தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் உலக சமாதானம் – மதிப்புரை இரா.இயேசுதாஸ்

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் உலக சமாதானம் – மதிப்புரை இரா.இயேசுதாஸ்

உலக சமாதானம் (WORLD PEACE)  என்ற நூல் 1957ல் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2015ல் 9ம் பதிப்பாக ரூபாய்195/-விலையில் வேதாதாத்திரி பதிப்பகத்தால் உலக சமுதாய சேவா சங்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

200 பாடல்கள்…அதற்கு தமிழ் விளக்கவுரை…அதைத்தொடர்ந்து அதற்கு ஆங்கில விளக்கவுரை..என341 பக்க நூலை அண்மையில் படிக்க நேர்ந்தது.
ஏதோ மகரிஷி என்பதால் ஆன்மீக நூலாக இருக்குமோ என்று படித்தேன்.
1957ம் ஆண்டு வாக்கிலேயே இப்படிப்பட்ட முற்போக்கான சிந்தனையை இவர் வெளிப்படுத்தி இருப்பது இப்போது படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
உலக சமுதாயத்திற்கான திட்டம்…இது அமலானால் உலகம் எப்படி சுபிட்சமாக இருக்கும்….என்றெல்லாம் விரிவாக கூறுகிறார்.

உலகனைத்து நாடுகளின் எல்லை காக்க ஓருலக கூட்டாட்சி..
உலகெங்கும் போர் பகை அச்சம் நீங்கி மக்கள் உழைத்துண்டு வளமாய் வாழ வேண்டும்..
கூட்டுப்பண்ணை விவசாயம் இயற்கை முறையில்..
விருப்பமுள்ள ஆணும் பெண்ணும் எளிய முறையில் திருமணம்..
பத்துக்குப்பத்து அறையில் ஒவ்வொரு தம்பதிக்கும் அரசு வீடு..
பிள்ளை பிறந்நவுடனே அதை அரசிடம் பொதுவான இடத்தில் வளர்க்க ஒப்படைப்பது…

அங்கேயே குழந்தைகள் அனைத்தும் கூட்டாக அதற்கென நியமிக்கப்பட்டோர்களால் வளர்க்கப்பட்டு…கல்வி தரப்பட்டு …பின் திறமைக்கேற்ற பொது வேலை….நூறு வீடுகள் கொண்ட ஒவ்வொரு காலனிக்கும் பொது சமையலறை…சுற்று முறையில் கால அட்டவணைப்படி சத்தான சுவையான சமையல்….ஒவ்வொரு பத்தாண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டில் தங்கி வாழ்தல் உலகக்குடிமகனாக…..என்று கூட்டுறவு முறையில் உலக அளவிலான சமதர்ம சமுதாயத்தை கூட்டுறவு அடிப்படையில் சமாதான முறையில் நூறாண்டுத்திட்டமாக
மகரிஷி முன்மொழிகிறார்.

Image may contain: 2 people

வன்முறை மூலம் பொதுவுடமை சமுதாயம் காண தனக்கு விருப்பமில்லை என கூறும் இவர் தனது திட்டத்தினை ஐ.நா.சபையிலும் முன்வைத்துப் பேசி இருக்கிறார்.
தனது உலகெங்கும் ஓராட்சி திட்டத்தை நிறைவேற்ற ஆழியாரில் உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவி இருக்கிறார்

உலகம் முழுதும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் கிளைபரப்பியுள்ள மகரிஷி அவர்களின் அமைப்பு எளிய முறை உடற்பயிற்சி…காயகல்ப குண்டலினி பயிற்சி..அகத்தவம்…அகத்தாய்வு பயிற்சிகள்….பட்டப்படிப்புகள் பல்கலைக்கழகங்கள் மூலம் நடத்தி வருகிறது.
ஆனால் உலக சமாதானம் எனும் இந்நூலில் மகரிஷி வழிகாட்டியள்ள கூட்டுறவு அடிப்படையிலான ஜாதி..மதம்…இனம்..கடந்த சமுதாயம் அமைப்பதற்கு தனது அமைப்பின் லட்சக்கணக்கான உறுப்பினர்களை முழு ஈடுபாட்டுடன் வழி நடத்துகிறதா என்பது முக்கியமான கேள்வி..

இது மகரிஷியின் அவா…அபிலாஷை….உட்டோப்பியன் ஐடியா…கற்பனை…என்று விமர்சிப்பவர்கள் இருந்தாலும்…மகரிஷி தனது வாழ்நாள் முழுதும் இதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டதை மறுகாக முடியாது.

இந்த புத்தகம் தற்போதும் இந்த அமைப்பால் பதிப்பிக்கப்பட்டுவருவது பாராட்டத்தக்கது.
இந்நூல் முற்போக்கு சிந்தனையாளராகள் அனைவரும் படித்து மகரிஷியை பின்பற்றுவோரிடம் மனம் திறந்து விவாதிக்க வழி ஏற்படுத்தும்…

இரா.இயேசுதாஸ்
மன்னார்குடி..8903105814
வாட்சப்..7010303347

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *