஒவ்வமை ஆயிற்று… வயிற்று போக்கள் அவதி பட்டார். அப்பொழுது கூட தன் உடல் நிலைமை கவிதையால் தான் வெளிப்படுத்தினார்

“காரம் தின்னு காரன் தின்னு ஓரம் எல்லாம் எரியுது
பொன்னுச்சாமி காடை செஞ்ச காரியமோ
காலையில தெரியுது”

 இப்படி அவரது வாழ்க்கையில் நடக்கும் எல்லா அனுபவத்தையும், சந்தர்ப்பங்களையும் பாட்டாகவும் கவிதையாகவும் மாற்றம் திறமை பட்டுக்கோட்டைக்கு இருந்தது. எழுதுவத்தோடு மட்டுமல்லாமல் அதை அவரே மெட்டு கட்டியும் பாடுவார்…

ஒரு நாள் பக்தி பாடல் ஒன்று எழுதும் வாய்ப்பு பட்டுக்கோட்டைக்கு வருது. பட்டுக்கோட்டை ஒரு கம்யூனிச சிந்தனை உள்ளவன் , ஒரு முற்போக்கு சிந்தனையாளன். இப்படி இருக்கே அவர் எப்படி ஒரு பக்தி பாடலை எழுத முடியும்?

பாடல் எழுதும் வாய்ப்போ அவ்வப்போது தான் வருகிறது, அதுவும் வேண்டாம் என்று மறுத்தால் கஞ்சிக்கு என்ன செய்வது? வயிற்றுப் பசி இந்தக் கவிஞனின் சிந்தனை திசையை மாற்றி விடுமோ?

பட்டுக்கோட்டையும் பக்தி பாடலை எழுத முடிவு எடுத்தார்….

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - தமிழ் விக்கிப்பீடியா

“நல்லோர்க்கும் போல்லோருக்கும் நடுவில் இருக்கும் சாமி,
நீ கல்லாய் போன காரணத்தை எல்லோருக்கும் காமி “

என்று எழுதி அந்த பட தயாரிப்பாளரிடம் கொடுத்தார்..

பாடலைப் பார்த்துவிட்டு அந்த தயாரிப்பாளர் மிரண்டு போனார். அந்தப் பாட்டை பட்டுக்கோட்டையிடமே கொடுத்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் போய் விட்டார்.. பக்தி மயமாக ஒரு பாடலை எழுதச் சொன்னா, ஏன் கல்லாய் போனாய் என்று சாமியிடமே கேள்வி கேட்கும் கவிஞனை  எப்படி ஏற்றுக் கொள்வார்? இப்படி எந்த வாழ்க்கை சூழ்நிலைகளும்  இந்த கவிஞனை அழுத்தினாலும், கொள்கையில் இருந்து மாறாதவன் மக்கள் கவிஞன்.

மகேஸ்வரி - தமிழ் விக்கிப்பீடியா

பட்டுக்கோட்டைக்கு இரண்டு திரைப்படங்களில் சினிமா பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது.  மகேஸ்வரி(1955) , படித்த பெண் (1956) என்ற இரண்டு படங்களிலும் பாடல்கள் எழுதுகிறார்… பெரிய அளவில் ஓடாததினால் தோல்வி படமா அமைகிறது. சினிமா துறையில் பொருத்தவரை ஒரு திரைப்படம் எந்த அளவு வெற்றி பெறுது என்பதின் அடிப்படையில் தான், அதில் வேலை செய்த கலைஞர்களின் சினிமா வாழ்க்கையும் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. ஆனால் பட்டுக்கோட்டையின் முதல் இரண்டு படங்களும் தோல்வி அடைந்ததால் அவர் பெரிதுமே கவனிக்கப்படவில்லை. பட தயப்பாளர்களின் பார்வை இரண்டு தோல்வி படங்களுக்கு பாட்டு எழுதிய பாடலாசிரியராணா பட்டுக்கோட்டை மேல் விழவும் வில்லை. இருந்தாலும் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற என்னத்தயும்  பட்டுக்கோட்டை கைவிட்டவாறு  இல்ல.

தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி

மாடர்ன் தியேட்டர்ஸில் மேனேஜராக வேலை செய்து வந்த சுலைமான் என்பவர் பட்டுக்கோட்டைக்கு நண்பர் ஆகிறார்.. அவரிடம் சினிமா வாய்ப்புக்காக உதவி கேட்கிறார் பட்டுக்கோட்டை. அந்த நேரத்துல மாடர்ன் தியேட்டர்ஸ் பாசவலை (1956) என்ற திரைப்படம் தான் தயாரித்து கொண்டிரிந்தது.. அந்த திரைப்படத்துக்கு இசையமைக போவது இசை ஜாம்பவான்கள்  எம் எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி . இவர்கள்  கொடிகட்டி பறந்த காலகட்டம் அது . பாசவலை திரைப்படத்தின் பாடல் ரெக்கார்டிங் சேலதில் உள்ள  ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தத் திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பாடும் பாடால் ஒன்று வரும்.

படத்தின் கதாநாயகன் எம் கே ராதா அவர் நாட்டின் மன்னர் பாத்திரத்தில் நடித்து இருப்பார், மன்னர்கு ஒரு தம்பி, அவர் அந்த நாட்டில் உள்ள ஒரு பெண்ணின் மீது ஆசைப்படுகிறார். அவளைப் பார்ப்பதற்காக சுவரையேறி குதித்து மக்களிடம் மாட்டிக் கொள்கிறார்.. தன் தம்பி செய்த தப்பை மக்கள் மன்னரிடம் கூறி நியாயம் கேட்கிறார்கள்.. சொந்த தம்பியாக இருந்தாலும் தண்டிக்கப்படுவான் என்று தீர்ப்பு சொல்கிறார் மன்னர். இந்த விஷயம் தெரிந்ததுமே தம்பி தலைமறைவு சென்று விடுகிறான்… தம்பிய மன்னர் தான் தப்பிக்க வைத்திருப்பார் என்று எண்ணி, மன்னனையே குற்றம் சொல்லுகிறார் மக்கள்… தன் மேல் பொய் குற்றத்தை சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் மன்னரும் தன்னோட பதவியில் இருந்து விலகி வீடு வாசல் எல்லாத்தையும் துறந்து மனைவி பிள்ளைகளோடு வனவாசம் செல்கிறார்.. காட்டில் வசித்திருக்கும் போது மனைவி குழந்தைகள் சாப்பிடுவதற்காக உணவு தேட மன்னார் செல்லும் சமயத்தில், காட்டு விலங்குகள் மனைவியையும் குழந்தையையும் வேட்டையாட வருகிறது.. இந்தப் போராட்டத்தில் மனைவிகளும் குழந்தைகளும் தொலைந்து போகிறார்கள், இவர்களை மன்னர் காடு முழுக்க தேடுகிறார், அவர்கள் எங்கேயுமே அவர்கள் காணவில்லை. நாக்கு வறண்டு அங்குள்ள ஒரு குளத்தில்  தண்ணீர் குடிக்கிறார்… அந்த குளத்தில் ஏற்கனவே அங்கு ஆடு மேய்க்கும் நபர்கள் திருடர்களில் இருந்து தப்பிக்க அந்த குளத்தில் விஷத்தை கலந்திருப்பார்கள், இதை அறியாமல் குடித்த மன்னரை  காப்பாற்றுகிறார்கள்…. மன்னர் உயிர் பிழைத்தாலும் அவனது சுயநினைவு போய் மனநலம் பாதிக்கப்பட்டவன் ஆகிறான், பிறகு ஆடுமேயேப்பவர்கள் கூடவே வாழ்ந்து வருகிறார்… தன் தவறை உணர்ந்து திருந்திய தம்பி எப்படியோ தன் அண்ணனை கண்டுபிடிக்கிறான். மனநலம் பாதிக்கப்பட்ட தன் அண்ணனே எண்ணி அழுகிறான் புலம்புகிறான்… நான் உன் சொந்தம் தம்பி வந்து இருக்கேன், என்னை மன்னித்து விடு என்று கதறி அழுகிறான்.. இந்த இடத்தில் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பாடும் பாடல்

ஆனால் இந்தப் பாடளுக்கு சரியான பாடல் வரிகள் அமையவில்லை. பெரிய பெரிய ஜபவர்கள் எல்லோருமே இதற்கான பாடல் வரிகளை எழுத்துகிறார் ஆனால் எதுவுமே அந்த மேட்டுக்கும், படத்துக்கும் பொருத்தமாக அமையவில்லை. இந்த நேரத்தில் தான் சுலைமான் பட்டுக்கோட்டை காக வாய்ப்பு கேட்டு செல்கிறார்..

 ” அண்ணே சினிமா வாய்ப்பு தேடி உங்கள பாக்குறதுக்காக கல்யாணசுந்தரம் என்ற ஒரு பையன் வந்திருக்கான், அவன் நல்ல பாட்டு எழுதுவான் அண்ணே “

ஆனால் எம் எஸ் விஸ்வநாதன் இப்பொழுது யாரையும் பார்க்க முடியாது என்று சற்றும் யோசிக்காமல் மறுத்து விட்டார்.. மறுபடியும் நாம் முயற்சிப்போம் வருத்தம் பட வேண்டாம் என்று பட்டுக்கோட்டைக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார் சுலைமான். பிறகு இந்த பாடலெழுத அப்பொழுது சினிமா உலகத்தில் டாப்பில் இருக்கும் பல பாடலாசிரியர்களும் வருகிறார்கள்…. உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமதாஸ், மருதகாசி, கண்ணதாசன் இப்படி நீண்டுகொண்டே போனது..

வாய்ப்பு கொடுக்க மறுத்த எம்.எஸ்.வி... தனது பாடல் வரிகளால் அழ வைத்த பட்டுக்கோட்டையார்
எம் எஸ் விஸ்வநாதன்

வாய்ப்பு தேடி பட்டுக்கோட்டையும் பருபடியும் செல்கிறார். ஆனால் எம் எஸ் விஸ்வநாதன் மீண்டும் மறுத்து விடுகிறார்… எத்தனை முறை முயற்சி தோல்வி அடைத்தாலும் சுலைமானும், பட்டுக்கோட்டையும் நம்பிக்கை கைவிடவில்லை.. மீண்டும் மீண்டும் முயற்சித்து கொண்டுதான் இருந்தார்கள். எம் எஸ் விஸ்வநாதனுக்கு பாசவலை படத்தின் பாடளுக்காக கால்ஷீட்டுமே முடியும் தருவாயில் வந்தது, ஆனாலும் ஒரு பாட்டுக்கே இன்னும் எத்தனை நாள் என்று கோவம், சலிப்பு அதிகாரிச்சது… மீண்டும் சுலைமான் எம் எஸ் வி இடம் செல்கிறார்.

” அண்ணே கல்யாணசுந்தரம்னு ஒரு பையன் உங்கள சந்திக்கறதுக்காக நாலஞ்சு நாளா வந்து போயிட்டு இருக்கான், அவ நல்லா பாட்டு எழுதுவானே நீங்க அவனுக்கு வாய்ப்பு கூட கொடுக்க வேண்டாம் அண்ணே அவன் எழுதிருக்க பாடல்களை கொஞ்சம் வாங்கி படிச்சு பாருங்க அண்ணே, அது போதும் அந்த பையன போக சொல்லிடுவேன் ”

கோவத்தின் உச்சத்தில் எம் எஸ் வி :

” ஏன்யா வந்த நாலு நாளாச்சு ஒரு பாட்டும் ரெடி ஆகல.. பெரிய பெரிய கவிஞர்களாம் வந்து எழுதி பாத்துட்டாங்க அப்பயுமே பாடல் வரிகள் அமையல. யாரோ புது பையன் வந்து இருக்கான்னு சொல்ற அதுவும் அவன் எழுதுன ரெண்டு படமும் தோல்வின்னு சொல்ற. அந்த பயனால் எப்படி இந்த பாட்டு எழுத முடியும்? தயவு செஞ்சு போயா” என்று சுலைமானை கத்தினார்…

சுலைமானம் மறு வார்த்தை பேசாமல் இனிமேல் முயற்சிப்பதில் பயனிலை என்று முடிவெடுத்தார்.. சுலைமான் அப்பொழுது நினைத்து இருக்க மாட்டார் அது நடக்கும் என்றும் ஆம் திடிர்னு என்ன தோணிச்சோ தெரியவ்வில்ல எம் எஸ் விஸ்வநாதன் சுலைமானை அழைத்தார்

” சரி அந்த பையன கூட்டிட்டு வா, நாலஞ்சு நாளா நிக்கறேன்னு வேற சொல்ற பாப்போம் என்னதான் எழுதறான்னு “ என்று சலிப்போது சொன்னார்…. சுலைமான்கு நம்ப முடியவில்லை உடனே பட்டுக்கோட்டையிடம் கூறி எம்எஸ்வியிடம் அழைத்து வந்தார்… பட்டுக்கோட்டையும் படத்தின் சுச்சுவேஷன் முழுசா கேட்டுவிட்டு அந்த இடத்திலேயே உடனே ஒரு பாட்டு ஒன்று எழுதி கையில் கொடுத்தார்…….. அந்தப் பாடல் வரிகளைப் படித்ததும் எம் எஸ் வி மிரண்டு போனார்

குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்!

 

 

பாபச் சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலை செய்த பகல் வேஷக்காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!
செவரு வச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு? – நீ
துணிவிருந்தா கூறு! ரொம்ப
எளியவரும் பெரியவரும் எங்கே போனார் பாரு! – அவர்
எங்கே போனார் பாரு!

பிறகுகுட்டி ஆடு தப்பி வந்தா” என்ற இந்த பாடல் வெளியானதுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றி பெற்றது. பட்டி தொட்டி எல்லாம் மக்கள் கூட்டம் இந்தப் பாடலுக்காகவே குவிந்தார்கள்… பெரிய பெரிய ஜாம்பவான் கூட எழுத முடியாத இந்தப் திரைப்பட பாடலை மீசை கூட சரியா வளராத 22 வயசு பையன் கல்யாண சுந்தரம் எழுதினான்.

அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே இப்படி  ஒரு கருத்துக்களை எழுத முடியுமா?

அதுவும் ரெண்டாம் கிளாஸ் கூட தாண்டாத படிப்பறிவு இல்லாத பையன்?

 

தொடரும் 

“பாட்டாளி கவிஞனின் பாடல்கள் சொல்லும் கதைகளும் கருத்துக்களும்”Image Strokes :: Free Vectors - People - Download Free Thamizh Poet Pattukottai Kalyanasundaram vector image

எழுதியவர் 

சே.டயானா சுரேஷ்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 


 

 

Show 3 Comments

3 Comments

  1. Suresh Esakkipandi

    வாழ்த்துக்கள் டயானா சேகர் தோழர். தொடர்ந்து எழுதுங்கள்…

  2. Aarthi

    Super dayana ipadiye continue ah eluthitae irru😊

    • நாகராஜன்

      ஒரு எழுத்தாளர் உருவாகிவிட்டார்………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *