Subscribe

Thamizhbooks ad

சினிமா ஓர் அனுபவத்தொடர் 2: The Stoning of Soraya M. (English & Persian) (2008) – கார்த்திகேயன்

The Stoning of Soraya M.
2008
(English & Persian)
ஈரானிய மலைக் கிராமம் ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
பிரெஞ்ச் – ஈரானிய பத்திரிக்கையாளர் Freidounne Sahebjam 1990ல் எழுதிய La Femme Lapidee நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இசுலாமிய அடிப்படைவாதியின் ஆணாதிக்க மனோநிலையை உரக்க கேள்வி கேட்கிறது இத்திரைப்படம்.
14 வயது சிறுமியை மணம் முடிக்க நினைக்கும் கணவன், அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்காக தனது மனைவி Soraya வின் மேல் பொய் அவதூறைக் கட்டவிழ்த்துவிடுகிறான்.அதற்கு அந்த ஊர் வழக்கப்படி கிடைக்கும் தண்டனையிலிருந்து Soraya தப்பித்தாளா இல்லையா என்பதே படத்தின் சாராம்சம்.
The Stoning Of Soraya M | Kanopy
எதிர்பாராத சில காட்சிகளால் இப்படம் , முடிவில் நம்மை நிலைகுலைய வைத்து விடுகிறது.
முல்லா & மேயர் என்கிற இரண்டு உயர்மட்ட அதிகாரிகளினால் சந்தர்ப்பவாதமாக சீரழிக்கப்பட்ட பலரின் பிரதிநிதியாக இந்த Soraya M நம் முன்னே கேள்வி கேட்கிறாள்.
எளிமையான திரைமொழியால் அல்லாஹ்வின் பெயரால் எல்லோரையும் உரக்கக் கேள்விகேட்கிறது.
இடையே இப்படியாக ஒரு வசனம் வரும்.
இப்ராஹிம் ஷாஹ்ரா விடம்  : “கணவன் தன் மனைவியின் மேல் குற்றச்சாட்டை வைத்தால் ,மனைவிதான் தன்னை அப்பாவியென நிரூபிக்க வேண்டும்.அதுதான் சட்டம்.அதே போல மனைவி கணவன் மீது குற்றச்சாட்டை வைத்தால் , மனைவிதான் அவனது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்பதையும் அதே சட்டம்தான் கூறுகிறது”.
ஷாஹ்ரா இப்ராமை நோக்கி : “சரிதான்.தெளிவாகப் புரிகிறது.எல்லாப் பெண்களும் குற்றவாளிகள்.எல்லா ஆண்களும் நிரபராதிகள்.அதைத் தானே உங்கள் சட்டம் வலியுறுத்துகிறது”
என சாதாரணமாக கடந்து செல்கிற வசனமாக இருந்தாலும் , இதுதான் படத்தின் உயிர்நாடியான அம்சமாக இருந்தது.
இந்தப் படத்தில் அனேக கதாபாத்திரங்கள் இன்றும் நமது குடும்பத்தை சுற்றி உலா வந்து கொண்டிருப்பதைக் காண்பீர்கள் !
The Stoning of Soraya M. | Movies, Good movies, I movie
அவசியம் குடும்பத்துடன் காண வேண்டிய படம்.
படத்தைக் காண
– கார்த்திகேயன் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 

Latest

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ....

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம்...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ. 100 வணக்கம், எம்முடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழர் பிரியா ஜெயகாந்த் அவர்களின் முதல் குறுநாவலுக்கு மதிப்புரை அளிப்பது மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை...

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம் காட்டுகிறார்கள்..பார்ப்போமா ? இனி பாப்பாக்கருவை குழந்தை/கரு என்று அழைப்போமா? அவர்களுக்குதான் 5 மாதங்கள் துவங்க இருக்கிறேதே. இப்போது உங்கள் குழந்தையின் வயது...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here