Technological Adventures of a Nippondi - Ayeesha R.Natarajan

ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்பேனா, மகாத்மாகாந்திபயன்படுத்தியபேனா, நமதுஅரசியல்சட்டத்தைஅண்ணல்அம்பேத்கர்எழுதியபேனாஇவற்றைஆய்வுசெய்தஒருநிப்பாண்டியின்கதைஇது.

எந்த இயற்பியல் பொருளாவது உயிர் வாழுமா, ஆனால் நீரூற்றுப் பேனா ரிப்பேர்காரர் தனது பேனாக்களோடு பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு ஓம்ஸ் விதி தெரியாது ஆனால் நேனோ தொழில்நுட்பம் தெரியும்.நிப்பை  அதாவது நாக்கை பயன்படுத்தி நிறமி மை கொண்டு எழுதும் கருவியான நீரூற்றுப் பேனா எனும் பவுன்டேன் பேனாவை இன்று யார் சார் பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். காகிதத்தின் பயன்பாடே இன்று இல்லை. இந்த கைபேசி யுகத்தின் குறுஞ்செய்தி ஆட்சியில் எழுதுவது மரபொழிந்து போனபோதும் பள்ளிக் கல்லூரிகளில் தேர்வு எனும் நீங்காசாபம் நிலைபெற்று இருக்கும்வரை பேனாக்கள் இருக்கும். ஆனால் நீரூற்றுப் பேனா? அந்த நிப்பான்டியின் கதையே தனி.

இன்று விதவிதமாக பேனாக்கள் வந்துவிட்டன. நம்மால் நம்பமுடியாத வகை அதிசய பேனாக்கள் எல்லாம் வந்துவிட்டன.பிளாக்லைட் பேனா என்று சென்ற வாரம் ஒன்றை பார்த்தேன். அஞ்சு ரூபாய்தான். எங்கள் ஊர் வழியாக இரவுபகலும் நடந்து வேளாங்கண்ணி போகும் தேவமாதா (ஆண்டவர் உங்களோடு இருப்பாராக)கொடி அன்பர் ஒருவர் நள்ளிரவு இருட்டில் வெளிச்சமே இல்லாத இடத்தில் தனது பாக்கெட் நோட்டில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார்/ இருட்டில் அவர் எழுதியது ஒளி வீசியது. இரவு சிற்றுண்டி, வாழைப்பழம்-37 ரூபாய் வழிச் செலவு கணக்கு எழுதும் அன்பர் இப்படி இருட்டிலும் ஒளிரும் எழுத்தா? நான் சிவப்பு மைகாரன்(வாத்தியார் சார்.. அதை சொல்றேன் ) நீலம் கருப்பு வண்ண மைபேனாக்கள் சகஜம் பச்சை அதிகாரி பேனா. ஆனால் பொன்னிற ஒளியில் நான் பார்த்தது கிடையாது. எட்டாம் வகுப்போ என்னவோ வீட்டில் கிடைத்த சவுக்காரம்நீலம் மஞ்சள்பொடி குங்குமம் கலந்து பிங்க் அல்லது ஊதா நிற மை கண்டுபிடித்து அசத்திய நான்,‘எல்லாம் கிருபை’என்றவரிடம் சரண்டர் ஆனேன்.

என் தேடல் வெறி காரணமாக அந்த பேனாவை அன்பரிடம் வாங்கி ஒரு கைபேசி கிளிக்!  இதனால் கூகுல்இத்யாதி அறிவித்தது என்னவென்றால் அது பாஸ்பொரொசென்ட் பேனா. பிளாக்லைட் வகையரா. கருப்பு ஒளியில் மிளிரும் மின்காந்த நிறமாலையின் புறஊதா பிரிவில் ஒளிக்கு பதிலளிக்கும் நிறமிகள் குலத்தைச் சேர்ந்தது. இது கண்டுபிடிக்கப்பட்ட கதை மஞ்சுமூனா பாய்ஸ் கதையை விட திரில். ஜோசப் ஸ்விட்சர் மற்றும் ராபர்ட் சுவிட்சர் என இரட்டையர்.

 இவர்களில் ராபர்ட் பெரிய விபத்தில் சிக்குகிறார். பின் மண்டை ஓட்டில் பலத்த அடி. இதன் விளைவாக பார்வை நரம்பு கட். வினோதமான நாள்பட்ட வியாதியில் சிக்குகிறார். மூலம்-பவுத்திரம் வகையைவிட மோசமான நோய்.சூரிய ஒளி அல்லது எவ்வகை வெளிச்சத்தை பார்த்தாலும் அலறினார். எனவே மருத்துவர்கள் அவரை இருட்டறையில் அடைத்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் அண்ணன் ஜோசப் அறிமுகம் ஆகிறார். அவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியல் துறை மாணவர். தொடங்கியது சேட்டை.

முதலில் விதவிதமான கூலிங் கிளாஸ் முயற்சி. பிறகு இயற்கையாகவே இருட்டில் ஒளிரும் கரிம சேர்மங்களை தேடும் தங்கள் தந்தையின் மருந்து கடையில் சோதனைகள். மருந்து கடையையே இருட்டாகி ஒரு குட்டி ஆய்வுக்கூடம்.75 வகை ஆய்வுகளுக்கு பிறகு ராபர்ட் இருட்டில் படிக்கும்படி புளோரசென்ட் வகை பேனாமை மற்றும் பேனா அடையப்பட்டது. வருடம் 1930 அதுதான் இன்று வேளாங்கண்ணி யாத்திரையை ‘எல்லாம் ( அறிவியலின்) கிருபை’ ஆக்கி உள்ளது.

நீங்கள் எப்போதிருந்து பேனா பிடித்தீர்கள். எனக்கு ஒன்னறை வயதில் அறிமுகமானது. அதெப்படி நினைவிருக்கும் என்றால் தாத்தா பேனாவோடு ‘விளையாடி’(நிப்பை முழுங்கியவன்என்று இன்றுமுதல் அழைக்கப்படுவீர்கள்) பட்டம் வென்று மருத்துவர் கவனம் பெற்று நிப்பாண்டி ஆனவன் நான். இன்றும் நாம் அறிந்த நவீன நீரூற்று பேனா1884-ல் லூயிஸ் வாட்டர்மேன் என்பவரால் காப்புரிமை பெற்றது. காப்புரிமைவேறு கண்டுபிடிப்புவேறு என்று அறிவியல் பலமுறை நிரூபித்துள்ளது/ உதாரணமாக 1827-லேயேபெர் ராசே பெனாரூ எனும் ருமானிய ராணுவ வீரரால் கண்டுபிடிக்கப்பட்டதற்கு ஆதாரமாக ஒரு பேனா புக்காரஸ்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது. 1821 இல் ருமானிய புரட்சித்தளபதி விளாதிமிர் ரெஸ்ச்சுவின் படையில் வீரராக இருந்த பெனாரூ போரில் பயந்து (புறமுதுகுகாட்டி) அலறியடித்து ஓடியபோது பிடித்துச் சென்று தளபதி முன் நிறுத்தப்பட்டார். அவரது உடலை சோதனை இட்டபோது பிடிபட்டது அவரே செய்து வைத்திருந்த நீரூற்று பேனா. அவரது அருமை புரிந்த தளபதி அவரை ஏதும் செய்யாது பேனா உலகை இந்த நிப்பாண்டியை வைத்து உயிர்ப்பித்தது வரலாறு.

அதென்ன நீரூற்று பேனா? முன்பிருந்தது வெறும் மைமூழ்கி பேனா. பழைய சித்திரங்கள் கதைகளில் பார்த்திருப்பீர்கள். மை பாட்டிலில் முக்கி எடுத்து எழுதுவார்கள். அதிலிருந்து நீரூற்று பேனா முற்றிலும் வேறுபடுகிறது. மைமூழ்கி பேனா தந்துகி கவர்ச்சி மூலம்காற்றழுத்தத்தை மேல்நோக்கி விசையாக்கி குப்பி மையை நிப்பால் உறிஞ்சுகிறது. பிறகு எழுதும்போது அது சீராக மையை காகிதத்தில் பிரவிட வைக்க வேண்டும். ஆனால் ஹோமர் முதல் சார்லஸ் டிக்கன்ஸ் நம்ம அருட்பிரகாச வள்ளலார் வரை மை குப்பி பேனா தான் அவர்கள் திணறிய திணறலுக்கு அளவே கிடையாது. காகிதம் அப்போதெல்லாம் விலை உயர்ந்த சரக்கு ஒருவரி நன்றாக வந்தால் மறுவரி மைகொட்டிவிடும். மைகுப்பி பேனா மை உறிஞ்ம் தாள் சேர்த்தே செய்வார்கள்.

நீரூற்றுப் பேனா அதற்கு நேர்எதிர் நீரூற்றுப் பேனா காரர்களின் அறிவியல் அலாதியானது. பல ஊர்களில் அப்போதெல்லாம் கைகடிகாரம் செய்பவர்தான் நீரூற்றுப் பேனாகாரராகவும் இருந்தார்கள். நீரூற்றுப் பேனா நீர் தேக்கம் போல மை தேக்கம் எனும் குழாய் தொட்டி கொண்டது இந்த மைதேக்கத்தில்  இருந்து அது மையை ஒரு ஊட்டத்தின் வழியே நிப்பிற்கு இழுக்கிறது ஈர்ப்பு மற்றும் தந்துகி விசைமூலம் காகிதத்தில் மையை இடுகிறது/ காகிதம் எத்தனை வழவழப்பானதாக இருந்தாலும் அதில்  நுண்துளைகன்  உண்டு.  இந்த நுண்துளைகளில் மைநிரம்பி  உடனடியாக காய்ந்து விடுவதால் நமக்கு எழுத்தும், வடிவங்களும் கிடைக்கின்றன.

உடனடியாக மை காயாமல் போனால் திப்பி திப்பியாக எழுத்து கலைந்து வீணாகும் லியோனார்டோ டாவின்சியின் மறுமலர்ச்சி காலத்தில் மை தேக்கத்தில் இருந்து புவியீர்ப்பு மற்றும் தந்துகி செயல்மூலம் உறிஞ்சும் அமைப்புகளை விவரிக்கும் குறுக்கு வெட்டுக்களுடன் கூடிய வரைபடங்களும் உள்ளன. எனவே அவரை வரலாற்றின் முதல் நிப்பாண்டி என முன்மொழிகிறேன். பள்ளிக் கல்லூரி நாட்களில் நிப்பை சரிகட்ட பேப்பரை கிழிக்காமல் இருக்க முகம்பார்க்கும் கண்ணாடி மீது தேய்த்து தீத்தியது உங்களுக்கு ஞாபகம் வருமானால் அந்த முறையை கண்டுபிடித்தவர் டாவின்சிதான். கண்ணாடியில் தீட்டினால் நிப்பை பட்டையாக மாவு மாதிரி வழவழப்பாக எழுத வைக்கலாம். இந்த முயற்சி மூலம் அன்று யாவருமே நிப்பாண்டிகளானது சிறப்பு.

நீரூற்றுப் பேனாவின் மற்றொரு முன்னோடி ஜான் ஜேக்கப் பார்க்கர் 1832 லேயே நிப்பிற்கு பின்  இருக்கும் நாக்கு அல்லது ஊட்டியை அறிமுகம் செய்து காப்புரிமையும் பெற்றார். அவரது பேனாவின் சிறப்பு ஒரு திருகு- இயக்க பிஸ்டன் ஆகும்.அத்துடன் ஒரு சுய நிரப்பியும் உண்டு. இன்றும் பார்க்கர் நீரூற்று பேனா பிரபலமாக இருப்பதற்கு காரணம் அதன் நிப்புகளைஆஸ்மீனியம், ருத்தேனியம் இரிடியம்என்று விதவிதமானஉலோகங்களால்  செய்து தங்கம் மூலாம், வெள்ளி மூலாம் பூசி அசத்தினார்.

ஊட்டி என்பது பேனாவின் முனையை அதன் மை தேக்கத்துடன் இணைக்கும் கூறு ஆகும். இதை கட்டுப்படுத்தப்பட்ட கசிவு என்றும் அழைக்கிறார்கள். மை உறிஞ்சப்படும்போது இழந்த மைக்கு பதிலாக நீர்த்தேக்கம் வரை பின்னோக்கிப் பாயும் காற்றின் அளவையும் இந்த ஊட்டி எனும் நாக்கு ஒழுங்குபடுத்துகிறது. ஊட்டமானது அதன் கீழ் விளிம்பில் இயங்கும் குறுகலான சேனல்கள் அல்லது பிளவுகளை பயன்படுத்துகிறது இந்தப்பிளவுகளில் மை பாய்வதால் காற்று ஒரேநேரத்தில் சமஅளவு பரிமாற்றத்தில் நீர்த்தேக்கத்திற்குள் மேல்நோக்கிய பாய்ச்சலை ஏற்படுத்துகிறது. மைசொட்டாமல் அல்லது கசிவதை தடுக்க ஊட்டங்கள் முக்கியமானவை இதுதான் நிப்பின் ஈரப்பதத்தை பேணுகிறது.The Invention of Fountain Pen: Petrarche Poinaru Writing History - 3 Seas Europe

நிப்பாண்டிகள் நிப்டிப்பிங் என்கிற ஒன்றை 1950களில் அறிமுகம் செய்தார்கள். பெரும்பாலும் இரிடியம் முனை. சிலசமயம் ரீனியம், ருத்தேனியம் மற்றும் டங்ஸ்டன் முனைகளும் உண்டு. நேனோ துகள்களாக்கி உலோகத்தை நிப்பில் பிளவை வெட்டியபிறகு உருகுநிலை வடிவதற்குள் நிப்பின் நுனியில் அறைத்து பற்றவைக்கும் மிகமிக நுணுக்கமான முறையில் நிப்- டிப்பிங் செய்யப்படுகிறது. டிப்பிங் வேண்டாம் முழு நிப்பே டிப்பிங்தான் என்றால் எப்படி இருக்கும் அப்படி வந்ததுதான் ஹீரோ பேனா.

இன்று குச்சிமை பேனா ஒரு ரூபாயில் கூட இருக்கிறது. பால்பாயிண்ட், ரூபாய் இரண்டு. ஆனால் ஹீரோ பேனா மோகம் இன்றும் உண்டு. தயாரிப்பது சீன நாடு. ஷாங்காய் ஹீரோ பேனா சீன நிறுவனம்.  இதன் சீனபெயர் ஹவ்ஃபு (Haufu)  ஹான்யூபின்யீன்மொழியில்ஹவுஃபுஎன்றாலேபேனாதானாம். ஹீரோ அதிலும் ஹீரோ 616 அல்லது ஹீரோ 100 மற்றும் ஜென்டில்மேன்ஹீரோ பாக்கெட்டில் இருந்தால் எங்கள் கல்லூரி காலத்தில் ஒருவரை கையில் பிடிக்கமுடியாது. என்னிடம் ஹீரோ 329 ரொம்பகாலம் இருந்தது. இது பார்க்கர் 51-ன் அச்சசல் காப்பி என்று ஒரு கட்டுரை படித்தேன். சீன நீரூற்று பேனாக்களின் கவர்ச்சி அவற்றில் உள்ள வெற்றிட மை நிரப்பிக்குழாய். மை கையில் படாமல் நிரப்பலாம். (அதே ஸ்டைலில் நண்பனிடம் மை கடனும் பெறலாம்.)

Waterman Pens: The Invention of a Legacy | The Hamilton Pen Company

இந்தியாவின் நீரூற்றுப் பேனாக்களில்கூப்டுஸ் நீரூற்றுப் பேனாக்கள்1911 முதலே தயாரிக்கப்பட்டது அற்புதம். இது நமது நிப்பாண்டியான பெனிந்திரநாத் கூப்டு என்பவரால்  ஒரு சிறு கீத்துக் கொட்டகையில் தொடங்கப்பட்டது. அதைவிட முன்னதாக 1909 இல் பாலகங்காதர திலகர்  நீரூற்றுப் பேனாவை வைத்திருந்தார். இது டாக்டர் ராதிகாநாத் சாஹாவால் தயாரிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் நீரூற்று பேனாக்களின் காப்புரிமை விஷயத்தில் வாரணாசி லட்சுமி ஸ்டைலோ பென்ஒர்க்ஸ் எனும்  நிறுவனம் முந்திக்கொண்டு 1912லிருந்து பேனா உற்பத்தியை தொடங்கியது/ ஒருவர் ஆர்டர் கொடுத்துவிட்டு ஆறுமாதம் காத்திருக்க வேண்டும். 1932ல்  ராஜமுந்திரி நிப்பாண்டியானகே.வி. ரத்தினம் என்ற ஒருத்தர். மகாத்மா காந்தி அவரை அழைத்து உள்ளூர் நீரூற்றுப் பேனா தயாரிக்க ஊக்கப்படுத்தினார்.

இதனால் இயந்திரம் இன்றி கையால் செய்த ‘ரத்னம் நீரூற்று பேனா’ என்பதன் முதல் தயாரிப்பு(பேனா) 1935ல் மகாத்மா காந்திக்கு வழங்கப்பட்டது.‘ரத்னம் பேனா’ சுதேசி அந்தஸ்து பெற்றது இப்படித்தான். நம்ம ஊர் நிப்பாண்டியான ராஜமுந்திரி ரத்னம் தரமான மையும் தயாரித்தார். ஆனால் விரைவில் கருங்கல் எபோனைட்- நீரூற்று பேனாக்கள் நானிகோபால்மைத்ரி என்பவரால் அறிமுகமாகின.

சென்னை ஜார்ஜ் டவுனில் 1920-லேயே எம்.சி. குன்னன் மற்றும் வெங்கட்ரங்கன் ஆகியோர் ஏற்கனவே நீரூற்றுப் பேனாக்களை உற்பத்தி செய்ய பட்டறைகள் வைத்திருந்தனர். பயனாளர்கள் பெரிய மனிதர்கள். ஒரு சிறு மூங்கில் கழியில் எழுதுவதுபோல பிடிக்கவைத்து அவரவர் கைக்கு அளவெடுத்து வெங்கட்ரங்கன் நீரூற்றுபேனா செய்வார் எனில் அவர் எப்பேர்ப்பட்ட  நிப்பாண்டியாக இருக்க வேண்டும். துவாரதாஸ் சாக்வி, வல்லப தாஸ் சாக்வி இரட்டையரின் நீரூற்று பேனா இந்தியா வந்த சார்லஸ் இளவரசருக்கு வழங்கப்பட்டது.

வெங்கட்ராமன் நீரூற்று பேனா பிடித்தவர்களில் நேரு, தாகூர். சுபாஷ்சந்திரபோஸ், டாக்டர் ராஜேந்திர பிரசாத் என்ற பலர் உண்டு. பாபாசாகிபு அம்பேத்கார் நமது அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதியது வில்சன் நீரூற்று பேனா என்பதை வைத்துதான். 1941ல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப் பிரபலமான நீரூற்றுப்பேனா வில்சன் வாக்குமாட்டிக் பேனா துவாரகதாஸ் சகோதரர்களின் பங்களிப்பு. திருவள்ளூர் எம். எஸ். பாண்டுரங்கன் எனும் அபாரமான நீரூற்று பேனாக்காரர் ரங்கன் பென்ஸ்என்று 1970-ல் அறிமுகம் செய்தார். இந்த நிப்பான்டியின் கையில் மூங்கில் கழிகள் நீரூற்று பேனாக்களாகி மிளிர்ந்தன. கவியரசு கண்ணதாசன் முதல் கலைஞர் வரை ரங்கன் நீரூற்று பேனாவை தமிழகம் வரலாற்று சின்னமாக்கியது.

நீரூற்றுப் பேனா பற்றி யார் அறிவாளி என அப்துல்கலாம் ஒரு ஜோக் சொல்வது உண்டு. அப்துல்கலாம் பயன்படுத்தியது வில்சன் நீரூற்றுப்பேனா அது அவரது ஆசிரியர் அவருக்கு பரிசாக கொடுத்தது. ஜோக் இதுதான். நாஸாவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய புதிதில் அங்கே விண்வெளியில் எழுதி குறிப்பெடுக்க நீரூற்றுப் பேனா பயன்படாது என்பதை கண்டது. ஈர்ப்பு விசையே இல்லாத இடத்தில் பால்பாயிண்ட் முதல் ஸ்டிக் பேனா வரை எழுவுமே எழுதாது என்பதை கண்டு 16 மில்லியன் டாலர் வரை செலவு செய்து விண்வெளியின் ஜீரோகிராவிட்டி முதல் தண்ணீருக்குள் எழுதினாலும் எழுதும் ஸ்பேஸ் பேனாவை ஆறாண்டு உழைத்து கண்டுபிடித்தார்கள் அமெரிக்கர்கள். ரஷ்யர்கள் இதெல்லாம் அதுவும் செய்யவில்லை. அவர்கள் பென்சில்களை பயன்படுத்தினார்கள்.யார்புத்திசாலி.

ஆனால் இந்த ரஷ்யர்கள்தான் இருபக்கமும் எழுதும்லோயுஸ் மாஸ்கோ 80 ரக அதிநவீன உலகிலேயே விலை உயர்ந்த நீரூற்றுப் பேனாவை அறிமுகம் செய்தார்கள்.14 காரட் தங்கத்தாலான நிப். மற்றும் நிப்-டிப்பிங். மை நிரப்பியாக பிஸ்டன் இழுவைமுறை ஆனால் இருபுறமும் நிப் எழுது  வசதி என அற்புத பிரம்மாண்டம் இந்த லோயுஸ் மாஸ்கோ 80 ரக நீருற்று பேனா. இந்த பேனாக்களின் நிப்பாண்டிகள் இன்னொரு வேலையும் செய்தார்கள் உங்கள் நீரூற்றுப் பேனாநிப்பில்உங்கள் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.லென்ஸ்வைத்துபார்க்கலாம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (பெலிக்கன் 100N மற்றும்வாட்டர்மேட்டேப்பர்நீருற்றுபேனா)   சர். சி. வி. ராமன்  ( வாட்டர்மேன் 106 நிப்டிப் நீருற்றுபேனா) மேரி க்யூரி (963 அல்லாய் நீருற்று பேனா) சார்லஸ் டார்வின் (சுயமாக ஆர்டரில் செய்த எஸ்டி நீருற்று பேனா) என்று ஒரு 100 விஞ்ஞானிகள் பயன்படுத்திய நீரூற்றுப்பேனா. இந்த பேனாக்களின்  பட்டியல் கூட சேகரித்து வைத்திருக்கிறேன் (தேவைப்படும் நிப்பான்டிகள் அணுகவும்)

எத்தனை வகை பேனாக்கள் வந்தாலும் வகைவகையாக ஆன்லைனிலேயே தட்டச்சு செய்தாலும்… வாயிஸ் டைப்பிங் முதல் ஆட்டோ கரெக்ஷன் வரை போனாலும் நிப் முதல் அடி… மூடி… கழுத்து என்று தனித்தனியே பிரித்துப் போட்டு குவளை நீரில் வாரந்தோறும் ஒரு வாஷ் செய்து பில்லராங் மை நிரப்பிய அந்த நிப்பாண்டி கால அறிவியல் சாகசங்களை மிஞ்ச முடியாது.

நீருற்றுப்பேனாவிஷயத்தின்லேட்டஸ்ட்வரவு 2015ல் நான்வாங்கியபைலட்பேனா. இந்தகட்டுரையைஅதைகொண்டுதான்எழுதிக்கொண்டிருக்கிறேன். பைலட்நீருற்றுஜப்பானியநிறுவனத்தயாரிப்பு. 1932லிருந்து கிடைக்கிறது. ரியோசுக்கிநாமிக்கிஎன்றுடோக்கியோநாட்டிக்கல்கல்லூரிபேராசிரியர் 1915ல் தனதுபதவியைராஜினாமாசெய்துவிட்டுதங்க – நிப்புகள்தயாரிக்கத்தொடங்கியபோதுபைலட்பிறந்தது. 2015

முதல்நான்எழுதிவரும்பைலட்முழுதும்வீசிஎரியப்படும்பிளாஸ்டிக்மினரல்குடிநீர்பாட்டில்களைமறுசுழற்சிசெய்துதயாரிக்கப்படும்சூழலியல்அம்சம்கொண்டதுஎன்பதேஅதன்சிறப்பு.

 

எழுதியவர் 

ஆயிஷா இரா.நடராசன்

 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *