சமத்துவப் பொருளாதாரத்திற்கான போராட்டமும் இந்திய முதலாளித்துவமும் – வே. மீனாட்சிசுந்தரம்

 

பணக்கார நாடுகள் என்று சொல்லப்படும் ஏகாதிபத்திய நாடுகளில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களும், இந்திய மக்களாகிய நாம் சந்திக்கும் நெருக்கடிக்கான காரணங்களும் ஒன்றல்ல வெவ்வேறானது அங்கு ,பணம் பற்றிய மூட நம்பிக்கையால் பணக்கொழுப்பு மிகுந்து நெருக்கடியைக் கொண்டுவந்துவிட்டது. முன்பு போல் உலக நாடுகளை அவர்களால் சுரண்டவும் முடியவில்லை, படையெடுத்து அடிமைப்படுத்தவும் முடியவில்லை. முடிந்திருந்தால் ஈரானில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டுவந்திருப்பார்கள். கியுபாவில்பழைய சர்வாதிகாரியின் பேரன் ஆட்சியில் அமர்ந்திருப்பான்.

ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கும், நமது நாட்டு நெருக்கடிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

இந்தியாவில் பிறந்து இந்தியாவில் மரணிக்கிற நமக்கு ஆரோக்கியமாக வாழ வழி என்ன? இன்றைய ஏகாதிபத்திய அரசுகள் நிதி மூலதனத்தின் மூலம் உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த முயலுவதால் பதட்ட நிலைக்கு உலக மக்கள் தள்ளப் பட்டுள்ளனர். சமாதான சக வாழ்வுக் கனவு கேள்விக் குறியாகியுள்ளது. இந்நிலையில் சர்வதேச வர்த்தக உறவைப் பலப்படுத்தி பதட்ட நிலையைத் தணிக்க முடியுமா?

தொழில் நுட்பங்களைக் கொண்டு. மக்களைக் கண்காணித்து ஜனநாயகம் கூண்டிலடைபடுவதை தடுப்பது எப்படி?

அரசு அடக்குமுறை கருவியாக இருப்பதை உதிரச் செய்வது எப்படி ?

ஆகிய கேள்விகளுக்கான பதிலைத் தேடிட முதலில் இன்றைய நிலையைச் சரியாகப் புரிந்து கொள்வோம்.

Capitalism vs. Socialism: What's the Difference?

2008 இல் மேலைநாடுகளில் உருவான நெருக்கடி.

இன்று பணக்கார நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா முதல் ஜெர்மன் வரை பொருளாதார நெருக்கடியில் 2008ல் விழுந்து எழுந்திருக்கத் தத்தளிக்கும் நிலை உள்ளது. அது எப்படி ஏற்பட்டது?

மேலை நாட்டு வங்கிகள் வட்டி வீதத்தைச் சந்தை நிலவரத்திற்கேற்ப உயர்த்தவோ குறைக்கவோ சம்மதித்தால்தான் கடன் கொடுப்போம் என்று முடிவெடுத்தனர். இந்த முடிவே முதலாளித்துவ கட்டமைப்பையே குலுக்கிவிடும் என்று அந்த நாட்டு அரசுகள் எதிர்பாராததாகும். இந்த முடிவால்,மேலை நாடுகளில் 2008ல் வராக் கடன் சுமை மலை போல் குவிந்து வங்கி கட்டமைப்பு நிலைகுலைந்தது

கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாகக் கிராக்கி ஏற்பட்டு வட்டி வீதம் உயரத் தொடங்கியது குறிப்பாக வீட்டுக்கடன் வாங்கியவர்கள் முதலில் பாதிப்பிற்குள்ளாயினர் உயர்கிற வட்டிச்சுமை கூடி தவணைத் தொகை பெருகியதால் அவர்கள் தவணை தவறினர். வங்கிகள் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி வீடுகளை ஏலம் விட்டன. லட்சக்கணக்கான அமெரிக்க நடுத்தர மக்கள் வீட்டை இழந்து பிளாட்பார வாசிகளாகான வரலாற்றைப் பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன.

ஏலம் விட்ட வீடுகளை வாங்குவதற்குப் போட்டியில்லாததால் வந்த விலைக்கு விற்க நேர்ந்தது. வங்கிகளின் வாராக்கடன் சுமை பெருகியது. பணக்கார நாடுகளின் அரசுகள் மக்களின் வரிப்பணத்தைக் கொடுத்து வங்கியைக் காப்பாற்றியதே தவிர வீடிழந்தவர்களுக்கு அந்த வீட்டைத் திருப்பி கொடுக்க முன்வராமல் அவர்களைத் தெருவில் விட்டது.

இன்று அமெரிக்காவில் எல்லா நகரங்களிலும் வங்கிகளின் சொத்தாக, பாழ்பட்டுக் கிடக்கும் விலை போகாத வீடுகளைப் பார்க்கலாம். புகழ் பெற்ற டெட்ராயிட் நகரில் பல காரணங்களால் கார் தொழில் நசிந்து போனதால் பாழடைந்த வீடுகளையும். தொழில் வளாகங்களையும் இன்றும் பார்க்கலாம். நகரமே பாழாகிற நிலை இன்று மேலை நாடுகளை ஆட்டிப் படைக்கிறது.

இழந்த பணத்தை அரசு வங்கிகளுக்குக் கொடுத்தாலும் வங்கிகள் கூடுதல் லாபம் சம்பாதிக்க மக்களின் வங்கி சேமிப்பு டெப்பாசிட்டின் வட்டி வீதத்தைக் குறைத்துக் கொண்டே போனது. மக்கள் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பதின் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியுமெனக் கருதி பங்குச் சந்தைக்கு ஓடினர். ஒரு காலத்தில் தொழிலுக்கான மூலதனத்தை கொடுக்குமிடமாக இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்கனவே பிரபலமான நிறுவனங்களின் பங்குகளை விற்கும் நிறுவனங்களாகிவிட்டன. பணக்கார நாடுகளில் உள் நாட்டு புதிய தொழில் முதலீடு சுருங்கியது. அமெரிக்கத் தொழிலதிபர்கள் வெளி நாடுகளில் தொழில்களை நடத்த ஓடினர் இந்த முதலாளிகளுக்குக் கம்யூனிச புரட்சியால் ஆபத்து வராமல் தடுக்க ஏகாதிபத்திய நாடுகளின் அரசுகள் ராணுவ பலத்தைப் பெருக்கி வருகின்றன. தொழில் நுட்ப அறிவையும் சர்வதேச செலவாணியான தங்களது பணத்தையும் இனைத்து உலக நாடுகளில் தொழில் முதலீடாகப் பாய்ந்ததால் கடந்த 30 வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் நிதிமூலதன ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு வளர்ந்து வருவதைக் காண்கிறோம். .

சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும் | வினவு

நிதி மூலதன ஆதிக்கம் ?

இரண்டாம் உலகயுத்தம் முடிந்த தருவாயில் (1950களில்) உலக வர்த்தகத்தைத் தடையில்லாமல் நகர்த்த மேலை நாட்டு அரசுகளால் உலக வங்கி பங்கு நிறுவனமாக நிறுவப் பட்டது. டாலரைச் சர்வதேச அந்தஸ்துள்ள நாணயமாக ஏற்றுக் கொள்கிற நாடுகளுக்குக் கடன் உதவி,மற்றும் பொருளாதார ஆலோசனைகளை வழங்கும் அமைப்பு என்று பிரகடனப்படுத்திக் கொண்டது.

அன்று சோவியத்யூனியன் உலக வங்கியைப் பங்கு நிறுவனமாகக் கட்டமைக்காமல், கூட்டுறவு அமைப்பாகக் கட்டி அமைக்க எடுத்த முயற்சிகள் தோற்றன. உலக வங்கி ஒரு வகையில் உலக வர்த்தகத்தோடு சோவியத் உறவு கொள்வதைத் தடுக்கும் கருவியானது.

பங்கு நிறுவனத்திற்கும், கூட்டுறவு அமைப்பிற்கும் உள்ள வேறுபாடு.?

உலக வங்கியின் கட்டமைப்பு விதிப்படி ஒவ்வொரு நாடும் அதன் தேச மொத்த வருவாய் அடிப்படையில் பங்குகள் கொடுக்கப்படும். ஒருகிராம் தங்கம் ஒரு டாலர் என்ற மதிப்பை அடிப்படையாக வைத்து ஒரு நாடு தேச மொத்த வருவாயை டாலரில் கணக்கிட்டு பங்குகளை வாங்க வேண்டும். உலக மொத்த வருவாயில் அதன் சதவீதத்தைக் கணக்கிட்டு அதன் விகிதப்படி வாக்குகள் வழங்கப்படும். . டாலர் இல்லையானால் தங்கமாகக் கொடுக்க வேண்டும். அந்த தங்கம் அமெரிக்காவில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

அதே நேரம் கூடுதல் முதலீடு செய்தால் கூடுதல் வாக்குகள் பெறமுடியாது. இன்று அமெரிக்காவிற்கு 15 சாத வாக்குகள் உண்டு இந்தியாவிற்கு 3சதவாக்குகளும் , சீனாவிற்கு 4சத வாக்குகளும் உள்ளது. உலக வங்கியின் வாக்கு சதவீதம் நிலையானது மாறாது. எனவே வங்கி நிர்வாக குழு தேர்வில் அமெரிக்கா அதனைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். இன்று வரை அதன் நிர்வாகம் வட அட்லாண்டிக் ராணுவ கூட்டின் கைப்பாவையாகத்தான் இருந்து வருகிறது.

கூட்டுறவு என்றால் வாக்குரிமை சமமாக இருக்கும் ,நிர்வாக தலைமை ஜனநாயக முறையில் அமையும் பணக்கார நாடுகள் வாக்குகளைப் பெறப் பிற நாடுகளின் வளர்ச்சிக்குப் போட்டிப் போட்டு உதவும் நிலை உருவாகும்.

உலக வர்த்தகம் தரமான சரக்குகள் மலிவாகக் கிடைக்கும் சந்தையாக மாறும். உலக வங்கி நாடுகளுக்குத்தான் கடன் கொடுக்கும் தனியாருக்குக் கடன் கொடுக்காது என்ற ஒரு வேறுபாடு தவிர மற்றபடி மேலை நாட்டுத் தனியார் வங்கிகளுக்கும் அதற்கும் வட்டி கணக்கிடுவதிலும் நிபந்தனைகள் போடுவதிலும் வேறுபாடு இல்லை.

ஐ.எம்.எஃப் என்ற வங்கி பின் நாளில் உலக வங்கியால் அமைக்கப்பட்டது. இது அரசிற்கும், தனியார் நிறுவனங்களுக்கும் சலுகை வட்டிக்குக் கடன் கொடுக்கும் அமைப்பாகும். இந்த கடனை அடைக்கத் தவறினால் தனியார் வங்கியிடம் கூடுதல் வட்டிக்குக் கடன் வாங்கி அடைக்க வேண்டும்.

உலக வங்கியின் கடன் உதவிமட்டுமல்ல முதலீட்டு ஆலோசனைகளையும் அரசியல் பொருளாதார நிலவரங்களையும் தொழில்நுட்ப மாற்றங்களின் தாக்கத்தையும் நாடுகளின் இயற்கை வளங்களையும் தகவல் களஞ்சியங்களைத் தயாரித்து வெளியிடும் பணியையும் செய்கிறது. சுருக்கமாகச் சொன்னால் ஐக்கிய நாட்டுச் சபைக்கு இணையாகச் செயல்படும் அமைப்பாகும். ஒரே வேறுபாடு ஐ.நா சபை உலக அமைதியை நாடுகிற அமைப்பு, உலக வங்கி நிர்வாகம் மேலைநாட்டு முதலாளித்துவத்தைக் காப்பாற்ற உலக நாடுகளுக்குக் கடன் கொடுக்கிறது… .

உலகவங்கியின் உதவி இரண்டு யுத்தங்களால் சிதிலமடைந்த ஐரோப்பிய நாடுகளுக்குப் பொருளாதார வளர்ச்சியைக் கொடுத்தது ஆனால் பிற நாடுகளின் பொருளாதாரத்தை நோஞ்சானாக்கியது உலக வங்கி சர்வாதிகாரிகளுக்கும் ஊழலுக்கும் துணைபோகிறது என்பதை உலக வங்கியில் பணி புரிந்த நிபுணர்களே ஆதாரத்துடன் காட்டியுள்ளார்.

இந்திய பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக குறையும்; அமெரிக்க ஆய்வு நிறுவனம்  கணிப்பு | Dinamalar

இந்திய மக்களின் பொருளாதார சிக்கல்கள்

இந்தியா 130 கோடி மக்கள் வாழ்கிற ஒரு நவீன சமூகமாகும். இதில் 70 கோடி மக்கள் உழைக்கும் வயதினர். அது மட்டுமல்ல அணுசக்திமுதல் சூரிய ஒளி சக்தி வரை மின்சாரமாக்கிப் பயன்படுத்தும் ஆற்றலுள்ள மானுடமாகும். விவசாயம் முதல் வீடு கட்டும் தொழில்வரை நவீன தொழில் நுட்பங்கள் புகுந்துவிட்ட நாடாகும்..இன்றைய தேதியில் இரண்டரை டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பணம் புரள்கிறது என்று மோடி மார்தட்டுகிறார் இவ்வளவு பணம் புரண்டாலும்.

இந்தியா என்றால் போன நூற்றாண்டில் வாலி-மருத காசி இயற்றி எம்ஜிஆர் வாயசைத்த பாடல் வரிகளே இன்றும் பொருந்துகிறது.

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்! ⁠(மருத காசி)

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் ( வாலி)

பணமில்லை என்று பஞ்சப்பாட்டு பாடுவது பாமரர்களை ஏமாற்றுவதற்கே என்பதை மோடியின் வாக்கு மூலமே சான்று“ இன்று 70 கோடி மக்களின் உழைக்கும் கைகளை விவேகமாக ஈடுபடுத்தினால் இந்தியா தானாகவே உயர்ந்துவிடும்.

இன்று இந்தியாவில் மோடி அரசாங்கம் அறிவித்தபடி 12 லட்சம் கோடி ரூபாய் வரிகளாக அரசிடம் பணமிருந்தும் நிதி அமைச்சர் பணமில்லை என்று புலம்புகிறார் டிஜிட்டல் வடிவில் வசூலித்த ஜி எஸ் டி வரிப்பணம் இருந்தும் மாநிலங்களுக்குக் கொடுக்கவேண்டிய ,பங்கிற்குக் கையை விரிக்கிறார் மாநில அரசுகளின் பணத்தை எடுத்து எதற்கு எப்படிக் கொடுக்கப்பட்டது என்பதையும் கூறமறுக்கிறார்.

ரிசர்வ் வங்கி கவர்னரும் கார்கள் லாரிகள் துணிகள் வீடுகள், மற்றும் தட்டுமுட்டு சாமான்கள் விற்காமல் தேங்கிக் கிடப்பதைக் காட்டி புலம்பாத நாளில்லை. ஆனால் எரி பொருள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை மட்டும் உயர்கின்றன. அதாவது பாமரர் கையில் எவ்வளவு பணமிருந்தாலும் எரி பொருள்., உணவு இவைகளை வாங்க போதவில்லை. பணத்தையும் பொருளாதாரத்தையும் நிர்வகிக்க தெரியாத மூடர்கள் ஆட்சி நடப்பதைக் காட்டுகிறது. பண்பாட்டுப் பேணல் என்ற பெயரில் மத மூட நம்பிக்கை களை பரப்பி மக்களை முட்டாளாக்குகிறது குழந்தைப்பருவத்தில் மாணவர்களை முட்டாள்களாக்கும் கல்வி முறையைத் திணிக்கிறது.

130 கோடி மக்களின் ஆரோக்கியமாக வாழ அவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்கிற பொருளாதார கட்டமைப்பைக் கட்டுவது எளிதல்ல என்று கூறுவது ஒரு வகை அறியாமையாகும்.. 70 கோடி இளைய மக்களின் கரங்களைச் செயல்படவைத்தால் 7வருடத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியைவிட வேகமாக வளர முடியும். டாலர் சம்பாதிக்கும் நோக்குடன் இருக்கும் இன்றைய கட்டமைப்பை மாற்றி இந்திய மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார கட்டமைப்பைக் கட்டுவோம். டாலரின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் உலக வங்கிக்கு மாற்றாக , பிறநாடுகளின் ஒத்துழைப்பைப் பெறும் பார்வை கொண்ட அரசே இன்றைய தேவை.. அரசை மக்களின் சேவகனாக மாற்றுவோம்.