உலகம் அறிந்த இந்திய வானொலி வானியலாளர் துரூபா ஜே சைக்கியா (Dhruba J Saikia)
தொடர்- 26: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
இந்திய வான் இயற்பியல் வரலாற்று சாதனைகள் பலவற்றைப் படைத்துள்ளது. அவற்றில் ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தில் மும்பை டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் கல்வியகத்தில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் தான் துரூபா ஜே சைக்கியா (Dhruba J Saikia) ஏனும் பேரறிஞர். 1980களில் ஊட்டியில் உள்ள வானொலி தொலைநோக்கி ஆய்வுகளில் ஈடுபட்ட இளைஞர் படையில் ஒருவராயிருந்து இந்தியாவுக்கு பல சிறப்புகளைச் சேர்த்தவர் அவர். சர்வதேச வானொலி வானியல் ஆய்வகம் என்கிற சர்வதேச அமைப்பு அமெரிக்காவில் உள்ளது. கிளிக்ஸ்தானில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வகத்தை கனடா மற்றும் ஆஸ்திரேலியாவின் உதவியோடு நடத்தி வருகிறது. இந்த ஆய்வகத்தின் விஜயம் செய்யும் விஞ்ஞானியாகவும் மதிப்புக்குரிய சைக்கியா விளங்குகின்றார்.
இன்டர் யூனிவர்சிட்டி தி சென்டர் ஃபார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோ ஃபிசிக்ஸ் என்பது இந்திய பல்கலைக்கழகங்களில் வானியல் மற்றும் வானியல் இயற்பியலில் செயல்படுகின்ற குழுக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மையமாகும். இதன் தலைமையகம் பூனாவில் உள்ளது. பூனா பல்கலைக்கழக வளாகத்தில் ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்திற்கு விஞ்ஞானி சைக்கியா தலைமை வகிக்கிறார். மாபெரும் மெட்ரோ வேவ் ரேடியோ தொலைநோக்கியை அங்கிருந்து அவர் இயக்கி வருகிறார்.

2002 ஆம் ஆண்டு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வானியல் மற்றும் வானியல் இயற்பியலை பிரபலபடுத்துவதற்காக நாடு தழுவிய ஒரு பிரச்சாரத்தை ICUAA பூனாவிலிருந்து தொடங்கியது. நாக்பூர் திருவல்லா சிலிகுரி மற்றும் பல இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பார்வையாளர் நிகழ்ச்சிகளை நடத்தியது. இவற்றை ஒருங்கிணைத்து நடத்தியவர்தான் விஞ்ஞானி துரூபா ஜே சைக்கியா (Dhruba J Saikia) . கிளாசிக்கல் மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு நட்சத்திரங்கள் அண்டவியல் ஈர்ப்பு அலைகள் ஆப்டிக்ஸ் மற்றும் வானொலி வானியல் ஆகிய துறைகளில் ஒரு வல்லுனராக அவர் விளங்குகின்றார். வானொலி தொலைநோக்கி ஊட்டியில் இருந்தும் இன்னும் 16 பிற இடங்களிலிருந்தும் அனுப்புகின்ற நட்சத்திரங்கள் பற்றிய புள்ளிவிவரங்களை தீவிரமாக ஆய்வு செய்து உடனடி வருங்காலத்தில் நிகழப் போகும் வானியல் நிகழ்வுகளை அவர் முன் அறிவிக்கிறார்.
அவருடைய மிகப் பிரபலமான துறைகளில் ஒன்று சூரிய குடும்ப இயற்பியல் என்னும் துறையாகும். சூரிய குடும்பம் என்பது வெறும் கோள்களாலும் ஒரு சூரியனாலும் ஆனது மட்டுமே அல்ல. அது ஆயிரக்கணக்கான துணைக்கோள்கள் எனும் சந்திரங்களால் ஆனது. இந்த சூரியக் குடும்பத்தில் ஏரி கற்கள் உள்ளன இந்த சூரிய குடும்பத்தில் மெட்டிராஸ் என்று அழைக்கப்படுகின்ற வான் பொருட்களும் உள்ளன. விண்வெளிக்கு நாம் அனுப்புகின்ற ராக்கெட்டுகள் வெற்றிகரமாக புவியின் வட்டப்பாதையை கடந்து நிலவை நோக்கி செல்ல வேண்டுமென்றால் அவை வான் ஆலன் கதிர்வீச்சு BELT ஏனும் ஒரு குறிப்பிட்ட பகுதியை கடந்து செல்ல வேண்டும். அது துகள்களின் மண்டலம் ஆகும். அவை பெரும்பாலும் சூரியனில் இருந்து வெளிபடுகின்ற வெப்பக் காற்றிலிருந்து உருவானவை. அவை நம் கிரகத்தின் காந்த மண்டலத்தால் கைப்பற்றப்பட்டு சுற்றி வைக்கப்பட்டுள்ளன. பூமியைச் சுற்றி இது போன்ற இரண்டு BELT கள் உண்டு என்பதை நுட்பமாக ஆய்வுசெய்து பலவகை முக்கிய விவரங்களை துரூபா ஜே சைக்கியா (Dhruba J Saikia) வெளியிட்டிருக்கிறார்.

தற்போது மிகப்பெரிய அளவில் செயலில் உள்ள விண்மீன் திரள்கள் ரேடியோ விண்மீன் திரள்கள் மற்றும் குவாசர்கள் குறித்த அறிவியலில் தனக்கென்று நிபுணத்துவம் பெற்றவர் மதிப்பிற்குரிய நாம் விஞ்ஞானி துரூபா ஜே சைக்கியா (Dhruba J Saikia) அவர்கள். 1977 முதல் டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தில் ரேடியோ வானியல் குழுவில் பல முக்கிய பங்களிப்புகளை செய்திருக்கும் விஞ்ஞானி சைக்கியா ஜியோ.. வான் நட்சத்திர வங்கி கண்காணிப்பு என்று அழைக்கப்படும். ரேடியோ தொலை நோக்கிகள் ஐக் கொண்ட முக்கிய ஆய்வகத்தில் இங்கிலாந்துக்கு சென்று பணியாற்றி இருக்கிறார். இந்த ஆய்வகத்தில் உள்ள முக்கிய தொலைநோக்கி லெவல் தொலைநோக்கி என்று அழைக்கப்படுகிறது. மல்டி எலிமென்ட்ஸ் ரேடியோ தொலைநோக்கியான இதன்மூலம் அறிவியல் தொழில்நுட்ப வசதி கவுன்சிலின் அனுமதி பெற்று இந்தியாவில் அதே போன்ற ஒரு தொலைநோக்கியை அவர் உருவாக்கி சாதனை படைத்தார்.
2000-2001 ஆண்டுகளில் கனடாவில் கிங்ஸ்டனில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் பேராசிரியராக அவர் இணைந்தார். அவ்வப்போது அங்கிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி பறந்து ஆஸ்திரேலிய தொலைநோக்கி தேசிய வசதி கழகத்தில் உறுப்பினராக இணைந்து வானொலி வானியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தில் இணைந்தார். விஞ்ஞானி துரூபா ஜே சைக்கியா (Dhruba J Saikia) உருவாக்கி கொடுத்த பலவகையான ஆழமான தரவுகள் இந்தியாவினுடைய மங்கல்யான் மற்றும் சந்திரயான் திட்டங்களுக்கு பெரிய அளவில் பயன்பட்டு உள்ளன. வானொலி அலைகளை வெளியிடும் விண்மீன்கள் குறித்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் உலகெங்கும் பிரபலமாக பேசப்படுகின்றன.

வானியல் என்றில்லாமல் தன்னுடைய சொந்த ஊரில் GUWAHATI ASSAM எனும் ஊரில் 1991 ஆம் ஆண்டு -இவர் உருவாக்கிய வரலாற்று சிறப்புமிக்க பருத்தி கல்விக்கான கல்வி நிறு வனம் 2012 ஆம் ஆண்டு தேசிய பருத்தி பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது. அவர் அதன் ஸ்தாபக துணை வேந்தராகவும் ஆக்கப்பட்டார். துரூபா ஜே சைக்கியா (Dhruba J Saikia) ஒரு தீவிர வனவிலங்கு ஆர்வலர். குறிப்பாக பறவைகளின் மீது அளவற்ற அன்பு கொண்டவர் கார்னல் ஆய்வகத்தில் பறவைகளுக்கு என்று தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்த தாராளமாக தான் சேமித்த நிதியில் இருந்து உதவி செய்தவர்..
துரூபா ஜே சைக்கியா (Dhruba J Saikia) 1956 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் ஜோஹாத் என்னும் ஊரில் பிறந்தார். இளமைப் பருவத்தில் ஷில்லாங்கிலும் அசாமில்மாக அவர் கல்வி கற்றார் அவருடைய பெற்றோர்கள் ஆசிரியர்களாக இருந்தனர். அசாமி இலக்கியத்தில் தேவிகா சைக்கியா என்னும் அவருடைய தாய் ஒரு கவிஞர். பள்ளி கல்வியை ஷில்லாங்கில் முடித்த பிறகு அவர் ஒரு நிதி உதவி நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று புதுடெல்லினுடைய இந்துக்கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம் இயற்பியல் பாடத்தில் இணைந்தார். 1975 ம் ஆண்டு அவர் புது தில்லி பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முதுகலை இயற்பியல் பட்டம் பெறுவதற்கான வகுப்பில் இணைந்த பொழுது வானொலி அலைகளின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக முதுகலை படிப்பை பாதியில் விட்டுவிட்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியின் வானொலி தொலைநோக்கி இருக்கும் இடத்திற்கு கோவிந்த் ஸ்வரூப் ஏனும் ஆய்வாளர்ரோடு இணைந்து வந்து சேர்ந்தார்.பெரு வெடி கோட்பாட்டின் அடிப்படைகளை நிரூபிக்க கூடிய வானொலி அலைகளை ஏற்படுத்துகின்ற நட்சத்திர கூட்டங்கள் குறித்த இவருடைய ஆராய்ச்சி உலகப்பிரசித்தி பெற்றது அதை நம்முடைய தமிழகத்தில் ஊட்டியில் இருந்து கொண்டுதான் அவர் மேற்கொண்டார் என்பது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: புற்றுநோய் ஒழிப்பு அறிவியலின் உலகறிந்த இந்திய விஞ்ஞானி சிவப்பிரியா கிருபாகரன் (Sivapriya Kirupakaran)!
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Pingback: உலகறிந்த இந்திய உயிரி மரபணுவாளர் தீபா சுப்ரமணியம் - Book Day
விண்மீன் திரள்கள் மற்றும் வான் பொருட்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் இந்திய விஞ்ஞானியை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தனது துறை மட்டுமில்லாமல் தனது கிராமம் செழிக்க வேண்டும் என்ற இவருடைய தொலைநோக்குப் பார்வை பாராட்டத்தக்கது